• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உயிரில் மெய்யாக வா-ஊதாப்பூ

chitra ganesan

Well-known member
Member
உயிரில் மெய்யாக வா-
ஊதாப்பூ

காதல் யாருக்கு,யார் மேலே எப்போ எப்படி வரும்னு தெரியாது.

அப்பாவின் செல்ல மகளாய் அம்மா தம்பி பாட்டியின் செல்லமாய்,தோழமையில் கூட ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பத்தில் இருக்கும் ராகவிக்கு வேறு சாதி கூட இல்லை,வேறு மதத்தில் இருக்கும் திவாகர் மேல் காதல் வருது.அவனுக்கும் அவள் மேலே காதல்.

இருவரும் பார்வையால் மட்டுமே காதல் செய்யும் காட்சிகள் எல்லாம் கவிதை போல ரொம்ப அழகா இருந்தது😍

வீட்டினரின் குணம் அறிந்து காதலை மனசுக்குள்ளே வச்சிட்டு அவன் கிட்டே கூட சொல்லாமல் இருக்கிறா.மல்லிப்பூ பாக்ஸில் போட்டு மூடி வச்சாலும் வாசம் காட்டி கொடுத்திடும்.அது போல வீட்டில் தெரிய பயங்கர எதிர்ப்பு.

என்ன ஆனாலும் ஓடி போக மாட்டேன் என்று இருக்கும் ராகவி அப்பா வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் திவாவின் நினைவாகவே இருக்கா.

திவாகர்.. what a man யா😍❣️சூப்பர். ராகவிகிட்டே காதல் சொல்லுவதும்,தைரியமாய் அவள் அப்பாவிடம் தன்னை பற்றி சொல்லி பெண் கேப்பதும் அருமை.

ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர் பெண்ணின் மனசுக்கு முக்கியம் கொடுக்காமல் போக திவா அவளை காதலாய் கை பிடிக்கிறான்.அவளை உயிராய் தாங்குகிறான்.

அப்பா வீட்டில் இருக்கும் போது திவாவின் காதல் முக்கியமா இருக்கு.
கல்யாணத்திற்கு பிறகு அப்பாவின் பாசம் முக்கியம் ஆகிருது.இதனால் எனக்கு அவள் மேல் பயங்கர கடுப்பா இருந்தது.திவா காதலுக்கு இவள் நியாயம் செய்யலன்னு திட்டினேன்.

ஒரு முறை கடைக்கு செல்லும்போது அப்பாவுடன் வரும் ஊதாப்பூ சேலைகாரியை பார்க்கிறாள்.அதுக்கு பிறகு அவளிடம் நெறைய மாற்றம்.
எப்பவும் ஊதாப்பூ சேலைகாரி பற்றியே நினைப்பு,அப்பாவை பார்க்க ஆசைன்னு தவிக்கிறா.அதை எழுத்தில் ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க ரைட்டர்👏👏

வலிய போய் ஒன்று விட்ட தங்கையிடம் பேசுவதும்,அவள் கல்யாணத்திற்கு தன்னையும் அழைக்க சொல்லி கேப்பதும் பரிதாபமாக இருக்கு அவள் நிலை.

கதையில் எதிர்பாரா ட்விஸ்ட் அந்த ஊதாப்பூ சேலைகாரி தான்.

அருமையான தோழி சுகன்யா.
ஆரம்பம் முதல் கதை கொஞ்சம் அழுத்தமா இருந்ததற்கு கடைசி பதிவு மாசா செம காமெடியா இருந்தது.😂😂

அந்த பதிவை பத்தி நான் சொல்வதை விட நீங்களே படிச்சு பாருங்களேன்.நிச்சியமா மனம் விட்டு சிரிப்பீங்க.(எனக்கு thanks கூட மனசுக்குள் சொல்லுவீங்க😜)

மிக அருமையான கதை.❣️
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍❣️
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom