• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உன் இதயச் சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே _நூஹா மர்யம்

Apsareezbeena loganathan

Well-known member
Member
உன் இதயச் சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே.....
ஆசிரியர்: நூஹா மர்யம்
நாயகன் : ஆர்யான் (ஜிராபி )
நாயகி: சிதாரா (மினியன்)

நண்பர்கள் பட்டாளத்துடன் ஆரம்பிக்கிறது கதை
கலாட்டாவாக ஒரு டூர்......
சீனியர்ஸ் ஜூனியர்ஸ்
ஆண் பெண் நட்புகள்
கலாட்டாக்கள் அருமை....

ஆதர்ஷ் அபிநவ் பிரணவ் ஆரியான்
லாவண்யா அக்ஷரா சிதாரா
இவர்களை சுற்றி நடக்கும்
நிகழ்வுகள் தான் கதை....
பாசம் நட்பு ஏமாற்றம்
பழி துரோகம் காதல்
அறுசுவை உணவு.....

சுட்டித்தனமாய்
சுற்றித் திரிய
சூழ்நிலை காரணமாய்
சுயம் இழந்து
சொந்தங்களை தள்ளி வைத்து
சிறகொடிந்து சிரமப்பட்டு வாழும் சிட்டுக்குருவியாய் சிதாரா
சிலையை செதுக்கும்
சிற்பியை போல
சோகங்கள் கலைந்து
சந்தோஷத்தை கொடுக்கும்
சிற்பி ஆர்யான்....

நட்புகள் நட்பாய் கை கொடுத்து தோழமையாய் தோள் கொடுத்து அன்பாய் அரவணைத்துச் செல்லும்
அருமை அண்ணன்களாய்
ஆதர்ஷ் அபிநவ்....
அழகு தோழிகளாய்
லாவண்யா அக்ஷரா.....

பிரணவ்
பார்த்த முதல் நாளே பரிதவிப்பாய்
படிக்க படிக்க பயங்கரமாய்
பழகப் பழக பாவமாய்
பலமுக பிரணவ்_ பாவம்....

கண்ணுக்குத் தெரியாத எதிரியாய் ஆர்யான்
கண்களில் விரல் விட்டு ஆட்ட காணாமல் தேடித்தேடி
கண்டபின் ஆரி அயர்ந்து ஓய்ந்து
கொஞ்சம் கொடூரமான வில்லன் தான்......

நெஞ்சுக்குள் காதல் வந்து ஒட்டிக்கொள்ள
நட்பாய் அனைத்து சென்று
இருதலை கொள்ளியாய்
காதலில் சிக்கி தவிக்கும்
காதல் கணவன்....
சுவீட் புருசன்
தில்லு முல்லு ஜிராபி
துள்ளல் மினியனாய்
செல்ல பொண்டாட்டியாய் மினி....

காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கண்ணே உன்னை நான் கருத்தில் கொண்டேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே ....
ஆர்யான் 💕மினி காதல்

மென்மையான காதலில் கொஞ்சம் மிரட்டலாய் கொடுத்து
அருமையாய் முடித்தீர்கள் 🤩🤩🤩

உன் இதய சிறையில்
ஆயுள் கைதியாக மாறிடவே
என் நெஞ்சம் ஏங்குதே....
அருமை 👏👏👏👏👏👍
வாழ்த்துக்கள் சகி💐💐💐💐💐💐
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom