• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 12 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் – 12​

ஆதியோடு பேசிய பின் பிரயுவிற்கு அன்றைய மன வருத்தம் வெகுவாக குறைந்தது. அவன் பிரயுவின் திருமணத்திற்கு வருவதாக சொன்னது அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையில் அவனை பார்ப்பது, அவனோடு அவன் லீவ் நாளில் சேர்ந்து இருக்க போகிறோம் என்ற கனவும், தன் தங்கைகளின் கல்யாணம் என்பதும் ரெட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ப்ரயு தன் தங்கைகளின் நிச்சயதிற்காக இரண்டு, மூன்று நாட்கள் லீவ் எடுத்திருப்பதால், மறுநாள் காலை வீட்டில் இருந்தாள். அப்போது பிரயுவின் அம்மா, அப்பா இருவரும் வந்தனர். இருவர் முகத்திலும் சஞ்சலமும், வருத்தமுமே மேலோங்கி இருந்தது. முதல் நாள் தன் இரு பெண்களின் நிச்சயம் முடிந்த சந்தோஷம் இல்லை.

அவர்களை வரவேற்ற பிரயுவும், அவள் மாமியாரும் அவர்களுக்கு குடிக்க கொடுத்த பின் அவர்களும் அமர்ந்தனர்.

“அம்மாடி, ப்ரயு நேற்று நடந்த விஷயத்திற்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. அந்த சம்பந்தியம்மா ஒரே பிடிவாதமாக இருக்கும் போது நான் உனக்கு சப்போர்ட் பண்ண முடியவில்லை. அதற்காக அப்படியே விட்டு விட்டோம் என்று எண்ணாதே. இன்றைக்கு நானும் உன் அம்மாவும் சென்று அவர்களிடம் உனக்காக பேசுகிறோம்.

சம்பந்தியம்மா உங்களுக்கு மிகுந்த நன்றி. அந்த இடத்தில் நீங்களும் கிளம்பியிருந்தால் சொந்தங்களின் நடுவில் மிக பெரிய பிரச்சினை ஆயிருக்கும். நீங்கள் எங்களை விட்டு கொடுக்காது நடந்து கொண்டீர்கள்“

“எனக்கு உங்கள் நிலைமை புரிந்தது சம்பந்தி. அதனால் தான் என் மருமகளை பற்றி பேசுகிறார்கள் என்ற போதும், அவளை மட்டும் அனுப்பி விட்டு நான் இருந்தேன். நானும் கிளம்பியிருந்தால் பவித்ராவும், தாரிணியும் அந்த நிச்சயத்தை மறுத்திருப்பார்கள். அதன் பின் வேறு எப்படி அவர்களின் திருமணம் நடந்தாலும் வாழ்க்கை பூராவும், அந்த இரு பெண்களை இந்த நிச்சயம் நின்றதை வைத்து யாராவது ஏளனம் செய்து கொண்டிருப்பார்கள். அதை தடுக்கத்தான் நானும் அங்கே இருந்தேன்..”

“எங்களுக்கும் புரிந்தது அம்மா. சொல்லப் போனால் ப்ரயு சென்ற உறுத்தல் இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து நிச்சயம் நடத்தியது நீங்கள் கொடுத்த தைரியத்தில்தான்.”

அப்போது ப்ரயு, “நாம் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமா அப்பா? நானும் சேர்ந்துதான் உங்களை அவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தேன். ஆனால் அவர்களின் கண்டிப்பையும், கறாரையும் பார்த்தல் பவி, தாரிணி வாழ்க்கை பற்றி பயமாக இருக்கிறது.” என்றாள் .

“எங்களுக்கும் சந்தேகமாக இருந்தது சம்பந்தி.”

“நாங்களும் இதை பற்றி யோசித்துதான். இன்றைக்கு அவர்களிடம் நேரில் பேச முடிவு செய்திருக்கிறோம். இதை நாம் முன்னாடியே செய்திருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு வேறு மாதிரி இருவர் திருமணமும் ஒன்றாக நடக்க வேண்டும் என்ற பிரச்சினை பற்றி பேசியதால் அவர்களின் இந்த எண்ணம் எங்களுக்கு தெரியவில்லை. அதனால் இன்று போய் பேசலாம் என்று எண்ணித்தான், இங்கே வந்து விட்டு அங்கே செல்ல போகிறோம். “

அப்போது பிரயுவின் மாமியார் “சம்பந்தி நான் சொல்வதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என் பையன் கல்யாணத்திற்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறான் தான். ஆனால் அவன் உள்ளூரில் இல்லை. வெளிநாட்டில் இருப்பதால் முன்னே பின்னே ஆகலாம். அப்போதும் இவர்கள் பிரச்சினை செய்தால் நானும் வர மாட்டேன். இப்போ அங்கே போகும் போது அவர்களிடம் தெளிவாக சொல்லி விடுங்கள். இதற்கு மேலும் நேற்று பேசியது போல் பேச வேண்டாம். “

இப்போது பிரயுவின் பெற்றோர் திகைத்தனர். அவர்களுக்கு இது நியாமாக தோன்றினாலும் அந்த அம்மாவை எப்படி கன்வீனஸ் செய்ய போகிறோம். இவர்களை எப்படி ஹாண்டில் செய்ய போகிறோம் என்று முழித்தனர். இருந்தாலும் அதை வெளிக் காட்டமால் அவர்களிடம் விடை பெற்று சென்றனர்.

பிரயுவிற்கு அவள் மாமியார் கூறியது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அவள் வெளிக் காட்டாமல் தன் வேலைககளை பார்த்தாள்.

பிரயுவின் பெற்றோர் தங்கள் வருங்கால சம்பந்தி வீட்டிற்கு சென்றனர். அவர்களை வரவேற்ற அந்த அம்மா, என்ன விஷயம் என்று கேட்க, பிரயுவின் அம்மா,

“சம்பந்தி, நேற்று நீங்கள் எங்கள் மூத்த மகளை பற்றி பேசியதைதான் பேச வந்தோம். நீங்கள் நேற்று அவளை ஏதோ மூன்றாம் மனுஷி போல் எண்ணி பேசினீர்கள். அவள் எங்கள் மூத்த மகள். உங்கள் வருங்கால மருமகள்களுக்கு அக்கா. பொறுப்பானவள். அவள் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவள் பொறமைப்படுவாள் என்றீர்களே. இப்படி யோசித்து பாருங்கள். அவள் கணவர் அவளை நம்பி அவர் அம்மாவையும், தங்கையையும் விட்டுப் போயிருக்கிறார். அப்படி என்றால் அவள் மீது அவருக்கு எவ்வளவு அன்பும், நம்பிக்கையும் இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். அதோடு அவரின் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக, அவர் வெளிநாடு சென்ற பின் ஒருமுறை கூட அவள் மாமியாரை தனியாக விடாமல் பாதுகாக்கிறாள். அப்படிப்பட்டவளை நேற்று அவள் தங்கைகளின் நிச்சயத்தில் கலந்து கொள்ள விடாமல் கிளப்பி விட்டீர்களே? அவள் மாமியார் அந்த இடத்தில் நிலைமையை சமாளிப்பதற்காக, அவர் கலந்து கொண்டு விட்டு, என் மகளை அனுப்பி விட்டார். அவர் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் ஒன்று அவர்கள் எங்கள் உறவை விட்டு இருப்பார்கள் இல்லை உங்களோடு சண்டை போட்டு இருப்பார்கள். நீங்கள் கொஞ்சம் உணர்ந்து கொள்ள வேண்டும் .” என்று முடித்தார்,

ஏற்கனவே அன்று காலை அவர் மகன்கள் இருவரும் அவரிடம் பேசியது நினைவு வந்தது.

காலையில் அரவிந்த் அவரிடம்,

“அம்மா, உங்களிடம் ஒன்று பேச வேண்டும். நேற்று நீங்கள் நடந்து கொண்ட முறை சரியா?”

“நான் என்னடா சரியாக நடக்கவில்லை.?”

“எங்கள் வருங்கால மனைவிகளின் அக்காவை மண்டபத்தை விட்டு அனுப்பினீர்களே. அது சரியா?”

“ஏண்டா நம் உறவுக்காரர்கள் அப்படிதான் பேசி கொண்டார்கள்டா. அவள் பொறமை பிடித்தவள். அவளால் உங்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று.”

“ஏன்மா யாரோ பேசுவதை எல்லாம் கேட்டு இப்படி நடக்கறீர்கள்?”

“யாரோ என்னடா? எல்லாம் நம்மை சேர்ந்தவர்கள்தான்அதிலும் அவள் நாத்தனாரின் மாமியார் தான் அப்படி பேசியது,”

“ஏன்மா. அந்த பெரியம்மாவை பற்றி உங்களுக்கு தெரியாது? உங்களை இப்படி தூண்டி நடக்க விட்டு, பின்னாடியே நீங்கள் இவ்ளோ மோசமானவர்கள் என்று எல்லாரிடமும் பேசுவார்கள். “

“தெரியும்டா. ஆனால் அதுக்காக அவங்க அப்படி சொல்லும் போது எனக்கு பயமயிருந்தது. அதான் அப்படி நடந்துகிட்டேன்.”

“அம்மா, நீங்கள் பார்த்து நடத்தி வைக்கும் கல்யாணம்தானே. நாங்களாக எதுவும் செய்யவில்லையே. அப்போ நீங்களே அவர்களை மதிக்கவில்லை என்றால், நம் உறவுகள் எப்படி உங்கள் சம்பந்தி வீட்டார்களை மதிப்பார்கள்.?”

அப்போது அருண்,

“அம்மா, நீங்கள் ஒன்று யோசித்தீர்களா? நீங்கள் அனுப்பியது உங்கள் மருமகள்களின் அக்காவை. யாரோ மூன்றாம் மனுஷியை அல்ல. இது நாளைக்கு உங்கள் மருமகள் மனசை எப்படி பாதிக்கும் என்று? இந்த வீட்டிற்கு வரும் போது அவர்கள் மனதில் உங்கள் மேல் எப்படி நம்பிக்கை வரும்.?”

அரவிந்தும், அருணும் சேர்ந்து “நீங்கள் செய்திருக்க வேண்டியது அந்த பெரியம்மாவை மண்டபத்தை விட்டு அனுப்பியிருக்க வேண்டும். நேற்றே பவித்ராவையும், தாரிணியும் நாங்கள் ஒரு மாதிரி சமாளித்து வைத்திருக்கிறோம். இதே மாதிரி நீங்கள் கல்யாணத்தின் போதும் பிரச்சினை செய்வீர்கள் என்றால், எங்களால அவர்களை சமாளிக்க முடியாது. வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் திருமணம். அதில் மணமக்கள் நாங்களே சந்தோஷமாக இல்லை என்றால், பின் கல்யாணம் எப்படி நன்றாக நடக்கும்? இதையெல்லாம் யோசித்து பாருங்கள். அதற்கு பின்னும் நீங்கள் செய்ததுதான் சரி என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள் இதுவரை உறவுகளை கட்டி காப்பத்தியவர் என்ற பெயர் கெட்டு விடும் பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று சொல்லியிருந்தனர்.

அவரின் கணவரும் முதல் நாள் இரவு அவரிடம் செய்த தவறை சீர்படுத்து என்று கூறியிருந்தார்.

இப்போது பிரயுவின் பெற்றோரும் அதே போல் பேசவே, தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ? என்று வருந்தினார்.

பின்னர் பிரயுவின் பெற்றோரிடம், தான் ப்ரயு வீட்டாரிடம் பேசுவதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

அவர்கள் சென்ற பின் முதலில் பிரயுவின் வீட்டிற்கு போன் செய்தவர். ப்ரயு மாமியார் எடுக்கவும்,

“அக்கா என்னை மன்னித்து விடுங்கள். நான் நேற்று நடந்து கொண்ட முறை தவறு. கேட்பார் பேச்சை கேட்டு அப்படி நடந்து கொண்டு விட்டேன். இதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். கண்டிப்பாக கல்யாணத்தை நன்றாக நடத்திக் கொடுங்கள். உங்கள் பையனும் வந்து கல்யாணம் நடந்தால் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும்“ என்று பேச,

“மன்னிப்பு எல்லாம் எதற்கு? நீங்கள் புரிந்து கொண்டதே போதும். அப்புறம் உங்களிடம் ஒரு வேண்டுகோள். இந்த பிரச்சினையை கிளப்பி விட்டது என் மகளின் புகுந்த வீட்டார் என்று என் மகனுக்கு தெரிய வேண்டாம். யாரோ மூன்றாம் மனிதராக இருந்து விட்டு போகட்டும். அவனுக்கு தெரிய வந்தால் என் மகளின் மாமியாரிடம் நேரில் கேட்டு விடுவான். பிறகு சங்கடமாகி விடும் “ என்று கூற,

“அதெற்கென்ன? நானும் இதை பற்றி இனி பேசவில்லை. ப்ரத்யா இருக்கிறாளா? அவளிடமும் பேசி விடுகிறேன்.” என்றார்.

“இதோ கொடுக்கிறேன்” என்று பிரயுவிடம் கொடுத்தார்.

“அம்மா ப்ரயு நான் நேற்று உன்னிடம் நடந்து கொண்ட முறை ரொம்ப தப்பு. அதை மனசில் வச்சிக்காத. நீ வந்து உன் தங்கைகள் கல்யாணத்த நடத்தினால் தான் எனக்கும், உன் தங்கைகளுக்கு சந்தோஷம் சரியா ?”

“அய்யோ .அதை நான் நேற்றே மறந்து விட்டேன். நீங்கள் என்னை புரிந்து கொண்டதே போதும். அப்படி ஒரு சம்பவம் நடந்தததை மறந்து விடலாம்” என்றவள், அதற்கு பின் அவரிடம் மேலும் சில நிமிடங்கள் பேசி வைத்தாள்.

இப்போதுதான் பிரயுவிற்கு சற்று நிம்மதி ஏற்பட்டது. என்னதான் நேற்று மாமியார் தன் குடும்பத்திற்கு ஆதரவாக நடந்து கொண்டிருந்தாலும், மீண்டும் ஒரு முறை அப்படி நடப்பரா ? என்ற கேள்வி ஏற்பட்டது. மேலும் இன்று காலை அவள் பெற்றோர் வந்த போது அவர் பேசியது வேற அவளை கலங்க அடித்தது, இப்போ தன் தங்கைகளின் மாமியார் பேசியது அவளை கொஞ்சம் ஆசுவாசபடுத்தியது.

அன்று இரவு ஆதி பேசும்போது அன்றைய நடப்பை தெரிவித்தவளின் குரலில் இருந்த மகிழ்ச்சி, ஆதியையும் சந்தோஷபடுத்தியது.

“ரதிகுட்டி, இப்போ உன்னோட சந்தோஷம் உன் குரலிலே கேட்கறது எவ்ளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா? அதை விட்டு நீ நேற்று அழுதது எனக்கு மனசெல்லாம் வலிச்சதுடா கண்ணம்மா. உன் பக்கத்தில் இருந்து உன்னை ஆறுதல் படுத்த முடியாம நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தாண்டா தெரியும்“

“சாரி. ஆதிப்பா நேற்று உங்களை ரொம்ப கஷ்டபடுத்திட்டேனா?”

“ஆமாம் நீ ஒரு இடத்தில், நான் ஒரு இடத்தில இருக்கும் போது நீ அழுறது எனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு. எங்கம்மாவோ, என் தங்கச்சியோ இந்த மாதிரி தவிச்சிடக் கூடாதுன்னுதான், உன்னை கல்யாணம் பண்ணி என் இடத்தில் உன்னை வைத்து விட்டு வந்தேன். ஆனால் உனக்கே பிரச்சினை என்று வரும்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லையேன்னு தவிச்சு போயிட்டேன்..”

“ஹே. அந்த தவிப்பு எல்லாம் இனிமே வேண்டாம். அப்பா இன்னும் நாற்பது நாளில் நல்ல முகூர்த்தம் வருவதாக பேசினார். அன்றைக்கு மண்டபமும் கிடைத்திருக்கிறது என்றார். உங்களால் விசா ரெடி பண்ண முடியுமா ?

“இன்னும் ஒரு மாசம் கழித்து என்றால் நான் ஏற்பாடு செய்து விடுகிறேன். எனக்கு பத்திரிகை அடித்து வந்தவுடன் ஒன்றை மெயில் அனுப்பி விடு. அதை வைத்து நான் ஆபீசில் லீவ் அப்ளை செய்து விட்டு, விசாவும் ரெடி செய்கிறேன்..”

“சரி.”

“ரதி குட்டி இன்னிக்கு உன்னோட சந்தோஷமா மூடுக்கு ஏற்ற மாதிரி ஒரு பாட்டு அனுப்பறேன். நீ கேட்டு என்னோட கனவுலே டூயட் பாடு. அதுக்கு முன்னாடி ஸ்ட்ராங்கா எனக்கு ஒரு உம்மா கொடு “ எனவும்..

“சீ போங்க ஆதிப்பா” என்றவள் போனை வைத்தாள்.

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது

பாடலை கேட்ட ப்ரயு ஆதி சொன்ன மாதிரி கனவில் அவனோடு டூயட் தான் பாடினாள்.

மகிழ்ச்சியோடு கல்யாண ஏற்பாடுகளில் கலந்து கொண்டாள் பிரத்யு. அதே சமயம் அவள் பொறுப்பையும் மறக்காமல் தன் நாத்தனார் வித்யாவையும் ரெகுலராக செக்கப் அழைத்து செல்வது, மாமியாரோடு கலந்து அவளுக்கு தேவையானதை பார்த்து செய்வது எல்லாம் செய்தாள்.

திருமணத்திற்கு நாள் நெருங்க, ஆதியிடம் பேசி, ப்ரயு அவள் அப்பாவிற்கு தன்னுடைய சேமிப்பில் இருந்து பணம் எடுத்து கொடுத்தாள். அது அவள் மாமியாருக்கும் தெரியும். அதை பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை.

தன் மச்சினிகளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று தன் அம்மாவை கலந்து பேசுவதற்காக அவன் அம்மாவை அழைத்தான்.

“அம்மா, பிரயுவின் தங்கைகளுக்கு நம் சார்பில் என்னம்மா செய்யலாம்? நீங்கள் எதாவது யோசித்து வைதிருக்கீர்களா?”

“ஏன் நாம் தனியாக செய்ய வேண்டுமா ? அதுதான் உன் மனைவி அவள் அப்பாவிற்கு பணம் கொடுதிருக்கிறாளே போதாதா ?”

“அம்மா , அது அவள் பணம். அவள் தன் தங்கைகளுக்காக கொடுப்பது. ஆனால் நம் வீடு சார்பில் நாம் எதாவது செய்ய வேண்டாமா?”

“ஏன் ஆதி? இப்போ பணம் செலவழிக்கிற? நீ கல்யாணத்திற்கு வரணும். அதோட நம்ம வித்யவோட டெலிவரி டேட் வேற நெருங்கி வருது. டெலிவரி செலவு, வீட்டில் வைத்து பேர் வைக்கும் செலவு, குழந்தைக்கு ஏதாவது நகை போடணும் இதெல்லாம் எவ்ளோ செலவு இருக்கு? இப்போதான் ப்ரத்யா செய்யறாளே. நாம வேற ஏன் செலவு செய்யணும் ?” என்றார்.

“அம்மா என்னம்மா நீங்க? எப்போவும் இப்படியே பேசுறீங்க..? வித்யா சம்பந்தப்பட்ட செலவுகளுக்கு தனியாக வைத்திருக்கிறேன். அதுலேர்ந்து அவளுக்கு மட்டும்தான் செய்வேன். இதுவும் என்னோட பொறுப்புதானே. நான் கூட இருந்து செய்திருக்கணும். அதுதான் முடியலே. அட்லீஸ்ட் நாம ஒரு பொருள் பரிசு ஏத்துகிட்டா அவங்களுக்கு நல்லா இருக்குமே. நீங்க இப்படி பேசுறது பிரத்யவிற்கு தெரிஞ்சா அவ எவ்வளவு வருத்தபடுவா? அவ என் இடத்திலே இருந்து உங்கள பார்த்துக்கும் போது நான் கொஞ்சமாவது செய்யவேண்டாமா? கொஞ்சம் யோசிங்க “ என்று வைத்து விட்டான்..

ஆதிக்கு தன் அன்னையை நினைத்தால் வருத்தமாக இருந்தது. நல்லவர்தான். ஆனால் பண விஷயம் என்று வந்து விட்டால் சற்று சுயநலமாக சிந்திக்க தொடங்கி விடுகிறார். என்ன செய்து மாற்றுவது என்று தெரியவில்லை.

இதற்கிடையில் டிக்கெட் எல்லாம் எடுத்திருந்த ஆதி, சரியாக அவன் கிளம்புவதற்கு முன் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் அங்கே மிக பெரிய பனிப் புயல் ஏற்பட்டு, அங்கே அத்தனை போக்குவரத்தும் பாதிக்க பட்டது. அதே சமயம் இங்கே கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன், வித்யாவிற்கு தீடிர் என்று பிரசவ வலி ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனாள்.

-தொடரும் -​
 

Rajam

Well-known member
Member
சந்தர்ப்பமும் சதி செய்யுதே.
கல்யாணத்திறகு போக முடியாதோ.
 

kothaisuresh

Well-known member
Member
அடடா, என்ன இப்படி எல்லாம் ஒன்று கூடி சதி செய்யுது, ஆதி வருவானா?
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom