• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,087

Profile posts Latest activity Postings About

  • ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 4 போஸ்டட் மக்களே
    ஒரு காதலும் சில கவிதைகளும் முதல் எபி போஸ்டட்

    மெய் நிகரா பூங்கொடியே - 56
    நித்திலா அவளது குடும்பம் பிள்ளையென யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். தன் மகள் என்ன மனநிலையில் இருக்கிறாளோ?
    பால்கனிக்கு மொபைலுடன் நகர்ந்தவர் நிஹாரிகாவின் மொபைலுக்கு அழைத்தார்.
    “நித்திலா இங்க வந்திருக்காடி... அவளுக்கும் பெரிய மாப்பிள்ளைக்கும் இடையில எந்தப் பிரச்சனையும் இல்லையாம்... இப்ப தான் உங்கப்பா கிட்ட சொல்லிட்டிருந்தா... சீக்கிரம் பேரனோ பேத்தியோ பெத்துக்குடுப்பேன்னு சொல்லுறா... நீ என்ன ஐடியால இருக்க நிஹி? நான் சொன்னதை யோசிச்சியா?”
    “எப்பவும் குழந்தை குழந்தைனு சொல்லி இரிட்டேட் பண்ணாதம்மா... எனக்கு இப்ப குழந்தை பெத்துக்குற ஆர்வம் இல்ல... நெக்ஸ்ட் மன்த் கம்பெனியோட ஷேர்ஸை எனக்கும் நித்திலாக்கும் அலாட் பண்ணுறதை பத்தி என் மாமனார் மீட்டிங் ஒன்னு அரேஞ்ச் பண்ணிருக்கார்... அதை பத்தி நான் யோசிச்சிட்டிருக்கேன்... நீ வேற”
    “நீ இப்பிடியே விட்டேத்தியா பேசு... அவ லட்டு போல பிள்ளைய பெத்து உன்னை முந்திக்குவா... கம்பெனி ஷேரும் அவளுக்குத் தான்... உன் குடும்பத்துக்கு வாரிசைக் குடுத்த கௌரவமும் அவளுக்குத் தான்... நீ வேடிக்கை பாத்துட்டு ஒதுங்கி நிக்கணும்”
    சைலேந்திரி நிஹாரிகாவின் மீதுள்ள அக்கறையில் கூற அவரது பேச்சு அவளது வன்மத்தை அதிகரித்துவிட்டது.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-56.5320/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 55
    நித்திலா கோபத்தில் தான் அவ்வாறு கூறினாள். அவன் மீது காதல்வயப்பட்டவளுக்கு எப்படி அவனைப் பிரிந்து வாழும் வாழ்க்கை இனிக்கும்?
    உதாசீனமாக கிருஷ்ணராஜசாகர் பேசவும் இவ்வளவு நேரம் இருந்த கோபம் அடங்கி ஏமாற்றத்திலும் கழிவிரக்கத்திலும் அழ மட்டுமே தோன்றியது.
    மனம் நினைத்ததும் கண்கள் கண்ணீரை உகுக்க ஆரம்பித்தன.
    கிருஷ்ணராஜசாகர் அழுபவளைப் பார்த்ததும் சற்று அமைதியானவன் அவனது மொபைல் இசைக்கவும் அழைப்பை ஏற்றான்.
    அழைத்தவன் இப்ராஹிம்.
    “நான் வந்து அவங்களச் சமாளிச்சிக்குறேன் இப்ராஹிம்”
    மொபைலில் பேசியபடியே நித்திலாவிடம் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறிவிட்டான்.
    தன்னைச் சமாதானம் செய்யாமல் சென்றவனின் செய்கை இன்னும் உதாசீனமாகத் தோன்ற நித்திலா அழுகையில் கரைய ஆரம்பித்தாள். மனம் குளிர்ந்த நிஹாரிகாவோ ஜாலியான மூடுடன் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
    அழுதபடியே உறங்கிய நித்திலா நள்ளிரவில் விழித்துப் பார்க்கையில் கிருஷ்ணராஜசாகரின் அணைப்புக்குள் அடங்கியிருந்தாள்.
    இவன் எப்போது வந்தான் என்ற கேள்வியோடு அவனது கரத்தை விலக்கிவிட்டு எழுந்தவள் கிருஷ்ணராஜசாகரின் உறக்கம் கலைவதை அறிந்து வேகமாக அங்கிருந்து போக முற்பட்டாள்.
    “எங்க போற?”
    கரம் அவனது பிடியில் சிக்குண்டது.
    “விடுங்க சாகர்”
    “உன்னால இந்த ரூமை தாண்டி போக முடியாது”
    “உங்க பக்கத்துல இருக்க எனக்குப் பிடிக்கல”
    பிடிவாதமாகச் சொன்னவளை வேகமாக அவன் இழுக்க நித்திலா தடுமாறி அவன் மீதே விழுந்தாள்.
    விழுந்தவளை அப்படியே அணைத்துக்கொண்டவன் “நீ கோவத்துல கத்துன... எனக்கும் கோவம் வந்து கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்... இது நமக்குள்ள எப்பவும் நடக்குறது தானே நித்தி... ப்ளீஸ் ஃபர்கிவ் மீ... இங்க வரமுடியாத அளவுக்கு மோசமான பிரச்சனைல நான் சிக்கிட்டேன்... எல்லாம் முடிஞ்சதும் உன் கிட்ட விளக்கமா சொல்லுறேன்டி... நீ அடிக்கடி டிவோர்ஸை ஞாபகப்படுத்தாத... ஐ வாண்ட் டு லிவ் அ பீச்ஃபுல் லைஃப் வித் யூ நித்தி... உனக்கு அந்த ஆசை இல்லையா?” என்று கேட்கவும் அவளது பிடிவாதம் மட்டுப்பட்டது.
    வெறுமெனே கண்ணீர் மட்டும் வழிந்தது.
    அதை துடைத்தவன் “அழக்கூடாது... நிஹாரிகா எதுவும் சொன்னாளா?” என்று கேட்க ஆமென தலையாட்டினாள் அவள்.
    “என்ன சொன்னா?”
    “அதை எதுக்கு...”
    “சொல்லு”
    கட்டளையாய் ஒலித்தது அவனது குரல்.
    “நீங்க கடமைக்குக் கல்யாணம் பண்ணிருக்கிங்கனு சொன்னா.. புருசனோட காதலை ஜெயிக்கிறதுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இல்லையாம்... நான் பிறவிலயே அதிர்ஷ்டக்கட்டைனு சொன்னா”
    நிஹாரிகாவின் பேச்சு கிருஷ்ணராஜசாகரைக் கோபம் கொள்ள வைத்தாலும் அவளது பேச்சுக்கு அடிப்படையே இல்லை என்பதை அறிந்திருந்ததால் மனைவியை நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.
    ஆறுதலாக அவளது சிகையைக் கோதிக்கொடுத்தான்.
    “நீ எப்பவோ என்னை ஜெயிச்சிட்ட நித்தி... சாகர் எப்பவுமே நித்திலாக்குச் சொந்தமானவன்... பிரிக்க முடியாதபடி நம்ம இணைஞ்சாச்சு... இன்னுமா அவளோட முட்டாள்தனமான பேச்சை நினைச்சு கண்ணீர் விடுற?”

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-55.5318/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom