• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors. legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,235

Profile posts Latest activity Postings About

  • மெய் நிகரா பூங்கொடியே - 5

    “என் கிட்ட இருந்து அம்ருவை பிரிக்க பாத்திங்கனா நான் மனுசியா இருக்கமாட்டேன் சாகர்”

    மெல்லிய எரிச்சல் தீவிரமாகி “லுக்! உன்னோட சினிமா டயலாக்ஸை நீயே வச்சுக்க... நான் ஒன்னும் உன்னையும் அவனையும் பிரிக்க வரல... அவனுக்கு நான் யார்னு தெரியணும்... நேத்து நான் தான் அவனோட டாடினு சொன்னதுக்கு நீ சொல்லாம என்னை டாடினு கூப்பிடமாட்டேன்னு சொல்லிட்டு ஓடுனான்... அதான் இன்னைக்கு உன்னை வச்சே அவனுக்கு நான் யார்னு சொல்ல வைக்க வந்திருக்கேன்” என்றான்.

    நித்திலா முடியாதென்பது போல நிற்க விக்ரம் கண்களால் கிளம்புகிறேன் என்றான்.

    போகாதே என கண்களை விரித்து தலையை மறுப்பாக அசைத்தவளின் சைகைமொழியை விக்ரம் கண்டுகொண்டானோ இல்லையோ கிருஷ்ணராஜசாகர் புரிந்துகொண்டான்.

    “நாகரிகமான மனுசன்... அதான் சொல்லிட்டுக் கிளம்புறார்... சிலரை மாதிரி சொல்லாம கொள்ளாம ஓடி மறையுற பழக்கம் அவருக்கு இல்ல போல”

    குற்றம் சாட்டும் குரலில் அவன் கூறவும் நித்திலா கடுப்பானாள்.

    “அடுத்தவங்களைக் குறை சொல்லுறதுக்கு முன்னாடி நம்ம மேல என்ன தப்பிருக்குனு அனலைஸ் பண்ணி பாக்கணும்”

    இருவரும் மாறி மாறி சாடிக்கொள்வதை வேடிக்கை பார்க்க விரும்பாதவனாக விக்ரம் மத்தியஸ்தம் பேச வந்தான்.

    “நித்தி ப்ளீஸ்! அம்ரு உங்க ரெண்டு பேரையும் பாத்துட்டிருக்கான்... சார் நீங்களும் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்”

    “என் பையனுக்கு நான் யார்னு இவ சொல்லட்டும்... அவன் கூட ரெண்டு வார்த்தை பேசிட்டுக் கிளம்பிடுவேன்”

    பிடிவாதமாக நின்றான் கிருஷ்ணராஜசாகர்.

    மெய் நிகரா பூங்கொடியே - 4
    அவனைத் தன்னோடு அழைத்துச் செல்ல மாபெரும் தடையாக நித்திலா இருப்பாள் என்பதில் கிருஷ்ணராஜசாகருக்கு எந்த ஐயமும் இல்லை. அவளைச் சரிகட்டுவது அவ்வளவு எளிதில்லை.
    நான்காண்டுகளுக்கு முன்னர் திருமணத்திற்கு அவளைச் சம்மதிக்க வைக்க ஒரு துருப்புச்சீட்டு இருந்தது. எப்போது அவனது வாழ்க்கையை விட்டு நித்திலா விலகினாளோ அப்போதே அந்த துருப்புச்சீட்டுக்கு மதிப்பளிக்கும் மடமையைத் தூக்கியெறிந்துவிட்டாள்.
    இனி அதனால் பயனில்லை. புதிதாக எதையாவது யோசிக்க வேண்டும். அவன் சிந்தனையில் ஆழ்ந்த போதே பின்னே யாரோ வரும் அரவம் கேட்டது.
    திரும்பிப் பார்த்தவன் வந்தவர் அன்னை என்றதும் அதிருப்தியாய் பார்த்தான்.
    “ஏன் குளிர்ல வர்றிங்கம்மா? கூப்பிட்டிருந்தா நானே உங்க ரூமுக்கு வந்திருப்பேன்”
    கடிந்துகொண்டாலும் அவர் அமர இருக்கையை நகர்த்தினான்.
    நர்மதா சால்வையைச் சரி செய்தபடி அமர்ந்தவர் அம்ரித் விவகாரத்தில் அவனுடைய நிலைபாடு என்னவென வினவினார்.
    “இங்க இருந்து போறப்ப அம்ரித் நம்ம கூட வருவான்”
    “நித்திலா?”
    “மகன் வேணும்னா அவளும் வருவாம்மா... அவளை வெத்தலை பாக்கு வச்சுல்லாம் அழைக்க முடியாது”
    மகனின் குரலில் மண்டிய எரிச்சலால் பதபதைத்தது தாயுள்ளம். இன்னும் மனையாளுக்கு வாழ்க்கையில் இருக்கும் முக்கியத்துவம் இவனுக்குப் புரியவில்லையே என்ற ஆதங்கம்.
    “இது ரொம்ப தப்பான மைண்ட் செட் கிரிஷ்... உனக்கு நான் எப்பிடி முக்கியமோ அதே மாதிரி தான் நித்திலாவுக்கு அவளோட மகன் முக்கியம்”
    “அவன் என்னோட மகன்”
    வேகமாகத் திருத்தினான் அவன்.
    “கபேல அவனைப் பாக்கலனா இப்பிடி ஒரு மகன் இருக்குறது உனக்குத் தெரிஞ்சிருக்குமாப்பா? உரிமையா என் மகன்னு சொல்லுறதுலாம் சரி... அவனைப் பெத்தவளைப் பத்தி நீ யோசிக்கலையே”
    “அதான் சொல்லிட்டேன்ல, அம்ரித் முக்கியம்னா அவ வருவா”
    “நான் குளிர்ல வந்ததுக்கு அவ்ளோ டென்சன் ஆனல்ல, அம்மாக்கு குளிர் ஒத்துக்காதுனதும் உனக்குத் துடிக்குதுல்ல, அதே மாதிரி அம்ரித்துக்கும் அவனோட அம்மா முக்கியம்”
    விடாக்கண்டனாக இருக்கும் மைந்தனின் மனதில் என்ன திட்டம் ஓடுகிறதென புரியாமல் விழித்த நர்மதா அவன் பாணியிலேயே மடக்கினார்.
    “இப்ப என்ன தான் சொல்ல வர்றிங்கம்மா?”
    “அந்தக் குழந்தைக்கு இப்ப வரைக்கும் தாயும் தகப்பனுமா இருக்கிறவளை வேதனைப்படுத்தி தான் அவனை நம்ம கூட அழைச்சிட்டு வரணும்னா அவன் வரவே வேண்டாம்... உன் பாசத்தைப் புரிஞ்சிக்கிட்டு நித்திலா அவளாவே விருப்பப்பட்டு வரணும்... இல்லனா அவங்க இங்கயே சந்தோசமா வாழ்ந்துட்டுப் போகட்டும் கிரிஷ்”
    கிருஷ்ணராஜசாகர் மௌனமாக நின்றான்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-4.5085/
    #நித்யாமாரியப்பன் #மெய்நிகராபூங்கொடியே
    மெய் நிகரா பூங்கொடியே - 3

    “நாலு வருசத்துக்கு முன்னாடி நம்ம ஃபைல் பண்ணுன மியூச்சுவல் டிவோர்ஸ் பெட்டிசனை ஜட்ஜ் ரிஜெக்ட் பண்ணிட்டார்... ஏன்னா ஆறு மாசத்துக்கு அப்புறம் வந்த ஹியரிங்குக்கு நீ அப்பியர் ஆகல... சோ, இப்பவும் நீ மிசஸ் கிருஷ்ணராஜசாகர் தான்.. அப்பிடி இருக்கிறப்ப நீ இன்னொருத்தரை எப்பிடி மேரேஜ் பண்ணிக்க முடியும்?”
    மிகவும் இலகுவாக கேட்டபடி நாற்காலியில் சாய்ந்து கால் மீது கால் போட்டுக்கொண்டான். நித்திலா என்ற ஒருத்தியைக் கண்டுகொள்ளாமல் மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.
    நித்திலா கைகளால் தலையைத் தாங்கியபடி அமர்ந்தாள்.
    அடுத்த திங்களன்று அவளும் விக்ரமும் மணமுடிக்கவிருக்கின்றனர். இந்த நேரத்தில் அவள் இன்னும் திருமதி கிருஷ்ணராஜசாகர் என்கிறான் இவன்.
    என்னை ஏன் இத்தகைய இக்கட்டில் மாட்டிவிட்டு ரசிக்கிறாய் ஆண்டவா?
    மெதுவாக தலையை உயர்த்தியவள் “இத்தனை வருசம் இல்லாம இப்ப இதை என் கண்ணுல காட்டுறதுக்கு என்ன காரணம் சாகர்?” என்று கேட்டாள்.
    மொபைலில் இருந்து கவனத்தை அவள் புறம் திருப்பினான்.
    “நீ இப்பிடி தவிப்பா சாகர்னு சொல்லுறப்ப உள்ளுக்குள்ள என்னமோ உருகுது... இன்னொருத்தன் பொண்டாட்டியா ஆகிட்டனா இந்த உருகல் மறுகலை எல்லாம் ரசிக்க முடியாதுல்ல”
    நித்திலாவுக்குள் சுருசுருவென கோபம் மூண்டது. சீற்றத்துடன் அவனை ஏறிட்டாள்.
    அவனோ உனது கோபமெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை எனும் பாவனையோடு அமர்ந்திருந்தான் சற்று திமிராக.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-3.5076/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 2

    உணர்வுகளின் கலவையாய் நின்றவளிடம் புன்னகையை வீசியவன் “ஹவ் ஆர் யூ நித்திலா? இட்ஸ் அ ஸ்வீட் சர்ப்ரைஸ்” என இயல்பாக குசலம் விசாரித்தான்.
    நித்திலா தன்னைச் சமாளித்துக்கொண்டவள் வேகமாக உணர்ச்சிகளைத் துடைத்தெறிந்துவிட்டு புன்சிரிப்போடு அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
    “ஃபைன்... எங்க கபேக்கு நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்”
    அதுவும் கிருஷ்ணராஜசாகருக்குச் சற்றும் சளைக்காத இயல்பான குரலில்!
    இப்ராஹிமும் நர்மதாவும் தான் ‘ஙே’ என விழித்தனர்.
    “உன் ஹெல்த் கண்டிசன் எப்பிடி இருக்கு?”
    “மச் பெட்டர்”
    “உன்னை மறுபடியும் பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல... நீ ஃபுல்லா ரெகவர் ஆகிட்டியா?”
    கிருஷ்ணராஜசாகரின் கண்கள் அவளை தலை முதல் கால் வரை அலசி ஆராய்ந்தது.
    அப்போதிருந்ததை விட கொஞ்சம் பூசினாற்போல மாறியிருந்தாள்.
    மெல்லிய பழுப்புவண்ணத்தில் கூந்தலின் நிறம் மாறியிருந்தது. ஹேர்கலராக இருக்கலாம். கருநிறவானவில் போன்ற புருவங்களின் மத்தியில் சிறிய கருப்பு பொட்டு, காஜல் அலங்காரத்தில் ஜொலிக்கும் கருவிழிகள், பீச் வண்ண உதட்டுச்சாயத்தை குடியமர்த்தியிருந்த சதைப்பற்றான உதடுகள், ஆப்பிளை நினைவுறுத்தும் கன்னங்கள் என கொஞ்சம் கூட அவள் மாறவில்லை.
    உடனே அவனது கண்கள் நித்திலாவின் கால்களைக் கவனித்தது. அவளுக்கென வாங்கிய பிரத்தியேக செருப்பை அணிந்திருந்தாள்.
    நித்திலாவின் கண்கள் அவனது ஸ்கேன் செய்த பார்வையால் இடுங்கியது.
    “என்னாச்சு சாகர்?”
    அவளது சாகர் என்ற அழைப்பில் ஒரு கணம் கிருஷ்ணராஜசாகரின் விழிகளில் பளிச்சென மின்னல் வந்து போனதை நர்மதாவைத் தவிர வேறு யாரும் காணவில்லை.
    சட்டென சுதாகரித்தவன் “ஜஸ்ட் உன்னைப் பாத்தேன்... பாக்குறதுக்கு ஏதாச்சும் டாக்ஸ் கட்டணுமா என்ன?” என தலைசரித்து வினவ நித்திலா உதடு பிரியாமல் புன்னகைத்தபடி இல்லையென தலையசைத்தாள்.
    “ஹேவ் அ க்ரேட் டே”
    வாழ்த்திவிட்டு மீண்டும் சமையலறைக்குள் செல்லப் போனவள் “நித்தீஈஈஈஈ...” என்ற சத்தத்தோடு ஓடி வந்து அணைத்த சிறுவனின் ஸ்பரிசத்தில் சிலையாய் சமைந்து நின்றாள்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-2.5071/#post-37451
    #நித்யாமாரியப்பன் #மெய்நிகராபூங்கொடியே
    மெய் நிகரா பூங்கொடியே - 1

    ஆஞ்சநேயரின் செந்தூரத்தை வைத்து அவளது நெற்றியில் கோபுரவடிவில் திலகமிட்டு “ஜெய் பஜ்ரங்பலி, இந்தப் பொண்ணுக்குப் புத்திய குடு... அப்ப தான் எங்களுக்குப் பிறக்குற பசங்க டபுள் புத்திசாலிகளா வளருவாங்க” என்று குறும்பாக அந்த வாலிபன் வேண்ட அவளும் கண் மூடி நின்றாள்.
    இதற்கு மேல் இக்காட்சியைப் பார்க்கும் சக்தியற்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளியே வந்த நர்மதாவுக்கு மூச்சு முட்டியது.
    கண்களில் நீர்ப்படலம்!
    “அம்மா!”
    மைந்தனின் குரல் கேட்டு அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டார் நர்மதா.
    கிருஷ்ணராஜசாகரின் பார்வைக்கு அது தப்பவில்லை.
    “என்னாச்சும்மா? தரிசனம் பாக்க வந்த இடத்துல ஏன் அழுறிங்க?”
    நர்மதாவின் கண்கள் மகனின் வதனத்தில் வேதனை இருக்கிறதா என தேடியது. கிருஷ்ணராஜசாகர் என்னவோ சலனமின்றி அமைதியாகத் தான் இருந்தான்.
    அவனது பேச்சிலும் நிதானம். உடல்மொழியும் பதற்றத்தைப் பிரதிபலிக்கவில்லை. எவ்வாறு இவனால் எதுவும் நடக்காதது போல இருக்க முடிகிறது? ஒருவேளை நடிக்கிறானோ?
    மகனின் தோள்களைப் பற்றிய நர்மதா கோவிலை நோக்கி கை நீட்டினார்.
    “அங்க நான் பாத்தவளை நீயும் பாத்தல்ல... பாக்கலனு பொய் சொல்லாத கிரிஷ்.... நீ அவளைப் பாத்த... உன் கண்ணுல ஒரு ஆச்சரியம் தெரிஞ்சுது”
    கிருஷ்ணராஜசாகர் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.
    “பாத்தேன்மா... அதுக்கென்ன இப்ப?”
    “என்னடா இப்பிடி கேக்குற?”
    “வேற எப்பிடி கேக்கணும்மா?”
    “அவ... அவ ... அவ உனக்கு”
    நர்மதா திக்கித் திணறி சொல்ல முடியாமல் பாதியில் நிறுத்தினார்.
    “அவ நித்திலா... சோ வாட்? இந்தக் கோவில்ல நம்மளை சுத்தி எவ்ளோ கூட்டம் நிக்குது? அதுல இருக்குறவங்க எனக்கு எப்பிடியோ அப்பிடி தான் நித்திலாவும்... நீங்க ஏன் ஓவர்-ரியாக்ட் பண்ணுறிங்க?”
    தோளைக் குலுக்கி அலட்சியத்தைக் காட்டிய மைந்தனை என்ன செய்வதென புரியாமல் நின்றார் நர்மதா.
    அவர்களிடமிருந்து சில அடிகள் தொலைவில் அந்த நித்திலாவும் விக்கியும் கோவிலில் இருந்த மூதாட்டிக்கு உணவும் பணமும் கொடுப்பதை கவனித்தார். அவர்களின் பேச்சில் காதை பதித்தார்.
    “உங்க பேர் என்னம்மா?”
    ஆதுரத்துடன் இந்தியில் கேட்டார் அப்பெண்மணி.
    “நான் நித்திலா, இவர் விக்ரம்... அடுத்த வாரம் எங்களுக்கு மேரேஜ்... எனக்குப் பேரண்ட்ஸ் கிடையாது... உங்களை அம்மாவா நினைச்சுக்கிறேன்... நாங்க நல்லா இருக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா”
    நர்மதாவின் நெஞ்சில் இரண்டாம் முறையாக இடி விழுந்தது
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-1.5064/#post-37397
    #நித்யாமாரியப்பன் #மெய்நிகராபூங்கொடியே
    அமிர்தசாகரம்-21
    அமிர்தவர்ஷினி திருநெல்வேலி நகர எல்லையைத் தாண்டும் வரை அமைதியாய் அமர்ந்திருந்தவள் அதன் பின்னர் சாலையில் வெறும் வாகனக்கூட்டங்கள் மட்டும் கண்ணுக்குத் தட்டுப்பட்ட தைரியத்தில் பக்கத்தில் அமர்ந்து சாலையில் கண் பதித்து காரை இயக்கிய கணவனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள்.
    இதை எதிர்பாராத வித்யாசாகர் ஒரு நொடி தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டான்.
    “முட்டக்கண்ணி இப்பிடி திடுதிடுப்புனு கிஸ் பண்ணாதடி… மனுசன் கான்சென்ட்ரேசன் ரோட்ல இருந்து உன் கிட்ட திரும்பிட்டா ரெண்டு பேருக்கும் பரலோகப்ராப்தி தான் கிடைக்கும்”
    “அச்சோ! நான் அதை யோசிக்கவேல்ல சாகர்… ஐ அம் சாரி… பட் நான் என்ன பண்ணுறது? ஐ மிஸ் யூ சோ மச்”
    கண்ணை விரித்து உதட்டைப் பிதுக்கி குழந்தை போல அவள் சொன்ன அழகில் மீண்டும் ஒரு முறை அவனது கவனம் சிதறியது.
    “அம்மா அமிர்தவர்ஷினி உனக்குப் புண்ணியமா போகும்… இப்பிடி வினோதமா பிஹேவ் பண்ணி என் மைண்டை திசை திருப்பாத… வீடு போய் சேர்ற வரைக்கும் குட் கேர்ளா சாங் கேட்டுட்டு வாயேன் செல்லமே”
    அதன் பின்னர் அவளுக்குப் பிடித்த பாடலை மியூசிக் ப்ளேயரில் கசியவிடவும் அமிர்தா சொல் பேச்சு கேட்கும் பெண்ணாய் மாறி தனது ரசனையைக் கணவனிடமிருந்து பாடல்களின் புறம் திருப்பினாள்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-21.5053/
    #நித்யாமாரியப்பன் #அமிர்தசாகரம்

    அமிர்தசாகரம் - 19,20 போட்டாச்சு

    அவள் எதையேனும் மறந்துவிட்டாளா என இதோடு லட்சத்து ஓராவது முறையாகக் கேட்டவனை முறைத்தபடியே தனது கூந்தலை போனிடெயிலாகப் போட்டுக்கொண்டாள் அமிர்தா.
    “வாயைத் திறந்து சொன்னா உன் வாய்ல இருக்குற முத்து உதிர்ந்துடுமோ? முட்டக்கண்ணிக்கு வர வர புருசன்ங்கிற மரியாதை துளியும் இல்ல… இப்பிடியே போச்சுனா…” என்று பேசிக் கொண்டே சென்றவனின் அருகில் வந்தவள் அவன் எதிர்பாரா விதமாகக் கன்னத்தில் முத்தமிட்டாள்.
    “போதும்! ரொம்ப பேசிட்டிங்க… கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க சாகர்… நான் எல்லா திங்சையும் எடுத்து வச்சிட்டேன்… சோ ஒரி பண்ணாதிங்க… அப்பிடி அங்க போனதுக்கு அப்புறம் எதாச்சும் மிஸ் ஆச்சுனா எனக்காக அதை எடுத்துட்டு வந்து குடுக்க மாட்டிங்களா?”
    “செங்கோட்டைக்கும் திருநெல்வேலிக்கும் மாறி மாறி போயிட்டு வர்றத விட்டா எனக்கு வேற வேலையே இல்ல பாரு! ஒழுங்கா ஒன்ஸ் அகெய்ன் லக்கேஜை செக் பண்ணிக்க… அங்க போனதுக்கு அப்புறமா என்னோட பிங் கலர் ஹேர் பேண்ட் காணாம போயிடுச்சு சாகர்னு மூஞ்சிய தொங்க போட்டுட்டு வீடியோ கால் பண்ணக்கூடாது... இப்பவே வார்ன் பண்ணிட்டேன்”
    அமிர்தா உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு மீண்டும் ஒரு முறை தனது உடமைகளைச் சரிபார்த்து திருப்தியான பிற்பாடு தான் அவளது கணவன் அமைதியானான்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-19.5047/#post-37289

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-20.5048/
    #அமிர்தசாகரம் #நித்யாமாரியப்பன்
    அமிர்தசாகரம்-17,18 போட்டாச்சு...
    அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன் தனது டவலால் அவளை வளைத்து இழுத்தவன் “முட்டக்கண்ணி முழியழகிக்கு என்ன யோசனை?” என்று கொஞ்ச ஆரம்பிக்கவும் அமிர்தா கண்களை விரித்து அவனை நோக்கினாள்.
    “மானிங்கே ரொமான்ஸ் மூட்ல இருக்கிங்களே மிஸ்டர் வித்யாசாகர்… என்ன காரணம்?”
    “வேற என்னடி அம்மு? நீ இன்னும் எட்டு நாளுக்கு இங்க இருக்க மாட்டியே… நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்… உன்னோட முட்டைக்கண்ணு உருட்டல், அழகா சுழிக்கிற புருவம், உனக்கு மட்டுமே சொந்தமான மைசூர் சாண்டல் சோப்போட வாசம் இதைலாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்றவன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு மீண்டும் மனைவியின் வாசத்தை மனதில் நிரப்பிக்கொண்டான்.
    இன்னும் எட்டு நாட்களுக்கு அவனுடன் இருக்கப்போவது அவளின் இந்த வாசனை மட்டும் தானே! அவனது இறுகிய அணைப்பில் நெகிழ்ந்து போனவள் எக்கி நின்று அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
    “நானும் உங்கள மிஸ் பண்ணுவேன் சாகர்… நான் டெய்லியும் உங்களுக்குக் கால் பண்ணுவேன்… நீங்க என் கிட்ட பேசணும்”
    “ம்ம்”
    “அப்புறம் நைட் நைன் ஓ கிளாக்குக்கு நான் வீடியோ கால் பண்ணுவேன்… நீங்க அப்போ ஃப்ரீ ஆயிடுவிங்களா?”
    “ம்ம்”
    படக்கென அவனிடமிருந்து விலகியவள் “என்ன எல்லாத்துக்கும் ம்ம்னு மட்டும் சொல்லுறிங்க… நான் சொல்லுறது காதுல விழுதா? இல்லயா?” என்று கேட்கவும் அவன் மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டான்.
    “ப்ச்… நானும் உன் கூடவே திருநெல்வேலிக்கு வந்துடவா?”
    ஏக்கத்துடன் கேட்டவனது குரலில் அவளுக்கும் உள்ளுக்குள் உருகியது.
    “எட்டு நாள் தானே! கண் மூடி திறக்கறதுக்குள்ள ஓடிப் போயிடும் சாகர்… அதுக்கு அப்புறம் நம்மள யாராலயும் பிரிக்க முடியாது” “நான் ஆன்ட்டிய எப்பிடியாச்சும் வீணைய வாசிக்க வைக்கப் போறேன்… நீங்க தலைய துவட்டிக்கோங்க” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் அவள்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-17.5041/
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-18.5044/

    #நித்யாமாரியப்பன் #அமிர்தசாகரம்
    அமிர்தசாகரம் - 15,16 போட்டாச்சு...
    “தூங்கலயா அம்மு? குளிர்ல நின்னா உனக்கு ஒத்துக்காதேடி”
    அக்கறையும் காதலும் சரிவிகிதத்தில் கலந்திருந்த அந்தக் குரலில் இதயம் உருக திரும்பிய அமிர்தா கணவனின் கழுத்தைத் தனது கரங்களால் வளைத்துக் கொண்டாள்.
    “என்ன பண்ணுறது மை டியர் ஹப்பி? எனக்கு உங்களோட சாப்பிட தான் பிடிச்சிருக்கு… அதுவும் நைட் டைம்ல இப்பிடி காத்தாட உக்காந்து சாப்பிடுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”
    “ம்ம்! இன்னைக்கும் நாளைக்கும் மட்டும் தான் இப்பிடி சேர்ந்து சாப்பிட முடியும்… அதுக்கு அப்புறம் நீ திருநெல்வேலிக்குப் போனதும் நான் தனியா தான் சாப்பிடணும்”
    பெருமூச்சு விட்டபடி சொன்னவனின் குரலில் கலந்திருந்த ஏக்கம் அவளுக்குப் புரிபட அவனது தாடையைக் கிள்ளி முத்தமிட்டாள் அமிர்தா.
    “நாள் சீக்கிரமா ஓடிப் போயிடும் சாகர்… எக்சாம் மட்டும் முடியட்டும்… அதுக்கு அப்புறம் நீங்களே போனு சொன்னாலும் உங்கள விட்டு ஒரு இன்ச் கூட நகர மாட்டேன்”
    “அஹான்! இதுல்லாம் நல்லா சொல்லுற… ஆனா சொல்ல வேண்டிய எதையும் சொல்லாத” என்று முணுமுணுத்தான் அவன்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-15.5036/

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-16.5040/
    #அமிர்தசாகரம் #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom