• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,116

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 20

    ஸ்ராவணி "அப்பிடி தான்டா பண்ணுவேன். நான் அமைதியா இருக்கணும்னா இந்த வீட்டை அகெய்ன் எனக்கே வித்துடுங்க. நானும் டிவோர்ஸ் குடுத்துடுவேன். நீயும் இந்த டார்ச்சர்ஸ் எதையும் அனுபவிக்க வேண்டாம். இல்லன்னா....." என்று இழுக்க
    அவன் "என்ன பண்ணுவடி? நீ என்ன பண்ணுனாலும் நான் வீட்டை உனக்கு தர்றதா இல்ல. அப்புறம் டிவோர்ஸ்கு நீ சம்மதிக்கணும்னு எனக்கு அவசியமே இல்ல. நீ சம்மதிக்கவே இல்லனாலும் கூட என்னால டிவோர்ஸ் வாங்கிக்க முடியும்" என்று சவால் விட்டு கையை கட்டிக் கொண்டான்.

    ஸ்ராவணி உச்சு கொட்டியபடி எழுந்தவள் "சரி அப்போ உன் இஷ்டம். இனிமே நான் சுபத்ரா ஆன்ட்டி கிட்ட பேசிக்கிறேன்" என்று சொல்லவும்

    அபிமன்யூ தாயின் பெயரைக் கேட்டதும் முதலில் அதிர்ந்தவன் பின்னர் கோபத்துடன் அவள் கழுத்தில் கையை வைக்க அஸ்வின் விபரீதமாக அவன் எதுவும் செய்வதற்குள் ஓடிவந்து அவனை விலக்க முயல அவனது பிடி இறுக்கமாக இருந்தது.

    "அபி! என்னடா பண்ணுற? விடுடா அந்த பொண்ணை" என்று அஸ்வின் விலக்க முயல

    அபிமன்யூ "இன்னொரு தடவை எங்க அம்மாவை நம்ம ரெண்டு பேருக்கு இடையில் கொண்டு வந்தா ஐ வில் கில் யூ ஸ்ராவணி" என்று எச்சரித்துவிட்டு அவளின் கழுத்தை இன்னும் இறுக்கமாகப் பற்ற அஸ்வின் அவனை வேகமாக பிடித்து இழுத்தவன் பளாரென்று கன்னத்தில் அறைந்தான்.

    தொடர்ந்து படிக்க

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 18

    வர்ஷா உடலை அருவருப்பில் சுருக்கிக் கொள்ளவும் ஆதித்யா அவளது தோளில் தட்டிக்கொடுத்தான்.

    “இதுக்காக நீ எம்பாரசிங்கா ஃபீல் பண்ண வேண்டாம் ஜி.பி... இது அவனோட நேரம், ஆடுற வரைக்கும் ஆடி அடங்கட்டும்... கண்டிப்பா அவனுக்கும் செக் வைக்குற காலம் ஒன்னு வரும்”

    “அவனை நம்மளால ஒன்னுமே பண்ண முடியாதுல்ல?”

    சோகமாய் கேட்டாள் வர்ஷா.

    “அது தான் உண்மை ஜி.பி... அவன் பரம்பரை பிசினஸ்மேன்... அரசியல் வட்டாரத்துல நல்ல செல்வாக்கு இருக்குறவன்... நம்மளால அவனை இப்போதைக்கு எதுவும் பண்ண முடியாது... ஒரு ஃபேமஸ் சேயிங் உண்டு, You reap what you sow... ஒருத்தவங்க நல்லதை விதைச்சா நல்லதை பலனா அடைவாங்க... கெட்டதை விதைச்சா அவங்களுக்குக் கெட்டது தான் நடக்கும்... மாடர்ன் வேர்ட்ஸ்ல சொல்லணும்னா கர்மா அவங்களை சும்மா விடாது... சாணக்கியன் விசயத்துலயும் நான் அந்தக் கர்மாவ தான் நம்புறேன்... கர்மா இஸ் அ பூமராங்” என்றான் ஆதித்யா.

    வர்ஷா எதுவும் கூறவில்லை. ஆதித்யாவின் கர்மா குறித்த பேச்சு அவளது ஆறுதலுக்காகச் சொல்லப்பட்டதா அல்லது மெய்யாகவே அவன் கூறிய கர்மா மீது அவனுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாத விசயங்கள்.

    இருப்பினும் அவனது தோளில் சாய்ந்து இருக்கும் இந்நேரம் அவள் மனதுக்கு இதமாக இருக்கவே சாணக்கியன் குறித்த கலக்கம் மெதுமெதுவாய் வர்ஷாவின் மனதை விட்டு அகன்றது.

    தலையுயர்த்தி கண்கள் கனிய ஆதித்யாவைப் பார்க்க அவனோ “ரொம்ப செண்டிமெண்டா ஃபீல் பண்ணாத ஜி.பி... உனக்காக அவன் கிட்ட ஏய் ஓய்னு கத்தி ஜம்பமா பஞ்ச் டயலாக் பேசிருக்கேன்... சோ நீ தான் எனக்கு வேலன்டைன்ஸ் டேக்கு ட்ரீட் வைக்கணும்” என்றான் அமர்த்தலாக.

    வர்ஷா உடனே நேராக அமர்ந்தவள் “நான் ஏன்டா ட்ரீட் வைக்கணும்? என் காசை காலி பண்ணுறதுலயே குறியா இருக்க நீ... ஃபர்ஸ்ட் ஆப் ஆல், வேலண்டைன்ஸ் டேக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்க

    “சம்பந்தப்படுத்திக்கணும் ஜி.பி... பிகாஸ் வெளியுலகத்தை பொறுத்த வரைக்கும் குறைஞ்சபட்சம் நம்ம ஃபேமிலிய பொறுத்தவரைக்கும் வீ ஆர் நியூலி மேரீட்... சோ இது நமக்கு ஃபர்ஸ்ட் வேலண்டைன்ஸ் டே... நம்மளை விட அவங்க ஆர்வமா இருப்பாங்க... அதுக்காகவாச்சும் நீ ட்ரீட் குடுக்கணும்” என்றான் அவன்.

    “அதுக்கு நானே தான் ட்ரீட் வைக்கணுமா? நீ தான் பெரிய யூடியூபராச்சே... அதுல வர்ற இன்கம்மை நீ என்ன தான் பண்ணுற?”

    உடனே விசமமாக புன்னகைத்த ஆதித்யா “பார்த்தியா? வீ ஆர் மேரீட்னு சொன்னதும் பொண்டாட்டி லட்சணம் உனக்கு மெதுமெதுவா வருது... இதே மாடுலேசன்ல உனக்கும் எனக்கும் உங்க கபேல ஸ்பெஷல் டேபிள் ஒன்னு புக் பண்ணு பார்ப்போம்” என்றபடி நழுவியவன் வீட்டை நோக்கி நடை போட

    “முடியாது முடியாது... இந்த தடவை நீ தான் செலவளிக்கணும்... என் கிட்ட காசில்ல” என பதிலளித்தபடி அவனைத் தொடர்ந்தாள் வர்ஷா.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 17

    “உன் ஒய்போட அப்பா இப்ப சட்டத்துக்கு முன்னாடி குற்றவாளியா நிக்குறார் ஹீரோ... ஐ திங் இந்த தகவல் உனக்கு வந்திருக்குமே”

    அதை கேட்டதும் ஆதித்யாவுக்குள் சுறுசுறுவென கோபம் மூண்டது.
    “யூ கவர்ட்... உனக்குத் தைரியம் இருந்துச்சுனா என் கிட்ட மோதுடா... அதை விட்டுட்டு சில்லறைத்தனமா விக்கி மாமா கூட விளையாடுற... அசிங்கமா இல்ல உனக்கு?”

    “த்சூ! த்சூ! எவ்ளோ கோவம் வருது ஹீரோ சாருக்கு! நான் யார் கூட மோதணும், யாரை அடிக்கணும்னு நீ எனக்குக் கிளாஸ் எடுக்க வேண்டாம் தம்பி... நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவ உன் கையால தாலி கட்டிக்கிட்டு யூடியூப்ல தில்லா வ்ளாக் போட்டாளே, அப்ப முடிவு பண்ணுனேன், இது தான் அவளோட கடைசி சந்தோசமா இருக்கணும்னு... அவளையும் உன்னையும் பழி வாங்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன்... இது வெறும் ஆரம்பம் தான்... போகப் போக இன்னும் நிறைய இருக்கு தம்பி”

    கூலாக சாணக்கியன் கூறவும் ஆதித்யா பற்களை நறநறவென கடித்தான். அச்சத்தம் சாணக்கியனுக்கு இன்பமாக இருக்கவே
    “போனா போகுதுனு உனக்காக ஒரு ஆஃபர் குடுக்குறேன், அதை நீ அக்செப்ட் பண்ணிட்டேனா உன் விக்கி மாமா மேல குடுத்த கம்ப்ளைண்டை நானே வாபஸ் வாங்க வைக்குறேன்” என்றான் தாராளமனதுடன்.

    அப்படி அவன் என்ன தான் கூற வருகிறான் என காத்திருந்தான் ஆதித்யா.

    சாணக்கியன் மொத்த பழிவெறியையும் மனதில் தேக்கி நாவில் விசத்தைத் தோய்த்து அந்த வார்த்தையை உதிர்த்தான்.
    “பெருசா ஒன்னுமில்ல, சைக்கிள் கேப்ல என் பொண்டாட்டியா ஆக வேண்டியவளை நீ பறிச்சுக்கிட்டு உன் பொண்டாட்டியா ஆக்குனல்ல, அந்த வர்ஷாவ ஒரு நாள் ஒரே ஒரு நாள் என் கூட ஸ்பெண்ட் பண்ண அனுப்பி வை... ஜஸ்ட் ஒன் டே மட்டும் தான்... தட்ஸ் இனாஃப்”

    அதை கேட்டதும் ஆதித்யா “ஏய்” என்று கோபத்தில் கர்ஜிக்க
    “ஏன் கத்துற? எதுக்கு இவ்ளோ கோவம்? இப்ப இருக்குற வர்ஷாவுக்கு நான் குடுக்குற இந்த ஆஃபர் கோல்டன் ஆஃபர்டா ஹீரோ... புரிஞ்சிக்க... போய் உன் பொண்டாட்டிய இதுக்கு சம்மதிக்க வை” என்றான் சாணக்கியன் அலட்சியமாக.

    “வாயை மூடுடா! நான் இருக்குற வரைக்கும் வர்ஷாவோட நிழலைக் கூட உன்னால தொட முடியாது... உன் சாக்கடை ஆஃபரை நீயே வச்சுக்க”

    “அப்புறம் உன் இஷ்டம்... சீக்கிரமா உன் விக்கி மாமா கிட்ட இருந்து சோக செய்தி வரும்... வெய்ட் பண்ணு... அப்ப சந்தோசத்தை ஷேர் பண்ணிக்க கண்டிப்பா உனக்குக் கால் பண்ணுவேன்... பை” என்று ஏளனத்துடன் மொழிந்தபடி அழைப்பைத் துண்டித்தான் சாணக்கியன்.

    தொடர்ந்து படிக்க
    யாரோ இவள் அத்தியாயம் 15

    ஆதித்யா அவளது நீட்டிய கரத்தைப் பற்றியவன் தன்னை நோக்கி அவளை இழுக்க அவனது இழுப்புக்கு கட்டுப்பட்டு வந்தவள் கேள்வியாய் அவனை ஏறிட

    “உனக்கு மெஸ்மெரைஸ் பண்ணக்கூடிய வாய்ஸ் இருக்கு ஜி.பி... ஆனா ஒன்னு அது பாடுனா மட்டும் தான் வெளிய வருது” என்றான் ஆதித்யா.?

    “இதையும் ரெக்கார்ட் பண்ணுறீயாடா?” சந்தேகமாக வினவினாள் வர்ஷா.

    அவனோ தலையாட்டி மறுத்தவனாக “சில மொமண்ட்ஸ் நம்ம மனசுக்குள்ள வச்சு ரசிக்கிறதுக்காக மட்டுமே உருவாகும்... அப்பிடிப்பட்ட மொமண்டை கண்டெண்ட் ஆக்கி காசு பாக்குறதும், அதுல அட்டென்சன் சீக் பண்ணுறதும் அசிங்கம்னு நினைக்குறவன் நான்... இந்த மொமண்ட் என்னோட மனசுக்கு மட்டுமே சொந்தமானது... சோ இதை நான் ரெக்கார்ட் பண்ணுவேன், நோ மோர் எடிட்டிங் அண்ட் பப்ளிஷிங்” என்றான்.

    அப்படி என்ன ரசிக்கத்தக்க தருணம் இது என்று வர்ஷா கேட்டிருக்கலாம் தான். ஆனால் சொன்னவனின் விழிகளில் இருந்த இது வரை கண்டிடாத உணர்வில் அவள் தான் குழம்பிப் போயிருந்தாளே!

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 19

    காலிங் பெல் பலமாக அடிக்க சிரமப்பட்டு எழுந்தான் அபிமன்யூ.

    எழுந்ததும் சுற்றி முற்றி பார்த்தவன் நடுஹாலில் ஆங்காங்கே உருண்டு கிடந்த பாட்டில்களையும் இன்னொரு புறம் தூங்கிக் கொண்டிருந்த அஸ்வினையும் பார்த்ததும் இரவு இருவரும் சேர்ந்து குடித்த காட்சிகள் நினைவுக்கு வர வலித்த தலையை பிடித்துவிட்டபடி "அபி! இனிமே ஆல்கஹாலை குறைச்சுக்கோடா" என்று அவனுக்கு அவனே அறிவுரை சொல்லிக் கொண்டான்.

    காலிங்பெல் மீண்டும் அடிக்கவே எரிச்சலுடன் "எவன்டா அது? காலங்காத்தால இப்பிடி காலிங்பெல் அடிச்சே சாகடிக்கிறது?" என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி கதவைத் திறக்க அங்கே நின்றவர்களை அவன் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை.

    வலித்த தலையை பிடித்தபடியே "இப்போ எதுக்கு இங்க வந்திருக்கிங்க நீங்க?" என்க அவன் கையை கதவிலிருந்து தட்டிவிட்டபடி வீட்டினுள் நுழைந்தாள் ஸ்ராவணி.

    அவளை தொடர்ந்து ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவனை கேலியுடன் பார்த்தவாறு சென்றாள் மேனகா.

    அவனுக்கு அவர்கள் சூட்கேசுடன் வந்தது வேறு கோபத்தை கிளப்ப "எவ்ளோ தைரியம் இருந்தா என்னோட பெர்மிசன் இல்லாம என் வீட்டுக்குள்ள நுழையுவிங்க ரெண்டு பேரும்?" என்று கத்த

    ஸ்ராவணி காதில் கை வைத்தபடி "ஏன் கத்துற? பாரு நீ கத்துன சத்தத்துல அவன் முழிச்சிட்டான்" என்றபடி அஸ்வினை கை காட்ட அவனும் இந்த இருவரையும் எதிர்ப்பார்க்காததால் தான் ஒருவேளை கனவு காண்கிறோமோ என்று நினைத்து தன்னையே கிள்ளிப் பார்த்து கொண்டான்.

    மேனகா அவனது செய்கையை கண்டு சிரித்துவிட்டு "என்ன வலிக்குதா? நிஜமாவே நாங்க தான்யா. நம்புங்க" என்று சொல்ல அவன் பதறியடித்து எழுந்து அபிமன்யூவுடன் நின்று கொண்டான்.

    ஸ்ராவணி தரையில் கிடந்த பாட்டில்களை அசூயையுடன் பார்த்துவிட்டு கவனமாக அவற்றை மிதிக்காமல் சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். நன்றாக சாய்ந்து அமர்ந்தவள் அபிமன்யூவையும் அஸ்வினையும் அளவிட்டபடியே கீழே கிடந்த பாட்டில்களை கண்டவள் "நானும் மேகியும் இனிமே இங்கே எங்க வீட்டுல தான் இருக்க போறோம்" என்று புன்னகை தவழ்ந்த முகத்துடன் சொல்ல அபிமன்யூவும் அஸ்வினும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 14

    அறைக்குள் நுழைந்ததும் அவரது கரத்தை உதறினான் சாணக்கியன்.
    “ஐ அம் நாட் அ கிட் டாட்... ஒய் ஆர் யூ ட்ரீட்டிங் மீ லைக் திஸ்?”
    சீறியவனை மார்பின் குறுக்கே கரத்தைக் கட்டிக்கொண்டு பார்த்தார் வினயன்.

    “ஐ அம் டாக்கிங் டு யூ டாட்”

    “ஐ நோ... வாட் இஸ் ஈட்டிங் யூ சாணு? ஏன் உன்னால பிசினஸ் மீட்டிங்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியல?”

    “தெரிஞ்சும் தெரியாத மாதிரி கேக்குறிங்களே டாட்! ஆப்டர் ஆல் ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பையன் என் முகத்துல கரிய பூசிட்டு நான் காதலிச்ச பொண்ணை இந்த நாட்டை விட்டே கடத்திட்டுப் போயிருக்கான்... எல்லாம் தெரிஞ்சும், நான் கைய கட்டிட்டு அவனும் அவளும் ஏர்போர்ட்ல கபிள்ஸ் வ்ளாக் போடுறதை வேடிக்கை பார்த்துட்டு மணமேடையில கையாலாகாதவனா நின்னேன்... இப்பவும் அவங்க எங்க போனாங்கனு தெளிவா தெரியுது... ஆனா என்னால அவங்களை எதுவும் பண்ண முடியலையேனு வெறியாகுது டாட்... என் வாழ்க்கைல நான் இவ்ளோ அசிங்கப்பட்டது இல்ல”
    உறுமித் தீர்த்தான் சாணக்கியன்.

    வர்ஷாவும் ஆதித்யாவும் ஜெர்மனிக்குச் சென்றுவிட்டதை உதவியாளன் மூலமாக தகவல் திரட்டி அறிந்து கொண்டவன் முதலில் இதற்கு காரணமான வர்ஷாவின் குடும்பத்தை இரண்டில் ஒன்று பார்க்கும் எண்ணத்தில் தான் இருந்தான்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 13

    வர்ஷா இல்லையென தலையாட்டியபடியே கழற்றி அங்கே கிடந்த சோஃபாவில் வைத்தவள் கீழே குனியும் போது புடவையிலிருந்து வெளியே வந்து அவள் கண் முன்னே ஆடிய மாங்கல்யத்தைப் பார்த்ததும் தான் இதை எச்சூழ்நிலையில் கழுத்தில் மாட்டிக்கொண்டோம் என்பது நினைவுக்கு வந்தது.

    நிமிர்ந்தவள் மடமடவென அதை கழற்றி ஹாலின் ஓரமாய் அமர்ந்திருந்த குப்பைத்தொட்டியில் வீச

    “ஏய் ஜி.பி என்னடி பண்ணுற?” என்று பதறியபடியே வந்து அந்த மாங்கல்யம் குப்பைத்தொட்டியைத் தொடும் முன்னர் கேட்ச் பிடித்தான் ஆதித்யா.

    வர்ஷா அவனைப் புதிராகப் பார்த்தவள் “ப்ச்! ஏன் நட்டநடு ஹால்ல ஒரு டூப்ளிகேட் தாலிக்காக விக்கெட் கீப்பர் அவதாரம் எடுக்குற ஆதி?” என்றாள் அலட்சியமாக.

    ஆதித்யாவோ அந்த மாங்கல்யத்தை பத்திரமாக உள்ளங்கைக்குள் பொதிந்து கொண்டான்.

    “எக்ஸ்யூஸ் மீ! நமக்கு மேரேஜ் ஆகிடுச்சுனு ஃபேமிலியையும் சாணக்கியனையும் ஏமாத்துறதுக்காக தான் இதை உன் கிட்ட குடுத்து கழுத்துல மாட்டிக்கச் சொன்னேன்... அந்த இன்சிடெண்ட் தான் ட்ராமா... பட் தாலி ஒரிஜினல்மா.... அதுவும் என் ஆச்சியோட தாலி... ஐ மீன் அம்மா ஆச்சியோட தாலி”

    “ஓ”

    அவன் ஏதோ கதை சொல்வது போல அவள் ஓ போடவும் ஆதித்யா அதை கவனியாதவன் போல இடப்பக்கத்திலிருக்கும் தனது அறையை நோக்கி நடைபோட்டான்.

    அவனது அலட்சியத்தால் எரிச்சலுற்ற வர்ஷா தனது மோவாயைத் தோளில் இடித்துக்கொண்டாள்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    கடைசி குட்டிக்கதை

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 18

    இவ்வளவையும் வேடிக்கை பார்த்த அஸ்வின் மேனகாவிடம் "அபி உங்க ஃப்ரெண்டை கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு என்ன ஆதாரம்?" என்று கேட்க

    மேனகா "எதுக்கு ஆதாரம் கேக்கணும்னு ஒரு விவஸ்தையே இல்லையா மிஸ்டர் அஸ்வின்?" என்று எகிற ஆரம்பித்தாள்.
    பார்த்திபன் "ஏன்மா இவ்வளவு நேரம் நீ பேசுனதை நாங்க கேட்டோம்ல, இப்போ எங்களுக்கு ஆதாரம் வேணும். அது இருக்கா உன் கிட்ட?" என்று மகன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் கேட்க
    மேனகா அனைவரையும் ஏற இறங்க பார்த்தபடி தன்னுடைய பேக்கிலிருந்து ஒரு ஃபைலை எடுத்தவள் அதில் இருக்கும் அபிமன்யூ, ஸ்ராவணியின் திருமணச் சான்றிதழைக் காட்ட அங்கிருந்த அனைவருமே அபிமன்யூவின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்தனர்.

    அந்த சான்றிதழை பார்த்த அபிமன்யூவால் அவன் கண்களையே நம்பமுடியவில்லை. அந்தச் சான்றிதழின்படி அவனுக்கும் ஸ்ராவணிக்கும் திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. தேதியைக் கவனித்தவன் அது ஸ்ராவணியின் ஃப்ளாட்டை தன் பெயருக்கு பதிவு செய்த நாள் என்பதை அப்போது தான் கவனித்தான்.

    அன்று எப்படி திருமணப்பதிவு நடந்திருக்கும் என்று அவனது வழக்கறிஞர் மூளை வேலை செய்ய ஆரம்பிக்க அவனால் அப்போதைக்கு நடந்த விஷயங்களை யூகிக்க முடியவில்லை.
    அவனது பார்வை வட்டத்தில் சிலையாய் சமைந்து நின்ற ஸ்ராவணி விழவும் "எல்லாம் இவளோட பிளானா தான் இருக்கும்" என்று மனதில் பொருமிக்கொண்டான் அவன்.

    அதற்குள் மேனகா ஸ்ராவணியின் கையைப் பிடித்தவள் சுபத்ராவிடம் வந்து "ஆன்ட்டி நான் உங்களை நம்புறேன். என் ஃப்ரெண்டுக்கு உங்களால மட்டும் தான் நியாயம் கெடைக்கும். நாங்க கிளம்புறோம் ஆன்ட்டி" என்றவள் மறக்காமல் அபிமன்யூவின் கையிலிருந்த திருமணச் சான்றிதழை வாங்கிவிட்டு ஸ்ராவணியை அழைத்துக் கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறினாள்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    அடுத்த குட்டிக்கதை
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom