• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,895

Profile posts Latest activity Postings About

  • #அவள்ஒருராகமாலிகை எபி 4
    சந்திரிகா வேறு வழியின்றி உயர்த்தி பிடித்த தம்ளரை அவனிடமிருந்து வாங்குவதற்காக எக்கி நிற்க அந்த இடைவெளியைப் பயன்படுத்தி அவளை இடையோடு அணைத்தான் நரேஷ்.
    “என்ன பண்ணுறிங்க? என்னை விடுங்க... இல்லனா அம்மா கிட்ட சொல்லிடுவேன்”
    மிரட்டியவளைப் பார்த்து கொள்ளிவாய் பிசாசு போல சிரித்தான் அவன்.
    “இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் உங்கம்மா இங்க அனுப்பிருக்காங்க பேபி”
    கண்சிமிட்டியவனின் தோள்பட்டையில் பற்கள் பதியும்வரை நன்றாகக் கடித்தாள் சந்திரிகா.
    அவன் வலியில் “ஆஆஆ” என துடித்தபடி கைகளை விலக்கிக்கொள்ள விருட்டென கதவைத் திறந்து ஓடினாள் அவள்.
    நரேஷ் வலித்த தோளைத் தேய்த்தபடி அறைக்குள் நிற்க சாந்தமதி பதறியடித்துக்கொண்டு வந்தார்.
    “என்னாச்சு பாப்பா?”
    கண்ணீர் மல்க நின்ற சந்திரிகா நரேஷைக் கை காட்டினாள்.
    “இவன் என் கிட்ட தப்பா நடந்துக்க பாக்குறான்மா”
    சாந்தமதி அவனைப் பார்க்க நரேஷோ அலட்டிக்கொள்ளவில்லை.
    “அத்தை நான் ஃப்ராங் வீடியோ ஷூட் பண்ணிட்டிருந்தேன்... நம்பலனா இங்க பாருங்க” என்று அவ்வளவு நேரம் ஒளித்து வைத்திருந்த கேமராவை எடுத்துக் காட்டினான்.
    “இப்ப இது தான் ட்ரெண்ட் அத்தை... நான் பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு அழகா எடிட் பண்ணலாம்னு யோசிச்சேன்... சந்து பேபி பாதியிலயே என்னைத் தப்பா நினைச்சிட்டு ஓடி வந்துட்டா”
    சாந்தமதி அவனை விடுத்து மகளை முறைத்தார்.
    “ப்ராங்க் வீடியோனு தெரியாம மருமகனை தப்பா நினைச்சிட்டியே பாப்பா... இனிமே இப்பிடி பேசாத”
    சொல்லிவிட்டுச் சமையலறைக்குப் போய்விட்டார் அவர். சந்திரிகாவை நக்கலாகப் பார்த்தான் நரேஷ்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-4.5518/

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை எபி 3
    அவன் கையில் சிவப்புரோஜாக்கள் அடங்கிய மலர்க்கொத்து அமர்ந்திருந்தது. வந்தவன் நேரே சந்திரிகாவிடம் சென்று மலர்க்கொத்தை நீட்டினான்.
    அவன் யாரென புரியாமல் அவள் விழிக்கையில் புன்னகையோடு “ஹேப்பி பர்த்டே மை லவ்” என வாழ்த்தினான்.
    “மை லவ்வா?”
    சந்திரிகா அதிர்ந்தான்.
    “யார் இவன்?”
    சட்டநாதனின் வதனம் சினம் கொள்ள ஓடோடி வந்தனர் சாந்தமதியும் சர்வேஷும்.
    “வாங்க வாங்க மாப்பிள்ளை”
    சாந்தமதியும் சர்வேஷும் அந்த நெடியவனை முப்பத்திரண்டு பற்களும் மின்ன வரவேற்கவும், சட்டநாதனும் சந்திரிகாவும் மாப்பிள்ளையா என அதிர்ந்தனர்.
    சட்டநாதன் சீற்றத்துடன் மனைவியைப் பார்வையால் எரித்தார்.
    “எல்லாத்தையும் வீட்டுல போய் சொல்லுறேன்ங்க... கொஞ்சம் பொறுமையா இருங்க” அவரது காதில் கிசுகிசுத்தார் சாந்தமதி.
    சந்திரிகாவோ அந்த நெடியவனின் மையல் பார்வையில் முகம் சுளித்தாள்.
    அவளருகே வந்த சர்வேஷ் அவனைத் தங்கைக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
    “பாப்பா இவர் நரேஷ்... அம்மாவோட தூரத்துச் சொந்தம்... அம்மா உன்னை இவருக்குப் பேசி முடிச்சிருக்காங்க”
    சிரித்தபடியே தங்கையின் மனதில் அணுகுண்டு தாக்குதல் நடத்தினான் சர்வேஷ்.
    “அண்ணா... இதை பத்தி... எப்ப...” சந்திரிகா பேச வார்த்தை வராமல் தத்தளித்தாள்.
    அந்த நரேஷோ அவளை உரிமையோடு தோளணைத்தான்.
    வெடுக்கென விலக முயன்றவளை இறுக்கமாக அணைத்தவன் “உனக்குப் புரியுற மாதிரி எல்லாத்தையும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுறேன் பேபி... நம்ம தனியா போகலாமா?” என்று கேட்டவாறு தோளில் இருந்த கையை இடைக்கு மாற்றி அவளைத் தன்னோடு இழுத்துச் சென்றான்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-3.5512/#post-41231

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை எபி 2
    மதியம் உணவருந்துகையில் சந்திரிகா மெதுவாக கார் வாங்கலாமா என்ற கேள்வியை ஆசையோடு எழுப்பினாள்.
    “இப்ப எதுக்குமா கார்?” என சட்டநாதன் மறுக்க
    “இருக்கட்டுமேங்க… நம்ம பாப்பாக்குக் கல்யாணம் வச்சா பொண்ணழைப்புக்குச் சொந்தக்கார்ல அனுப்பி வச்சோம்னா எல்லாரும் நம்மளை பெருமையா பேசுவாங்க” என்றார் சாந்தமதி.
    “பாப்பா இப்ப தான் ஸ்கூல் முடிச்சிருக்கா… அடுத்த வாரம் பிறந்தநாள் வந்தா அவளுக்குப் பதினெட்டு ஆகப்போகுது… அதுக்குள்ள நீ ஏன் கல்யாணப்பேச்சு எடுக்குற சாந்தா? அவ படிச்சு நல்லவேளைக்குப் போய் சொந்தக்கால்ல நிக்கணும்”
    சட்டநாதனின் கண்டிப்பான பேச்சில் சாந்தமதியின் முகம் சுண்டியது. சந்திரிகாவுக்கோ திருமணம் பற்றிய பேச்சில் அக்கறை இல்லை. ஆனால் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை குறையவில்லை.
    அந்த கனவில் இருந்ததால் அன்னையும் அண்ணனும் பார்வை பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை.
    சாப்பிட்ட பிறகு சட்டநாதனிடம் தனது கார் ஆசையை வெளிப்படுத்தினாள் சந்திரிகா.
    “ப்ளீஸ்பா” என்று அவள் சொல்லவும் ஒரு நிபந்தனைக்குட்பட்டு சம்மதித்தார் சட்டநாதன்.
    ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகு தான் காரை ஓட்டவேண்டும் என்பதே நிபந்தனை! சந்திரிகாவும் சரியென சம்மதிக்க அன்றிரவே குடும்பத்தோடு கார் ஷோரூம் சென்று ரெனால்ட் க்விட் கார் ஒன்றை புக் செய்தார்கள்.
    சிங்கிள் பேமெண்டில் தொகை செலுத்தியதும் சட்டநாதனுக்கே பெருமையாக இருந்தது.
    அவரது பெயரில் தான் வாங்கவேண்டுமென அடம்பிடித்து சந்திரிகா வாங்க வைத்துவிட்டாள். அதில் சர்வேஷுக்கு ஏமாற்றம் தான்.
    “அப்பா தான் காரை ஃபர்ஸ்ட் ஓட்டணும்” என்று வேறு கூறியிருந்தாள் அவள்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-2.5503/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைகளும் Final Epi posted
    அழகுநாச்சியிடம் சிறுவில்வாடி கஷாயத்தையும் நூலகத்தில் மாற்றிவிட்டு வந்த புத்தகங்களையும் கொடுத்தான் சரபேஸ்வரன்.
    “நீங்க எதுக்கு தம்பி வீணா அழையுறிங்க?” என்று சொன்னபடி வாங்கிக்கொண்டார் அழகுநாச்சி.
    “எப்பவும் கவி செய்யுறதை இந்த தடவை நான் செஞ்சிருக்கேன்… இதுல என்ன இருக்கு அத்தை? ஹிக்கின் பாதம்ஸ்ல வாங்கி அனுப்புன நாவல் எல்லாம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”
    “அதுல இன்னும் ரெண்டு புக் படிக்கணும் தம்பி… சரி, உங்களுக்குக் காபி போடட்டுமா?”
    “வேண்டாம் அத்தை… இப்ப கிளம்ப வேண்டியது தான்… அப்பா இதோட நாலு தடவை கால் பண்ணிட்டாக… அங்க எல்லாரையும் நலம் விசாரிச்சிட்டு நைட் வீட்டுக்குக் கிளம்பணும்… கவி எங்க அத்தை?”
    “அவளும் கோமதியும் தோட்டத்துல நிக்குறாங்க தம்பி”
    சரபேஸ்வரன் மனைவியைத் தேடி புறவாசல் தோட்டத்துக்குச் சென்றான்.
    அவனும் சங்கவியும் திருநெல்வேலிக்கு வந்து அன்றோடு இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. இருவரும் கோடீஸ்வரன் நகரில் இருக்கும் சரபேஸ்வரனின் இல்லத்தில் தங்கியிருந்தனர். சாரங்கபாணியும் குழலியும் முன்பே சொன்னபடி உமா மற்றும் ஆனந்துக்குத் துணையாக ஆழியூர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
    சரபேஸ்வரனுக்கு இன்னும் மூன்று நாட்கள் விடுமுறை பாக்கி இருந்தது.
    அதற்குள் மூர்த்தியின் விவகாரத்தில் எஞ்சியுள்ளதை தமக்கையிடம் பேசி முடித்துவிடும் தீர்மானத்தோடு வந்திருந்தான் அவன்.
    மூர்த்திக்கு போஸ்கோ நீதிமன்றத்தில் சிறை தண்டனை உறுதியான தகவல் கிடைத்ததும் உமாவைத் தொடர்பு கொண்டு பேசியவன் அடுத்து என்ன செய்யப்போகிறாய் என கேட்டான்.
    உமா மூர்த்தியிடம் மணவிலக்கு கோரும் முடிவை எடுத்திருந்தார். அதை தம்பியிடம் கூறிவிட்டார். கணபதி மூலமாக வழக்கறிஞரைப் பார்த்து அந்த வேலைக்காக அலைந்து திரிந்ததில் இரண்டு நாட்கள் இமைப்பதற்குள் கடந்துவிட்டன.
    வழக்குக்குச் செலவாகும் கட்டணத்தைத் தானே செலுத்திவிடுவதாக தமக்கையிடம் கூறிவிட்டான்.
    மூர்த்தியோடு இருந்த பந்தம் ஆத்மரீதியாகப் பிரிந்தாலும் சட்டரீதியாகத் தொடர்வதில் உமாவுக்குப் பிடித்தமில்லை. விவாகரத்து கிடைத்தால் அவர் நிம்மதியடைவார் என்பது சாரங்கபாணியின் எண்ணம்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-30-final.5484/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 29 (Pre-final) போட்டாச்சு மக்களே... கதை செப்டம்பர் 30ல் தளத்தில் இருந்து நீக்கப்படும்...
    ***********
    “என்னை மன்னிச்சிடும்மா”
    அழுகையோடு ஒலித்த உமாவின் குரல் அவளைத் தடுத்தது.
    “ஏன் இப்பிடிலாம் பேசுறிங்க?”
    “அந்தாளைப் பத்தி நீ சொன்னப்ப உன்னைத் தப்பா பேசி எப்பேர்ப்பட்ட பாவத்தைப் பண்ணிட்டேன்… உனக்கு உங்கப்பா பேசி முடிச்ச மாப்பிள்ளை வீட்டுல உன்னைப் பத்தி தப்பா சொல்லி உங்கப்பாவோட மரணத்துக்கு ஏதோ ஒரு வகைல நான் காரணமா இருந்துட்டேன்மா… என்னை மன்னிச்சிடு”
    சங்கவிக்கே உமா மீது அதனால் தானே வருத்தம். தந்தையின் இறப்புக்கு அவர் தான் காரணம் என்பது அவளது எண்ணம். இப்போது மன்னிப்பு கேட்பதால் என் தந்தை திரும்பி வரவா போகிறார் என்ற விரக்தி வந்தாலும் ஏற்கெனவே வாழ்க்கையில் மரணக்காயம் பட்டவரிடம் அதைக் காட்டிக்கொள்ளாமல் அமைதி காத்தாள் சங்கவி.
    “நீங்க ரெண்டு பேரும் பேசுங்க… எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு”
    அவர்கள் பேசிக்கொள்ளட்டுமென இரவுணவுக்கான சமையலைக் கவனிக்கச் சென்றுவிட்டாள் சங்கவி.
    அவள் போனதும் சரபேஸ்வரன் தமக்கைக்குத் தைரியம் கொடுத்தான்.
    “அந்தாளு போயிட்டானே இனிமே ஆனந்தோட லைஃப் என்னாகுமோனு யோசிக்காதக்கா… ஆனந்த் எனக்கு மகன் மாதிரி… நான் அவனைப் பாத்துப்பேன்”
    “நீ பாத்துப்பனு எனக்குத் தெரியும் ஈஸ்வரா… இவ்ளோ பிரச்சனைக்கு அப்புறம் நீ என் கிட்ட முகம் குடுத்துப் பேசுனதே எவ்ளோ தெம்பா இருக்கு தெரியுமா? என் தம்பியோட உறவு போச்சோனு பயந்துட்டிருந்தேன்… அந்தப் பயம் இப்ப போயிடுச்சு… நான் கேக்குறதுக்கு மட்டும் உண்மைய சொல்லு”
    “என்னக்கா?”
    “அந்தாளைப் பத்தி நீ கோவா போனப்ப தெரிஞ்சிக்கிட்டியா?”
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-29.5474/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 28
    உமா அங்கே கழற்றிப்போடப்பட்டிருந்த செருப்பைக் கண்டதும் கோபம் தாளாமல் அதைக் கையில் எடுத்தார்.
    ஆவேசமாக மூர்த்தியை நெருங்கியவர் மாறி மாறி அவரது கன்னத்தில் மொத்த கோபத்தையும் காட்டி செருப்பால் அடிக்கத் துவங்கினார்.
    ‘ஷப் ஷப்’பென செருப்பால் அடித்தவரின் கை தனியே கழண்டுவிடுவது போல வலித்தது என்றால் அடி வாங்கிய மூர்த்திக்கு எப்படி வலித்திருக்கும்?
    அடித்து கை ஓய்ந்த பிறகு செருப்பைத் தரையில் வீசிய உமா “இனிமே உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லய்யா… நீ எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்ல” என்று கத்த
    “வாயை மூடுடி… என் தயவுல தான இத்தனை நாள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த… அப்பிடி என்ன நான் பண்ணிட்டேன்? ஏதோ சபலத்துல கொஞ்சம் தடுமாறிட்டேன்… நான் ஆம்பளைடி… அப்பிடி இப்பிடி தான் இருப்பேன்… என்னை நம்பி வந்த நீ இதை அட்ஜஸ்ட் பண்ணணும்… இல்லனா நீயும் உன் பிள்ளையும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நடுத்தெருவுல தான் நிக்கணும்” என்றார் மூர்த்தி கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல்.
    உமாவுக்கு வந்த ஆத்திரத்தை மறைக்காமல் வார்த்தையில் காட்டினார்.
    “சீ! உன்னை மாதிரி பொண்டாட்டிக்கு உண்மையா இருக்க முடியாதவன் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நான் இருப்பேன்னு நினைச்சியா? எந்தக் காலத்துல நீ வாழுற? இந்தக் காலத்துல எந்தப் பொண்ணும் ஆடம்பர வாழ்க்கைக்காக புருசனோட ஒழுக்கக்கேட்டை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகமாட்டா… நான் ஏன்யா உன் கேவலமான குணத்தை அட்ஜஸ்ட் பண்ணணும்? நீ வக்கிரம் பிடிச்சவன் மட்டுமில்ல, மனோவியாதி உள்ளவன்… உன்னைச் சட்டம் சும்மாவிடாது… நீயாச்சு உன் பணமும் பவுசுமாச்சு… இதை நீயே வச்சு அழு… இத்தனை நாள் என் புருசனோட அன்பு உண்மையானதுனு கண்மூடித்தனமா நம்புனதால இங்க இருந்தேன்… எப்ப நீ இவ்ளோ கேவலமானவன்னு தெரிஞ்சுதோ அப்பவே உனக்கும் எனக்குமான உறவை மானசீகமா முறிச்சிட்டேன்”
    மூர்த்தியிடம் ஆவேசமாகப் பேசிவிட்டு ஆனந்தின் கையைப் பிடித்துக்கொண்டு சமாதானபுர வீட்டிலிருந்து கிளம்பியவர் தந்தையிடம் அனைத்தையும் கூறிவிட்டு அறையில் வந்து அமர்ந்ததோடு சரி, பின்னர் யாரிடமும் பேசவில்லை.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-28.5469/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 27
    சரபேஸ்வரன் அலுவலக உடையை மாற்றிவிட்டு வந்தவன் “நைட் டின்னருக்கு என்ன கவி?” என்று கேட்டபடி அவளருகே அமர்ந்தான்.
    “உப்புமா”
    அந்தப் பதிலில் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.
    “சேமியா உப்புமாவா? ரவா உப்புமாவா?”
    சங்கவி அவனது கேள்விக்குப் பதில் சொல்லாது புருவத்தை உயர்த்தவும் காரணத்தைக் கூறினான் சரபேஸ்வரன்.
    “எனக்கு உப்புமா சுத்தமா பிடிக்காது... கல்யாணத்துக்கு முன்னாடி எங்கம்மா எனக்குப் பிடிக்காதுனு உப்புமா செய்யவே மாட்டாங்க தெரியுமா? சேமியா உப்புமா கூடப் பரவால்ல... ரவா உப்புமா இஸ் ஈக்வல் டு ஆலகால விசம்”
    “குடும்பஸ்தன் ஆனதுக்குக் கிடைக்குற முதல் ரிவார்ட் இந்த உப்புமா தான்... இனிமே நான் வெண்ணி போட்டுக் குடுத்தாலும் அதைப் பாயாசம்னு நினைச்சுக் கண்ணை மூடிக் குடிச்சுட்டுப் பாராட்டப் பழகிக்கோங்க”
    சங்கவிக்கு இருந்த அலுப்பில் அவள் பொறுமையாகப் பதில் சொன்னதே பெரிது!
    சரபேஸ்வரனுக்கும் வேலைப்பளு அதிகமே! என்ன செய்யலாமென யோசித்தவன் திடுதிடுப்பென “கிளம்பு கவி” என்கவும் சங்கவி திகைத்தாள்.
    “எங்க?”
    “லாங் ட்ரைவ் போயிட்டு வருவோம்”
    “இப்பவா? இப்பிடியேவா?”
    சங்கவி தன்னையும் அவனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டாள்.
    டீசர்ட்டும் பளாசோவும் அணிந்து க்ளட்சில் அடக்கிய கூந்தல் அலங்காரம் அவளுடையது. முட்டி வரை ஷார்ட்சும் டீசர்ட்டும் சரபேஸ்வரனின் உடை. இதோடா ‘லாங் ட்ரைவ்’ போக முடியும் என்பது அவளது கேள்வி.
    ஆனால் சரபேஸ்வரனோ அவளைக் கையோடு இழுத்துச் சென்று பைக்கில் அமரச் சொல்லிவிட்டான்.
    “நாம எங்க தான் போறோம்?”
    “போரூர் டோல்கேட் வரைக்கும் போயிட்டு வருவோம்”
    “எதே? இதைத் தான் லாங் ட்ரைனு சொன்னிங்களா?”
    கடுப்போடு பைக்கின் சைலன்சரை உதைத்தாள் சங்கவி. அது சற்று சூடாக இருக்கவும் “ஐயோம்மா” எனக் காலை உதறியவளைப் பார்த்துப் பொங்கி வந்த சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டான் சரபேஸ்வரன்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-27.5463/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 26
    மனைவியின் நடத்தையில் தெரிந்த மாற்றங்களை மூர்த்தி கவனிக்காமல் இல்லை. அவர் அவ்வபோது பிறந்தகத்துக்குச் சென்று வருவது மூர்த்திக்கு நன்றாகவே தெரியும்.
    தன்னிடம் பொய் சொல்லிவிட்டுச் செல்லும் மனைவியிடம் கண்டிப்பு காட்டப்போய், அவள் தனது நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?
    எனவே எதுவும் தெரியாதவரைப் போல காட்டிக்கொண்டார் மூர்த்தி.
    இருப்பினும் அவ்வபோது கண்டிப்பான கணவன் போல நடந்து கொள்ள தவறமாட்டார்.
    இப்போது மனைவி அவளது தம்பியின் எண்ணுக்கு அழைத்ததையும் ஏமாற்றத்துடன் நிற்பதையும் ஓரக்கண்ணால் கவனித்தபடி பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் அந்த மனிதர்.
    “ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்க உமா?”
    கணவரின் கேள்வியில் சுயம் தெளிந்து “என்ன கேட்டிங்க?” என்றார் உமா.
    “நான் கேட்டது கூட உன் காதுல விழாதளவுக்கு என்ன சிந்தனை? உன் பிறந்தவீட்டை பத்தி யோசிக்கிறியா?”
    “ஐயோ இல்லங்க”
    உமாவின் பதற்றத்தைக் கண்டு கர்வம் கொண்டவர் “அவங்களைப் பத்தி யோசிக்காம இருக்குறது உனக்கும் உன் மகனுக்கும் நல்லது… உன் தம்பி பொண்டாட்டி என் டியூசன் சென்டர்ல சேர வந்த பொண்ணு ஃபேமிலி கிட்ட என்னைப் பத்தி கண்டதையும் சொல்லி என் பேரை எப்ப ரிப்பேர் ஆக்குனாளோ அப்பவே அவங்களுக்கும் உங்களுக்கும் எந்த உறவும் இல்லனு ஆகிடுச்சு… அவளால என் கிட்ட படிக்கிற பசங்க என்னை ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க… நைட் ஸ்டடிக்கு டியூசன் சென்டர்ல இருக்குறதுக்கு சின்னப்பொண்ணுங்களோட ஃபேமிலி யோசிக்கிறாங்க… சொத்து பத்து, ஸ்கூல் வருமானத்தை விட டியூசன் சென்டர் வருமானம் தான் நம்மளை சொசைட்டில கௌரவமா வாழ வச்சிட்டிருக்குங்கிறதை மறந்துடாத… அதுக்குக் கொள்ளி வைக்கப் பாத்தவ இருக்குற வீட்டை பத்தி இனிமே நீ யோசிக்கக்கூடாது… இந்த வாரம் என் டியூசன் சென்டர் பிள்ளைங்களை மாமல்லபுரம் டூர் கூட்டிட்டுப் போறேன்… உன் மகனும் வருவேன்னு அடம்பிடிப்பான்… அவனைக் கண்ட்ரோல் பண்ணி வீட்டுல உக்காந்து படிக்கச் சொல்லு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
    அவர் கிளம்பியதும் உமாவின் மனம் சோர்ந்து போனது.
    சோர்ந்த மனம் சங்கவி என்ற ஒருத்தியைத் தம்பி காதலிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென யோசித்தது.

    http://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-26.5454/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைகளும் epi 25
    "அவசரப்படாத ப்ளீஸ்... கொஞ்சநாள் தான... நம்ம வீட்டுலயே இரு"
    சரபேஸ்வரன் அவளிடம் கிட்டத்தட்ட கெஞ்சினான்.
    உடனே சத்தமாக நகைத்தாள் அவள்.
    "நம்ம வீடா? இது உங்க வீடு... இதை நான் எப்பவும் என் வீடா ஃபீல் பண்ணுனதில்ல... உங்கம்மாவும் அக்காவும் என்னை இந்த வீட்டு மனுசியா நடத்தியிருந்தா அப்பிடி தோணிருக்குமோ என்னமோ... அவங்க என்னை வேண்டாத ஒருத்தியா தான நடத்துனாங்க... இன்னொரு தடவை இதை நம்ம வீடுனு சொல்லாதிங்க"
    “கவி…”
    “நீங்க என்னை லவ் பண்ணுறது உண்மைனா என்னைப் போகவிடுங்க… சென்னைல வேலை, வீடு அரேஞ்ச் பண்ணிட்டு ட்ரெயின் ஏறுறப்ப இன்ஃபார்ம் பண்ணுங்க… இப்பவும் இவங்க தான் முக்கியம்னு நினைச்சிங்கனா என்னை விட்டுடுங்க சரபன்… இப்பிடி ஒரு கையாலாகாத மனுசனுக்குப் பொண்டாட்டியா இருக்குறதை விட காலம் முழுக்க எங்கம்மாக்கு மகளா நான் வாழ்ந்துட்டுப் போயிடுறேன்”
    மனக்குமுறல்களைச் சொல்லிவிட்டுச் சரபேஸ்வரனின் பதிலை எதிர்பாராதவளாக கிளம்பிப் போய்விட்டாள் சங்கவி.
    சரபேஸ்வரனின் கண்கள் பனித்தன. ஆண்கள் அழக்கூடாதா என்ன? உண்மையான அன்பு விலகும் போது அவர்களும் அழுவார்கள், அந்த அன்பை மதிப்பவர்களாக இருந்தால்!
    உமாவும் குழலியும் இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. இப்போது சரபேஸ்வரனின் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு வருந்துவதா அல்லது அவன் சென்னைக்குப் புலம்பெயர்வதை நினைத்து மனம் பொருமுவதா என புரியாமல் இரண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தார்கள்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-25.5444/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 24
    “இன்னைக்கு வளைகாப்புல கோமதிக்கு வளையல் போடுறப்ப அடுத்து எனக்குத் தான் வளைகாப்புனு எல்லாரும் கிண்டல் பண்ணுனாங்க”
    “எதே? ஜீபூம்பானதும் வளைகாப்பு வச்சிட முடியுமா? அதுக்கு இன்னும் ஃபர்ஸ்ட் ஸ்டெப்பே எடுத்து வைக்கலயே”
    நொந்து போய் பேசியவனைக் குறுஞ்சிரிப்போடு பார்த்தாள் சங்கவி.
    “யார் உங்களை ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுக்கவிடாம தடுத்தாங்களாம்?”
    சீண்டினாள் அவள். சரபேஸ்வரன் அவளது சீண்டலில் திகைத்துப்போனான்.
    “ஏய் கவி! நீ என் கிட்ட விளையாடுறியா? டேர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் ஞாபகம் இருக்கா?”
    பொறுப்பான கணவனாக நினைவூட்டினான் மனைவிக்கு. அவன் மனைவியோ அசட்டையாக தோளைக் குலுக்கினாள்
    “டேர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸை டெலிட் பண்ணிட்டேன்… இன்னுமா உங்களுக்குப் புரியல?”
    “உன்னோட இந்த வார்த்தைய நான் ‘நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட்னு’ எடுத்துக்கலாமா?”
    “நான் எவ்ளோ ஆசையா பேசுறேன்… இப்ப கூட புரொபஷ்னல் வேர்ட்ஸ் தான் யூஸ் பண்ணுவிங்களா? உண்மைய சொல்லுங்க, அந்த எகனாமிக்ஸ் நோட்ல இருக்குற கவிதைய நீங்க தான் எழுதுனிங்களா?”
    “ப்ராமிஷா நான் தான் எழுதுனேன் கவி... இப்ப எனக்குக் கவிதை சொல்லுற மூட் இல்ல… இல்லனா அழகா ஒரு கவிதைய எடுத்து விட்டிருப்பேன்”
    “நம்பிட்டேன்”
    அவள் இழுத்த விதத்தில் சிரித்தவன் “சில கவிதைய சொல்லுறதை விட செயல்ல காட்டுனா நல்லா இருக்குமாம்” என்றான் விசமமாக.
    சங்கவி மீண்டும் நாணத்தில் பிடியில் சிக்கிக்கொண்டாள்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-24.5442/

    #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom