• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நந்தவனம் குறுநாவல் போட்டியில் எனது பயணம்...

ஓம் சாயிராம்

அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்.

நந்தவனம் குறுநாவல் போட்டியில், மொட்டாக அவதரித்து, மலரவா வேண்டாமா என்று “கோதையின் பிரேமை” கதையைப் பாதியில் விட்டுச்சென்ற “செம்பருத்திப்பூ” நான் தான் தோழமைகளே!

முகமூடி அணிந்து எழுதிய போதும், ஆன்கோயிங்கில் நம்பி படித்த வாசகர்கள் அனைவருக்கும், கதை பாதியில் நிறுத்தியது ஏன் என்ற உண்மை காரணம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதற்கு முன் நந்தவனம் தளம் எனக்கு எவ்வளவு ஸ்பெஷல் என்ற ஒரு குட்டி பதிவு.

நந்தவனம் தளம் என்பது என் தாய் வீட்டிற்குச் சமம்.

என் முதல் கதையான 'அன்பின் ஆழம்' தளத்தில் பதிவிட வாய்ப்பு கொடுத்ததோடு மட்டுமில்லாமல், சலிக்காமல் ஊக்குவித்து, நான் தடுமாறும் போதெல்லாம், கனிவாகவும், நம்பிக்கையூட்டும் விதமாகவும், பொறுமையாகப் பேசி தட்டிக் கொடுத்த பெருமை எல்லாம், @Ezhilanbu அவர்களைத்தான் சேரும். நன்றிகள் பல எழில் மா!

எனவே எழிலன்பு போட்டி அறிவித்ததும், அதில் பங்கேற்பதை, பிறந்த வீட்டின் விசேஷத்தில் கலந்து கொள்வதாகவே கருதினேன். கிட்டத்தட்ட அதே சமயத்தில் தான் என்னுடைய மற்றொரு போட்டி கதையான “பாசமென்னும் பள்ளத்தாக்கில்” தளத்தில் மறு பதிவு செய்யத் தொடங்கி இருந்தேன்.

அது Re-Run கதை என்பதைவிட, புத்தகமாக வெளியிடும் ஆசையில், அதற்கு ஏற்ப Word Limit குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருந்தேன். 65000 Words கொண்ட கதையை, கதையின் நகர்வு சிதையாத வண்ணம், 50000 Words ஆக குறைத்திருக்கிறேன். அந்தப்பணி எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. நேரமும் அதிகம் செலவிடும் படியாக இருந்தது.

போட்டிக்கதை ஒருபக்கம்; பாதியில் நிற்கும் Re Run கதை மறுபக்கம்; இது போதாது என்று கோடை விடுமுறை நாட்கள் என்பதால், வீட்டில் திட்டமிட்டிருந்த வெளியூர் பயணங்கள், என்று எல்லா பக்கத்திலிருந்தும் நெருக்கடி. பல சிந்தனைகள் முட்டி மோத, எழுதுவதில் முழுமனதாக ஈடுபட முடியவில்லை.

“ஒன்றே செய்; அதை நன்றே செய்!” என்ற பொன்மொழிக்கு இணங்க, போட்டி கதையைப் பிறகு எழுதலாம் என்று கனத்த மனதுடன் முடிவெடுத்து, Re-Run கதையில் மட்டும் கவனத்தைச் செலுத்தினேன்.

ஆயினும், “பிறந்தவீடாக கருதும் நந்தவனம் தளம் கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதா?” என்று உறுத்தலாகவே இருந்தது. மற்ற பூக்களின் கருத்து பரிமாற்றங்களும், Memes எல்லாம் பார்க்கும் போது ஏக்கமாகவும் இருந்தது.

போட்டியில் எழுத்தாளராகப் பங்கேற்காவிட்டால் என்ன; வாசகராக அனைத்துக் கதைகளும் படித்து, கருத்துக்கள் பகிர்ந்து, ரெவ்யூ எழுதலாமே என்று தோன்றியது. எனவே Re-Run கதை பதிவிட்டு முடித்ததும், போட்டிக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

உண்மையிலேயே Reader Mode மிகவும் மகிழ்ந்து அனுபவித்தேன். தொடக்கத்தில், பத்து வரிகள் ரெவ்யூ எழுத திண்டாடிய நான், அதற்குப் பிறகு படித்த கதைகளுக்குப் பக்கம் பக்கமாக ரெவ்யூ எழுதியது உங்களுக்கே தெரியும் பூக்களே. இதுவும் ஒரு நல்ல அனுபவப் பாடம் தான்.

போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதே என்று சோர்ந்து போன எனக்கு ரெவ்யூ எழுதுவது தனி தெம்பை ஊட்டியது. போட்டி முடிவுகள் பக்கத்தில், எழிலன்பு அவர்கள் என் பெயரைக் குறிப்பிட்டு சொன்னதைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் என் அம்மா வீட்டிற்குப் புத்தக பரிசை அனுப்புவீர்களா என்று உள்பெட்டியில் கேட்டதும், உடனே சரி என்று சம்மதம் சொன்னார்.

ஆகவே வாசகராக என் பிறந்த வீட்டு விழாவில் பங்கேற்று, பரிசும் வென்றதில் உச்சி குளிர்ந்து போனேன்.

நவம்பர் பத்தாம் தேதிக்கு மேல், “கோதையின் பிரேமை” கதையின் அத்தியாயங்கள் தொடர்ந்து பதிவிடுகிறேன் தோழமைகளே! இன்று போல் என்றும் உங்கள் ஆதரவைத் தரும்படி வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

செம்பருத்திப் பூ என்னும் வித்யா வெங்கடேஷ்.
 
ரொம்ப அழகா உங்க உணர்வுகளை சொல்லிருக்கீங்க. அருமையாக ரிவ்யூ எழுதியிருந்தீங்க‌. Welcome back 🎉💐🎊
 
நன்றிகள் பல தோழி! உங்கள் கதையும் மிக அருமையாக இருந்தது. உங்கள் எழுத்துநடை அட்டகாசம். "நாளொரு சண்டையும், பொழுதொரு சமாதானமுமாக"...ஆஹா என்ன ஒரு அழகான வாக்கியம். கதை படித்து வெகு நாட்களான பிறகும் உள்ளத்தில் ஒட்டிக்கொண்டுவிட்டது.

மற்ற கதைகளுடன் ஒப்பிடும் போது, உங்கள் கதைக்கு ஏற்கனவே நிறைய Views, Likes, Comments இருந்ததால் தான், சொக்கனின் மீனாள் படிப்பதை ஒத்திப்போட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் முதல் அத்தியாயத்திலேயே நீங்கள் யார் என்று அறிய ஆவல் கூடியது. பறவை காட்சி ஒரு பக்கம் என்றால், மீனு பயமும், அவள் திருமணம் செய்துகொள்ள சொல்லும் காரணம் (சாட்சாத் என்னைப் பார்ப்பது போலவே இருந்தது🤭🤭🤭🤭)

முள்ளில் பூத்த மலர் ஒரு பக்கம் Must Read பட்டியலில் இருக்க, தற்போது நீங்கள் Re-Run செய்யும் கதையின் சாராம்சம் படித்ததும், மெய்சிலிர்த்துவிட்டது. என்னுடைய முதல் கதையான அன்பின் ஆழமும், நட்பும் அதில் முளைத்த காதலும் பற்றிதான்.

உங்களுடைய விசிறியாகவே மாறிவிட்டேன் என்று சொன்னால், அது மிகையாகாது. உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நட்பே!
 
நீங்க தான் செம்பருத்தி பூவா.. சூப்பர் சிஸ்😍😍😍😍

போட்டியில் தொடரமுடியவில்லை என்றாலும் ரிவ்யூ போட்டு கலக்கிருந்திங்களே...கதையை தொடரப் போவதற்கு பாராட்டுகள் சிஸ்... ஆவலாக வெய்டிங்😊
 
நன்றிகள் பல தோழி! உங்கள் கதையும் மிக அருமையாக இருந்தது. உங்கள் எழுத்துநடை அட்டகாசம். "நாளொரு சண்டையும், பொழுதொரு சமாதானமுமாக"...ஆஹா என்ன ஒரு அழகான வாக்கியம். கதை படித்து வெகு நாட்களான பிறகும் உள்ளத்தில் ஒட்டிக்கொண்டுவிட்டது.

மற்ற கதைகளுடன் ஒப்பிடும் போது, உங்கள் கதைக்கு ஏற்கனவே நிறைய Views, Likes, Comments இருந்ததால் தான், சொக்கனின் மீனாள் படிப்பதை ஒத்திப்போட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் முதல் அத்தியாயத்திலேயே நீங்கள் யார் என்று அறிய ஆவல் கூடியது. பறவை காட்சி ஒரு பக்கம் என்றால், மீனு பயமும், அவள் திருமணம் செய்துகொள்ள சொல்லும் காரணம் (சாட்சாத் என்னைப் பார்ப்பது போலவே இருந்தது🤭🤭🤭🤭)

முள்ளில் பூத்த மலர் ஒரு பக்கம் Must Read பட்டியலில் இருக்க, தற்போது நீங்கள் Re-Run செய்யும் கதையின் சாராம்சம் படித்ததும், மெய்சிலிர்த்துவிட்டது. என்னுடைய முதல் கதையான அன்பின் ஆழமும், நட்பும் அதில் முளைத்த காதலும் பற்றிதான்.

உங்களுடைய விசிறியாகவே மாறிவிட்டேன் என்று சொன்னால், அது மிகையாகாது. உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நட்பே!
So sweet of you sis ❤️❤️. Very happy to hear your exciting words 🥰🥰 உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி வித்யா மா ❤️❤️
 
கதையைத் தொடர வாழ்த்துகள் தோழி. உங்கள் விமர்சனங்களே உங்களின் எழுத்துத் திறமையைப் பறை சாற்றியது. உங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துகள்
 
Priyakutty

Active member
Member
நீங்கதான... 😁🤗🤗

கோதையின் பிரேமை... Oct 10 ல ருந்து ஸ்டார்ட் பண்ண போறீங்களா... வாழ்த்துக்கள் dr 🤩🤝

போட்டியில் கதையை முழுதாக எழுத முடியவிட்டாலும் உங்க feedback and reviews மூலம் எல்லாத்தையும் என்கரேஜ் பண்ணீங்க... இட் மீன்ஸ் அலாட் dr... 🤗🥰🥰

All the best... ❤❤
 
நீங்க தான் செம்பருத்தி பூவா.. சூப்பர் சிஸ்😍😍😍😍

போட்டியில் தொடரமுடியவில்லை என்றாலும் ரிவ்யூ போட்டு கலக்கிருந்திங்களே...கதையை தொடரப் போவதற்கு பாராட்டுகள் சிஸ்... ஆவலாக வெய்டிங்
நன்றிகள் பல ஜி! முழு கதை எழுதி வெச்சிட்டு பதிவிடலாம்னு நினைக்கறேன்! அதற்கு தான் இந்த காலவகாசம்🤗🤗
 
கதையைத் தொடர வாழ்த்துகள் தோழி. உங்கள் விமர்சனங்களே உங்களின் எழுத்துத் திறமையைப் பறை சாற்றியது. உங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துகள்
நன்றிகள் பல மா! ஊக்குவிக்கும் உங்கள் அன்பு நிறைந்த வாழ்த்தில் என் உள்ளம் நிறைந்தது தோழி!😍😍
 
Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom