• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

எழிலன்பு அவர்கள் எழுதிய "ஓதும் காதல் கீதம்"

"ஓதும் காதல் கீதம்", ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு அத்தனை நேர்மறையான விஷயங்கள் அடங்கிய கதை.

விவாகரத்து வேண்டும் என்று கணவனிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டு, பெட்டியைத் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டிற்குப் புறப்படம் அனலியின் கோபத்திலும் ஆதங்கத்திலும் முதல் அத்தியாத்திலேயே அனல் பறந்தது.

தொடர்ந்து வந்த அத்தியாயங்களில் பரிதி பரிதாபமாக மன்றாடுவதும், அனலி அலட்டலே இல்லாமல் முறுக்கிக் கொள்வதும், அவன் செய்த தவறின் ஆழத்தையும், அவள் மனத்தில் அது உண்டாக்கிய வலியையும் சொல்லாமல் சொல்லியது. முக்கால்வாசி கதைவரை அது என்னவென்று வெளிப்படுத்தாமல் கதையைச் சுவாரசியமாக நகர்த்திய எழிலின் திறமைக்கு “ஓ” போடவேண்டும்.

அதீத காதல் கொண்ட அனலியின் கோபமும் பிடிவாதமும் அதிகமாகவே இருந்தது. சில காட்சிகளில், ‘இதற்காகவா இவனைத் துரத்தி துரத்தி காலதலித்தாய்!’ என்று கேட்கும் அளவிற்கு அவனைப் பாடாய்ப்படுத்திவிட்டாள். அனைத்திற்கும் நியாயமான விளக்கங்கள் தந்து, நிறைவான முடிவைத் தந்த ஆத்தருக்கு மீண்டும் ஒரு முறை “ஓ” போடவேண்டும்.

காதலியை கண்முன்னே விபத்தில் பறிக்கொடுத்துவிட்டு, வாழவும் முடியாமல் மரிக்கவும் முடியாமல் தத்தளித்த பரிதியின் மனநிலை எடுத்துரைக்கும் காட்சிகள் அனைத்தும் பிரமாதம். அதைவிட அவனை அந்த மனவுளைச்சலில் இருந்து மீட்ட அனலியின் அணுகுமுறைகள் அற்புதம்.

காதல் தோல்விக்குத் தற்கொலை தீர்வு இல்லை என்று பல கதைகளில் படித்திருப்போம். ஆனால் அதை அனலிக்கா கதாபாத்திரம் மூலம் மிகவும் வித்தியாசமாக காட்சிப்படுத்திய எழிலின் தனித்துவம் குறிப்பிடத்தக்கது. விலகியும் போகாமல், நெருங்கவும் விடாமல் பரிதியின் பிரச்சனைக்குத் தீர்வு கண்ட அனலி அட்டகாசம்.

துணை கதாபாத்திரங்களைச் சித்தரித்த விதம், அவர்கள் பேசிய வசனங்கள் அனைத்தும் சூப்பர். அனலி, நேகா இருவரின் அண்ணன்கள் கதாபாத்திரமும் அழகோ அழகு. அதிலும் அனலி தன் அண்ணனிடம் பிறந்த வீட்டிற்கு வர நினைக்கும் பெண்களின் மனநிலை பற்றி பேசும் இடம் மெய்சிலிர்த்துவிட்டது.

கதையில் இடம்பெற்ற விடுகதைகளும், அதற்கு அனலி தந்த விளக்கங்களும் வேற லெவெல் ஆத்தரே. அதைப்போலவே பரிதியின் தாடியைப் பற்றி முதல் அத்தியாயத்தில் இருந்து வர்ணித்து, அதைக் காட்சிகளில் அழகாய் இணைத்து எழுதிய உங்கள் பாங்கு சூப்பர். தாடி வைத்தவர்களைப் பார்த்தாலே பரிதியின் நினைவு வரும் அளவிற்கு மனதில் பதிந்துவிட்டான்.

விளையாட்டு விபரீதமாகும்; சிந்திக்காமல் உதிர்க்கும் வார்த்தைகள் மரணவலி கொடுக்கும் என்று பரிதி-அனலி வாழ்க்கை மூலம் உணர்த்திய எழிலன்புக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom