• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அருவருப்பு பற்றி அறிந்து கொள்வோம்.

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அருவருப்பு
படத்தகாதது காலில் பட்டுவிட்டால் அருவருப்பாக இருக்கும். பல நாள் குளிக்காதவன் பக்கத்தில் வந்தால் வியர்வை நாற்றம் அருவருப்பாக இருக்கும்.

அருவருத்தலால் முகம் சுளித்து, வெறுத்துப் புறம் போகத் தோன்றும், அதற்காக இதைச் சிலர் அருவெறுப்பு என எழுதுவது தவறு. அருவெறுப்பு என்று ஒரு சொல் இல்லை.

இவ்வாறு பிழைபட எழுதுவதைப் பார்க்கும் போது நமக்கு அருவருப்பாக இருக்கிறது.

நம் அரசியல் வாதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் ஊழலின் உச்சத்தைத் தொட்டு, மானத்தை உதறிவிட்டுத் 'தலைமை தாங்குபவர்களாய்'ப் பவனி வந்து, ஊருக்கு உபதேசம் பேசுவதையும் எழுதுவதையும் பார்த்து உலகம் அருவருக்கின்றது.

'கண்ணுக்குள் தூசி விழுந்தால் ஏதோ அருவுவது போல் இருக்கும். -௨ அராவுதல், அருவுதலிலிருந்து அருவருப்பு - உள்ளத்துள் ஏற்படும் அருவுவது போன்ற ஒருவித வெறுப்புணர்வு, சொல்வடிவம் பெற்றுளது. அதை அருவருப்பு என்றே எழுத வேண்டும்.

//தமிழண்ணல் அவர்கள் எழுதிய தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும் நூலிலிருந்து//
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom