1. சர்வமும் அடங்குதடி உன்னிடம்

  1. சர்வமும் அடங்குதடி உன்னிடம் 💝💝💝

மாளிகை போல ஜொலித்துக் கொண்டிருந்தது ஏவிஆர்எஸ் திருமண மண்டபம். பெண்களின் சிரிப்பு சத்தமும், வளையல் சத்தமும், கொலுசு சத்தமும், மண்டபத்தை இன்னும் அழகாக்க.

தோழிகளின் கேலி கிண்டல்களுடன் ஆபரணங்கள் பூட்டி செயற்கை அழகு சாதனங்கள் இல்லாமல் இயற்கையாய் தேவதையாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள் ரூபா என்கிற ரூபாவதி.

“என்னம்மா தயாராகிட்டியா.”முகூர்த்தத்துக்கு நேரமாகுது 

“ம்ம் தயாராகிட்டேன்மா.” அழகாய் ரோஜா வண்ண இதழ்களை திறக்காமலே சின்னதாய் புன்னகை புரிந்தாள் ரூபா.

தேவதையாய் ஜொலிக்கும் தன் பெண்ணை பார்த்து பூரித்துப் போனார் சுமதி.

“அபியும் அப்பாவும் எங்கம்மா போனாங்க.”என்று ரூபி கேட்க

“தெரியல ரூபா நான் போய் அவங்கள பார்த்துட்டு வரேன்.”

திருமண மண்டபத்தின் வாயிலில் அஜய் WEDS ரூபா மணமகன் மணமகள் பெயர் ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்க்க.

சுந்தரத்தின் கண்கள் மட்டும் ரூபாவின் பெயரைப் பார்த்து கலங்கியது. தன்னுடைய மகள் தன்னைப் பிரிந்து வேறு வீட்டுக்குச் செல்ல போகிறாள். பிறந்த குழந்தையாக ரூபாவை கையில் வாங்கிய தருணமே கண்களில் தோன்றி மறைய வழியும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினார் சுந்தரம். எப்பொழுதும் போல் அவரை ஆறுதலாய் தழுவினார் அவரின் மனைவி சுமதி.

“என்னங்க இது சின்ன குழந்தை மாதிரி இங்க நின்னு அழுதுட்டு இருக்கீங்க. எல்லா பெண்களும் ஒரு நாள் வேற வீட்டுக்கு போய் தான் ஆகணும்.போய் கல்யாண வேலையை பாருங்க. வந்த விருந்தினரை எல்லாம் நம்ம தான் சரியாக கவனிக்கனும். அங்க ரூபா வேற உங்களை காணோம்னு என்கிட்ட கேக்குற.”

“அம்மா உங்களை எங்கெல்லாம் தேடுறது. அப்பாவும் இங்க தான் இருக்காறாரா.  தாவணியை இடுப்பில் சொருகியபடி வந்தால் அபி என்கிற அபிநயா.”

“இவ்வளவு நேரம் எங்கடி போயிருந்த. இன்னிக்காவது அடக்க ஒடுக்கமா நடந்துக்க மாட்டியா. ரூபா எவ்வளவு அமைதியா இருக்கா. அவளைப் பார்த்தாவது கொஞ்சம் அமைதியை கத்துக்கோ. அபியை கடிந்துகொண்டார் சுமதி.”

“இப்ப நான் என்ன தப்பு பண்ணிட்டேன். அபியும் பதிலுக்கு மல்லுக்கு நிற்க்க.”

சுந்தரம் இடையில் புகுந்து. “இன்னைக்கும் உங்க ரெண்டு பேரு சண்டைய ஆரம்பிக்காதீங்க. சொல்லுமா அபி எதுக்கு எங்களை தேடின.”

“முகூர்த்த நேரம் நெருங்கிருச்சாம் உங்களை காணோம்னு மண்டபத்தில எல்லோரும் தேடுறாங்க.”

“அச்சோ நம்ம ரூபாவை பற்றி பேசிட்டு இருந்ததுனால முகூர்த்த நேரம் கூட மறந்துட்டோம். ஏங்க வாங்க நாம போகலாம் நம்ம இல்லைன்னா மாப்பிள்ளை தப்பா எடுத்துக்க போறாரு.”

“ஆமா அப்பா ரூபாவும் உங்களைப் பார்க்கணும்னு சொன்னா.”

“நீங்க முன்னாடி போங்க. ராஜா சார் வரேன்னு சொன்னாரு. அவர் வரும்போது வரவேற்க யாரும் இல்லைன்னா நல்லா இருக்காது.”

“சரி நாங்க முன்னாடி போறோம் நீங்க சீக்கிரம் வந்துடுங்க.” சுமதியும் கீர்த்தனாவும் மண்டபத்திற்குள் நுழையவும். ராஜாவின் கார் மண்டபத்தின் கேட்க்குள் நுழையவும் சரியாக இருந்தது.

ராஜா காரைவிட்டு இறங்கி. கோட் சூட்டில் கம்பீர நடையில் தன் கேசத்தை கோதியபடி, சுந்தரத்தின் அருகில் வர

“என்ன சுந்தரம் ரொம்ப லேட் பண்ணிட்டேனா.”

“இல்ல சார் சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கீங்க. வாங்க சார்.”

மண்டபத்தில் உள்ள உறவினர்கள் அனைவரும் ராஜா குருப்ஆப் கம்பெனியின் எம்டியின் வருகையை ஆச்சரியமாக பார்க்க .இளவட்ட பெண்களின் கூர்மையான கண்களும் ராஜாவையே சுற்றி வட்டமிட .இதை எதையும் கண்டுகொள்ளாமல் சாதாரணமாகவே சுந்தரத்திடம் பேசிக் கொண்டிருந்தான் ராஜா.

மாப்பிள்ளையாகிய அஜய் ஐயர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க.ரூபா மயில் வண்ணப் புடவையில் கையில் வைத்த மருதாணியை விட செந்தூரமாய் சிவந்த அவளின் வெட்கம் கொண்ட முகமே இன்னும் அழகை கூட்டியது. சுமதியும் அபியும் ரூபாவை மணமேடையை நோக்கி அழைத்துவர. அஜய் ரூபாவை பார்த்து கண்ணடித்து இன்னும் அவளை சிவக்க வைத்தான்.

ராஜாவின் பிஏ மணி. கிப்ட் பாக்ஸை ராஜாவின் கையில் கொண்டுவந்து கொடுக்க.

“சுந்தரம் எனக்கு மீட்டிங்க்கு நேரமாகுது இந்த கிப்ட் நான் உங்க பொண்ணு கிட்ட கொடுத்துட்டு உடனே கிளம்பனும். அனுமதி கிடைக்குமா?.”

“என்னங்க சார்  இதுக்கெல்லாம் அனுமதி கேட்டுகிட்டு நீங்க போய் கிப்ட் கொடுங்க.”

“சுந்தரம் மணமேடைக்கு செல்லும் ரூபாவை அழைத்து. சாருக்கு நேரமாயிடுச்சு ரூபா அவரு உனக்கு கிப்ட் தரணும்னு ஆசை படுறாங்க.”

“ரூபா ராஜாவைப் பார்த்து வணக்கம் வைத்து. கிப்ட்டை வாங்க கையை நீட்ட.”

“இந்த கிப்ட்டை உங்க  கைல தர விரும்பல.  நானே உங்களுக்கு போட்டு விடுறேன்.”

ரூபா ராஜாவையே பார்த்துக் கொண்டிருக்க

“கிப்ட் பாக்சை திறந்து அதிலிருந்த தங்க தாலியை பார்த்தான்.”

ரூபா, சுமதி, அபி, சுந்தரம் தாலியை பார்த்து அதிர்ச்சியில் அதிர்ந்து நிற்க.

ரூபா சுதாரிப்பதற்குள். ரூபாவின் கழுத்தில் தாலியை   போட்டுவிட்டான் ராஜா.

ராஜாவின் பிஏ மணி சரியாக மங்கல வாத்தியங்கள் முழங்க உத்தரவிட.

மங்கள வாத்தியங்கள் இசைக்க ஆரம்பித்தனர்.