கலைந்த ஓவியம் 16

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தங்களை பற்றி அவன் என்ன கூறுவான் இவன் என்ன கூறுவான் என வெளியாட்களை பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டோமெனில் அந்த வாழ்க்கையே நரகம் தான் அல்லவா….அந்த நரக வாழ்க்கையை நிவியும் சரி நவினும் சரி யோசித்தது இல்லை

****

தான் கண்டது கனவு என்பது சரவணன் அழைத்து தான் புரிந்தது.. அவள் அவனிடம் பேசிய வார்த்தைகளின் வீரியமும் புரிந்தது… சாதாரண ஆண் மகனை அப்படி கூறினாலே அத்தனை கோபம் வரும்… இவனுக்கு கோபம் வந்துருக்கும் என்பதை விட மனதால் நிச்சியம் காயப்பட்டு இருப்பான்… தன் பக்க காதலையும், நிலைமையும் முதலில் சொல்லி விட வேண்டும் என நினைத்தவளின் கன்னங்களை தட்டினான் சரவணன்… எதையோ யோசனை செய்து கொண்டிருந்தவளை அழைத்து அழைத்து பார்த்த சரவணனனோ காரை ஓரமாக நிறுத்திவிட்டு “பாப்பா என்னடா ஆச்சு,…” என அவளின் கன்னத்தை தட்டினான். அப்போது தான் நினைவு வந்தவளாக”அண்ணா…” என்றாள் படபடக்கும் இதயத்துடன்

“என்னாச்சு குட்டி, கால் வலிக்குதா…” என கிருஷ்ணா கேட்க

“மாமா…” என்றாள்.

“டேய் பக்கத்துல தர்கா இருந்தா விடு, ஏதோ பேய் அடிச்சு இருக்கும் போல, பாரு எப்படி முழி முழிக்கறான்னு..,” என கிருஷ்ணா சொல்ல

“கொன்றுவேன் மச்சி…” என்றவன் மீண்டும் மகியை தட்டி அழைத்தான். “கெட்ட கனவு அண்ணா…” என மெல்ல கூற.”உப்…” என மூச்சை வெளியிட்டவன் “இன்னும் கனவு கண்டுட்டு அழுகறா, இவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணுமான்னு நினைச்சாலே பயமா இருக்கு மச்சான், அத்தை தான் இரண்டு பேருக்கும் வயசாகிட்டே போகுதுன்னு சொல்றாங்க, ஆனா எனக்கு தான் அது தெரியவே இல்லை, அம்மா, அப்பா இறக்கும் போது என் கையை பிடிச்சுட்டு நின்ன எட்டு வயசு பாப்பாவா தான் தெரியுது, வர போறவன் எப்படி பாத்துப்பான்னு தெரியல…” என சரவணன் சொல்ல

“அதெல்லாம் நவின் நல்லா பாத்துப்பாரு…” என கிருஷ்ணா சொல்லவும் அவனை முறைத்தவன் பதில் பேசாது வண்டியை எடுத்தான்… சரவணன் முகத்தில் கடுமையை தேக்கி வண்டி ஓட்டிட கிருஷ்ணன் சிறு சிரிப்போடு கண்களை மூடி கொண்டான்…

காட்டு வேலைக்கு செல்லும் தாய், தந்தை, அவர்களின் ஒரு நாள் கூலி அப்போது இருவருக்கும் சேர்த்து முண்ணுத்தி ஐம்பது தான்.சந்தை செலவு போக வீட்டு கடன், பள்ளி செலவு என போக சேமிப்பு என்பது இருந்தது இல்லை, தீடிரென உடம்பு சரியில்லை என்றாலும் அவசரத்திற்கு பணம் என்பது இருக்காது… இப்படிபட்ட சூழ்நிலையில் வளர்ந்தவன் தான் கிருஷ்ணன்… கொடிக்கு அப்போது எழு வயது தான் அவளுக்கு அந்தளவிற்கு விவரம் இல்லை, ஆனா கிருஷ்ணாவுக்கு நன்றாகவே வீட்டின் நிலை தெரிந்தது…

அப்படி ஒரு நாள் தான் என் தங்கை இறந்து விட்டாள் என்று சென்ற மூர்த்தி திரும்பி வரும் போது தன் தங்கை மகன் அங்கேயே வர சொல்கிறான் உறவில்லாமல் இருக்கும் அவர்களுக்கு துணையாக இருக்கலாம் என வீட்டில் கூறினார்.. இரண்டு குழந்தைகளை பார்க்கவே காசு இல்லை இதில் அவர்களை பார்த்து கொள்ள வேண்டுமா என வேணி மறுக்க

“என் தங்கை விரும்பி திருமணம் செய்துக் கொண்ட மாப்பிள்ளை வசதியுள்ளவர்கள் தான். அவர்களின் வீட்டையும், காட்டையும் பார்த்துக் கொண்டாலே போதும் வா…” என பிடிவாதமாக அழைத்து வந்துவிட்டார் மூர்த்தி…

(சரவணன், தாய், தந்தை, தந்தையின் சொந்தம் பற்றிய கேள்விகளுக்கு விடை அடுத்த பாகத்தில் கிடைக்கும்)

அப்போது வந்ததில் இருந்து இப்போது வரை சரவணன் தான் இவர்களைப் பார்த்துக் கொள்கிறான். கிருஷ்ணா,கொடி, மகி மூவருமே சரவணனின் உழைப்பால் தான் படித்தனர்..

கிருஷ்ணா சிங்கப்பூர் செல்லும் வரையிலுமே நால்வரும் ஒரே வீட்டில் தான் இருந்தனர்… அவன் அங்கு சென்ற பிறகே தனி வீடு என்பதை சரவணன் மறுக்க மறுக்க வாங்கினான். சிறு வயதில் இருந்தே அத்தை மகள், மாமன் மகள் என்ற உரிமையில் இருவருமே பேசியது இல்லை, கொடியாகட்டும், மகியாகட்டும் உறவுமுறைகளை வைத்து அழைத்தாலும் ஆண்களின் பார்வையும், பேச்சும் தங்கையிடம் பேசுவது போல் தான் இருக்கும்… அது வேணிக்கும், மூர்த்திக்கும் நன்றாகவே தெரியும். அப்படி இருக்க வேணிக்கு எப்படி இந்த எண்ணம் எழுந்தது.. அவர்களின் மேல் கோபம் இருந்தாலும் மற்றொரு புறம் மகியின் மேல் கோபம் வந்தது.. அதற்கு மேல் இவை எதும் தெரியாது இருக்கும் சரவணன் மேல் அத்தனை கோபம் வந்தது…

வீட்டிற்கு வந்ததும் இதை தான் கேட்க நினைத்தான், ஆனால் இருவரும் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்க, அவன் மனமும் கோவிலுக்கு சென்றால் சரியாக இருக்குமென தோன்ற கிளம்பி விட்டான்.. அப்படிக் கேட்காது விட்டதுனால் தான் மீதி கதை தெரிந்தது… சரவணன் என்ன செய்தான் என்ற கேள்விக்கும் விடை கிடைத்தது…

ஆக மொத்தம் சரியாக சென்றிருந்த ஓடையை பாத்திக் கட்டி வெவ்வேறு திசைகளுக்கு அனுப்பி மீண்டும் ஒரே காட்டில் நீரை விடுவது போலானது இவர்களின் கதை, மகி ஒரு புறம் என் அண்ணனின் காதலுக்காக பிடித்த மாப்பிள்ளையை வேண்டாம் எனக் கூறிவிட்டாள் என்றால் இங்கு இவனோ தன் தங்கைக்கு பிடித்த மாப்பிள்ளையை வீடு தேடி சென்று விசாரித்து இருக்கிறான்…

சரவணன் அப்படி விசாரிக்காமல் இருந்திருந்தால் இப்போது அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வந்து இருக்காது… ஆனால் தனக்கு வந்து இருக்கும் என உறுதியாக நம்பினான்… தங்கையை படுத்தி கொண்டிருப்பது போல தன்னையும் இது போல் செய்யென கூறி இருக்கக்கூடும் என நினைத்தவன் கண்களை திறக்கவும், வண்டி நிற்கவும் சரியாக இருந்தது… சரவணன் வீட்டில் தான் வண்டி நின்றது…

“ப்பாப்பா, நீ இங்கேயே இரு, நான் கிருஷ்ணாவை அவங்க வீட்டுல கொண்டு போயி விட்டுட்டு வரேன்…” என்றான் “சரிண்ணா…” என்றவள் கார் கதவில் கை வைக்கவும்

“நீயும் எங்களோட வா மகி…” என்றான் கிருஷ்ணா.. அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை கதவு திறக்க விடாது செய்ய சரவணனை பார்த்தாள்”ஏன் டா, அவளே முடியாம இருக்கா…” என சரவணா ஏதோ சொல்ல வர

“நீ அங்க வந்து கேட்கறது இவளை பத்தி இவளும் நம்ம கூட வரட்டும்…” என்றான் முடிவாக

“சரி பாப்பா, நீயும் வா…” என்றவன் கிருஷ்ணாவின் வீட்டை நோக்கி வண்டியை விட்டான்.. கிருஷ்ணன் வீடு அருகில் தான் என்பதால் சட்டென வந்து விட்டனர் மூவரும்.. இங்கு மகிக்கு தான் உதறல் எடுத்தது நெஞ்சம் படபடக்க அமர்ந்திருந்தாள்.. ஆண்கள் இருவரும் இறங்கி வீட்டிற்கு செல்ல மெல்ல கார் கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தாள்… “அத்தை, அத்தை..” சரவணன் அழைக்க

“வா சரவணா,..” என்றப்படி பூங்கொடியின் அறையில் இருந்து வெளிவந்தவரின் பார்வை அருகில் நின்ற கிருஷ்ணாவிடம் விழ கண்கள் இரண்டும் விரிந்து

“கிருஷ்ணா., நீ எப்ப டா வந்த, துரை வந்து நீ வந்து இருக்கேன்னு சொன்னான், நான் தான் என்கிட்ட சொல்லாம கொள்ளாம வர மாட்டான்னு சொல்லி அனுப்பி வைச்சிட்டேன்…” என படபடப்பாக கூறினார், துரை வந்து கூறியதுமே அப்படியெல்லாம் சொல்லாம வந்து இருக்க மாட்டான் என மறுத்து விட்டார்… இதை காதில் கேட்ட பூங்கொடியோ நிதானமாக கிருஷ்ணாவிடம் மகியை பெண் கேட்க போவதாக கூறி ஒருவராம் ஆயிற்று நிச்சியம் அவன் தான் வந்து இருப்பான் என கூறி அவரின் தலையில் பெரிய இடியாக போட்டாள்…

சரவணனின் அடியிலேயே அவன் பதில் வேணிக்கு தெரிந்து விட்டது இப்போது இவன் சொல்லாமல் கொள்ளாமல் வந்து இருக்கிறான் என்றால் நிச்சியம் ஏதோ காத்திருக்கிறது என நினைத்தவர் கிருஷ்ணாவையே பார்த்தார்”கொடி எங்கம்மா…” என்றான் அவரின் படபடப்பை பொருட்படுத்தாமல் கேட்டான்.

“காய்ச்சல் உள்ள இருக்கா தம்பி…” என்றார்”நீ கேட்க வேண்டியதை இவங்க கிட்ட கேளு…” என்றவன் அறையை நோக்கி நடந்தான்… மகி அப்படியே நின்று விட்டாள்… என்ன நடக்கும் என்ற பரிதவிப்பு அவளுள் கூட எழுந்தது… “அத்தை…” என்றான் நிமிர்ந்து

“சொ…ல்லு,…” நாக்கு வறண்டு வார்த்தைகள் வெளி வர மறுத்தது அவருக்கு…

பெருமூச்சுடன் “பையன் வீட்டுல நீங்க என்ன சொன்னீங்க,அவங்க என்ன சொன்னாங்க…” என எடுத்ததும் கேட்டான்.

“அவங்க தானே முதல்ல கால்…” என ஏதோ சொல்ல வர சரவணன் பார்வையில் அது அப்படியே நின்றது.

“என்ன அத்தை பேசுங்க…” என்றான் விடாது

“நான் சொல்றேன் மாமா…” என பூங்கொடி வெளியில் வர அவளை என்னவென்பது போல் பார்த்தான்.”அம்மாக்கு உங்க சொத்தை, வெளியிருந்து வர ஆளுங்க அனுபவிக்க கூடாதுன்னு ஒரு எண்ணம்…” என்றாள்

“வெளிய இருந்து வர ஆளுங்களா, எனக்கு புரியல…” என சரவணா சொல்ல“உங்ககிட்ட இருக்கற சொத்தை எல்லாம் நீங்க கட்டிக்கப் போற பொண்ணு தானே கட்டி காப்பாத்தும், அவ தானே எல்லாத்துக்கும் முன்னாடி வருவா, ஊருல இருக்கிற பூரா சொத்தும் நம்மளோடது, கோவில் திருவிழால ஸ்டார்ட் பண்ணி பஞ்சாயத்து வரைக்கும் நீங்க தானே முன்னால நிக்கறீங்க, அந்த பேரும் புகழும் நீங்க கட்டிக்க போற பொண்ணுக்கும் தானே கிடைக்கும்.. இதெல்லாம் யாரோ தெரியாத பொண்ணுக்கு கிடைக்கறதுக்கு உனக்கு கிடைச்சா என்னனு சொன்னாங்க மாமா…” என ஆரம்பித்தவள் தான் ஆரம்பத்தில் இருந்து இப்போது வேணி திட்டியது வரை அனைத்தும் கூறி முடித்தாள்.

“எனக்கு உங்க மேல ஆரம்பித்தில இருந்தே எந்த ஒரு ஈர்ப்பும் இல்ல மாமா, அம்மா சொன்னாங்க தான் செஞ்சேன்… நீங்க அடிச்சும் உங்க பின்னாடி வர காரணம் அம்மா தான்.. போன வாரம் நீங்க கொஞ்சம் ஹார்சா பிகேவ் பண்றீங்க சொன்னேன் அதுக்கு மறுபடியும் போக சொல்றாங்க.. எனக்கு அது பிடிக்கல… அம்மா என் நல்லதுக்கு தான் சொல்லுவாங்க நினைச்சு தான் இப்படி பண்ண, நீங்க என்னை தங்கச்சின்னு சொல்லியும் உங்ககிட்ட தப்பா நடந்துக் கிட்டேன் மாமா… அம்மா சொல்ற எல்லாமே சரியா இருக்காதுன்னு அண்ணா சொல்லும் போது தான் புரிஞ்சுக்கிட்டேன்….. சாரி மாமா…” என கையெடுத்து கும்பிட்டு சொல்ல, இதில் பூங்கோடியை சொல்லி ஒரு பிரோஜனமும் இல்லை, அவள் இங்கு மகுடிக்கு ஆடும் ப்பாம்பாய் தான் இருக்கிறாள் என நினைத்தவன்“ஏய் கொடி என்ன இதெல்லாம்.. என்கிட்ட போயி இப்படி பேசிட்டு..கையை கீழே போடு என்றான்..” சரவணன்.

“சாரி மச்சான் எங்க வீட்டுல இப்படி சொத்துக்கு பைத்தியமா அலைவாங்க நினைக்கல, ஒரு வாரத்திற்கு முன்னாடி இவ சொல்லும் போதே ஏதோ தப்பா இருக்குன்னு நினைச்சு தான் மகிக்கு கால் பண்ணேன் மகி எல்லாத்தையும் சொல்லிட்டா… எனக்கு சந்தேகமே இல்லை நீயும் பூங்கொடியும் விரும்பி இருக்க மாட்டீங்கன்னு தெரியும்…” “அதான் மகுடிக்கு ஆடற ப்பாம்பா இருக்கற என் தங்கச்சியை முதல்ல ப்பார்த்துட்டு அப்பறம் உனக்கு நேர்ல வந்து சொல்லலாம் நினைச்சேன், சொல்லிட்டேன் நினைக்கிறேன் இனி உன் முடிவு…” என்றான் குனிந்து கொண்டே

“டேய் என்னடா நீயும் தப்பு செஞ்ச மாதிரி குனிஞ்சு நிக்கற…” என்றவன் அவனை தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு மகியை தேடினான்.. அவளோ விழிகளில் நீர் பெறுக நின்று இருந்தாள்…

“பாப்பா, இங்க வா..” என அழைக்க “அண்ணா,..” மாட்டேன் என தலையாட்டி அங்கயே நின்றாள்..

“இங்க வா, பாப்பா,…” வம்படியாக அவளை தன்னுடனே நிற்க வைத்தவன் வேணியிடம் திரும்பி

“எனக்கு உங்க ஆதங்கம் புரிது அத்தை, இது நீங்கன்னு இல்லை எல்லாரும் நினைக்கிறது தான், யாரோ வந்து அனுபவிச்சுட்டு போற சொத்தை நம்ம வீட்டு பொண்ணு அனுபவிச்சா என்னனு யோசிக்கறது தப்பு இல்லை தான்…” என்றவன்

“ஆனா என் தங்கச்சியை, என் பேர் சொல்லி கார்னர் பண்ணி இருக்கீங்கன்னு நினைக்கும் போது தான்…க்கும், என் மேல தான் தப்பு, உங்களை சொல்லி ஒரு பிரயஜனமும் இல்லை,…”என்றவன் மகியின் தோள் மீது கையைப் போட்டப்படி அங்கிருந்து நகர்ந்தான்.

“நாங்க அடுத்த வாரம் சிங்கப்பூர் போறோம் மா…” என்றான் கிருஷ்ணன்”நாங்களா..” என்பதை போல் வேணி பார்க்க

“ஆமா, ஆல்ரெடி இவளுக்கு பாஸ்போர்ட், விசா எல்லாம் ரெடி பண்ணி தான் வைச்சு இருந்தேன்… இப்ப அங்க வந்தாலும் கெஸ்ட் விசிட்ல ஆறு மாசம் இருக்கலாம். அதுக்குள்ள இவளுக்கு அங்க வேலை கிடைச்சிரும், சோ நான் எங்கூடயே கூட்டிட்டு போறேன். உங்களுக்கு சொத்து வேணும்னா நம்ம பாப்பாவை எங்க வேணும்னாலும் வித்தாலும் வித்துடுவீங்க.. இவளும் அம்மா சொல்றது சரி தான்னு போயிடுவா… தன்னால யோசிக்கற புத்தியும் இவளுக்கு இல்லை, இப்டியே இருந்தா இவ என்னாவான்னு தெரியல, உங்களை நம்பி என் தங்கச்சியை விட்டுட்டு என்னாலயும் இருக்க முடியாது… உங்களுக்கு சொத்து தானே முக்கியம் நாங்க இரண்டு பேரு சம்பாதிக்கறோம் சரணவன் அளவுக்கு இல்லைனாலும் ஓரளவுக்கு என்னால பணத்தை கொண்டு வர முடியும்..” என முடிவாக சொல்ல

“அப்பா..” என வேணி ஏதோ சொல்ல வர”அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன்…” என்றவன் அங்கிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்…

******

“என் பாப்பா ரொம்ப பெரியவளா வளர்ந்துட்டா போலா, எனக்கு தான் தெரியல…” நடந்து கொண்டே விரக்தியாக பேசினான்..

“அண்ணா, அப்படி இல்லை அவ சொல்றதும் உண்மை தானே பதினைஞ்சு வயசுல இருந்தே உன் ஆசை எல்லாத்தையும் விட்டுட்டு சம்பாதிச்சுட்டு இருக்க, இப்ப உன் காதலும் கிடைக்கலன்னா என்ன ஆவ நீ,..அதான் அண்ணா சரின்னு சொன்னேன்…” என்றாள் குனிந்து கொண்டே “என்கிட்ட கேட்க தோணலயா பாப்பா., நான் உன்கிட்ட அதட்டி பேசி இருக்கேன் தான் ஆனா அடிச்சது இல்லையே,என்கிட்ட என்ன பயம் பாப்பா…என்கிட்ட மனசு விட்டு பேச சொல்ல வேண்டியது தானே பாப்பா., அங்க இருக்க கிருஷ்ணா கிட்ட சொல்லி இருக்க என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு தோணலயா…” என்றான் ஆற்றாமையோடு “இல்லைன்னா, முதல்ல கொடி சொல்லும் போது நம்பிக்கை இல்லை அண்ணா… ஆனா அன்னிக்கு மதியம் கொடியும் நீயும் ஹக் பண்ணிட்டு நிக்கற போல பாத்தேன்… அதான் கொஞ்சம் நம்பிட்டேன் எனக்கு அப்ப உன் ஆசை தா முக்கியமுன்னு தோணுச்சு, அதான் அவங்க சொன்னதுக்கு சரின்னு சொன்னேன்…” என்றாள் குனிந்து கொண்டே, பெருமூச்சுடன்

“ஏ பாப்பா என்கிட்ட கேட்கல,.நீ முன்னாடியே கேட்டு இருந்தா இதெல்லாம் நடந்து இருக்குமா சொல்லு, படிச்ச பொண்ணு பட்டிகாடு மாதிரி பயந்திட்டு இப்படி பண்ணி இருக்க…” என்றான்

“நீயே சொல்லுவேன் நினைச்சேன். அவ மேல எனக்கு பயம் இல்லை உன் லைப் நல்லா இருக்கணும் நினைச்சேன். அது இல்லாம லவ் பண்றது எவ்ளோ பெரிய விசயம். ஆனா நீ அதை கூட என்கிட்ட சொல்லலன்னு எனக்குள்ள கோபம். நீயே சொல்லுவேன் நினைச்சேன். கிருஷ்ணா மாமாகிட்ட நீ லவ் பண்ணாலன்னு சொல்லும் போது தான் தெரிஞ்சுது, அப்புறம் கிருஷ்ணா மாமாகிட்ட முதல்ல நான் சொல்லல அண்ணா, கொடி தான் சொல்லி இருக்கா, மாமா அதட்டி கேட்கவும் தான் சொன்னேன்…” என்றாள் அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்…

“அண்ணாக்காக என்னவெல்லாம் செஞ்சு இருக்க, உண்மையாவே அந்த பையனை உனக்கு பிடிச்சு இருக்கா பாப்பா, கண்ணு கொஞ்சம் மாறு கண்ணா இருக்கே பரவாயில்லையா அது தெரிஞ்சு தான் சரின்னு சொன்னயா…” என்றான்

“இல்ல அண்ணா முதல்ல நீ பார்த்து பையன் நல்லா இருக்கா சொன்னயா உனக்கே பிடிச்சு இருக்குன்னா பையன் பாக்க நல்லா இருப்பான்னு நானும் பையனை பாக்காம சரின்னு சொல்லிட்டேன்..சொல்லப்போனா இப்ப வரைக்கும் நீ அனுப்பன பையன் போட்டோவை நான் பாக்கல அண்ணா,..” என சொல்ல

“அப்பறம் எப்படி…” என கேட்டான் “அவரை பாக்கல தான் ஆனா அவர்கிட்ட இரண்டு தடவை பேசி இருக்கேன் அண்ணா.. அந்த குரல்ல என்னவோ இருந்தது, அப்ப விழுந்தவ தா எழவே முடியல.., அந்த சந்தோசதுல தான் வீட்டுக்கு வந்தேன் ஆனா கொடி சொன்ன பொய்யால எல்லாம் சொதப்பிடுச்சு.இருந்தாலும் மனசு அவரை பாரு பாருன்னு சொல்லும். அப்ப எல்லாம் நீ தான் அண்ணா கண்ணுக்குள்ள வருவ, அப்ப எனக்கு என் ஆசையை விட என் அண்ணன் ஆசை தான் முக்கியமா தோணுச்சு, எனக்குள்ள வந்த ஆசையை அப்படியே விட்டுட்டேன். இன்னைக்கு காலையில நீயும், கொடியும் லவ் பண்ணலன்னு தெரிஞ்சது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா அண்ணா,மனசுக்குள்ள மிதக்கற ஃபீலிங், என் சந்தோசம் சாமிக்கும் தொத்திக்குச்சு போல நான் அவரை பாக்கலன்னு தெரிஞ்சு அவரை கோவிலுக்கு வர வைச்சிட்டாரு, அப்ப எனக்கு அவர் கண்ணு குறையா இருக்கா என்னனு தெரியல அண்ணா, புடிச்சு இருக்கு ஒருத்தரை பிடிக்க கண்ணு,காது மூக்குன்னு ஏதாவது பாக்க தோனுமா என்ன.,பிடிச்சு இருக்கு அவ்வளவு தான், இதுக்கு பேர் காதலா ன்னு கேட்டா ஆமா காதல் தான் எனக்கு தெரிஞ்ச காதல், இது தான்…” என்றாள் அத்தனை அழுத்தமாக “நீ இவ்வளவு பேசுவியா பாப்பா…” விழி அகலாது கேட்டான்… அவன் அப்படி கேட்டதும் கப்பென வாயை மூடிக் கொண்டாள்… அவளின் அமைதியில் சிரித்தவன்

“எப்பவும் என்கிட்ட இதே மாதிரி மனசு விட்டு பேசுவேன்னு சொல்லு, இப்பவே பையன் வீட்டில பேசிடலாம்..” மறைமுகமாக அவனின் சம்மதத்தை கூறினான்…