• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
zeenath khaja
Reaction score
15

Profile posts Latest activity Postings About

  • குறிஞ்சி மலர்
    #நந்தனம்போட்டிகதைகள்
    குறிஞ்சி மலர் அவர்கள் எழுதிய "உன்னில் சங்கமித்தேன்"
    இன்ப சாகரன்.. நதிவதனா... தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட பின்பு பாட்டியின் சொந்த ஊருக்கு வரும் நதியின் குடும்பம்... தன் தமக்கைக்கு சேர வேண்டிய சொத்துக்களை கொடுத்து அவர்களை பார்த்துக் கொள்ளும் இன்பாவின் தந்தை.. சிறுவயதிலேயே தன்னிடம் கோபமாக நடந்து கொண்ட இன்பனிடமிருந்து விலகியே இருக்கிறாள் நதி ஆனால் அவனின் தங்கை இவளுக்கு உற்ற தோழியாகிறாள்.. தெளிந்த நீரோடையாக சென்ற வாழ்வில் தந்தையின் மரணத்திற்குப் பிறகு தங்களின் கஷ்ட நிலையில் இன்பனும் அவனின் தந்தைமே இவர்களை பார்த்துக் கொள்கிறார்கள்...இன்பனுக்கும் நதிக்கும் திருமணம் முடிக்க பெரியோர்கள் முடிவு செய்ய தான் நன்கு படித்த இன்ஜினியராகி தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நதியின் ஆசைக்கு பெரும் துன்பமாக அமைகிறது இந்த திருமணம்.. இன்பனோ அக்காள் மகளை மணமுடிக்க ஆசையாக உள்ளான்.. நதிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்பதை அறிந்து கொண்டு திருமணத்தை நிறுத்தி விடும் இவனால் இரு குடும்பத்திலும் மனஸ்தாபம் ஏற்பட்டு பேச்சு வார்த்தை இல்லாமல் போகிறது... பிரச்சனைகள் முடிந்து இன்ப சாகரனும் நதி வதனவும் வாழ்வில் இணைந்தார்களா என்பது கதை.. ஒருவரின் மனதை புரிந்து கொள்ளாமலேயே முடிவு எடுக்கும் போது அங்கே சிக்கலே உண்டாகும் என்பதை அழகாக கூறியிருக்கிறார் ஆசிரியர் நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
    Good luck dear 💐🥰❤️

    #நந்தனம்போட்டிகதைகள் ஆம்பல் அவர்கள் எழுதிய "மயிலாஞ்சி மயிலாஞ்சி"
    உயிர் பிரியும் நேரத்தில் தன் பேத்தி கிருஷ்ணவேணியை தனிமையில் வாட விடாமல் அவளுக்கு ஒரு திருமணத்தை முடித்து பார்த்து விட வேண்டும் என ஆசை கொள்ளும் வைரம் பாட்டி தன் மகனின் இரண்டாம் மனைவியின் தம்பி மணியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என தன் மகனிடம் கோரிக்கை வைக்கிறார்... ஆதிசேஷனும் மகளிடம் சம்மதம் பெற்று மணியிடம் சம்மதம் கேட்க வருகையில் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறாள் இவரின் மனைவியும் மணியின் அக்காவும் ஆகிய விசாலம்... சொத்து எங்கு முதல் மனைவியின் மகளுக்கு மட்டும் சேர்ந்து விடுமோ என அச்சம் கொள்ளும் இவரிடம் சொத்துக்களை சமமாக பிரிப்பதாக ஆதிசேஷன் உறுதி அளித்த பின்பே தன் தம்பியின் திருமணத்திற்கு சம்மதிக்கிறார் விசாலம்.. தன்னை வெறுக்கும் சிப்பியை போலவே அவரின் தம்பியும் வெறுப்பை காட்டுவாரோ என பெரும் சஞ்சலத்துடன் திருமணம் முடிக்கும் இவள் எங்கு படிப்பை நிறுத்தி விடுவார்களோ என அஞ்சுவதற்கு வழியில்லாமல் இவள் படிப்பை தொடர அவளின் தந்தையும் கணவனும் சம்மதிப்பதில் சிறிது நிம்மதி அடைகிறாள்... பேஷன் டிசைனிங் படிக்கச் செல்லும் இடத்தில் தன் நண்பியின் மூலம் ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கிறது முதலில் தயங்கினாலும் பிறகு எடுத்து செய்ய முடிவு செய்யும் இவளும் இவளின் பிரண்ட் சினேகா.. அங்கு மாறனை சந்திக்கும் இவளுக்கு ஏதோ ஒரு சலனம்... தன் மனதை நினைத்து இவள் பயந்தாலும் மானிடமும் மாறனிடமும் எப்பொழுதுமே ஒரு தடுமாற்றம் இவளிடம் பேசும் போது... இது ஏன் எதனால் என்ன ஆனது என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. தோய்வு இல்லாமல் விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை 👏👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்🥰👏
    Good luck dear 💐🥰❤️
    #நந்தனம்போட்டிகதைகள் தளவம் பூ அவர்கள் எழுதிய
    "என் வாசம் நீ உன் சுவாசம் நான்"
    சூர்யா.. சந்திரா.. அவனுக்கு மட்டும் சாரா 🥰 அவன் சூரியனாக தகிக்கிறான் இவள் சந்திரனாக குளிர்விக்கிறாள் 🥰 இவளுக்கு அவனின் மேல் உள்ள காதலை விட அவனின் தாய் சாரதா மீதே காதல் அதிகம் 😀
    இவர்களின் பார்வை பரிமாற்றங்களும் ஒருவரின் மேல் ஒருவர் அக்கறை கொண்ட செயல்களிலும் இவர்களின் காதல் நன்றாகவே தெரிகிறது... ஆனால் அவன் மனக்கக் கேட்டபோது இவள் உன்னிடம் என்ன இருக்கிறது எனக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது அந்த பணத்தை முதலில் சம்பாதி என அவனின் ஈகோவை தூண்டி விட்டு செல்கிறாள்... அதில் பெரும் கோபம் கொண்ட அவன் தன் படிப்பால் உயர்ந்து நிற்கிறான்... அவளுக்கே முதலாளியாக அவன் வரும்போது சூல் கொண்ட வயிற்றோடு அவனை எதிர்கொள்கிறாள் இவள்... அதில் அவனின் காதல் கொண்ட மனது பெரும் துயரத்துக்கு ஆளாகிறது.. மாற்றானின் மனைவியாக அவளைக் கண்டாலும் தன்னவளாகவே அவளை நினைக்கத் தோன்றுகிறது அவனுக்கு... கர்ப்பவதியான இவளுக்கும் அவனின் அருகாமையும் பாசமும் பரிவும் தேவைப்படுகிறது மிக அதிகமாக.. இதை அவள் தன் மகவின் தந்தையிடம் எதிர்பார்க்காமல் ஏன் இவனிடம் எதிர்பார்க்கிறாள் இவனையே கணவனாக மனதில் வரித்திருந்ததாலா.. அவனின் உயர்வில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறான் இவள்.. தாயாக இவளை தாங்க வேண்டியவர் ஏன் தன்னை அந்த நிலையில் பொருத்திக் கொள்ள மறுக்கிறார்... ராஜு... மாயாவின் நிலை அறிந்து அவளை திருமணம் முடிக்க நினைத்தாலும் இருக்கும் சூழ்நிலைகளால் சிறிது பயப்படுகிறான் ஆனாலும் தான் கொண்ட நிலையில் உறுதியாக இருந்து அவளை கரம் பிடித்து காயப்பட்ட அவளை பூவை போல தாங்குகிறான். . 👏 இப்படியான ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு வரமே 🥰🥰
    உண்மை நிலை என்ன என்பதை அறியாமல் தன் போக்கிற்கு ஏதோ ஒன்றை நினைத்து தாங்களாகவே அதற்கு அர்த்தமும் கற்பித்து அதுவரை நட்பாக நினைத்தவர்களை காயப்படுத்தும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் மகேஷ்... வீனாவை போன்று... வீணா தன் செயலை நினைத்து வருந்தும்போது கொஞ்சம் மனிதாபிமானம் மிச்சம் இருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது 👏 ராகவ் மற்றும் சூர்யாவின் தந்தைக்கு தண்டனை கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் 😔 நிறைய சஸ்பென்சுகளோடும் அதற்கான விடைகளோடும் அழகாக பயணிக்கிறது கதை முடிவை நோக்கி பாராட்டுக்கள் டியர்🥰👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹💐
    #நந்தனம்போட்டிகதைகள்
    பேரரளி பூ அவர்கள் எழுதிய "பூ பூக்கும் ஓசை"
    சத்திய தேவ்... பூர்ணா..
    தேவ் தன் நண்பனின் திருமணத்திற்கு பரிசளிப்பதற்காக பேரரளி பூவை வாங்கிக் கொண்டு பேருந்தில் பயணிக்க.. பேருந்தில் அமர்ந்திருந்த பூர்ணாவிடம் அது நசுங்காமல் இருப்பதற்காக கொடுக்க அவளும் காதல் கொண்டு இவன் அதை தன்னிடம் கொடுப்பதாக நினைத்து கோபப்பட.. அதற்கு அவனின் விளக்கத்தைக் கேட்டு புரிந்து கொண்ட நிலையில் அவனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் மலரை மறந்து கீழே இறங்கிய இவன் பின்னே அவள் துரத்திச் செல்ல... அங்கு திருமண ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸில் மணமகளாக தன் தங்கையை பார்த்து அதிர்ந்து நிற்கும் இவள் தன் நண்பனோடு தன் தங்கைக்கு திருமணம் முடிக்க அனைத்து முயற்சிம் மேற்கொள்ளும் சத்யதேவ்க்கு பலிரென ஒரு அறையை விட்டு தன் வீடு நோக்கி செல்கிறாள் சத்யதேவ் கூற வந்த விளக்கத்தை கேட்காமலேயே துயரத்துடன்.. சத்திய தேவ்.. பூர்ணா தன் தங்கையை திருட்டுத் திருமணம் புரியும் விக்னேஷை அறையாமல் தன்னை அறைந்த கோபத்தில் புது ஊரில் புதிதாக சேர்ந்த வேலைக்கு சென்ற இடத்தில் அவளை கண்டு அதிர்ந்து நிற்கிறான் தன் டீம் ஹெட்டாக... 😀 இப்படி ஆரம்பமே அதிரடியாக தொடங்கும் கதை போக போக எண்ணானது என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. சத்யதேவ் விக்னேஷ் சக்தி பத்ரி என கலகலப்பான நண்பர்கள் பட்டாலும் சூப்பர் 👏👏 தவிர்க்க முடியாத சூழ்நிலையால் ஏற்படும் சில தவறுகளை பேசி புரிய வைத்திருந்தாலே அனைத்தும் சுமூகமாக முடிந்திருக்கும்.. என்பதை நமக்கும் புரிய வைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
    Good luck dear 💐🥰❤️
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom