IIN 68

மூட் ஸ்டெபிளைசர்கள் என்பவை பைபோலார் குறிபாட்டையும் மனநிலை மாறுபாட்டோடு சம்பந்தப்பட்ட பிற மனநல பிரச்சனைகளைச் சரிசெய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்தாகும். சில நேரங்களில் மனநல மருத்துவர்கள் மனநல குறைபாடுகளுக்குக் கொடுக்கும் பிற மருந்துகளின் வீரியத்தைக் குறைப்பதற்காக மூட் ஸ்டெபிளைசர்களைப் பயன்படுத்துவார்கள். மூட் ஸ்டெபிளைசர்களில் ஒன்றான லித்தியம் சில வகை மேனியாக்கள் மற்றும் பைபோலார் டிஸ்சார்டருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகும். நீண்டநாட்களுக்கு லித்தியம் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்குத் தற்கொலை எண்ணம் குறைகிறதென சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. லித்தியம் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளை மனநல மருத்துவர்கள் அடிக்கடி உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். அவர்களின் உடலிலுள்ள லித்தியத்தின் அளவையும் சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டையும் பரிசோதிப்பதுண்டு.
-From the website of National Institute of Mental Health


ஸ்ரீயை வைத்திருக்கும் காவல்நிலையத்துக்கு வழக்கறிஞர் மனுவேந்தனோடு வந்திருந்தான் நிஷாந்த். ஏகலைவனின் ஆஸ்தான வழக்கறிஞரான மனுவேந்தன் ஸ்ரீயிடம் பேசி அவன் வாக்குமூலத்தில் என்ன சொல்லவேண்டுமென கூறுவதற்காக வந்திருந்தார்.
அங்கே இருந்த காவல்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னர் இருவரும் அவனைச் சந்தித்தார்கள்.
ஸ்ரீ காவல்துறை விசாரணை, நீதிமன்றம் என்று அலைக்கழிப்புற்றதில் அரண்டு போயிருந்தான். வழக்கறிஞரோடு வந்திருந்த நிஷாந்தைப் பார்த்ததும் தான் அவனது முகத்தில் தெளிவு வந்தது.
“நிஷாந்த்… என்னை எப்பிடியாச்சும் இங்க இருந்து கூட்டிட்டுப் போயிடுடா… என் ஃபியூச்சரே ஸ்பாயில் ஆகிடும்” என்று அழாத குறையாகக் கூறியவனை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார் மனுவேந்தன்.
அவரைப் பார்த்தவன் “சார் யாரு?” என்று நிஷாந்திடம் கேட்க
“மாமாவோட லாயர்… உன் கிட்ட பேச வந்திருக்கார் ஸ்ரீ” என்றான் அவன்.
“என் கிட்ட என்னடா பேசணும்? உன் மாமாவால தான் எனக்கு இந்த நிலமை… வேண்டாம் சார், நேஷனலைஸ்ட் பேங்க் சர்வர்ல கை வச்சா சும்மாவிடமாட்டாங்கனு எத்தனை தடவை எடுத்துச் சொன்னேன்… அவர் கேக்கவேல்ல… அந்தப் போலீஸ்காரிய மாட்டிவிடுறதா நினைச்சு இப்ப என் எதிர்காலத்தையே அழிச்சிட்டார்டா… இண்டலிஜென்ஸ் பீரோல ஜாப் இண்டர்வியூக்குப் போக வேண்டியவனை போலீஸ் ஸ்டேசன்ல உக்காரவச்சிட்டார் அந்த மனுசன்” என புலம்பித் தீர்த்தான் ஸ்ரீ.
“சூ! கத்தாத… உனக்கு ஹெல்ப் பண்ண தான் நாங்க ரெண்டு பேரும் வந்திருக்கோம்… நீ இப்பிடியே புலம்புனா நான் கிளம்பிப் போய்டுவேன்” என்று மனுவேந்தன் அதட்டியதும் ஸ்ரீயின் புலம்பல் நின்றது.
நிஷாந்த் அவரைப் பேசும்படி கண் காட்டிவிட்டு வெளியே சென்றுவிட ஸ்ரீயோ மனுவேந்தன் என்ன சொல்வாரோ என்று குழப்பத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
“லுக் ஸ்ரீ! நான் சொல்லுற மாதிரி நீ போலீஸ் கிட்ட ஸ்டேட்மெண்ட் குடுத்தனா என்னால உன்னை போலீஸ் கிட்ட இருந்தும், இந்த கேஸ்ல இருந்தும் காப்பாத்தமுடியும்… நான் சொல்லுறதை நல்லா கேளு” என்று ஆரம்பித்தவர் சொன்ன விசயம் அவனைத் திடுக்கிடச் செய்தது.
“என்ன சார் இப்பிடி சொல்லுறிங்க? இதனால என்னோட சேர்ந்து இன்னொரு ஆளோட வாழ்க்கையும் நாசமாகிடும்” என அலறியேவிட்டான் அவன்.


“யோவ் கத்தாதய்யா… இதுலாம் ரொம்ப பெரிய கேஸ் இல்ல… கொஞ்சநாள் பொறுத்துக்க… அது இதுனு நானே எவிடென்சை கிரியேட் பண்ணி உன்னை வெளிய கொண்டு வந்துடுவேன்… அதனால நான் சொல்லுறதைக் கேளு… இல்லனா ஏகலைவன் சாரோட கோவத்துக்கு ஆளாகிடுவ… அதுக்கு அப்புறம் உன்னைப் படைச்ச கடவுளே நினைச்சாலும் உன்னைக் காப்பாத்த முடியாது ஸ்ரீ” என்று சொல்லி அவனைக் கிட்டத்தட்ட மிரட்டினார்.
ஸ்ரீக்கும் வேறு வழி தெரியவில்லை. எனவே சம்மதமாகத் தலையாட்டி வைத்தான்.
“இங்க என் கிட்ட சம்மதம் சொல்லிட்டு பின்னாடி போய் குழி தோண்டுனனு வையேன், அந்தக் குழிக்குள்ள உன்னைப் பொணமா படுக்க வச்சிடுவார் ஏகலைவன் சார்… அவரைப் பத்தி தெரியும்ல?” என்று எச்சரித்துவிட்டுக் கிளம்பினார் மனுவேந்தன்.
கண்கள் முழுக்க பயத்தோடு அவர் போவதைப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீக்கு இனி தன் வாழ்க்கையில் விடிவே கிடையாதென்பது புரியவில்லை. அவன் பயத்தில் இருந்தானே! பயத்தில் எடுக்கும் முடிவுகள் பல நேரங்களில் தவறாகவே இருக்கும். ஏகலைவனைக் காட்டிக்கொடுக்கக்கூடாதென அவன் எடுத்த இம்முடிவும் நிச்சயம் தவறானது தானே!
ஸ்ரீயை எச்சரித்து தான் சொன்னபடி வாக்குமூலம் கொடுக்கச் சம்மதிக்கவைத்துவிட்டதை ஏகலைவனிடம் சூட்டோடு சூடாகச் சொல்லிவிட்டார் மனுவேந்தன்.
“நீங்க கவலையில்லாம உங்க பிசினசை கவனிங்க சார்… ஸ்ரீ உங்களுக்கு எதிரா மூச்சு கூட விடமாட்டான்… அதுக்கு நான் கேரண்டி” என்றார் அவர்.
“நீங்க சொல்லுறபடி நடந்தா சந்தோசம் தான்… நான் மேனேஜர் கிட்ட பேச வேண்டியதை பேசிட்டேன்… அந்தாளு நீங்க சொன்ன அரேன்ஜ்மெண்டுக்கு ஒத்துக்கிட்டார்… பொண்ணு கல்யாணத்தை அளவுக்கு அதிகமா கடன் வாங்கி செஞ்சிருக்கார் போல… கடன்காரங்க தொந்தரவு தாங்க முடியலனு ராக்கி கிட்ட புலம்புனப்ப நான் கேட்டேன்… அந்த சிச்சுவேசனை யூஸ் பண்ணிக்கிட்டேன்… அவரோட கடனை அடைச்சுடுறேன்னு சொன்னதும் என்ன சொன்னாலும் செய்யுறேன் சார்னு கால்ல விழுந்துட்டார்… ஆனா கடைசி நேரத்துல காலை வாரிடுவாரோனு சந்தேகம் இருக்கு… அவர் சொல்லித் தான் ஸ்ரீ பேங்க்ஸ் சர்வரை ஹாக் பண்ணுனான்னு ஸ்டேட்மெண்ட் குடுக்கச் சொன்னதே அதுக்காக தான்.. எனிஹவ், உங்களோட இந்த ஐடியாவும் என்னோட ப்ரசன்ஸ் ஆப் மைண்டும் என்னை இந்த கேஸ்ல சிக்காம காப்பாத்திடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு மனுவேந்தன்… நீங்க ஊட்டில வாங்கணும்னு நினைச்ச ரிசார்ட்டோட ரிஜிஸ்ட்ரேசனை எப்ப வச்சுக்கலாம்?”

xr:d:DAF-I-2c3BQ:274,j:4857556900457299572,t:24041303


“உங்களுக்கு எப்ப சவுகரியமோ அப்ப வச்சுக்கலாம் சார்” என்ற மனுவேந்தனின் குரலில் ஏகத்துக்கும் அசடு வழிந்தது.
அழைப்பைத் துண்டித்த ஏகலைவன் நவநீதத்தை அழைத்தான்.
அவன் அழைத்ததும் பதறியடித்துக்கொண்டு ஓடோடி வந்தாள் அவள்.
“அந்த லேடி ஆபிசர் ஊருக்கு வந்துட்டாளா?” என விசாரித்தான் அவன்.
“எந்த ஆபிசர் சார்?” என்றவளை அவன் முறைத்ததும் மூளை கலங்கி திணறிப்போய் “ஹான், இதன்யா மேடமா? அவங்க வந்துட்டாங்க சார்” என்று சொல்லி சமாளித்தாள்.
“சரி! நீ போய் உன் வேலைய பாரு” என்று அவளை அனுப்பி வைத்தவன் பொடி நடையாகத் தனது பங்களாவை விட்டு வெளியேறி முருகையா வீட்டை நோக்கி நடந்தான். அவன் நடந்து போவதை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் கோபால்.
உள்ளூரில் இருக்கும் தேயிலை தோட்ட அலுவலகத்திற்கு அவன் காரில் செல்வதே வழக்கம். நடைபயிற்சி, ஜாகிங்கை தோட்டத்துக்குள்ளவே முடித்துக்கொள்பவன் இன்று பங்களா எல்லையைத் தாண்டி நடந்து செல்வது இதுவரை கோபால் கண்டறியாத காட்சி.
ஆச்சரியத்துடன் பார்த்தவர் தோட்டத்திலுள்ள பெங்களூர் ரோஜா செடியைக் கவனிக்கப் போய்விட்டார்.
ஏகலைவன் நடந்தே முருகையாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டான். அவனுக்கு இப்போது இதன்யாவிடம் பேசியே ஆகவேண்டும். அவனது மூளையை வண்டாகக் குடையும் கேள்விகளுக்கான பதிலை அவளிடம் இருந்து பெற்றே ஆகவேண்டுமென்ற பிடிவாதம்.
இதன்யா ஓடு போட்ட வீட்டின் திண்ணையில் அமர்ந்து முரளிதரனிடம் பேசிக்கொண்டிருந்தவள் ஏகலைவனைக் கண்டதும் புருவத்தைச் சுருக்கியபடி “அப்புறமா பேசுறேன் சார்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து மொபைலை தன் பக்கத்தில் வைத்தாள்.
“வீட்டுக்கு வந்தவங்களை உக்காரச் சொல்லமாட்டாங்களா சென்னைல?” என்று நக்கலாகக் கேட்டபடி அவளுக்கு எதிரே இருந்த திண்ணையில் அமர்ந்தான் அவன்.
இதன்யா கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாக அமர்ந்தவள் “வீட்டுக்குள்ள வந்தா உக்காரச் சொல்லலாம்… வாசல்ல நிக்குறவங்களை என்ன சொல்லுறது? அதுவும் அழையா விருந்தாளியா வந்திருக்குறவங்களை உக்காரச் சொல்லுறதை விட சட்டுபுட்டுனு பேசி முடிச்சு வந்த வழில திருப்பி அனுப்பி வைக்குறது பெட்டர்னு தோணுது” என்றாள் அவனுக்குச் சற்றும் குறையாத நக்கலுடன்.
ஏகலைவன் அவளை ஆழ்ந்து நோக்கியவன் “டேரக்டா கேக்குறேன்… உனக்கு என்ன தான் வேணும்? இனியாவோட கேஸை வெற்றிகரமா முடிச்சிட்ட… இன்னும் உன் போலீஸ்கார மூளைக்கு என்ன தான் வேணும்? உன்னை ஆக்சிடெண்ட் பண்ணி கொல்ல பாத்தவன் யாருனு தெரியணுமா? அதுக்காகவா நேரங்காலம் இல்லாம காடு, மேடுனு சுத்தி திரியுற?” என்று அலட்சியம் வழியும் குரலில் கேட்டான்.
“ஒரு தடவைக்கு ரெண்டு தடவை என்னைக் கொலை பண்ண பாத்தவன் யாருனு கேட்டா என்னால தெளிவா ஏகலைவன் சக்கரவர்த்தினு பதில் சொல்ல முடியும்… ஆனா இனியாவ ப்ரூட்டலா அட்டாக் பண்ணி கொன்னவன் யாருனு கேட்டா இப்ப வரைக்கும் என்னால தெளிவா ஒரு முடிவுக்கு வரவே முடியல… சட்டம் அதுக்குக் கிடைச்ச ஆதாரத்தை வச்சு கிளாராவையும் ரோஷணையும் குற்றவாளிங்கனு கை காட்டி தண்டனை குடுத்து தன்னோட கடமைய முடிச்சிடுச்சு… ஆனா என் மனசாட்சி என்ன சொல்லுது தெரியுமா? இன்னும் உன் கடமை முடியல இதன்யானு சொல்லுது… சரி, உங்க புண்ணியத்துல சஸ்பென்சனை வேஸ்ட் பண்ணக்கூடாது, என் மனசாட்சியையும் சமாதானப்படுத்தணும்… அதனால தான் இங்க வந்துட்டேன்… என் மனசாட்சி சமாதானம் ஆகுற வரைக்கும் நான் இங்க தான் இருப்பேன்… என்னை இங்க இருந்து போக கிளப்புற திராணி யாருக்கும் இல்ல”
நீயெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்று பொருள்படும் பார்வையோடு இதன்யா சொன்ன வார்த்தைகள் ஏகலைவனின் ஈகோவை சகட்டுமேனிக்குக் காயப்படுத்திவிட்டது. கூடவே இருமுறை கொலைமுயற்சி என்று வேறு சொல்லிவிட்டாளே!
சினந்து கொண்டு எழுந்தவன் “அன்னைக்கே உன்னை நாய் மாதிரி அடிச்சு மலைக்காட்டுக்குள்ள போட்டிருந்தா உன் டெத்பாடி கூட யாருக்கும் கிடைச்சிருக்காது… நரியும் ஓநாயும் சாப்பிட்டு வெறும் எலும்புக்கூடா மாறியிருப்ப இந்நேரம்… கடவுள் உன் பக்கம் இருந்ததால பிழைச்சுக்கிட்ட… ஆனா இவ்ளோ பெரிய யூனிவர்ஸ்ல உன் ஒருத்திக்காக மட்டும் கடவுள் எப்பவும் கருணை காட்டிக்கிட்டே இருக்கமாட்டார் இதன்யா… இன்னொன்னும் கேட்டுக்க… விஷம் வச்சு உன்னைக்.
கொல்ல பாத்தது நான் இல்ல… உன்னைக் கொல்லணும்னு நினைச்சேன்னா..” என்றபடி பற்களைக் கடித்துக்கொண்டு அவளை நெருங்கியவன் இதன்யாவின் கழுத்தைத் தனது கைகளால் நெறிப்பது போல சைகை செய்தான்.
உடனே அவள் எழுந்து நிற்கவும் சிரித்தவன் “கழுத்தை முறிச்சு காட்டுல வீசிட்டுப் போயிட்டே இருப்பேன்… ஜாக்கிரதையா இருந்துக்க” என்று மிரட்டியபோதே அவனது மார்புக்கூட்டை இடித்தது துப்பாக்கி ஒன்று.

xr:d:DAF-I-2c3BQ:272,j:25194498787656117,t:24041303


இதன்யா தனது பாதுகாப்புக்குக்காக வாங்கி வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தான் அது.
ஏகலைவனின் மார்பில் அதை வைத்து அழுத்தியவள் “அவ்ளோ சீக்கிரம் இந்தத் தடவை உன்னால என் கிட்ட நெருங்க முடியாது ஏகலைவன்… என்னோட சர்வீஸ்ல உனக்கு அப்பனெல்லாம் பாத்துட்டு தான் இங்க வந்திருக்கேன்… யூ ஆர் ப்ளேயிங் மைண்ட் கேம் வித் அதர்ஸ்… என் கிட்ட அதை ட்ரை பண்ணலாம்னு யோசிக்கக்கூட செய்யாத… நீ என்ன என்னைக் கொல்லுறது? நான் நினைச்சா இதுல இருக்குற புல்லட் எல்லாத்தையும் உன் ஹார்ட்ல இறக்கிட்டுத் தற்காப்புக்குத் தாக்குனேன்னு சொல்லிடலாம்… ஆனா நான் அதைச் செய்யமாட்டேன்… ஏன்னா நான் இங்க இருக்குறது உன்னைக் கொன்னு என் கைய இரத்தத்துல நனைக்குறதுக்காக இல்ல… இனியாவ கொன்ன ரியல் மர்டரர் யாருனு தெரிஞ்சிக்கிட்டு அவனை ஆதாரத்தோட சட்டத்துக்கு முன்னாடி நிறுத்துறதுக்கு… அதை செஞ்சதுக்கு அப்புறம் ஒருவேளை அந்த மர்டரர் நீயா இல்லாத பட்சத்துல நம்மளோட இந்த ஈகோ க்ளாசை வச்சுக்கலாம்… இப்ப இங்க இருந்து போயிடு… என் மைண்ட் மாறி உன்னைக் கொல்லணும்ங்கிற வெறி எனக்குள்ள வர்றதுக்குள்ள போனா உன் உயிருக்கு நல்லது” என்று கண்கள் பளபளக்க சொன்னாள்.
அவன் இதை எதிர்ப்பார்க்கவில்லை. மார்பில் அழுத்திக்கொண்டிருந்த துப்பாக்கி அவன் உதிரத்தைக் குடிக்க ஆவல் கொண்டிருப்பதை அறிந்தவன் இதன்யாவை விட்டு விலகி நின்றான்.
அவனது கண்களில் கோபத்திற்கு பதிலாக ஆச்சரியமும் ஆரோக்கியமான பாராட்டும் மட்டுமே நிறைந்திருந்தது! அவன் தான் அவளைக் கொலை செய்யப் பார்த்தவன்! இப்போது கூட அவளை எச்சரிக்கத் தானே அவன் இங்கே வந்திருக்கிறான்! ஆனால் அதை விட்டுவிட்டு இவளது விஸ்வரூபத்தில் மெய் மறந்து நிற்கிறான்.
ஒருவேளை இவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்குமோ? இந்தச் சந்தேகம் நம்மைப் போலவே ஏகலைவனின் மனசாட்சிக்கும் வந்துவிட்டது.
“நீ இங்க வந்தது உன் வழில குறுக்கிடக்கூடாதுனு இவளை வார்ன் பண்ணத் தான் ஏகலைவா… இப்ப நீ என்ன பண்ணிட்டிருக்க?”
ஏகலைவனின் இதழ்களில் முறுவல் முகிழ்த்தது. பயத்தில் பைத்தியம் பிடித்துவிட்டதா இவனுக்கு என இதன்யா எண்ணும்போதே “தேவா” என்றான் அவன் குறுஞ்சிரிப்போடு.
அவன் சொன்ன அடுத்த நொடியில் இதன்யாவின் தலைக்குள் ஆயிரம் மின்னல்கள் வெட்டின! தேவா! தேவா என்றால் தேவசேனாவின் சுருக்கம்! இப்போது அவளது பெயரை இவன் குறிப்பிடுவதற்கான அவசியம் என்ன?
இதன்யா யோசிக்கும்போதே “உன் முயற்சி தோல்வில முடியும்… அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்” என்று வலுக்கட்டாயமாக அவளது கையைப் பற்றி புன்னகையோடு வாழ்த்திவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ஏகலைவன்