IIN 66

பெ yyன்சோடயாஸ்பைன்ஸ் மற்றும் பீட்டா ப்ளாகர்கள் கடுமையான ஆன்சைட்டியைக் குறுகிய காலத்திற்கு கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நோயாளிகள் நீண்டகாலத்திற்கு பென்சோடயாஸ்பைன்ஸ் எடுத்துக்கொண்டால் அதற்கு அடிமையாகிவிடும் வாய்ப்பும் அதிகம். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கவே மனநல மருத்துவர்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே பென்சோடயாஸ்பைன்களைப் பரிந்துரை செய்கிறார்கள். கூடவே டோசேஜ் அளவையும் ஆன்சைட்டி பிரச்சனை குறையும்போது படிப்படியாகக் குறைத்துவிடுவார்கள். பீட்டா ப்ளாக்கர்களை ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் கொடுப்பதில்லை. ஏனென்றால் அவை அந்நோய்களை இன்னும் தீவிரப்படுத்திவிடும். பஸ்பிரோன் என்பது மற்றொரு வகை ஆன்டி – ஆன்சைட்டியைக் குணப்படுத்தும் மருந்து வகை. இது நீண்டகாலத்துக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்து ஆகும். இது மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு தினசரி எடுத்துக்கொள்ளப்படும். அப்போது தான் அதன் வீரியம் ஆன்சைட்டியைக் குணப்படுத்தும்.

                       -From the website of National Institute of Mental Health

இதன்யா வங்கி மேலாளரின் அறையில் அமர்ந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“எங்க பேங்க் ஹெட் ஆபிஸ்ல இருந்து சைபர் க்ரைம்ல கம்ப்ளைண்ட் பண்ணிருந்தோம் மேடம்… அவங்க ஹாக்கரோட லொகேசனை ட்ரேஷ் பண்ணிட்டாங்க… இன்னைக்கு நைட்டுக்குள்ள அந்த க்ரூப்பை தேடி கண்டுபிடிச்சிடுவோம்னு சைபர் க்ரைம்ல இருந்து தகவல் வந்திருக்கு மேடம்”

“இந்த மாதிரி இதுக்கு முன்னாடி நடந்திருக்கா சார்?”

“என்னோட சர்வீஸ்ல இப்ப தான் இந்த மாதிரி நடந்திருக்கு மேடம்… சம்பந்தப்பட்டவங்க போலீஸ் டிப்பார்ட்மெண்ட் ஆபிசர்ங்கிறதால இவ்ளோ வேகமா வேலை நடக்குது”

இதன்யா மறுப்பாகப் புன்னகைத்தாள்.

xr:d:DAF-I-2c3BQ:257,j:4335139141909419634,t:24041104

“இந்த வேகமான விசாரணைக்குக் காரணம் நான் இல்ல மேனேஜர் சார்… இந்த கேஸ்ல கார்பரேட் கம்பெனிஸோட நேமும் சேர்ந்து ஸ்பாயில் ஆகுதுல்ல… அவங்க ப்ரஷர் குடுத்திருப்பாங்க… என் பங்குக்கு நானும் அபிசர்ஸ் கிட்ட பேசுனேன்… அவங்க கிட்ட இருந்து ஹாக்கர்ஸை அரெஸ்ட் பண்ணிட்டாங்கங்கிற நியூஸ் வர்றதுக்குத் தான் நான் வெயிட் பண்ணுறேன்”

“எங்களுக்கும் இந்த பிரச்சனையால சிரமம் தான் மேடம்… எங்க பேங்க் மேல மக்களுக்கு இருந்த நம்பிக்கைய சிதைஞ்சிருக்கு… அந்த நம்பிக்கைய மறுபடி ரீ-பில்ட் பண்ணுறதுக்கு எங்களுக்கு ரொம்ப காலம் ஆகும்”

சைபர் க்ரைம் ஹாக்கரை அல்லது ஹாக்கர் குழுவைக் கைது செய்தால் செய்தி வரும். மேலாளரிடம் பேசிவிட்டுக் கிளம்பினாள் இதன்யா.

அவள் கேப் ஒன்றை புக் செய்தபோதே முரளிதரனிடமிருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்றவள் “சொல்லுங்க முரளி சார்” என்றாள்.

“நீங்க சொன்ன புரொபசர் தேவநாதனோட வீட்டை ஒன் வீக்கா கான்ஸ்டபிள் ஒருத்தரை வச்சு வாட்ச் பண்ணுனதுல சந்தேகப்படுற மாதிரி சில இன்சிடெண்ட்ஸ் நடந்திருக்கு மேடம்”

“சந்தேகப்படுற மாதிரியா? என்ன நடந்துச்சு சார்?”

“நம்ம மீட் பண்ணுனா சரியா இருக்கும் மேடம்… மொபைல் கான்வர்சேசன்ல என்னால எதையும் சரியா சொல்ல முடியாதுனு தோணுது”

xr:d:DAF-I-2c3BQ:258,j:4918355293266420282,t:24041104

“ஷ்யூர் சார்… நான் இப்ப தான் பேங்க்ல இருந்து கிளம்பப்போறேன்… நீங்க எங்க வீட்டுக்கு வந்துடுங்க… அங்க நம்ம தெளிவா பேசிக்கலாம் சார்”

முரளிதரனின் அழைப்பைத் துண்டித்தவள் கேப் வந்ததும் அதிலேறி அமர்ந்தாள்.

பயணநேரத்தில் மார்த்தாண்டனுக்கு அழைப்பு விடுத்து தான் சொன்ன வேலை எந்த நிலையில் இருக்கிறதென விசாரித்தாள் இதன்யா.

“இன்னைக்கு மானிங் ரெண்டு பேரை விசாரிச்சோம் மேடம்… உங்க சந்தேகத்தை உறுதிபடுத்துற மாதிரி தான் அவங்களோட ஸ்டேட்மெண்ட்ஸ் இருக்கு… மிச்சம் உள்ளவங்களையும் விசாரிச்சிட்டா வீ கேன் மேக் அவர் நெக்ஸ்ட் மூவ்”

“அவங்க ரெண்டு பேர் கிட்டவும் ஏதோ தப்பு இருக்கு மார்த்தாண்டன் சார்… அவங்க கண்ணுல நம்மளைப் பாக்குறப்ப ஒரு பயம் தெரியுது, அதுக்குக் காரணம் அவங்க செஞ்ச தவறுகள் குடுக்குற குற்றவுணர்ச்சி ஆர் தப்பிச்சிட்டோம்ங்கிற குருட்டு தைரியம், இந்த ரெண்டுல ஏதோ ஒன்னா இருக்கலாம்… அந்தக் குற்றவுணர்ச்சியும், குருட்டு தைரியமும் உடையுறப்ப உண்டாகுற பயம் தான் அவங்க கண்ணுல தெரியுது… ஒருத்தர் விடாம எல்லாரையும் விசாரிங்க”

“கண்டிப்பா… பை த வே, நீங்க போன வேலை என்னாச்சு மேடம்?”

“சைபர் க்ரைம் ஹாக்கரோட லொகேசனை ட்ரேஷ் பண்ணிட்டாங்க.. இன்னைக்கு நைட்டுக்குள்ள அவனை அந்த லொகேசன்ல தேடிக் கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணிடுவோம்னு சொல்லிருக்காங்க… எனி ஹவ், நான் பொன்மலைக்குத் திரும்பி வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் எக்ஸ்ட்ரா ஆகும்”

“ஏன் மேடம்? எதுவும் பிரச்சனையா?” என பதறிப்போனார் மார்த்தாண்டன்.

“ஈசி ஈசி மார்த்தாண்டன் சார்… எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல… என்னோட டிவோர்ஸ் கேசோட லாஸ்ட் ஹியரிங் நாளைக்கு இருக்கு… அதை முடிச்சிட்டு தான் பொன்மலைக்குக் கிளம்புறதா ப்ளான்” என்றாள் இதன்யா.

“ஓஹ்! சாரி மேடம்” மார்த்தாண்டனின் குரல் தணியவும்

“டிவோர்ஸ் வேண்டாம்னு நானும் ப்ராணேஷும் டிசைட் பண்ணிருக்கோம்” என்றாள் அவள்.

இப்போது மார்த்தாண்டனின் குரலில் மீண்டும் உற்சாகம்.

“ஃபீலிங் ஹேப்பி ஃபார் யூ மேடம்”

அவரிடம் பேசியபடியே வீடு வந்து சேர்ந்தாள் இதன்யா.

அங்கே அவளுக்காக முரளிதரன் காத்திருந்தார்.

“ஹவ் ஆர் யூ மேடம்? டிவோர்ஸ் டிசிசனை நீங்களும் ப்ராணேஷ் சாரும் மாத்திக்கிட்டிங்கனு அம்மா சொன்னாங்க… ரொம்ப சந்தோசம் மேடம்” என்றவரிடம் நன்றியாகப் புன்னகைத்தாள் இதன்யா.

அவருக்கு ஏற்கெனவே பழச்சாறு உபச்சாரம் நடந்திருந்தது. தனக்கும் ஒரு குவளையில் பழச்சாறு எடுத்துக்கொண்டு வந்தவள் முரளிதரனிடம் தேவநாதன் மற்றும் அவரது மகளின் நடத்தையில் என்ன வித்தியாசம் தெரிந்ததென கேட்க ஆரம்பித்தாள்.

“நிஷாந்தோட காதலி ஃபேமிலிங்கிற காரணத்துக்காக தான் நீங்க அவங்க வீட்டைக் கண்காணிக்கச் சொன்னிங்க… முதல் அஞ்சு நாள் அவங்க பிஹேவியர்ல எந்த சேஞ்சும் தெரியல… பட் ஆறாவது  நாள் நைட்ல அவங்க வீட்டுக்குப் புதுசா ஒரு ஆள் வந்தான்… அவன் வர்றப்பவே டென்சனா வந்தான்… கான்ஸ்டபிளோட ஸ்பை கேமரால ரெக்கார்ட் ஆன வீடியோவ நீங்களே பாருங்க”

மடிக்கணினியில் ஆறாவது நாள் இரவு நடந்த காட்சி காணொளியாக ஓட ஆரம்பித்தது.

வீட்டின் முன்னே ரெனால்ட் க்விட் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து சற்று பருமனான தேகம், கழுத்தில் தொங்கிய ஹெட்போன், ஒரு மடிக்கணினி அடங்கிய பேக்பேக்குடன் வேகமாக இறங்கினான் ஒரு இளைஞன். சுற்றும் முற்றும் பார்த்தவன் ஓட்டமும் நடையுமாக வீட்டின் காரிடோரைக் கடந்து போய் அழைப்புமணியை அடித்தான்.

கதவு திறந்ததும் உள்ளே போய்விட்டான். அவ்வளவு தான்! கடந்த ஐந்து நாட்களும் தெரிந்த பேராசிரியர் தேவநாதன் மற்றும் அவரது மகள் பிரகதியின் நடவடிக்கைகள் அவன் வந்த அடுத்த நாள் காலையிலிருந்து முற்றிலுமாக மாறிப்போனது.

அந்த வாலிபனைப் போலவே அவர்களும் பதற்றத்தோடே வெளியே கிளம்பினார்கள். யாரும் கவனிக்கிறார்களா என்ற சந்தேகத்துடன் சுற்றி முற்றி பார்த்தபடியே வீடு திரும்பினார்கள்.

அந்த வாலிபனோ அன்றிரவு வீட்டுக்குள் போனவன் வெளியே வரவேயில்லை என்றிருக்கிறார் தொடர்ந்து அந்த வீட்டை இரவு பகலாகக் கண்காணித்த கான்ஸ்டபிள்.

“ம்ம்ம்… சோ அவங்க மூனு பேர் கிட்டவும் ஏதோ தப்பு இருக்கு… ஒருவேளை நிஷாந்த் சம்பந்தப்பட்ட இரகசியம் எதையும் மறைக்கணும்னு அப்பாவும் மகளும் ட்ரை பண்ணுறாங்களோ?” என்று கேட்டாள் இதன்யா.

“வாய்ப்பு இருக்கு மேடம்… எதுவா இருந்தாலும் ரொம்ப நாள் அவங்களால மறைக்க முடியாது… ஒரு நாள் இல்லனா ஒருநாள் உண்மை வெளிய வரும்” என்றபடி மடிக்கணினியை மூடிவைத்தார் முரளிதரன்.

இதன்யா அவரிடம் பொன்மலையில் நடக்கும் புதிரான சம்பவங்களையும் தனது சந்தேகங்களையும் பகிர்ந்துகொண்டாள். ரசூல் பாயின் வீட்டுக்கு வந்த சாப்பாட்டில் விஷம் வைத்தது கட்டாயம் ஏகலைவனாக இருக்க வாய்ப்பில்லை என்றார் முரளிதரன்.

“ஏகலைவன் மேல யாருக்கோ கடுமையான கோவம் இருக்கு… அவர் உங்களுக்கு எதிரா செஞ்ச எல்லா காரியத்தையும் தெரிஞ்ச யாரோ ஒருத்தர் உங்க கிட்ட அவரை மாட்டிவிடறதுக்காக செஞ்ச வேலை தான் சாப்பாட்டுல விஷம் வச்சது”

எப்போதும் முரளிதரன் யோசிக்கும் கோணம் வித்தியாசமாக இருக்கும் என்பதால் இதன்யா அவரது கருத்தையும் தனது மனதில் போட்டுவைத்துக்கொண்டாள்.

அந்த நாள் இரவு இதன்யாவுக்கு சைபர் க்ரைம் அதிகாரிகளிடமிருந்து செய்தி வந்தது வங்கியின் சர்வரை முடக்கிய ஹாக்கர் கிடைத்துவிட்டான் என்று.

உடனே சைபர் க்ரைம் அலுவலகம் வரும்படி கூறினார் அந்த அதிகாரி.

இதன்யாவும் கிளம்ப மயூரி தான் இரவில் போயே ஆகவேண்டுமா என்று கவலைப்பட்டார்.

“ஐ ஷூட் ஹேவ் டூ கோ… என் நேர்மை மேல கறை படிய வச்சவன் யாருனு எனக்குத் தெரியணும்” என்று சொன்னவள் தந்தையின் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

சென்னை மாநகர போக்குவரத்தானது பீக் ஹவரை கடந்திருந்ததால் சாலைகளில் வாகனக்கூட்டங்கள் குறைவாக இருந்தன. எனவே இதன்யா நினைத்ததை விட விரைவாகவே சைபர் க்ரைம் அலுவலகத்துக்கு வந்துவிட்டாள்.

அங்கே வந்ததும் “யார் அந்த ஹாக்கர்? நான் அவனைப் பாக்கணும்” என்று இறுகிய முகத்தோடு கேட்டவளின் முன்னே அந்த பருமனான இளைஞன் வந்து நின்றான்.

கணினி தொழில்நுட்பத்தைக் கரைத்துக் குடித்து கணினியின் முன்னே தவமிருப்பவன் என்பதை அவனது உருண்டை முகத்தில் இருந்த கருவளையங்கள் கூறின.

xr:d:DAF-I-2c3BQ:260,j:4377923337322098950,t:24041104

“சோ யூ ஆர் த ஒன் ஹூ இஸ் மெஸ்சிங் வித் மை ஹெட் ஃபார் த பாஸ்ட் ஃபியூ டேய்ஸ்?”

கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு நாசி விடைக்க முகம் சிவக்க கேட்டாள் இதன்யா அவனிடம்.

அவனோ திருதிருவென விழித்தான்.

“நீ மட்டும் தானா? இல்ல இதுக்குப் பின்னாடி ஒரு குரூப்பே இருக்குதா?” இதன்யா சூடாய் அவனிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.

அப்போது பின்னணியின் ஒரு குரல் கேட்டது.

“நான் அவனோட வெல்விஷர் சார்… என்ன காரணம்னு சொல்லாம நீங்க எப்பிடி ஸ்ரீயை அரெஸ்ட் பண்ணலாம்?” என்று காவல்துறை அதிகாரிகளிடம் வாதிட்டுக்கொண்டிருந்தவர் சாட்சாத் தேவநாதன்.

அவரை அங்கே பார்த்ததும் இதன்யாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய அவற்றை இன்னும் விரிய வைக்கும் நோக்கத்தோடு அவரருகே நின்று காவல்துறை அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தாள் அவரது புதல்வியும் நிஷாந்தின் காதலியுமான பிரகதி.

“நான் லாயருக்குக் கால் பண்ணிருக்கேன்… இன்னும் கொஞ்சநேரத்துல அவர் வந்துடுவார்… ஸ்ரீக்கு இண்டலிஜென்ஸ் பீரோல சைபர் செக்யூரிட்டி டிப்பார்ட்மென்ட்ல ஜாப் கிடைச்சிருக்கு… இன்னும் பத்து நாள்ல அவன் ஜாயிண் பண்ணணும்… இந்த சிச்சுவேசன்ல நீங்க அவனை அரெஸ்ட் பண்ணுனா அவன் ஃபியூச்சரே ஸ்பாயில் ஆகிடும் சார்” என்று அந்த ஸ்ரீக்காக பரிந்து பேசினாள் அவள்.

சைபர் க்ரைம் காவல் அதிகாரியோ அவளை அமைதியாக இருக்கும்படி அதட்டினார்.

“இவன் என்ன காரியம் பண்ணிருக்கான்னு தெரிஞ்சும் எப்பிடி சப்போர்ட் பண்ணி பேச மனசு வருது உங்களுக்கு? ஹீ வாஸ் ஹாக்கிங் எ நேஷனலைட் பேங்க்ஸ் சர்வர்… அது மட்டுமில்ல ஃபண்ட் ட்ரான்சக்சன்ல வேணும்னு முறைகேடு பண்ணி ஒரு நேர்மையான ஆபிசரையும், சரியான முறைல ரன் ஆகுற கார்பரேட் கம்பெனிசையும் சட்டத்துக்கு முன்னாடி தப்பானவங்களா நிக்க வச்சிருக்கான்… அந்த போலீஸ் ஆபிசர் கிட்ட, கார்பரேட் கம்பெனிஸ் கிட்ட பேச முடியுமா உங்களால?”

பிரகதி கப்சிப்பாகிவிட அவர்கள் முன்னே போய் நின்றாள் இதன்யா. பிரகதிக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. ஆனால் தேவநாதனுக்குத் தெரியுமே! இதன்யாவைக் கண்டதும் மனிதர் பம்மினார்.

“என்னை ஞாபகம் இருக்குதா தேவநாதன் சார்?” என்று ஏளனத்தோடு கேட்டாள் அவள்.

“டாடி யார் இவங்க?” என்று பிரகதி கேட்க தேவநாதனின் வதனமோ பேயறைந்தாற்போல மாறியது.

“டாடி” என்று அவள் உலுக்கியெடுக்கவும் மனிதர் இயல்புக்குத் திரும்பினார்.

“என்னாச்சு டாடி? ஏன் இந்த லேடிய பாத்ததும் ஷாக் ஆகிட்டிங்க?”

“ஏன்னா நான் தான் உன் லவ்வர் பாய் நிஷாந்த் – இனியா ரேப் கேசை விசாரிச்ச ஆபிசர்” என்றாள் இதன்யா மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு.

இப்போது பிரகதியின் முகமும் அரண்டு போனது.

“நிஷாந்த்… லவ்…”

இதன்யா அலட்சியமாக உச்சு கொட்டியவள் அவளை ஒதுக்கிவிட்டுச் சைபர் க்ரைம் அதிகாரியிடம் பேச ஆரம்பித்தாள்.

“இவன் கிட்ட எப்ப ஸ்டேட்மெண்ட் வாங்குவிங்க சார்? அதை வச்சு தான் என்னோட சஸ்பென்சனை கேன்சல் பண்ணிட்டு நான் ஜாப்ல மறுபடியும் ஜாயின் பண்ணிக்க முடியும்… அதோட இன்னொரு ஹெல்பும் நீங்க எனக்காக செய்யணும் சார்”

“என்ன மேடம்?”

“இவன் யாருக்காக இந்த வேலைய பாத்தானோ அந்த நபரை எந்தக் காரணத்துக்காகவும் தப்பிக்க விட்டுடாதிங்க… அந்த நபரால என் இத்தனை வருச சர்வீஸ்ல கறை படிஞ்சதை என்னால மறக்கவே முடியாது”

“நாங்க ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு உங்களை கூப்பிடுறோம் மேடம்… எந்த லாயர் வந்தாலும் இவனை ஜாமீன்ல அனுப்புறதா இல்ல”

அதிகாரி உறுதி கொடுத்ததும் கிளம்பினாள் இதன்யா. கிளம்பும் முன்னர் தேவநாதனையும் பிரகதியையும் கோபம் தெறிக்கப் பார்க்க மறக்கவில்லை அவள்.

இரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்த நிஷாந்துடனான தனது காதல் விவகாரத்தை இந்தப் பெண் காவல்துறை அதிகாரி எப்படி கண்டுகொண்டாள் என்ற அதிர்ச்சியோடு நின்ற பிரகதிக்கு ஸ்ரீயைக் காப்பாற்றுவதை விட நிஷாந்தை இதன்யாவிடம் காக்கவேண்டுமென்ற எண்ணமே அப்போது மேலோங்கியது.