IIN 61

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மனரீதியான பிரச்சனைகளைக் குணமாக்குவதில் மருந்துகளின் பங்கு முக்கியமானது. சைக்கோதெரபி மற்றும் மூளைத்தூண்டுதல் தெரபியோடு சேர்த்து மருந்துகளும் சைக்கோபதிக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் நோயாளிகளிடம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதோடு எந்த மருந்து அவர்களுக்கு ஏற்றது என உடலில் செலுத்தி அதன் விளைவைப் பரிசோதித்த பின்னர் தான் அந்த மருந்து அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே மனரீதியான பிரச்சனைகளுக்குத் தன்னிச்சையாக மருந்து எடுத்துக்கொள்வது தவறு. அதற்கென உள்ள மருத்துவ நிபுணர் அல்லது மனவியல் நிபுணரிடம் சென்று பரிசோதித்து, சம்பந்தப்பட்ட நோயாளியின் பிரச்சனைக்கு ஏற்ப அவர் தயார் செய்யும் சிகிச்சை முறைகளுக்கு இடையே அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதே சிறந்தது. தன்னிச்சையாக மருந்துகளை எடுத்துக்கொள்வது பிரச்சனையை இன்னும் தீவிரப்படுத்துமே தவிர குணமாக்காது.

                       -From the website of National Institute of Mental Health

கலிங்கராஜனின் கரத்தை டீசர்ட்டிலிருந்து உதறினான் நிஷாந்த். அவனது கண்களில் அதிர்ச்சியும் பயமும் விடைபெற்று அலட்சியம் குடிகொண்டிருந்தது. டீசர்ட்டில் இல்லாத தூசியைத் தட்டிக்கொண்டவன்

“மேல கை வைக்குற வேலை எல்லாம் வச்சுக்காதிங்க… இனியாவோட அப்பானு உங்க மேல மரியாதை இருக்கு… அதை கெடுத்துக்காதிங்க” என கலிங்கராஜனை எச்சரித்தான்.

அவனது எச்சரிக்கை கலிங்கராஜனின் கோபத்தை இன்னும் அதிகரித்தது.

xr:d:DAF-I-2c3BQ:234,j:323557057511488707,t:24040405

“என் மக பேரைச் சொல்லக் கூட உனக்கு அருகதை கிடையாது… அவளைக் காதல்ங்கிற பேர்ல நாசம் பண்ணுனவன் நீ… இப்ப இன்னொரு பொண்ணு கூட சிரிச்சுப் பேசிக்கிட்டு நிக்குற… இது தான் உன் காதலோட லெச்சணமா? நீ மட்டும் அன்னைக்கு அவளைக் காட்டுக்குக் கூட்டிட்டுப் போகலனா இந்நேரம் என் பொண்ணு உயிரோட இருந்திருப்பாடா” என்றார் கொதிப்போடு.

உடனே நிஷாந்த் சத்தமாகச் சிரித்தான்.

“யோவ்!” என்று அவன் கைநீட்டவும் கலிங்கராஜன் அதிர மீண்டும் உரக்கச் சிரித்தான் அவன்.

வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்து முடித்தவன் “யோவ் என்னய்யா புதுசா மக மேல பாசம் பொங்குது உனக்கு? இவ்ளோ பேசுற நீ என்னைக்காச்சும் ஒரு நாள் அவ கிட்ட அன்பா பேசிருப்பியா? உன் அன்புக்காக அவ பைத்தியமா அலைஞ்சாளே, அப்ப உன்னோட இந்த துடிப்பு கோவம் எல்லாம் கோமா வந்து ஐ.சி.யூல கிடந்துச்சா? முருகன் கோவிலுக்கு வேலை செஞ்சா அப்பாவோட அன்பு கிடைச்சிடும்னு நினைச்சா அவ… அன்னைக்கு அவ முருகன் கோவிலுக்குப் போகாம வீட்டுல இருந்திருந்தா உயிரோட இருந்திருப்பா… எப்பிடி பாத்தாலும் அவ செத்ததுக்கு நீயும் காரணம்” என்று கலிங்கராஜனைக் குற்றம் சாட்டியவன் நிஷ்டூரமாகச் சிரித்தான் மீண்டும்.

கலிங்கராஜனுக்கு அவன் தன்னைச் செருப்பால் அடித்திருந்தால் கூட வலித்திருக்காதோ என்னவோ, மகள் மீது அன்பு காட்டாமல் ஒதுக்கி வைத்ததைக் குத்திக் காட்டி பேசியதும் அவமானத்தில் குன்றிப்போனார்.                                                                                        “”இங்க பாரு… இனியா இறந்தது எனக்கும் வருத்தம் தான்… உனக்கு அவ மக, எனக்கு அவ தான் எல்லாவுமா இருந்தா… அவளை இழந்து நானும் தான்யா கஷ்டப்படுறேன்… அதுக்காக துக்கம் அனுஷ்டிச்சுக்கிட்டே இருக்கணுமா? அந்தப் பொண்ணு தேவா சாரோட மக… கோவிலுக்காக நான் அவரைப் பாக்க போறப்பலாம் அவங்க வீட்டுல தங்கிருக்கேன்… அந்தப் பழக்கத்துக்காக என் கிட்ட வந்து பேசிட்டிருந்தா… அதை நீ தப்பான கண்ணோட்டத்துல தான் பாப்பியா? உன் சந்தேகப்புத்தி தான்யா இனியாவையும் கிளாராம்மாவையும் உன்னை விட்டு விலக்கி வச்சிடுச்சு… உன் மகளைக்  காதலிச்ச நான் இன்னொரு பொண்ணு கூட பேசுனதை நீ தப்பா நினைச்சல்ல… உனக்கு இனியா அம்மா மேல ரொம்ப அன்பு உண்டுனு அவ சொல்லிருக்கா… அவங்க இறந்ததால தான் நீ அவளை வெறுக்க ஆரம்பிச்சியாமே… முதல் மனைவி மேல அவ்ளோ அன்புள்ள நீ கிளாராம்மாவ ரெண்டாவது கல்யாணம் பண்ணி அவங்க மூலமா மூனு புள்ளைங்களை பெத்துக்கவும் செஞ்ச… அப்ப உன் முதல் மனைவி மேல உனக்கு அன்பு இல்லனு அர்த்தமா? நீ செஞ்சா மட்டும் அது சரி… நான் ஜஸ்ட் அந்தப் பொண்ணு கூட பேசுனது உனக்குத் துரோகமா தெரியுதா?”

கொதிப்போடு பேசினான் நிஷாந்த். கலிங்கராஜன் அவனை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றார். அவரது கண்கள் கண்ணீர்க்குளங்களாயின.

நிஷாந்த் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு அங்கிருந்து விறுவிறுவென நடந்து போய்விட்டான்.

அவனுக்காக கோவில் படிக்கட்டு அருகே காத்திருந்தாள் பிரகதி. யாரிடமோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள் அவள்.

“இல்ல ஸ்ரீ, இங்க பிரச்சனை ஒன்னுமில்ல.. நிஷாந்த் இருக்குறப்ப எனக்கு என்ன கவலை? டாடி கிட்ட நீயே பேசிடு… அவர் உனக்காக ரெகமண்ட் பண்ணுவார்… நிஷாந்தா? அவனுக்கு அவங்க மாமா கிட்ட உதவி கேக்குறதுக்கு தயக்கம்டா… அப்பா கிட்ட சொல்லு.. அவர் உனக்காக பேசுவார்” என்று யாரோ ஒரு ஸ்ரீயிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

நிஷாந்த் வந்ததும் அழைப்பைத் துண்டிக்காமல் பேசியதிலிருந்தே அந்த ஸ்ரீ என்பவன் நிஷாந்துக்கும் தெரிந்தவன் என்பது புரிந்தது.

xr:d:DAF-I-2c3BQ:235,j:3946702954279003051,t:24040405

“ஸ்ரீக்கு என்னவாம்?” என்று கண்களில் கவனம் கூட பிரகதியிடம் கேட்டான் அவன்.

“உங்க மாமா கிட்ட சொல்லி அவனுக்கு பெர்மனண்டா வேலை வாங்கித் தரணுமாம்… என்ன ஹெல்ப் பண்ணுவியா?” என்று பிரகதி கேட்க

“தட்ஸ் நாட் பாசிபிள் பேபி… மாமா கிட்ட ஹெல்ப் கேக்க எனக்குப் பிடிக்காதுனு உனக்குத் தெரியுமே” என்றான் அவன்.

“அதை தான் நானும் சொன்னேன்… டாடி மூலமா ஏகலைவன் அங்கிள் கிட்ட பேசச் சொல்லுறேன்னு ப்ராமிஸ் பண்ணுனேன்” என்றாள் அவள்.

நிஷாந்த் உடனே எதையோ யோசிப்பது போல காட்டிக்கொண்டவன் “ஏன் பேபி ஸ்ரீக்கு உங்கப்பா எந்த ஹெல்ப் வேணும்னாலும் பண்ணுவாரா?” என்று கேட்க

“ஆமா நிஷாந்த்… அவருக்கு ரொம்ப பிடிச்ச ஸ்டூடண்ட் அவன்… திறமைச்சாலியும் கூட”

“இப்பிடி ஆள் மாத்தி ஆள் தூது விடுறதுக்குப் பதிலா அவனே எங்க மாமா கிட்ட ஓப்பனா வேலை கேக்கலாம்” என்றான் நிஷாந்த்.

“ஏகலைவன் சார் கிட்ட பேசவே அவனுக்குப் பயம்”

“அவருக்கு அவன் ஏதோ ஹெல்ப் பண்ணுனான்னு சொன்னியே? அப்புறம் என்ன பயமாம்?”

“அதுல்லாம் ஒரு வருசத்துக்கு முன்னாடி… அதை ஏகலைவன் அங்கிள் ஞாபகம் வச்சிருக்கணுமே?”

நிஷாந்த் யோசனையோடு “ரீசண்டா அவர் ஸ்ரீ கிட்ட எந்த ஹெல்பும் கேக்கலையா?” என்று கேட்க

“ப்ச்… ஹூ நோஸ்?” என்று அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள் பிரகதி.

அதே நேரம் நிஷாந்தைக் கலிங்கராஜன் கோபத்தோடு அழைத்துச் சென்றதை இதன்யாவும் அவளோடு நின்று கொண்டிருந்த மார்த்தாண்டன் மகேந்திரனும் பார்த்துவிட்டார்கள்.

அவர் சுருங்கிப்போன முகத்தோடு வருவதைப் பார்த்துவிட்டு மூவரும் தங்களுக்குள் கண்களால் பேசிக்கொண்டார்கள்.

“பிரகதி கூட நிஷாந்தைப் பாத்ததும் கலிங்கராஜனோட ஃபேஸ் மாறுனதை கவனிச்சிங்களா சார்?” என்று இதன்யா கேட்கவும் மார்த்தாண்டன் ஆமென்றார்.

“இதை வச்சே இவர் மனசுல இனியா மரணத்துல சந்தேகம் இருக்குறதா பதியவச்சிடலாம்… ஏதாச்சும் செஞ்சு இந்த கேஸை ரீ-ஓப்பன் பண்ணியே ஆகணும் மேடம்” என்றார் மகேந்திரன்.

அன்றைக்குத் திருவிழாவைப் பார்த்துவிட்டு ரசூல் பாய் வீட்டுக்குத் திரும்பிய இதன்யா அடுத்தடுத்த நாட்களிலும் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக்கியிருந்தாள்.

இந்த திருவிழாவெல்லாம் அவள் இதுவரை பார்த்ததேயில்லை என்பது ஒரு காரணம் என்றால் சந்தேகத்துக்குரிய நபர்களைக் கண்காணிக்கும் வாய்ப்பு என்பது மற்றொரு காரணம்.

இந்நிலையில் ஏகலைவனின் கட்டளையன்று வழக்கம் போல ரசூல் பாயின் வீட்டுக்குச் சாப்பாடு வந்தது. அந்நேரத்தில் இதன்யாவும் முபீனாவும் வீடு திரும்பவில்லை.

ரசூல் பாய்க்கு மதுரையில் அவசர வேலை வந்துவிட அஸ்மத் அவருக்கு மட்டும் சாப்பாடு எடுத்து வைத்தார்.

அவரும் சாப்பிட்டுவிட்டுத் தனது காரில் கிளம்பினார். ஊர் எல்லையைத் தாண்டும் முன்னர் ரசூல் பாயின் கார் கட்டுப்பாடின்றி அங்குமிங்கும் சாலையில் ஓடி மலைப்பாதை ஆரம்பிக்கும் முன்னரே பெரிய மரமொன்றில் இடித்து நின்றது.

இக்காட்சியை போலீஸ் குவாட்டர்சிலிருந்த சிலர் பார்த்துவிட்டு ஓடிவந்தனர்.

அடுத்தச் சில நிமிடங்களில் பொன்மலை அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டார்.

விசயமறிந்து துடிதுடித்து மருத்துவமனைக்குக் கண்ணீரும் கம்பலையுமாக ஓடிவந்தார் அஸ்மத்.

ரசூல் பாய்க்கு முதலுதவியோடு சிகிச்சையும் ஆரம்பித்தது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பெரியளவில் காயமில்லை என்றாலும் அவருக்கு மூச்சுத்திணறல் வந்ததற்கான காரணத்தைப் பரிசோதித்து கண்டறிந்தார்கள்.

அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது என செவிலி ஒருவர் வந்து கூறவும் அஸ்மத் கதறியழத் தொடங்கினார். சற்று முன்னர் கோவிலில் இருந்து கொடுத்துவிடப்பட்ட அன்னதானச் சாப்பாட்டைத் தான் கணவர் சாப்பிட்டார் என்று அழுதபடி அவர் கூறவும் போலீஸ் குவார்ட்டர்சிலிருந்து ரசூல் பாயை மருத்துவமனையில் அனுமதித்த நபர் இத்தகவலை ஊரார் அனைவருக்கும் தெரிவித்து யாரும் அன்னதானம் சாப்பிடவேண்டாம் என எச்சரிப்பதற்காக ஓடினார்.

ரசூல் பாய்க்குச் சிகிச்சை ஆரம்பித்தது. ஊர்த்திருவிழா அன்னதான சாப்பாட்டில் விஷம் என்ற தகவல் பொன்மலை எங்கும் பரவியது. திருவிழா கொண்டாட்ட சூழல் கொஞ்சம் கொஞ்சமாக கலவர சூழலாக மாறியது.

இந்நிலையில் திருநெல்வேலியிலிருந்து முபீனாவை அழைத்து வந்த இதன்யா ஊரின் சூழலே மாறி அனைவரும் பரபரப்போடு நடமாடுவதைக் கண்டு குழம்பினாள்.

அந்நேரத்தில் மீனா பதற்றமாக அங்கே வரவும் என்ன பிரச்சனை என விசாரித்தாள் அவள்.

“ரசூல் பாய்க்கு ஆக்சிடென்ட் ஆகி அவரை ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்கம்மா”

“ஆக்சிடெண்டா?” இதன்யா அதிர முபீனாவோ “வாப்பா” என கதறத் துவங்கிவிட்டாள்.

“அழாதம்மா… பாய்க்கு முதலுதவி பண்ணியாச்சு… இன்னைக்கு மதியம் கோவில் சாப்பாடு வீட்டுக்கு வந்திருக்கு… அதை  சாப்பிட்டவருக்கு சாப்பாட்டுல இருந்த விஷத்தால மூச்சுத்திணறல் வந்து மயக்கத்துல காரை கொண்டு போய் மரத்துல மோதிருக்காரு… அன்னதான சாப்பாட்டுல விஷம் இருக்குனு ஊர் முழுக்க தகவல் பரவிடுச்சு இதன்யாம்மா… இப்ப சாப்பிட்டவங்க எல்லாரும் என்னாகுமோ ஏதாகுமோனு பயத்துல இருக்காங்க” என மீனா விளக்கம் கொடுக்க அவரோடு சேர்ந்து மருத்துவமனைக்கு முபீனாவோடு விரைந்தாள் இதன்யா.

அங்கே மகேந்திரன் நின்று கொண்டிருந்தார்.

இதன்யாவைக் கண்டதும் “மேடம் ரசூல் பாய் சாப்பிட்ட சாப்பாட்டுல மட்டும் தான் விஷம் இருந்திருக்கு… கோவில் சாப்பாட்டுல விஷம் இல்ல… அங்க சாப்பிட்ட எல்லாரும் நல்லா இருக்காங்க” என்றார்.

இதன்யா அவரிடம் பேச, அஸ்மத் விம்மியழுதுகொண்டிருக்கவும் முபீனா அவரிடம் ஓடினாள்.

“அழாதம்மா… வாப்பாக்கு ஒன்னும் ஆகாது” ஆறுதல் சொன்னாலும் ஒரு கட்டத்தில் அவளும் உடைந்து அன்னையின் மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

xr:d:DAF-I-2c3BQ:236,j:7185916988361520162,t:24040405

மகேந்திரனிடம் பேசிக்கொண்டிருந்த இதன்யாவின் மூளையோ ஏகலைவனின் கட்டளையன்று இப்படி நடந்திருக்கிறது. அதுவும் இதன்யாவுக்கு உதவி செய்த ரசூல் பாயின் உயிருக்கே ஆபத்து என்றால் கட்டாயம் இதில் ஏகலைவனின் பங்கு இருக்கும் என யோசித்தது.

இனியாவின் வழக்கு முடிந்த  பிறகும் அவனுக்குத் தான் பொன்மலையில் இருப்பதில் விருப்பமில்லை என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது.

ஏன் தனது இருப்பு அவனை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது என்றால் தன்னைப் பழிவாங்குவதை விட வேறேதோ பெரிய நோக்கம் அவனுக்கு இருக்கிறது என்று தானே அர்த்தம்?

தனக்கு உதவிய பாவத்திற்காக இன்று ரசூல் பாயின் குடும்பமே கண்ணீரில் கரந்து கொண்டிருப்பது இதன்யாவின் மனதை உறுத்தியது.

முபீனாவை மீனாவோடு வீட்டுக்குச் செல்லும்படி பணித்தாள் அவள்.

“இல்லக்கா, வாப்பா கண் முழிச்சதும் தான் நான் போவேன்” என்று அடம்பிடித்தாள் முபீனா.

“பயப்பட எதுவுமில்லனு மகேந்திரன் சார் சொன்னாங்க… பாய்சன் முழுசா அவரோட உடம்பு முழுக்க பரவுறதுக்கு முன்னாடி இங்க கொண்டு வந்துட்டாங்களாம்… நான் உன் பேரண்ட்சை பாத்துக்குறேன்… மீனாக்கா நீங்க இவளை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க” என்று அவளைச் சமாளித்து மீனாவோடு அனுப்பிவைத்தாள் இதன்யா.

தனியே அமர்ந்து கண்ணீர் விட்ட அஸ்மத்தின் தோளை அணைத்து ஆறுதல் சொன்னவளின் மனம் குற்றவுணர்ச்சியில் குன்றிப்போனது.

xr:d:DAF-I-2c3BQ:237,j:1542906654460205145,t:24040405

கூடவே இதற்கு காரணமானவன் என அவள் சந்தேகிக்கும் ஏகலைவன் மீது விரோதமும் பெருகியது அவளுக்கு.

மகேந்திரனை அழைத்தவள் “நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடுறேன்… அதுவரை இவங்களைப் பாத்துக்கோங்க சார்… ஃபிப்டீன் மினிட்ஸ்ல நான் வந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினாள் இதன்யா. அவள் போய் நின்ற இடம் ஏகலைவனின் பங்களா. முபீனா, அஸ்மத்தின் கண்ணீர்க்கோலம் மனக்கண்ணில் தோன்ற எரிமலையாய் தகித்த கோபத்தோடு அந்தப் பங்களா தோட்டத்துக்குள் அடியெடுத்து வைத்தாள் இதன்யா.