💞FINAL💞

லைப் இஸ் ஃபுல் ஆப் சர்ப்ரைசஸ் அண்ட் மிராக்கிள்ஸ்என் வாழ்க்கைல எனக்குக் கிடைச்ச பெரிய சர்ப்ரைஸ் என்னோட ஷானுஎனக்கு நடந்த பெரிய மிராக்கிள் அவ என்னைக் காதலிச்சது தான்அவளோட காதல் எனக்குக் கிடைச்ச ரொம்ப பெரிய கிப்ட்சப்போஸ் அவ வராம இருந்திருந்தா என் வாழ்க்கை சுவாரசியமே இல்லாம போயிருக்கும்எனக்கு ஷானுவ குடுத்ததுக்கு தேங்க் காட்!”

                                                                –சித்தார்த்

ஐந்து வருடங்களுக்குப் பிறகு

பிப்ரவரி பதினான்கு… உலக காதலர் தினம். மொத்த அமெரிக்காவும் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க ரிவர் ஓக்சில் இருந்த கிறிஸ்டல் கபே காதலர் தினக் கொண்டாட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தொங்கவிடப்பட்டிருந்த பலூன்களில் ஆரம்பித்து அன்றைய மாலை நேரத்துக்குத் தயாரிக்கப்பட்ட டெசர்ட்டுகள் வரை எங்கு நோக்கினும் இதயமே ஆக்கிரமித்திருந்தது.

கபேயின் நடுவே பெரிய இதயவடிவ பஞ்சினாலான பொம்மை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மேஜைகள் மீது மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தன. அவையும் இதயவடிவில் இருந்தன.

இப்போது கபேயில் வாடிக்கையாளர்கள் யாருமில்லை. பின்னே யாருக்காக இந்த அலங்காரம் என்று கேட்கிறீர்களா? அதற்கான பதிலை கபேயின் உரிமையாளர்களான கிளாராவும் கென்னடியும் சொல்வார்கள்.

கிளாரா கென்னடியிடம் “காபுசினோ வேண்டாம் கென்… அமெரிக்கனோ தான் இந்த சிச்சுவேசனுக்குப் பெஸ்டா இருக்கும்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் அருகே மெழுகு பொம்மை போல அமர்ந்திருந்த அவளது இரண்டு வயது மகன் ராபர்ட் லாலிபாப்பைச் சுவைத்தபடி தந்தையையும் அன்னையையும் தனது கோலிகுண்டு விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது கபேயின் சமையலறையிலிருந்து சத்தம் கேட்டது.

“கய்ஸ் கேக் ரெடி” என்றபடி இதயவடிவிலான ரெட் வெல்வெட் கேக்குடன் வந்து நின்றான் தனஞ்செயன். அவனுடன் சேர்ந்து வேலை செய்து களைத்த தோற்றத்தில் அவனருகில் வந்து நின்றாள் அஸ்வினி. ஏசியிலும் வியர்வை துளிர்த்திருக்க அதைத் தனது கர்சீப்பால் ஒற்றி எடுத்தவன் அவளிடம் “வேர் இஸ் அனிகுட்டி? அவ தான் ஃபர்ஸ்ட் பாத்து கேக்கோட டெகரேசன் எப்படி இருக்குனு சொல்லணும்” என்று வினவ

“அவளும் இலக்கியாவும் தனுக்கு கேண்டில் ஏத்த ஹெல்ப் பண்ணிட்டிருக்காங்க தனா” என்று தனது மூத்தமகளும் இளையமகளும் பொறுப்பாய் வேலை பார்ப்பதை மெச்சுதலாய் பார்த்தபடி கணவனிடம் காட்டினாள் அஸ்வினி.

அவர்களுக்கு மணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. அவர்களின் இளைய வாரிசு இலக்கியாவுக்கு இப்போது மூன்று வயது. ஒரு நிமிடம் கூட அனிகா இல்லாமல் அவளால் இருக்க முடியாது. எப்போதும் அனி அனி என அவள் பின்னே சுற்றுவதே இலக்கியாவுக்கு முக்கிய வேலையாக இருக்கும். அனிகாவுக்கும் பள்ளியில் பெரிதாக தோழமைவட்டம் இல்லை. அவளுக்கு இருக்கும் நண்பர்கள் என்றால் அது அவளது விளையாட்டுத்தோழன் பீட்டரும் தங்கை இலக்கியாவும் தான்.

இப்போதும் இலக்கியாவின் கையில் சூடுபட்டுவிடக் கூடாதே என அவளை வேடிக்கை மட்டும் பார்க்கச் சொல்லிவிட்டு தானே தன்வியுடன் சேர்ந்து மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டிருந்தாள்.

மெழுகுவர்த்தி அணையாதவாறு அதன் மீது இதய வடிவ கண்ணாடி குடுவையைக் கவிழ்த்தியபடி இருந்தான் விஸ்வஜித். கபேயின் விளக்குகளும் மெழுகுவர்த்தி ஒளியும் தேவதையாய் காட்டிய மனைவியை நோக்கிப் புன்னகைத்தபடியே “கையில மெழுவர்த்தி சொட்டு பட்டுட போகுது தனு… ஜாக்கிரதை” என்று எச்சரித்தான்.

அவள் சரியென்று தலையாட்டிவிட்டு “விதுவும் யுதுவும் என்ன பண்ணுறாங்க விஸ்வா?” என்று கேட்க

“என் கிட்ட கேட்ட என்ன அர்த்தம்? அவங்க ரெண்டு பேரும் சித்து கூட தானே இருந்தாங்க” என்று கேள்வியாய் மனைவியை நோக்க அவளோ தலையில் அடித்துக் கொண்டாள்.

“சித்துவும் ஷானுவும் வெளியே இருக்கிற லான் ஏரியாவுக்குப் போய் ரொம்ப நேரம் ஆகுது… இப்போ தான் ரேயானோட அப்பா அவங்க கம்பெனியோட நியூ கான்ட்ராக்ட் பத்தி பேசணும்னு சொன்னாரு… நம்ம ஃபினான்ஷியல் அனலிஸ்ட் அதை பத்தி பேசிட்டே ஷானு கையைப் பிடிச்சு இழுத்துட்டுப் போயிட்டாரு” என்று சொல்லவே

“அடியே! அவனுக்கு ஷானு பக்கத்துல இருந்தா வேற யாரும் தெரிய மாட்டாங்கடி… கண்டிப்பா பசங்க இங்க தான் ஒளிஞ்சிருக்கணும்” என்று சொன்னவன் சுற்றிமுற்றித் தேட ஆரம்பித்தான்.

அப்போது கேக் வைத்திருந்த பெரிய மேஜைக்குக் கீழே சிவப்பு நிற டீசர்ட்டின் நுனி தெரிந்தது. தனஞ்செயன் மேஜைக்கு அடியே குனியவும் அங்கிருந்து கிளுக்கி நகைத்தபடி வெளியே வந்தனர் இரு சிறுவர்கள்.

“டேய் வாண்டுங்களா! உங்கம்மாவும் அப்பாவும் உங்களை தேடிக்கிட்டிருக்காங்க… நீங்க இங்க ஹைட் அண்ட் சீக் விளையாடுறிங்களா?” என்று செல்லம் கொஞ்சியபடி அவர்களைத் தூக்கினான்.

“பாத்து தூக்குங்க தனா! பசங்களுக்கு எங்கயாச்சும் பிடிச்சிக்கும்” என அஸ்வினி ஒருவனை வாங்கிக் கொண்டாள்.

“வித்யூத் செல்லம் உங்கம்மா உனக்கு கேக் குடுக்க கூடாதுனு சொல்லிட்டாடா” என்று சொல்ல இரண்டு வயது வித்யூத் உதட்டைப் பிதுக்கி முகம் சுருக்கினான்.

தனஞ்செயன் தூக்கி வைத்திருந்த மூன்று வயது சிறுவன் விதார்த்தோ “நான் சித்திக்குத் தெரியாம உனக்குத் தர்றேன்டா” என்று ரகசியம் பேச விஸ்வஜித்தோ தன்வியிடம் “என் பிள்ளைக்கு என்னைய போலவே தம்பி மேல பாசம் அதிகம் பாரு” என்று தன் மைந்தன் விதார்த்துக்கு தனது சகோதரனின் மைந்தன் வித்யூத்தின் மீதுள்ள அன்பைச் சுட்டிக்காட்டிக் கர்வப்பட்டுக் கொண்டான்.

தன்வியோ “ஏன் நானும் ஷானுவும் பாசமா இல்லையா? எங்க பிள்ளைங்க எங்களை மாதிரியும் இருப்பாங்க” என்று போட்டிக்கு வர

“அட நிறுத்துங்க! நீங்க இங்க சித்து, ஷானுனு அடிச்சிக்கிறிங்க… அவங்க ரெண்டு பேரும் எங்க போனாங்க?” என்று தனஞ்செயன் கேட்க அவர்களோ கிறிஸ்டல் கபேயின் புல்வெளியில் கால் நீட்டி அமர்ந்திருந்தனர்.

சித்தார்த் ஷான்வினியின் தோளை அணைத்திருந்தவன் வானத்தைக் காட்டி அவள் சொன்ன கதையை நினைவுறுத்தினான். ஷான்வி அதைக் கேட்டுச் சிரித்தவள் “எங்கப்பா இன்னொரு கதையும் சொல்லுவாரு” என்று சொல்லி நிறுத்த

“மறுபடியும் வானம் நட்சத்திரம்னு ஆரம்பிக்காத தாயே” என்று கேலி செய்தான் சித்தார்த்.

அவன் தோளில் பட்டென்று அடித்தவள் “இது மின்மினிபூச்சி பத்தி…. நீ கேப்பியா மாட்டியா?” என்று முகத்தைச் சுருக்க சித்தார்த் அவளது மூக்கைச் செல்லமாகத் திருகினான்.

“அப்பிடியே யுது பண்ணுற மாதிரியே இருக்கு” என்று மகனது செய்கையை நினைத்துப் பார்த்துச் சிரித்தான்.

“ஹலோ அவன் தான் என்னை மாதிரி செய்யுறான்” என்று பதிலுக்கு முரண்டியவளை எழுப்பிவிட்டான் சித்தார்த்.

“சின்ன குழந்தை கூட போட்டி போடுவியாடி?” என்று கேலி செய்தபடி அவளை இடையோடு அணைத்துக் கொண்டபடி நடக்க ஆரம்பிக்க அவனது அணைப்பில் வழக்கம் போல சிலையானவளை எண்ணி நமட்டுச்சிரிப்புடன் நடப்பதை நிறுத்தினான்.

“இன்னும் இந்தப் பழக்கம் மாறலையே” என்று குறும்பாய் நகைத்தவன் அவளது பளிங்கு முகத்தில் மின்னிய செவ்விதழை வருடிக் கொடுக்க அவனது விரல் ஸ்பரிசத்தில் அவள் விழி மூடியதும் அவளது செவ்விதழை ஆட்கொண்டான்.

ஷான்வி கணவனின் இதழணைப்பில் தொலைந்தவள் கண் மூடி நின்றிருக்க அவன் அவளோடு சேர்த்து அவள் இதழையும் விடுவித்த பின்னர் சுயவுணர்வுக்குத் திரும்பினாள்.

சித்தார்த் ஷான்வியின் கன்னத்தில் தட்டியவன் “இனிமே நீ நார்மல் ஆகிடுவேனு நினைக்கேன்… சரி தானே மை டியர் ஊர்மிளா?” என்று கேட்டுவிட்டுக் கண் சிமிட்ட

“இந்த கண் சிமிட்டலை மட்டும் விடாதடா… பட் இது தான் உன் கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது” என்று சொல்லிவிட்டு அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தாள் ஷான்வி.

அவன் மீண்டும் அவள் இதழ் நோக்கி குனியவும் தன்வி இவர்களை அழைக்கவும் சரியாக இருந்தது.

“சீக்கிரம் வா ஷானு! ஆல்ரெடி அமுல் பேபிக்கு நாளைக்கு ஆடிட்டிங் ஒர்க்ஸ் நிறைய இருக்குனு சொன்னா… சீக்கிரம் செலிப்ரேசன் முடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்புவோம்… நம்ம செலிப்ரேசனை அங்க போய் வச்சுக்கலாம்” என்று ஹஸ்கி குரலில் அவளின் காதுக்குள் முணுமுணுத்தவனை செல்லமாக அடித்தாள் ஷான்வி.

“அதுக்கு உன் பையன் அலோ பண்ணுனா பாக்கலாம்… யுது செல்லத்துக்கு அப்பா இல்லனா தூக்கமே வராதாம்”

“அப்பிடியா? ஆனா நாளைக்கு விஸ்வாக்கு வீக்லி ஆப்… சோ விதுவும் யுதுவும் அவனோட தான் இருக்கப் போறாங்க… நம்ம செலிப்ரேசனை யாராலயும் தடுக்க முடியாது மை டியர் ஊர்மிளா” என்று மையலாக உரைத்தபடி கபேவினுள் நுழைந்தான் சித்தார்த்.

அங்கே அவன் எதிர்பார்த்தபடி தன்வி நாளைய தணிக்கை பற்றி தான் கிளாராவுடன் தீவிரக்குரலில் விவாதித்துக் கொண்டிருந்தாள். கிளாராவும் அவளும் ரேயானின் தந்தை டேனியலின் துணி உற்பத்தியாலையின் நிதிப்பிரிவில் பணியாற்றுகின்றனர். இருவருக்கும் கணவன்மார்களின் துணை இருந்ததால் குடும்பவாழ்க்கையும் வேலையும் ஒரே சீராகப் போய்க் கொண்டிருந்தது.

தன்வி ஷான்வியைப் பார்த்தவள் “ஏன்டி உங்க ரொமான்ஸை அப்புறமா வச்சுக்க கூடாதா?” என்று கேலி செய்ய அவளைத் தோளோடு கட்டிக் கொண்டாள் ஷான்வி.

விஸ்வஜித் அனைவரையும் ஒன்று கூடி நிற்க சொன்னவன் தனஞ்செயனையும் அஸ்வினியையும் கேக் வெட்ட அழைத்தான். ஏனெனில் நான்கு வருடங்களுக்கு முன்னர் இதே காதலர் தினத்தன்று தான் அவர்களின் திருமணம் நடந்தது.

இருவரும் ஒருவரையொருவர் காதல் பொங்க பார்த்தபடியே கேக்கை வெட்டி அவர்களின் இரு மகள்களுக்கும் ஊட்டிவிட்டனர். நண்பர்கள் அதை வீடியோவாகப் பதிவு செய்தனர். ஷான்வி மறக்காமல் அந்த வீடியோவை இந்தியாவில் இருக்கும் பெரியவர்களின் போனுக்கும் தேஜஸ்வினிக்கும் கட்செவியஞ்சலில் அனுப்பி வைத்தாள்.

பின்னர் கேக்கை வெட்டி குழந்தைகளுக்கு ஊட்டியவர்கள் அவரவர் பிள்ளைச்செல்வங்களைத் தூக்கியபடி தம்பதிசமேதராய் நிற்க ஷான்வி செல்பி ஸ்டிக்கை எடுத்துக் கொண்டவள் அவளுடன் சேர்ந்து வித்யூத்தைத் தூக்கிக் கொண்டபடி நின்றிருந்த சித்தார்த்தைக் கண்ணால் போனைக் கவனிக்கும் படி சொல்லிவிட்டு “எல்லாரும் இங்க பாருங்க… ராபர்ட் குட்டி ஸ்மைல் ப்ளீஸ்” என்று சொல்ல அனைவரின் கவனமும் போன் மீது பட அத்தருணத்தை புகைப்படமாய் சேமித்தாள் ஷான்வி.

கிளாரா ராபர்ட்டை வைத்திருக்க அவளை தோளோடு அணைத்திருந்த கென்னடி, விஸ்வஜித்துடனும் மகனுடனும் முகம்கொள்ளாப் புன்னகையுடன் நின்ற தன்வி, இவர்களுக்கு நடுநாயகமாக இரு மகள்களுடன் நின்ற அஸ்வினி தன்ஞசெயன், அவர்களுடன் சித்தார்த் தூக்கிவைத்திருந்த மகனுடன் அவனது அணைப்பில் புன்னகைக்கும் ஷான்வி என அப்புகைப்படத்தில் சந்தோசம் மட்டுமே ஆட்சி செய்தது.

எத்தனையோ கனவுகள், இலட்சியங்கள்; இதற்கிடையே கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என அனைத்தையும் சரியான முறையில் நிறைவேற்றி, தமக்கு யாவுமாய் மாறிப் போன தத்தம் வாழ்க்கைத்துணைகளுடன் இந்த நான்கு ஜோடிகளும் இன்று போல என்றும் வாழ இறைவனை வேண்டிக் கொள்வோம்!

இனிதே நிறைவுற்றது!