🌞 மதி 25🌛

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் டைட்டானியம் டை ஆக்சைடுக்குத் தேவையான இல்மனைட் மற்றும் ரூட்டைல் அடர் கனிமங்கள் கிடைக்கின்றன. தென் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9 மீட்டர் ஆழம்வரை இந்தக் கனிமங்கள் உள்ளதாக அணுக் கனிம இயக்கக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடற்கரை மணலில் சுமார் 13 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை அடர் கனிமங்கள் உள்ளன. தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9.8 கோடி டன் இல்மனைட்டும் சுமார் 0.5 கோடி டன் ரூட்டைலும் உள்ளதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன – நித்தியானந்த் ஜெயராமன், புவி அறிவியலாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர்.

அன்றைக்கு இரவுணவின் போது மந்தாகினி சற்று நிம்மதியுற்றிருந்தாலும் அவரது முகத்தில் இன்னும் குழப்பத்தின் ரேகை மறையாமல் இருந்தததை வினாயகமூர்த்தியின் கழுகுக் கண்கள் கண்டுகொண்டன. ஆனால் சந்திரசேகருடன் இருக்கும் போது எதையும் சொல்லி வைக்க அவர் விரும்பவில்லை.

சாப்பிட்டதும் சந்திரசேகர் அவரது அறைக்குச் சென்றுவிட வினாயகமூர்த்தி மந்தாகினியிடம் பேச வேண்டுமென்று சொல்ல அண்ணனும் தங்கையும் யாருடைய தொந்தரவுமின்றி பேசுவதற்காகத் தோட்டத்தை அடைந்தனர்.

எடுத்ததும் வினாயகமூர்த்தி மந்தாகினியிடம்இப்போ சின்னவன் என்ன பிரச்சனையை இழுத்துட்டு வந்திருக்கான்?” என்று கேட்கவும் அவருக்கு ஆச்சரியம்.

எப்பிடிண்ணா நீ…..” என்று திகைத்த மந்தாகினியை இடை மறித்தவர்

இந்த உலகத்துல நீ வருத்தப்படுறதுக்குக் காரணமா இருக்கிறது ரெண்டே பேரு தான்.. ஒன்னு உன்னோட புருசன் இன்னொன்னு நம்ம கூடப்பிறந்தவன்சேகரை நான் முழுசா நம்புவேன் மந்தாஆனா ருத்ராவை நம்புற மாதிரி இது வரைக்கும் அவன் நடந்துக்கலநம்ம அம்மா நம்மளைப் பாடாப்படுத்துறதுக்கே இவனைப் பெத்திருக்காங்க போலஎன்று எரிச்சலுடன் கூறியவரை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று மந்தாகினிக்குப் புரியவில்லை.

இந்த ருத்ராவும் கொஞ்சம் அண்ணன் பேச்சைக் கேட்டு நடக்கக் கூடாதா என்று தம்பியின் மீதும் அவருக்கு வருத்தம் தான். ஆனால் அவரால் என்றுமே ருத்ராவைக் கடிந்துகொள்ள முடியாது. அண்ணன் எதுவும் சொல்லி விடுவாரோ என்று தயங்கியபடி

அண்ணா அவன் சின்னப்பையன்! அடிக்கடி என் பேச்சை மீறி சஞ்சுக்கா வீட்டுக்கு அவனும் அஜ்ஜூவும் போக ஆரம்பிச்சது இப்போ அவங்க வீட்டுல தங்குற அளவுக்கு வந்து நிக்குதுண்ணாஎன்று சொல்லும் போதே வினாயகமூர்த்தியின் முகம் இறுகியது.

இது சரியில்ல மந்தா! என்னைக்கு இருந்தாலும் அந்தக் குடும்பத்தால நமக்கு பிரச்சனை தான்னு இப்போவாச்சும் புரிஞ்சுக்கோசை! உன் மாமனாரு மட்டும் அந்த அஸ்மிதாவுக்கு ஷேரை எழுதி வைக்காம இருந்திருந்தாருன்னா பதினைஞ்சு வயசுல உன் நெத்தியில கண்ணாடி டம்ளரை தூக்கி வீசினாளே அன்னைக்கே அவளுக்கு சமாதி கட்டிருப்பேன்அந்த மனுசன் பதினைஞ்சு வயசு பொண்ணுக்குத் தான் தன்னோட ஷேர்னு சொல்லி சஞ்சீவினியை அதுக்குக் கார்டியனா வேற போட்டிருந்தாருஇப்போ அந்தப் பொண்ணுக்கு இருபத்தியோரு வயசு ஆரம்பிச்சாச்சுஉன் புருசன் அவளை கம்பெனியோட டைரக்டரா அப்பாயிண்ட் பண்ணுனாருனா அதுக்கு அப்புறம் கேக்கவே வேண்டாம்என்று பொரிந்து தள்ளினார்.

நல்லா கேட்டுக்கோ மந்தா, அந்தப் பொண்ணு தான் சேகருக்கு அப்புறம் மேஜர் ஷேர்ஹோல்டர்அவ கிட்ட இருக்கிற ஷேர் நம்ம கைவசம் வந்தா தான் நீயும் சேகரும் இதே மாதிரி சேஃபா இருக்க முடியும்நான் அதுக்கு என்ன வழினு பார்க்கிறேன்இந்த .ஜி.எம்குள்ள அவளோட ஷேர் எல்லாத்தையும் சேகர் பேருக்கு மாத்துறதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்ய போறேன்இதுல நீ தலையிடாம இரு

இவ்வாறு எச்சரித்து விட்டு அவர் நகர மந்தாகினி தான் ருத்ராவை எண்ணிக் குழம்பிக் கொண்டிருக்க அண்ணனோ சஞ்சீவினியின் குடும்பத்துக்குப் பிரச்சனையுண்டாக்கும் வழியை ஆராய்கிறாரே என்று மனத்தாங்கலுடன் வீட்டை நோக்கி நடைபோட்டார்.

வினாயகமூர்த்தியால் அன்றைய இரவில் உறங்கவே முடியவில்லை. எவ்வளவு கஷ்டப்பட்டு விஸ்வநாதனையும் சந்திரசேகரையும் பிரித்து, எங்கே அவர்களை மீண்டும் ஒன்று சேர்த்து வைத்துவிடுவாளோ என்று சஞ்சீவினியை சந்திரசேகரின் வாழ்க்கையிலிருந்து விரட்டி, மந்தாகினியை சந்திரசேகரின் மனைவியாக்கிவிட்டு இருவரையும் தலையாட்டி பொம்மைகளாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் அவர். அதை ஒரு சிறுபெண்ணால் இழக்க விரும்பவில்லை அவர்.

சஞ்சீவினியையும் அவர் குடும்பத்தையும் இது நாள் வரை கண்டுகொள்ளாமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்று அவரது புத்திக்கு உரைத்தது.

என்றைக்கு இருந்தாலும் அஸ்மிதா சந்திரசேகரின் மகள் தானே என்று அஜாக்கிரதையாக விட்டது பிழையோ என்று இப்போது யோசித்தார் அவர். அவளது பங்குகள் இப்போது குடும்பத்துக்குள் இருந்தாலும் நாளை அவளுக்குத் திருமணம் ஆகும் போது அவளுக்கு வரப் போகிற கணவன் அஸ்மிதாவிடம் இல்லாதது பொல்லாதது சொல்லி ஏதேனும் குழப்பம் விளைவிக்க வாய்ப்புள்ளது என்ற கோணத்தில் யோசித்தார் அவர்.

அப்படி ஒரு சூழ்நிலை வரும் முன்னர் அந்தப் பங்குகள் கைமாற வேண்டியது அவசியம் என்று புரிந்துகொண்டவர் அதை அஸ்மிதாவிடம் இருந்து வாங்குவது அவ்வளவு சுலபமில்லை என்பதையும் அறிவார். ஏனெனில் ராமமூர்த்தி பேத்திக்கு அதைக் கொடுக்கும் போதே சஞ்சீவினியின் வாயை ஒரே வார்த்தையால் அடைத்திருந்தார்.

இது சந்துருவோட மகளுக்கு நான் குடுக்கிற கிப்ட்னு நினைக்காதம்மாஎன்னோட பேத்திக்கு ஒரு தாத்தாவா அவளோட வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பு வேணும்னு தான் இந்த ஷேர்ஸை அவளுக்குக் குடுக்கிறேன்இதை நீ வேண்டாம்னு சொன்னேனா அவ ராமமூர்த்தியோட பேத்தி இல்லனு நீயே சொல்லுற மாதிரிம்மா சஞ்சு

இந்த ஒரு வார்த்தை தான் சஞ்சீவினியைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. வருடந்தோறும் மைனர் பெண்ணின் தாயார் என்ற முறையில் மகளுடன் ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதோடு சரி. நிர்வாகத்தில் எந்த பொறுப்பையும் அவர் ஏற்கவில்லை. அதோடு மாமனார் அவருக்கென்று எழுதி வைத்துவிட்டுச் சென்ற சில சொத்துக்களிலிருந்து வரும் வருமானத்தையும் அவர் மறுத்ததில்லை. அதை மறுப்பது அவரது காலஞ்சென்ற மாமனாரை அவமதிப்பது போலாகும் என்று எண்ணியிருந்தார் சஞ்சீவினி.

ஆனால் அஸ்மிதாவுக்கு வரப்போகும் கணவன் இந்த மாதிரி அடுத்தவர் சொத்தில் பற்று இல்லாதவனாகத் தான் இருக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே! சொத்துக்களைக் கூட ஒதுக்கிவிடலாம். ஆனால் ஆர்.எஸ் குழுமத்தின் பங்குகள் கண்டிப்பாக அவனது ஆசையைத் தூண்டும். அதன் விளைவாக நிர்வாகம் கைமாறி விட்டால் அவதிப்படப்போவது தான் தானே என்று பலவாறு சிந்தித்தவர் அஸ்மிதாவின் பங்குகளை நியாயமான முறையில் கேட்டுப் பெறுவது சாத்தியமல்ல என்பதால் குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்தார்.

அந்நிமிடமே அதற்கானத் திட்டம் ஒன்றை மனதில் வகுத்து முடித்தவர் அதைச் செயலாற்றுவதற்குத் தேவையான அடிகளை நாளை முதல் எடுத்துவைக்கலாம் என்ற முடிவுடன் கண்ணை மூடி உறங்க முயற்சித்தார்.

*******

ஓகே ரிஷி! முடிஞ்சளவுக்கு அந்த வேலையை சீக்கிரமா முடிக்கச் சொல்லுஅவனுக்கு ரொம்ப நாள் டைம் குடுக்க முடியாது.ஜி.எம் நெருங்கிட்டிருக்குஎன்று போனில் ரிஷியிடம் பேசிக்கொண்டிருந்தான் தேவ். அப்போது தான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்திருந்தான். அதற்குள் போனா என்று அங்கலாய்த்த சந்திராவை ஓரக்கண்ணால் பார்த்தபடி பேசி முடித்தவன் தந்தையும் தாத்தாவும் அவருடன் அரட்டையடித்துக் கொண்டிருக்கும் இடத்தில் சென்று அமர்ந்தான்.

ஏதோ சீரியஸா டிஸ்கசன் போயிட்டிருக்கு போல?” என்றபடி சந்திராவைப் பார்த்தவன் அவர் தந்தையைக் கண் காட்டியதும்

வாட் ஹேப்பண்ட் டாட்?” என்று அவர் புறம் திரும்பினான்.

விஸ்வநாதன்நீ என்னடா பண்ணிட்டிருக்க? உன்னோட செய்கை எல்லாம் தப்பா இருக்கு தேவ்என்று கோபக்குரலில் ஆரம்பிக்க அவனோ கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தான்.

தான் பேசுவதைச் சட்டை செய்யாமல் சோபாவில் சொகுசாகச் சாய்ந்து அமர்ந்த மகனை முறைத்தவர்

ஒரு பொண்ணு கிட்ட இருந்து ஷேர்ஸை வாங்க உனக்கு வேற வழியே தெரியலையா தேவ்? இது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா?” என்று மகனைக் கடிந்து கொள்ள

அவனோஎவ்ளோ பெரிய தப்புனு எனக்கு நல்லாவே தெரியும் டாட்அதனால தான் நானே பண்ணாம என் ஆளை வச்சு முடிக்கலாம்னு டிசைட் பண்ணிருக்கேன்அதுக்கான வேலை தான் நடந்திட்டிருக்குஎன்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுத் தாத்தாவைப் பார்க்க அவர் பேரனைப் பார்த்து கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார்.

இக்காட்சி விஸ்வநாதனுக்கு இன்னும் கடுப்பை மூட்டியது. அவன் தான் இளரத்தம் என்றால்இந்த அப்பாவும் அவனுடன் சேர்ந்து அவன் செய்கிற சதிவேலைகளை ஊக்குவிக்க வேண்டுமா என்ற எரிச்சலுடன்

நீங்க அவனுக்குச் சப்போர்ட் பண்ணி அவன் பண்ணுற தப்பை மறைக்க டிரை பண்ணாதிங்கப்பாஅவனுக்கு நல்லது கெட்டது சொல்லி புரியவைக்கத் தான் நீங்க இருக்கிங்களே தவிர அவன் செய்யுற எல்லாத்துக்கும் சபாஷ் போடுறதுக்கு இல்லஇவன் பண்ணுற காரியத்தால என்ன நடக்கும் தெரியுமா?” என்று வெகுண்டவரை நிறுத்துமாறு சைகை காட்டினார் சங்கரராமன்.

அவன் பண்ணுற காரியத்தால நல்லது மட்டும் தான் நடக்கும்னு எனக்கும் தெரியும், என் பேரனுக்கும் தெரியும்அது உன் கண்ணுக்குத் தெரியலைனா அதுக்கு காரணம் உன் கண்ணை இன்னும் நட்புங்கிற கருப்புத்துணி மூடியிருக்குஅதைக் கழட்டி எறிஞ்சிட்டு பாரு! தேவ்வோட ஆசை எல்லாம் ஆர்.எஸ் கெமிக்கல்ஸ்ல நீ இழந்த இடத்தை மீட்கணும்கிறது தான்அதுக்கு நான் அவனுக்கு ஆதரவா இருப்பேனு வாக்கு குடுத்திருக்கேன்

நீ இன்னும் சந்திரசேகர் மனசு உடைஞ்சு போயிருவானேனு யோசிச்சா நாங்க ஒன்னும் பண்ண முடியாது விஷ்வா! நீ உன் ஃப்ரெண்டை நினைச்சு கலங்குறராமமூர்த்தியும் நானும் என்ன நோக்கத்துக்காகக் கம்பெனி ஆரம்பிச்சோமோ அந்த நோக்கத்தைக் குழி தோண்டி புதைச்சுட்டு சந்துரு லாபத்தை மட்டுமே கணக்குல வச்சு ஓடிட்டிருக்கான்டாஅவனைத் தடுத்து நிறுத்தலைனா அது நான் என்னோட ஃப்ரெண்டுக்கு பண்ணுற அநியாயம்என்று பிரசங்கம் செய்துவிட்டு பேரனை பார்த்தவர் அவனிடம் கையை நீட்ட தேவ் எழுந்து அவரது கரத்தைப் பற்றி எழுப்பினான்.

பேச்சுவார்த்தை முடிந்ததென சொல்லாமல் சொல்லிவிட்டுத் தாத்தாவும் பேரனும் இடத்தைக் காலி செய்ய விஸ்வநாதனால் சாந்தியிடம் ஆதங்கப்பட மட்டுமே முடிந்தது.

தேவ் நீ பெத்தப் பிள்ளை தானே சாந்தி? நீயாச்சும் அவனுக்கு நியாய அநியாயத்தை எடுத்துச் சொல்ல மாட்டியா?”

நம்ம சொல்லி கேக்குற வயசை அவன் தாண்டிட்டாங்கஇப்போ அவன் எண்ணமெல்லாம் சந்துரு அண்ணாவோட கம்பெனியைக் கைப்பற்றுறது மட்டும் தான்இதுல நானோ நீங்களோ என்ன சொன்னாலும் அவன் காதுல ஏறாதுஇது எல்லாத்துக்கும் மேல இந்தப் பிரச்சனையால அவன் பொண்டாட்டியை இழந்திருக்காங்கமனசைத் தொட்டுச் சொல்லுங்க மானசாவுக்குச் சாகுற வயசா? தப்பைத் தட்டிக் கேட்டதுக்கு என் மருமகளை இல்லாமலே பண்ணிட்டாரு உங்க ஃப்ரெண்ட்.. அதை ஏன் நீங்க யோசிக்கவே மாட்டேங்கிறிங்க?”

சாந்தி நீ நினைக்கிற மாதிரி தேவியோட இறப்புக்கும் சந்துருவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லம்மாஎல்லாமே வினாயகமூர்த்தியோட வேலை தான்

அப்பிடி அடுத்தவரை கை காட்டிட்டா உங்க ஃப்ரெண்ட் நல்லவரா ஆகிடுவாரா? தப்பு செய்யறவனை விட அவனுக்குத் துணையா இருக்கிறவன் தான் பெரிய குற்றவாளிமானசாவோட சாவுக்கு வினாயகமூர்த்தி காரணமா இருக்கலாம்ஆனா அது தெரிஞ்சும் அந்த ஆளைச் சட்டத்துல இருந்து காப்பாத்துனது யாருங்க? உங்க ஃப்ரெண்ட் தானே! அவரோட மச்சினருக்காக அவர் எந்த எல்லைக்கும் போவாருனா என் பிள்ளையும் அவனோட பொண்டாட்டிக்கு நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேக்க என்ன வேணாலும் செய்வான்நீங்க சும்மா அவனையும் மாமாவையும் திட்டாதிங்க

நீயும் உன் மாமனார் மாதிரியே பேசாத சாந்தி…”

விடுங்க! எங்களோட ஆதங்கமும் கோவமும் உங்களுக்குப் புரியவே வேண்டாம்…” என்று உரைத்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டார் சாந்தி.

விஸ்வநாதன் யாருமே தான் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே என்ற ஆதங்கத்துடன் அந்த அங்கேயே அமர்ந்துவிட்டார். மனைவி, மகன், தந்தை சொல்வதைப் போல தான் சந்திரசேகரை மட்டுமே பாதுக்காக எண்ணுகிறோமோ என்ற சந்தேகம் அவருக்கே வந்துவிட்டது.

இதுவரை ஆர்.எஸ் கெமிக்கல்ஸில் நடந்த தவறுகள் எதுவுமே சந்திரசேகருக்குத் தெரியாமலா நடந்திருக்கும் என்ற கேள்வி அவருக்குள்ளும் எழுந்தது. தெரிந்தாலும் சந்திரசேகர் வினாயகமூர்த்தி செய்து வரும் அநியாயங்களைக் கண்டுகொள்வது இல்லை என்று அதற்கான விடையும் கூடவே எழுந்தது.

அந்த அநியாயத்தில் முக்கியமானது அவரது மருமகள் மானசாதேவியின் மரணம். கழுத்தில் தாலி ஏறி எட்டுமணி நேரத்தில் அவள் தேவ்வை நிராதரவாக்கிவிட்டுச் செல்வாள் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் இன்று வரை தேவ் வேதவாக்காக எண்ணி கடைபிடிப்பதிலிருந்தே அவன் மானசாவின் மீது வைத்துள்ள காதல் எவ்வளவு ஆழமானது என்பது புரியவரும். அப்படிப்பட்டவன் அவளது இறப்புக்குக் காரணமானவனைச் சும்மாவா விடுவான் என்று யோசித்தவர் இனி வரும் காலங்களில் என்ன நடக்குமோ என்ற யோசனையுடன் சோபாவில் சாய்ந்து விட்டார்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛