மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 29

யுக்தயன் தான் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து விலகி விட்டான். சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பது என முடிவு செய்து அதனை செயல் படுத்த முயன்றான்.

ஊழியர்களாக பிரெஷர்ஸ்யை தேர்ந்தெடுத்தான். அவன் தந்தை யாராவது அனுபவசாலியை வைத்து கொள் என்று கூற மறுத்து விட்டான் .

யுகி, “அப்பா அனுபவசாலிகள் வேலை பார்க்க இங்க நிறைய கம்பெனி இருக்கு பிரெஷர்ஸ் வேலை பார்க்க என்னோட கம்பெனி இருந்துட்டு போகட்டும்.”

இந்திரன் ,”டேய் பிரெஷர்ஸ்க்கு அவ்வளவா எதுவும் தெரியாதுடா.”

யுகி, “அப்படி பார்த்த நானும் பிசினெஸ்க்கு பிரெஷர் தான பா . அப்பா … அவங்களுக்கு எதுவும் தெரியாது தான்…. ஆனா எதுவுமே தெரியாதுனு இல்லையே. கத்துக் கொடுத்த கத்துக்க போறாங்க.”

“அது மட்டும் இல்லாம இப்போ சோசியல் நெட்ஒர்க்ஸ் அதிகமான யூசர்ஸ் யங்ஸ்டர்ஸ் தான். சோ அவங்களோட எதிர்பார்ப்பு என்னனு அவங்களுக்கு தான் அதிகம் தெரியும்.”

“கண்டிப்பா தப்பான வழியில போக மாட்டேன் நம்புங்க.”

இந்திரன், “நீ தப்பான வழியில போக மாட்டேன்னு தெரியும். ஆனாலும் கொஞ்சம் ஜாக்கிரதை டா அவங்களோட எதிர்பார்ப்புனு தப்பான எந்த விஷயத்தையும் மோட்டிவேட் பண்ணிராத . அது தான் என்னோட பயமே”

யுகி, “நிச்சயம் உங்க பயத்தை உண்மை ஆக்க மாட்டேன். என்னை நம்புங்க.”

…………………………

யுக்தயன் பல கல்லூரிகளுக்கு சென்று படிப்பு முடியும் தருவாயில் உள்ள மாணவர்களை சிறிய தேர்வு போல் நடத்தி தேர்ந்தெடுத்தான் .

தன்னுடைய நிறுவனத்தில் ஒரு அங்கமாக டெலிவிஷன் சேனல் ஒன்றை தொடங்கினான் .

அந்த சேனலில் மூலம் வெறும் சீரியல் ரியாலிட்டி ஷோ என்று மக்கள் முடங்கி இருக்கும் சுவருக்குள் இருந்து அவர்களை வெளிக்கொண்டு வர பல முயற்சிகள் செய்தான்.  உண்மையான உலகம் எது என்பதை அவர்களுக்கு உணர்த்த முற்பட்டான்.

பல ஊர்களுக்கு சென்று அங்கிருக்கும் மக்கள் வாழ்க்கையை படமாக்கினான் . அடிப்படை வசதி இல்லாத மக்களுக்கு அவன் சேனலின் ஒளிபரப்பின் மூலம் நேரடியாக உதவிகள் பெற வைத்தான். இடை தரகர்களுக்கு இங்கு இடமில்லை.

ஒருவருக்கு ஒரு பண உதவி செய்தால் அது அவர்களை சென்று அடையாது. இடை பட்ட அனைவருக்கும் பங்கு பிரிக்கப்பட்ட பின் மிச்சம் சொச்சம் தான் அவர்கள் கையில் கிடைக்கும். அந்த வேலைக்கு அவன் நிறுவனத்தில் இடம் இல்லை.

சிறு குழந்தைகளுக்கு போட்டிகள் வைத்து நடத்தி அதன் மூலம் அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்தான். அவர்கள் திறமைகளை அவன் சேனல் மூலம் பார்க்கும் சில நல்ல உள்ளங்கள் அந்த குழந்தைகளின் படிப்பு செலவு மற்றும் அவர்களின் திறமையை வெளி கொண்டுவருவதற்கான இதர செலவுகளை கையில் எடுத்தது.

ருத்ரனின் மலை கிராம மக்களை கூட சந்தித்து பேசினான்.  ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கை இந்த இயற்கையோடு பிணைந்தது.  எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று விட்டனர்.

யுக்தயனும் சிறிது காலம் அந்த சொர்க்கத்தில் வாழ்ந்ததால் அவர்களை வற்புறுத்தவில்லை.

மக்களுக்கு உண்மையாக சேவை செய்யும் நல் உள்ளங்களை மக்களுக்கு அடையாளப்படுத்தினான்.

நிறைய எதிர்ப்பு வந்தது. எதையும் கருத்தில் கொள்ளவில்லை. தயாளன் குரூப்ஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

பெரும்பாலும் நாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் விஷயம் ஒன்று உள்ளது. பணியில் அனுபவம் உள்ளவர்கள் அதை உணர்ந்து இருப்பர் . 

இளமையில் நாம் ஒரு வேலையை செய்யும் போது அதில் தவறுகள் தென்படின் அதை செய்வதற்கு குற்ற உணர்வு மேம்படும் அதனை சரி செய்ய முயல்வோம்.

ஆனால் நாளாக நாளாக தவறுகள் பழகிவிடும். முதலாளியின் கட்டளை என்னவோ அதை செய்து விடுவோம். அதில் தவறு எது சரி எது என்பதை ஆராய மாட்டோம் . காரணம் குடும்பத்தை காப்பதற்கு தேவையான சம்பளம் என கூறப்படும் அந்த பணம்.  எங்கே கேள்வி கேட்டால் வேலை போய்விடுமோ என்ற பயம். அது அவர்கள் தவறு இல்லை அந்த பய உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்திய முதலாளிகளுக்கும் பங்கு உள்ளது அல்லவா.

அப்படி ஒரு நிலை தன் ஊழியர்களுக்கு ஏற்பட கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினான் யுக்தயன்.

அதற்கு உறுதுணையாக இருந்தது அந்த பிரெஷர்ஸ் தான். அதில் சுனேனா மற்றும் ஜனனியும் அடக்கம்.  அவர்கள் யுக்தயன் பின் சுற்றுவது ஒன்றும் தவறில்லையே.  இப்படி ஒரு குணாதிசயம் உள்ள ஆண்மகனை எந்த பெண் தான் விரும்பமாட்டாள்.

இப்படியாக அவன் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க சுரேஷும் சரி கண்மணியும் சரி அவனை நினைத்து பெருமிதம் கொண்டனர் ஆனால் வாயை திறந்து பாராட்டவும் இல்லை. அவனிடம் பேசவும் இல்லை.

………

வருடங்கள் உருண்டோடியது. அவன் வாழ்வில் தான் எந்த மாற்றமும் இல்லை.  மனைவி அவள் இன்னமும் தாய் வீட்டில் தான் இருக்கிறாள்.  தாய் அவளும் பேசமால் தான் இருக்கிறாள்.

அவனுக்கு இருந்த பெரும் ஆதரவு அவன் தந்தை.  அவன் சிரிப்புக்கு உயிர் கொடுக்கும் ஜீவன் அவன் மகன் தயாளன்.

ஆம் தயாளன் குரூப்ஸ் அவன் மகனின் பெயரில் தான் ஆரம்பித்தான். தயாளன் என்ற பெயர் தேர்ந்தெடுப்பு கூட அவள் மனையாளின் முடிவே.

உச்சரிப்பில் இருவரின் பெயரும் (தயா யாழ்) வருவது போல் தயாளன் என பெயரிட்டாள்.

தன் மூன்று வயது மகனை காண வந்த யுக்தயன் அவனை கட்டிபிடித்து மீண்டும் ஒரு உறக்கத்திற்கு சென்றுவிட்டான்.

இருவரும் கட்டிபிடித்து உறங்க அறைக்குள் வந்த நிலாவோ சிறிது நேரம் தன் இரு கண்ணின் மணிகளை விழி எடுக்காமல் ரசித்தாள்.

…………..

நிலா, “தயா செல்லம் எழுந்திருங்க… “

என்று உறங்குபவர்களை எழுப்பினாள் நிலா. ‘தயா செல்லம்’ என கணவனை கூறினாளோ மகனை கூறினாளோ அவளுக்கே வெளிச்சம்.

தன் குட்டி சிப்பி இமைகளை பிரித்து கண் விழித்த ஜீனியர் தயாவோ

“மா கட்தாத அப்பா தூங்கு… “என்றான் தன் கீச் குரலில்.

பின் தந்தை அருகில் நெருங்கி அவன் தலை கோதி கன்னம் தட்டிக் கொடுத்தான்.

தன் மனைவி எழுப்பும் போதே கண் விழித்து கொண்டான் யுக்தயன்.

மகனின் செயலில் நெகிழ்ந்து அவனை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு

“என் செல்லம்…” என கூறி கன்னத்தில் முத்தமிட்டான்.

“தேங்க்ஸ்டா தங்கம்” என்றான் மகனிடம்

தயா, “எதுக்.. கு பா…”

யுகி, “அப்பாக்கு தட்டிக் கொடுத்தீங்கல அதுக்கு.. “

உடனே தன் குட்டி விரல்களை தாடையில் வைத்து ஏதோ பெரிய மனிதன் போல் யோசித்தவனோ. “பா..  அப்ப..  அம்மாக்கு டாங்ஸ் சொல்லு…” குழந்தை அவனுக்கு சில சமயம் உச்சரிப்புகள் சரியாக வராது. தவறாக தான் உச்சரிப்பான். ஆனால் அப்படி அவன் உச்சரிப்பது கூட அழகு தான்.

ஏன் என்பது போல் பார்த்த யுக்தயனிடம்

“மா..  தா… அப்பிதி பன்னும்”
என்று தாய் செய்யும் வேலையை அழகாக போட்டுக் கொடுத்துவிட்டான்.

மகன் கூற ஆரம்பிக்கும் பொழுதே திரு திருவென முழித்த நிலாவோ அறையை விட்டு வெளியே ஓடி விட்டாள்.

யுக்தயனோ அழகாக ஒரு புன்னகை புரிந்தான்.

தொடரும்….