மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 27

லண்டனில் வந்து இறங்கிய யுக்தயன் ஒரு டாக்சி பிடித்து நேராக தான் பணி புரியும் நிறுவனத்திற்கு சென்றான்.

அங்கே தன் வரவை பதிவு செய்து விட்டு அடுத்த தான் எப்பொழுது வர வேண்டும் என்பதை கேட்டறிந்துவிட்டு ஒரு நட்சத்திர ஹோட்டலின் முன் வந்து இறங்கினான்.

ரூம் புக் செய்தவன் தனக்கு கொடுக்கப்பட்ட  அறை நோக்கி சென்றான்.
அறையில் நுழைந்தவன் கழிவறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்து அமர்ந்தான்.

பின் நியாபகம் வந்தவனாக தனது மொபைலை ஆன் செய்தான். அவன் தந்தையிடம் இருந்து ஏகப்பட்ட தவறிய அழைப்புகள். 

எதோ தவறாக பட உடனே தன் தந்தைக்கு அழைத்தான். 

இந்திரன், “ஹலோ டேய் நீ கிளம்பி  16 மணிநேரம் ஆச்சுடா …… ஏன்டா லண்டன் பொய் சேர இவ்ளோ நேரமா …..”

யுகி, “இல்ல அப்பா…  நா…  நேர ஆபிஸ் போயிட்டு இப்போத ரூம் வந்தேன். என்னாச்சு பா…  எதுக்கு இவ்வளவு  முறை கூப்பிட்டு இருக்கீங்க.. யாழு …. யாழுக்கு எதுவும் இல்லைல..  அவ நல்லா இருக்காளா…  அப்பா ஏன் அமைதியை இருக்கீங்க. எதாவது சொல்லுங்க அப்பா…” 

இந்திரன், “டேய் பேசி முடுச்சிட்டாயா என்ன பேச விடுடா “

யுகி, “அப்பா என் டென்ஷன் புரியாம….  சீக்கிரம் சொல்லுங்க”

இந்திரன், “நிலாக்கு எந்த பிரச்னையும் இல்ல நல்லா இருக்கா…. “

அவர் நிலாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்ன பிறகு எகிறி குதித்து கொண்டிருந்த அவன் மனது ஆசுவாசமானது.

இந்திரன், “அப்புறம் உனக்கு பையன் பொறந்து இருக்கான்டா.”

அவரது கூற்றுக்கு அவன் புறம் எந்த பதிலும் வரவில்லை. எகிறி குதித்து அடங்கிய இதயம் ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டது.  

அப்படியே அமைதி ஆகிவிட்டான். அவன் தற்பொழுது எப்படி உணர்கிறான் என்று அவனுக்கே விளங்கவில்லை. 

குழந்தை பிறக்கும் பொழுது உடன் இருக்க முடியாத தன்னுடைய நிலையை எண்ணி தன் மீதே கழிவிரக்கம் கொண்டான்.

குழந்தையை கையில் ஏந்த வேண்டும் என்ற ஆசை அவனை கொன்றது. 

தன் மனைவி யாழ் தற்போது எப்படி இருக்கிறாள் அவள் வலியை தாங்கிகொண்டாளா…  தன் மகன் அவளுக்கு மிகுந்த வலியை  கொடுத்து விட்டனா. இப்பொழுதே யாழை பார்க்க வேண்டும் அவள் நெற்றியில் முத்தமிட வேண்டும் என்று தோன்றியது .

அவன் தனி உலகில் மித்தந்து கொண்டிருக்க அவன் தந்தை இந்திரன் போனில் கத்தி கொண்டிருந்தார் .

இந்திரன், “டேய் லைன்ல இருக்கியா… ஹலோ” 

யுகி, “ஆ …. அப்பா இருக்கேன்.”

இந்திரன், “டேய் வீடியோ கால் வர்ரையாடா குழந்தைய பார்ப்ப…. “

“ம் …..” அவனால் பதில் பேச முடியவில்லை சிரிப்பும் அழுகையும் ஒரே சமயத்தில் தோன்றியது .

அழைப்பை துண்டித்தவன் வீடியோ கால் செய்தான்.

குழந்தை அவனது மாமியாரின் கையில் இருந்தது . குட்டி கைகள் குட்டி கால்கள் ரோஜா குவியல் போல் இருந்தான் அவன் மகன். பார்ப்பதற்கு அப்படியே அவன் ஜாடை நிலாவின் சாயல் சிறிதும் இல்லை ஆச்சரிய பட்டு கொண்டான்.

பின்னே அவன் காதல் மனைவி யாழ் தன் குழந்தை தன் கணவனின் சாயலில் இருக்க வேண்டும் என அனுதினமும் அவனது புகைப் படத்தையே பார்த்து கொண்டே இருந்தாளே. அது பொய்த்து போகுமா.

புகை படத்தை பார்த்து கொண்டே  இருப்பதால் குழந்தை அவர்கள் சாயலில் பிறப்பார்களா என்பது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால் நாம் ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று எந்தளவிற்கு நம்புகிறமோ எண்ணுகிறோமோ அது அப்படியே நடக்கும் என்பது மட்டும் உண்மை. எண்ணம் போல்தான் வாழ்க்கை என்பதை கேட்டிருப்பீர் அது உண்மையே.

தன் நகலை போல் இருக்கும் மகனை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் யுக்தயன்.

யுகி, “நா…  நா…  ரொம்ப கெட்டவன் இல்லப்பா..”

அவன் இப்படி பேசவும் போனை எடுத்துக் கொண்டு சற்று தனித்து வந்து நின்று பேசினார்.

இந்திரன், “டேய்…. ஏன்டா லூசு மாதிரி பேசுற”

யுகி, “என்னால எம்புள்ளைய கையில வாங்க முடியாத பாவியா இருக்கேனேபா..  நா பண்ணுனது தப்புதா ஆனா..  அதுக்கு கடவுள் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்துருக்க வேண்டாமே பா..  ரொம்ப கஷ்டமா இருக்கு பா”

இந்திரன், “டேய் அப்படி எல்லாம் எதுவும் இல்லடா….  வலி இல்லாம காதல் இல்லடா”

யுகி, “புரியுது பா ஆனா ஏத்துக்க முடியல.  எப்பவும் நா ரொம்ப அதிர்ஷடசாலி எனக்கு ப்ரண்ட்ஸ் போல பேரன்ட்ஸ் மனசுக்கு புடிச்ச வேலைனு எல்லாம் கெடச்சுருக்கு ரொம்ப கர்வமா இருந்து இருக்கேன் பா.”

“ஆனா இப்போ எம்பையன் முகத்தக் கூட என்னால நேர்ல பாக்க முடியலேயே யாழு பிரக்னன்சி டைம்ல என்ன ரொம்ப தேடி இருப்பால பா ஆனா என்னால அவ பக்கத்துல இருக்க முடியலையே”

“அப்பா நீங்க சொல்லுங்க யாழு வலி வந்தப்போ என்ன கேட்டாளா பா ….”

பதில் உரைக்கவில்லை அவர்.

அவரது மவுனம் அவனுக்கான பதிலை அளித்துவிட்டது.

உடைந்துவிட்டான். ‘என்ன அவ்வளவு வெறுக்குறியா யாழு…’ ஆனா இந்த மூளை சொல்றத மனசு ஏத்துக்க மாட்டேங்குது. ‘நீ என்ன கண்டிப்பா தேடி இருப்பதான’ என்று மனதோடு அவளிடம் பேசியவன் தந்தையின் அழைப்பில்  நிகழ் உலகம் திரும்பினான்.

இந்திரன், “யுகி..  யுகி… என்னாச்சுடா கவலை படாதடா எல்லாம் சரியாகிரும்.”

யுகி, “ஒன்னும் இல்ல பா”. தந்தையின் நம்பிக்கை வார்த்தை தான் அவனை இத்தனை நாள் உயிர்ப்புடன் வைத்திருந்தது.

சிறிது மவுனத்திற்கு பிறகு மீண்டும் “அப்பா…  நா யாழ பாக்கனும் பா.. ” என்றான் யுக்தயன்.

“கொஞ்சம் இருடா…”  என்றவர் தன் தங்கை கனகாவிடம் சென்று போனை கொடுக்க அவர் தன் கையில் இருந்த குழந்தையை கண்மணியிடம் கொடுத்துவிட்டு போனை வாங்கி கொண்டு நிலா இருந்த அறைக்குள் சென்றார்.

பிரசவத்தின் காரணமாக மயக்கத்தில் இருந்தாள் யாழ்நிலா.

அவளது முகத்தையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

மருமகனின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது கனகாவினால் ஆனால் ஆறுதல் சொல்ல தான் முடியவில்லை தயக்கத்தில்.

பார்த்துக் கொண்டே இருந்தான். அவனும் போதும் என்றும் சொல்லவில்லை இவரும் போதுமா என்று கேட்கவும் இல்லை.

ஏதேதோ பேச தோன்றியது மாமியார் கனகாவிற்ககு பதில் அவ்விடத்தில் அவன் தந்தை இந்திரன் இருந்திருந்தால் நிச்சயம் உளறி இருப்பான். மாமியார் ஆயிற்றே அதனால் அமைதி காத்தான்.

தன்னவளை ரசித்துக் கொண்டிருக்கும் பொழுது செவிலியர் அவன் மகனை கொண்டுவந்து நிலாவின் அருகில் படுக்க வைத்தார்.

தாயும் மகனும் அருகருகே.  பிள்ளை அவன் தூக்கம் கலைந்து விழித்துவிட்டான்.

போனை அருகில் கொண்டு சென்று காட்ட பொக்கை வாயை திறந்து எச்சில் ஒழுக வாயில் கை வைத்து கண்களை சிமிட்டி கொண்டிருந்தான்.

அவ்வளவு அழகு அவர்கள் இருவரும் அருகருகே இருக்க கண்டவன் தானும் அதில் இணைய மாட்டோமா என்று ஏக்கம் கொண்டது அவன் மனது.

தொடரும்…..