மல்லிகைப்பூவின் விழிகளில் உன் தேடல் அத்தியாயம்-1

அத்தியாயம்-1

ஏய் என்னடி? வரவர உனக்கு வாய் ரொம்ப நீளுது………. சொன்னா புரியாதா ?…..எத்தனை தடவை சொல்றது ? …. . என அதட்டினார் தேவிகா.

அம்மா சொன்னா புரிஞ்சுக்கங்கம்மா…… அதான் சொல்றேன்ல ……..இப்பவே கல்யாணம் பண்ணி நான் என்ன பண்ண போறேன்?… ரெண்டு வருஷம் படிக்கிறேன் என்றாள் முடிவாக.

ஏய் சும்மா நிறுத்துடி, நீ படிக்கிற லட்சணம் …….எனக்கு தெரியும், கல்யாணத்துல இருந்து தப்பிக்க காரணம் சொல்லாத…..

“அம்மா புரியாம பேசாதம்மா “நான்தான் சொல்றேன்ல…..

அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த பாரதியின் அப்பா, இப்போது பேச ஆரம்பித்தார்.

மா பாரதி நீ உள்ள போ…..

அவளும் தன் தாயைத் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு உள்ளே போய் விட்டாள்.(அப்படியே தந்தை சொல் தட்டாத பிள்ளை என்று தவறாக நினைக்க வேண்டாம் சூழ்நிலையை பொருத்து அமைதியாக இருக்கிறாள்).

ஏங்க! எதுக்கு ,”இப்போ அவள உள்ளபோக சொன்னிங்க?…. நான் தான் அவ கிட்ட பேசிகிட்டு இருக்கேன்ல…

தேவி விடுமா, அவதான் இவ்வளவுக்கு படிக்கணும்னு ஆசைபடுறால்ல,” படிக்கட்டுமே ரெண்டு வருஷம் தானே”.

என்று தன் மனைவிக்கு புரியும்படி எடுத்துச் சொன்னார் பால்துரை

ஏங்க, நீங்க என்ன புரியாம பேசுறீங்க…. இப்பவே நம்ம கிருஷ்ணாவுக்கு வயசு 25 ஆச்சு, இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள அவனுக்கும் பாக்கணும் இல்ல……

இப்பவே இவளுக்கு பார்த்து முடிஞ்சா தான….. அவனுக்கும் கால காலத்துல பெண் பார்க்கலாம்….

ஆமாம்மா,” நீ சொல்றது சரிதான்.
ஆனால் ,அவளுக்கும் ஆசை இருக்கும் இல்ல……

ஏங்க அது என்ன?….

அவர் என்ன சொல்ல வந்தாரோ ……ஆனால் அதற்கு முன் துரை,சரிமா இப்போதைக்கு இந்த பேச்சை விடு….. பாவம் புள்ள கோவத்துல போயிடுச்சு, சாப்பிட்டு போய் பிள்ளையை படுக்க சொல்லு…. போ போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா…. ……

விடுங்க, வருவா….ஏ பாரதி வாடி வந்து சாப்பிட்டு போ……என்றார் தேவிகா.

அவளும் அமைதியாக சாப்பிட வந்து உட்கார்ந்தாள்

( கோவத்துல சாப்பிடாம இருப்பான்னு நினைச்சிங்களா?…….
யார் என்ன சொன்னாலும்? ஏன் கொலையை விழுந்தாலும்…..? நமக்கு சாப்பாடு தான் முக்கியம்….😁😂😃…)