மதுவின் மாறன் 3 & 4

“அந்த இஷ்யூ என்னாச்சு. சீக்கிரம் சால்வ் பண்ணி க்ளோஸ் செய்ய பாருங்க.  டைம்குள்ள முடிக்கலனா யூசர் எஸ்கலேட் பண்ணிடுவாங்க. அது பார்த்துக்கோங்க.  ஈவ்னிங் மீட்டிங் ஷெட்யூல் பண்ணியிருக்கேன். அப்ப டீடைல்லா சொல்றேன்”

டீம் லீடாய் அவளது பொறுப்புக்கேற்றார் போல் தனக்கு கீழ் வேலை செய்பவர்களின் வேலையை  மேற்பார்வை பார்த்தவளின் மனமோ பரபரப்பாய் அடுத்த அரை மணி நேரத்தில் நடக்கவிருக்கும் க்ளைண்ட் மீட்டிங்க்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள முனைப்பாய் இருந்தது.

கொஞ்சம் பதற்றம் கொஞ்சம் சோர்வு என அந்த மீட்டிங்குக்கு தயாராகி கொண்டிருந்தவளின் மனம் அந்த அழுத்தத்தை(ஸ்ட்ரஸை) கையாள முடியாமல் சற்று திணற,  அவள் சற்றாய் கண் மூடி தலை சாய்த்த நேரம் மாறனின் முகம் அவள் கண் முன் வந்து நின்றது.

முந்தைய நாள் வர்க் ஃப்ரம் ஹோம்(work from home)  செய்ததின் பலனாய் பல வேலைகள் நிலுவையில்(பெண்டிங்கில்) இருக்க,  இன்று அனைத்தும் சேர்ந்து அவளை வச்சி செய்தது.

அந்நேரம் தோன்றிய மாறனின் முகம் அவள் முகத்தில் காதல் புன்னகையை தோற்றுவிக்க,  கை தானாய் தன் கைபேசியில் இருந்த இணையத்தை (இன்டர்நெட்டை) உயிர்பித்து மாறனுக்கு வாட்ஸப் செய்ய சென்றது.

அவள் குறுஞ்செய்தி அனுப்பும் முன் அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வர,  “என்ன இன்னிக்கு என் செல்லகுட்டி கிட்டயிருந்து ஒரு மெசெஜும் இல்ல” என அனுப்பியிருந்தான்.

அவனின் குறுஞ்செய்தி பார்த்ததும் அவள் மனம் துள்ளி குதித்து அடங்கியது. சோர்வு பதற்றமெல்லாம் எங்கோ காணாமல் போய் தன்னை சுற்றிலும் அவன் மட்டுமே, தன்னிலும் அவனின் நினைவு மட்டுமே என மனம் மெய் அனைத்தும் அவனையே சுற்றி வந்தது.

“என் செல்ல கண்ணப்பா” என பல ஹார்ட்டின் மற்றும் கிஸ்ஸிங் ஸ்மைலிகளை அனுப்பியவள்,

“ஃபீலிங் சோ ஸ்ட்ரெஸ்டு பா” என பல சோக ஸ்மைலிக்களை அனுப்பினாள்.

“ஒன்னுமில்லடா தங்கம் யு கேன் ஹேண்டுல். எதையும் மனசுக்குள்ள எடுத்துட்டு போகாதே. தலைக்குள்ள வச்சி செஞ்சிட்டு அப்படியே தூரப்போட்டுட்டு வந்துடு. இதெல்லாம் பார்ட் ஆப் லைப் தான்.  இதுக்காக நம்ம உடம்பை கெடுத்துக்க கூடாது சரியா”

“என் செல்லகுட்டி ஹேப்பியா வீட்டுக்கு வந்தா,  உன் கண்ணப்பா நிறைய நிறைய கிஸ் கொடுப்பேனாம்” என பல கண்ணடிக்கும் ஸ்மைலிகளும் கிஸ்ஸிங் ஸ்மைலிக்களும் அனுப்பினான்.

அவளின் மனம் இறகில்லாமல் எங்கோ பறக்க, முகம் வெட்க புன்னகையை பூசிக் கொள்ள, சரியாய் அந்நேரம் அவளருகே அவளின் மேனேஜர் வந்து,  “ஆர் யூ ரெடி பார் த மீட்டிங்” என்றார்.

வானில் பறந்துக் கொண்டிருந்த மனம் தொபுகடீரென கீழே விழ பதறியடித்து எழுந்தவள், வாய்க்கு வந்ததை உளறி வைத்தாள்.

அவர் சென்றதும்,  “நான் வீட்டுக்கு வந்ததும் மீதி ரொமேன்ஸ் வச்சிக்கலாம்” என கண்ணடிக்கும் ஸ்மைலியுடன் மெசேஜ் அவனுக்கு அனுப்பியவள்,  சற்றாய் மனம் புத்துணர்வு பெற்றதாய் உணர்ந்தவள் தன் வேலையில் கவனத்தை செலுத்தலானாள்.

ஒரு மணி நேரம் கழித்து மீட்டிங் முடிந்து வந்து தன் கைபேசியை பார்க்க,

“இதெல்லாம் ரொமேன்ஸ்னு வெளில சொல்லிட்டு திரியாத மது பொண்ணே… அப்புறம் மாறன் இது தான் ரொமேன்ஸ்னு சொல்லி கொடுத்தாரானு ஊர் என்னை கேலி செய்யும்” என கேலி ஸ்மைலிக்களை அனுப்பிருந்தான்.

அதை கண்டவள் வாய் பொத்தி சிரிக்க,  அந்நேரம் அவளருகே வந்த சக பணியாளர், “என்ன மாறன் கூட ரொமேன்ஸ்ஸா?? கல்யாணமாகி ஒரு மாசத்துலயே பழைய ஜோடி ஆயிடுவாங்க.  நீ என்னடானா இன்னும் நியூலி மேரீடு எஃபக்ட்லயே சுத்திட்டு இருக்கியே?? என் புருஷனை மாறன் கிட்ட கத்துக்க சொல்லனும் போல” என அவள் தீவிரமாய் மதுவை கிண்டல் செய்ய,  மது வாய்விட்டு சிரித்தாள்.

மாலை சீக்கிரமாய் வீடு வந்த மது, தன்னிடம் இருந்த வீட்டு சாவியை வைத்து கதவை திறக்க போன நொடி,  கதவு தானாய் திறக்க, “என்னடா கண்ணப்பா ரொமேன்ஸ் பண்ண சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டியா??” என மைண்ட் வாய்ஸுக்குள் அவனிடம் பேசியவள் பொறுமையாய் உள்நுழைந்தாள்.

“ஹய்யா அத்தை!! வந்துட்டீங்களா??” என ஓடி சென்று அவர் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

“மாமியார் ஊருல இருந்து வந்துட்டாங்கனு சந்தோஷப்படுற ஒரே மருமக நீயா தான் இருப்ப”  என்றார் அவளின் மாமனார்.

மாமியார் மருமகள் இருவரும் கலகலவென சிரித்தனர்.

வழமைபோல் மாமியாரிடம் கதை கேட்டுக் கொண்டே அவருடன் இணைந்து இரவுணவை தயார் செய்தாள்.

மனஸ்தாபம் இல்லாத உறவு உலகில் இருக்க வாய்ப்பில்லை. தாய் தந்தையரே ஆயினும் நமது வாழ்நாளில் ஏதோ ஒரு சூழலில் ஏதோ ஒரு நிகழ்வு மனஸ்தாபம் வர வைத்துவிடும்.  ஆயினும் பெரும்பான்மையான தாய் தந்தையர், மகள் அல்லது மகனின் நலனை மனதில் கண்டு  அதனை வெளிக்காட்டாது இருந்துவிடுவர்.

அவ்வாறு இருக்கையில் மாமியார் மருமகள் மத்தியில் மனஸ்தாபம் வராமல் இருக்குமா என்ன??

ஆம் வந்தது. அதற்கு மாறனே காரணமாகவும் அமைந்தான்.

பொதுவாகவே மகனை பெற்ற தாய்மார்கள் அனைவருக்கும் மகனுக்கு திருமணமான பிறகு பொசசிவ்னஸ் வந்துவிடும்.

மகனுக்கு தான் முக்கியமில்லாது மனைவி தான் முக்கியமாகி போய்விட்டதாய் மாயை தோன்றி மனதை அறுக்கும். அதுவே திருமணமான மாமியார் மருமகள் பிரச்சனைக்கு காரணமாக அமையும்.

அவ்வாறோர் பிரச்சனை தான் இவர்களுக்கும் வந்தது. ஆனால் அது திருமணத்திற்கு முன்பே வந்தது.

திருமணம் நிச்சயித்த நாளிற்கு பிறகு பெங்களூருக்கு தொழில் கவனிக்க சென்ற மாறன், தினமும் நம் வாணியிடம் அலைபேசியில் காதலை வளர்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு மாதமாகிய கால நிலையில் வாணி மாறனிடம் பேசிக் கொண்டிருக்க,  “அம்மாக்கு என்னாச்சுனு தெரியலை. வர வர ரொம்ப தான் என் கிட்ட சண்டை போடுறாங்க” என்றவன் அவளிடம் கவலையாய் கூற,

“எப்ப பேசுனீங்க அத்தைட்ட”  என்றாளவள்.

“ஹ்ம்ம் பேசி இரண்டு நாள் இருக்கும்” என்றவன் கூற,

“என்னது இரண்டு நாளா… அப்புறம் சண்டை போடாம… கொஞ்சுவாங்களா??” என்றாள்

“நீ  வேற… அவங்க சண்டை போடுறாங்கனு தான் பேசாம இருக்கேன். நான் எப்பவுமே பெங்களூர்ல இருக்க நேரம், அம்மாகிட்ட அப்பப்ப தான் பேசுவேன். இப்பவும் அப்படி தான் பேசுறேன்.  என்னமோ இப்ப நான் அவங்களை கண்டுகிறதே இல்லங்கிறது போல பேசுறாங்க. என்ன தான் இருந்தாலும் அம்மா என்னால மனசு கஷ்டபடுறாங்கன்ற எண்ணமே மனசை கஷ்டமாக்குது. என்னனு கேட்டாலும் முழுசா எதுவும் சொல்ல மாட்டேன்றாங்க. நீ என்னனு கேட்டு பாரேன் மது”  என்றான்.

“எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு பொசசிவ்னஸ் ஆயிருக்கும்” என்றாள் மது.

“என்னது பொசசிவ்னஸ்ஸா??” என இவன் ஆச்சரியமாய் கேட்க,

“ஆமாங்க.  அம்மா பையன்குள்ள இருக்க பொசசிவ்னஸ் செம்ம க்யூட்டா இருக்கும்” என்றவள் ரசித்து கூற,

“என்னைய வச்சி காமெடி கீமிடி ஒன்னும் பண்ணலையே நீ” என்றிவன் கலாய்க்க,

“அட உண்மைய சொன்னா கிண்டல் செய்றீங்க. பொதுவாவே பொண்ணுங்களுக்கு யார் மேல அஃபெக்ஷன் இருந்தாலும்  பொசசிவ் வரும். அதுலயும் சொந்த பையன் மேல அம்மாக்கு இருக்க பாசம்,  அதை பங்கு போட மருமக வந்துட்டா போதும்… அவங்களை மீறி அவங்க மனசுக்கு மருமக பையனை தன்னை விட்டு பிரிக்க வந்த ஆளா தான் தெரிவா…  இதுல நீங்க இப்பவே இரண்டு நாள் ஒரு தடவை பேசினா,  அவகிட்ட பேச நேரமிருக்கு என் கிட்ட பேச நேரமில்லையானு அவங்க நினைச்சிருப்பாங்க”

“நான் நம்ம நிச்சயத்துக்கு முன்னாடியே பல நாட்கள் ரொம்ப வேலை இருக்கும் போது அப்படி இரண்டு நாளைக்கு ஒரு தடவை பேசிருக்கேன் மது”

“அது அப்ப நீங்க பேசாமலே இருந்தாலும் தோணாதுங்க.  இப்ப நான் இருக்கேன்ல. அவங்க என் மகன் என் உரிமைனு நினைப்பாங்க. நானும் என் புருஷன் என் உரிமைனு சண்டை போட்டுட்டு இருந்தா நல்லாவா இருக்கும். அவங்க பெத்து போடலனா எனக்கு இப்படி ஒரு புருஷனே கிடையாது தானே. அதனால நான் விட்டு கொடுக்கிறேன். கொடுக்கனும். இன்னிலருந்து தினமும் அத்தைகிட்ட பேசுறீங்க.  அவங்க கிட்ட பேசின பிறகு தான் என்கிட்ட பேசுறீங்க.  அப்புறம் உங்களுக்கு நானும் அத்தையும் இரண்டு கண்ணா இருக்கலாம் ஆனா எப்பவும் யார் முன்னாடியும் அம்மாவ விட பொண்டாட்டி தான் பெரிசுனு தூக்கி வச்சி பேசாதீங்க. முடிஞ்ச வர அம்மா எவ்ளோ முக்கியம் எவ்ளோ பாசம் வச்சிருக்கீங்கனு அடிக்கடி காமிங்க.  இதெல்லாம் மாமியார் மருமகள் பிரச்சனைய வெகுவாய் குறைக்கும் யுக்திகள்” என மது தன் உரையை முடிக்க,

“சரிங்கம்மணி… நீங்க சொன்னபடியே செஞ்சிடலாம்.” என இவன் பயந்தவனாய் பாவமாய் பேச,
அவள் வாய் விட்டு சிரித்தாள்.

இவ்வாறு தான் விட்டு கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டு கொடுத்து அவ்வப்போது மாமியாரின் திட்டிற்கு மறுவார்த்தை பேசாது அமைதியை கடைபிடித்து ஒருவாறு சண்டை வராமல் மாமியாரிடம் நட்பை வளர்த்துக் கொண்டாள் மது.

இன்று தன் மாமியாருடன் சேர்ந்து சமையல் செய்தவள்,  அனைவரும் சேர்ந்து உண்ணலாம் எனக் கூறி இவளே பரிமாறினாள்.

இரவு அனைத்து வேலையும் முடித்து அவர்களின் அறைக்குள் அவள் நுழைந்ததும் பின்னிருந்து அவளை அணைத்திருந்தான் மாறன்.

“வெற்றிப்பா ரொம்ப தலைவலிக்குது தைலம் தேய்ச்சி விடுறீங்களா” என்றாள் மது.

மாறன் அவளை தனது மடியில் படுக்க வைத்து தைலம் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தான்.

கண்மூடி அவன் கரத்தின் அழுத்தம் தரும் சுகத்தினை, அது நீக்கும் தன் வலியை, அவனின் ஸ்பரிசத்தை சுகித்திருந்தாள் மது.

தைலம் தேய்த்துவிட்ட வாறே, ” ஆமா ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்சன் மது.  உன் ஃப்ரண்ட்ஸ்லாம் பேசுறாங்களா?? ஆஷிக் என்கிட்ட பேசியே பல மாசமாச்சே??” என்றிவன் கேட்க,

அவனின் அக்கேள்வியில் கண்ணை திறந்த மதுவின் விழிகள் வேதனையை பிரதிபலித்தது.

— தொடரும்

அத்தியாயம் 4:

ஹே எத்தன சந்தோசம்
தினம் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால

நீ சிந்துற கண்ணீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆளு

என்னை பார் நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா

ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே

“ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே” என்று  நெடுஞ்சாலையில் தங்களது காரில் பெருஞ்சத்தத்துடன் பாட்டை வைத்துவிட்டு அதனுடன் தானும் சேர்ந்து பாடிக் கொண்டு குதூகலமாய் பயணத்திருந்தாள் மதுரவாணி தன் கணவன் வெற்றிமாறனுடன்.

அவ்வப்போது தனது பெங்களுர் கிளை அலுவலகத்திற்கு மாறன் செல்வது போல் தான் இப்பயணமும் அவன் திட்டமிட்டிருந்தான். 

திருமணத்திற்கு பின் மாறன் இல்லாது இருக்கவியலாது என தானும் அவன் செல்லும் இடமெல்லாம் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள் வாணி.

“நீ என்பதே நான் தானடி
நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா

தாழ் திறந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பார்த்திருந்தோம்

நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி”

அடுத்ததாய் ஒலித்த இப்பாட்டில் அவளின் நினைவுகள் தனது தோழிகளுடன் பெங்களூர் தியேட்டரில் இப்படத்தை பார்த்த நாட்களுக்கு பயணிக்க,  காரை இயக்கி கொண்டிருந்த மாறனின் தோளில் சற்றாய் சாய்ந்தவள் முந்தைய நாள் மாறனிடன் நடந்த தனது நண்பர்களை பற்றிய பேச்சு வார்த்தைக்கு செல்லலானாள்.

அவன் மடியில் படுத்திருந்த அவளின் கண்கள் கலங்கியிருக்க, “என்னாச்சு மது?? தலை ரொம்ப வலிக்குதா?”  என்றானவன்.

“இல்லப்பா.  என் ஃப்ரண்ட்ஸ நினைச்சி பார்த்தேன்.  ஒரு காலத்துல என்னுடைய தினசரி நடவடிக்கை நிகழ்வுகள் எல்லாமும் அவங்களுக்கு தெரியாம இருக்காது.  அப்படி எல்லாத்தையுமே பகிர்த்துட்டு வாழ்ந்துட்டு இருந்தோம். அவங்கலாம் இல்லாம என் வாழ்க்கை எப்படி இருக்கும்னுலாம் நினைச்சு நான் கவலைப்பட்டிருக்கேன். ஆனால் இப்ப அவங்க ஞாபகங்கள் எல்லாத்தையும் நினைவுகளாய் நெஞ்சுல வச்சிட்டு அப்பப்ப நினைச்சு சிரிச்சிட்டு அழுதுட்டுனு வாழ பழகியாச்சு.”

“அவங்கவங்களுக்குனு வாழ்க்கை இருக்கு.  வாழ்க்கை இழுத்துட்டு போற போக்குல போய்ட்டு இருக்காங்க.  யாராவது ஒருத்தர் அப்பப்ப மீட் பண்ணலாம் முயற்சி செஞ்சி ப்ளான் செஞ்சா ஒழிய எல்லாரும் இணைவது பார்ப்பது பத்திலாம் யாருக்கும் எண்ணமே வராது.  மேரேஜ் முன்னாடி வரைக்கும் அப்பப்ப அதை நான் செஞ்சிட்டு இருந்தேன்.  இப்ப எனக்கும் அந்த மைண்ட் செட் போச்சு. அவங்களா வந்து பார்க்கலாம்னு சொன்னா ப்ளான் பண்ணுவோம்”

“ஒரு உண்மைய சொல்லவா வெற்றிப்பா.  ஆணாயிருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி,  அவங்க ஃலைப்ல அவங்க அவங்களா இருந்தது வாழ்ந்தது அவங்க ஃப்ரண்ட்ஸ் கூட வாழ்ந்த நாட்களா மட்டும் தான் இருக்கும். பெற்றோரோட இருக்கும் போது அவங்களுக்காக பார்த்து அவங்களுக்கா இருப்போம்.  ஆஃப்டர் மேரேஜ் கணவன் மனைவி பிள்ளைங்க அவங்க பிடித்தம்னு அவங்களுக்காக வாழ்ந்துட்டு இருப்போம். ஆனா ஃப்ரண்ட்ஸ் கிட்ட அப்படி எந்த ரெஸ்டிரிக்ஷனும் இருக்காது” என்றவள் கூறிய நொடி,

“ஏன் மது??  எனக்காகனு உனக்கு பிடிக்காத எதையாவது செய்றியா?? என்கிட்ட நீ நீயா இல்லையா??” என்றவன் வருத்தத்துடன் கேட்க,

மென்னகை புரிந்தவள்,  அவன் அருகினில் அமர்ந்து மார்பில் சாய்ந்து அவன் சட்டை பட்டனை திருகி கொண்டே,  “இந்த நாலு செவுத்துக்குள்ள இந்த ரூமுக்குள்ள அதுவும் உங்க கிட்ட நான் கண்டிப்பா நானா தான் இருக்கேன்.  குட்டி குட்டி விஷயத்துக்கும் சண்டை போட்டுட்டு பொசசிவ் ஆயிட்டுனு பெங்களுருல இருந்த அந்த குட்டி பொண்ணா தான் உங்களை இம்சை செஞ்சிட்டு இருக்கிற பொண்ணா தான் நான் இருக்கேன்.”

“ஆனா வெளியில இந்த ஏழு வருஷம் வாழ்க்கை எனக்கு கத்து கொடுத்த விஷயங்கள் விவரங்கள்லாம் சேர்த்து மத்தவங்க இடத்துலருந்து யோசிக்க ஆரம்பிச்சி என்னோட பொசசிவ் எல்லாம் மத்தவங்க கிட்ட சுத்தமா இல்லாத அளவுக்கு மெச்சூர்டு ஆளா மாறியாச்சு.  ஆனா உங்ககிட்ட அப்படி நானே நினைச்சாலும் மெச்சூர்ட்டாலாம் நடத்துக்க முடியாது சொல்லிட்டேன்.” என்றிவள் கூறி அவனின் தாடியை கடித்திழுக்க,

“ஸ்ஸ்ஸ்ஆஆஆ” என அலறியவன்  பதிலுக்கு அவளின் கன்னத்தை சற்றாய் கடித்தவன் அவளுள் மூழ்கி போனான்.

வழியில் ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் உண்ணவென மாறன் காரை ஓரமாய் நிறுத்திய சமயம் தன் நினைவுகளிலிருந்து நடப்புக்கு வந்தாள் வாணி. தூரமாய் இருவர் சண்டையிடுவது மாறன் கண்ணுக்கு புலப்பட்டது.

ஒரு சிறுவனை இன்னொரு பெரிய ஆள் அடித்துக் கொண்டிருக்க, அனைவரும் கூடி பார்த்திருந்தனர்.

தன்னை சுற்றி எவ்வித அராஜக நிகழ்வு நிகழ்ந்தாலும் அது தன் பார்வைக்கு வரும் பட்சத்தில் அங்கு ஆஜாராகி அந்த பிரச்சனையை தீர்க்க அல்லது தடுக்க முற்படுவான் மாறன்.

தனக்கென்ன வந்தது என்று ஒதுக்கி செல்லும் குணமுமில்லை.  அடிதடிக்கு அஞ்சி ஒதுங்கி செல்லும் ஆளுமில்லை அவன்.

வாணி அவனுக்கு நேரெதிர் பதமாய் அடிதடி என்றாலே ஓடி ஒளிந்துக் கொள்ளும் சூறாவளி.

ஆக தற்சமயம் இவ்வாறு ஒரு நிகழ்வை கண்டதும் ஓடிச்சென்று அவ்விடத்தை அடைந்து அந்த சிறுவனை தன் பக்கம் இழுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான் அவன்.

இவள் இறங்குவதற்குள் அவன் ஓடியிருக்க,   அவனின் ஓட்டத்தை பார்த்து தானும் பின்னே செல்ல இவள் எத்தனிக்க,  சற்று தொலைவு சென்றிருந்தவன்,  திரும்பி பார்த்து “மது காருக்குள்ளேயே இரு. இறங்கி வராத”  என அதட்டலாய் கூறி ஓடியிருந்தான்.

“அய்யோ இன்னிக்கு என்ன பிரச்சனை  பார்த்து பொங்கிட்டு போயிருக்காரோ தெரியலையே?? நான் தான் இங்க அவருக்கு என்னச்சோ ஏதாச்சோனு பயந்துகிட்டு இருக்கனும்.  அவரு ஜாலியா பஞ்சாயத்து செஞ்சிட்டு வருவாரு” என மனதிற்குள் பேசியவளாய்  அவன் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அங்கு அந்த உணவகத்தின் முதலாளி அச்சிறுவனை அடித்திருக்க,  அவனை காப்பாற்றிய மாறனை பார்த்ததும் அந்த முதலாளிக்கு ஏக கடுப்பு. 

“எதுக்கு சார் இந்த  பையனை இப்படி அடிக்கிறீங்க?”  என்று மாறன் கேட்க,

“வண்டியில முட்டையை எடுத்துட்டு வரேனு எல்லா முட்டையும் வீணாக்கிட்டு வந்திருக்கான்.  இவனை வச்சி கொஞ்ச சொல்றீங்களா”   என்று அவர் இன்னும் அதே கடுப்புடன் உரைக்க,

“அதுக்காக இப்படி எல்லார் முன்னாடியும் அடிப்பீங்களா சார்.  இந்த பையனை நீங்க இப்படி வேலைக்கு வச்சதே தப்பு.  சைல்ட் லேபர்னு உங்க மேலே கம்பெளைணட் கொடுத்து உங்க கடைக்கு சீல் வைக்கிறேன் பாருங்க” என்றான் மாறனும் அடக்கப்பட்ட கோபத்துடன்.

அவனின் கைக்குள் அழுதுட்டிருந்த அச்சிறுவனும், “புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்  இவர”  என்றான் கடுங்கோபத்துடன்.

மாறன் தன் கையிலுள்ள போனில் நம்பரை அழுத்த போக,  அந்நேரம்  அங்கு வந்தான் அவன். 

“என்னங்க சார் நீங்க?? இது அவங்களுக்குள்ள அப்பா பையனுக்குள்ள இருக்க பிரச்சனை.  இதுக்கு எதுக்கு போலீஸ் கம்பிளைண்ட்னு நீங்க பிரச்சனைய பெரிசாக்குறீங்க??” என்றான் அப்புதியவன்.

அந்த புதியவன் தான் அந்த பெரியவர் அடிக்கும் போதே,  இப்பையன் அடிக்காதீங்க அப்பா என்று கூறியதை கேட்டிருந்தானே, ஆகையால் தான் இவன் பஞ்சாயத்து செய்ய உள் நுழையாது இருந்தான்.

“என்னது அப்பா பையனா??” என அதிர்ச்சியடைந்த மாறன்,  அவனின் பிரச்சனைய பெரிசாக்குறீங்க என்ற பதத்தில் கடுப்பாகியவன், “அப்பா பையனா இருந்தாலும் இப்படி தான் சின்ன பையனை அடிப்பாங்களா??” இவ்ளோ நேரம் வேடிக்கை தானே பார்த்துட்டு இருந்தீங்க??  இப்ப என்ன வக்காலத்து வாங்க வந்துட்டீங்க?”  என்று அப்புதியவனை பார்த்து நக்கலாய் மாறன் கேட்க,

இப்பிரச்சினை அப்பா பையன் பிரச்சனையிலிருந்து இவர்களுக்குள்ளான சண்டையாய் உருமாற,  பின் அனைவரும் கூடி பேசி இவர்களை சமாதானப்படுத்தி அவரவர் வேலையை பார்க்க அனுப்பினர்.

அவனிடம் பேசிய கடுப்புடனே காரினருகில் வந்த மாறனை, ” ஊர்  வம்பெல்லாம் எதுக்கு விலைக்கு வாங்கிட்டிருக்கீங்க”  என்றிவள் ஆரம்பித்த நொடி, 

“கொஞ்ச நேரம் வாய மூடிட்டு வரியா மது.  இப்ப தான் அங்க ஒருத்தன் அட்வைஸ் பண்றேன்ங்கிற பேர்ல சீன் போட்டுட்டு போனான். நீயும்  திரும்ப ஆரம்பிக்காத”  என மாறன் சீற்றமாய் உரைக்க,

மாறன் கோபமாய் இருக்கும் நேரம் எவர் எது பேசினாலும் காட்டமாய் தான் அவனிடம் பதில் வரும்  என்பதை அறிந்ததினால்,  அவனை  திசை திருப்பும் முயற்சியில் இறங்கினாள்.

” சரி எனக்கு பசிக்குது. சாப்பிட போகலாமா??” என்றிவள் கேட்டதும்,  அவளின் பசி என்ற மொழி இவனின் கோபத்தை சற்று மட்டுபடுத்த,

இருவரும் இறங்கி அங்கிருந்த மற்றொரு உணவகத்திற்கு சென்றனர்.

அங்கு உணவு ஆர்டர் கொடுத்து இருவரும் அமர்ந்திருந்த சமயம்,  அப்புதியவன்,  “ஹே மதுரா பொண்ணு” என்று வாணியின் அருகினில் வந்தமர்ந்தான்.

“டேய் மருதா!!” என்றிவளும் அவனை பார்த்து நெகிழ்ந்து குதூகலிக்க,

மாறன் இவர்களை கண்டு உறுத்து விழித்திருந்தான்.

— தொடரும்