நெஞ்சோடு வலம் வா தேவதையே …

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் -9 

மனைவியின் பயத்தை கண்டு சிரிப்பு தான் வந்தது, அதே சமயம் தன் மேலேயே கோபமும் வந்தது.

“சிம்பிள், கண்டிஷன் நம்பர் ஒன்று. நீ இனிமே பட்டினி கிடக்க கூடாது. வேளா வேளைக்கு சரியா சாப்பிடணும். கண்டிஷன் நம்பர் டூ. எப்பொழுதும் அழுதுக்கிட்டு ரூமிலே அடைஞ்சி கிடக்க கூடாது. வாரத்தில் ஒரு நாளாவது என்னுடன் வெளியே வரணும், அது ஷாப்பிங்காக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி. நான் வாங்கி கொடுப்பதை நீ வேண்டாமென்று சொல்ல கூடாது. இவ்வளவு தான். இதுக்கெல்லாம் ஓகேன்னா நாம ப்ரெண்ட்ஸா இருக்கலாம்…”என்று கையை நீட்டினான் குறும்பான புன்னகையுடன்.

கணவன் ஏதோ வில்லங்கமான கண்டிஷன்ஸ் போட போகிறான் என்று உள்ளுக்குள் குமைந்தபடி கேட்க ஆரம்பித்தவள் அவன் சொல்ல சொல்ல உள்ளுக்குள் கோபத்தையும் மீறி சிரிப்பு தான் வந்தது. ஆயினும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமைதியாக கணவனையே பார்த்தாள்.

“சொல்லு ஸ்ரீ என் கண்டிஷன்ஸ் ஓகே தானே, நாம ப்ரெண்ட்ஸா இருப்பதில் உனக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே …? 

“இருக்கு, எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு. அதுக்கு நீங்க ஒத்துக்கொண்டால் எனக்கு ஆட்சேபனை இல்லை…”

சில நொடிகள் முகவாயை தடவியவன்,”ஓகே சொல்லு என்ன கண்டிஷன்ஸ்…? 

“உங்களை மாதிரி இரண்டே கண்டிஷன்ஸ் தான்.முதல் கண்டிஷன் உங்க காதலியை பற்றி என்னிடம் பேசக்கூடாது. அவள் இந்த வீட்டு பக்கம் வரக்கூடாது நான் இங்கிருக்கும் வரை. இரண்டாவது கண்டிஷன் வீகெண்ட்டில் நான் சமைப்பதை என்னோடு சேர்ந்து சாப்பிடணும். அதே சமயம் என் சுதந்திரத்தில் தலையிட கூடாது. இதுக்கு உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான் …”என்றாள் கெத்தாக. 

அத்வைதோ கொஞ்சம் கூட தயங்கவில்லை. மாறாக வாய்விட்டு சிரித்தான். 

“இது தான் உன் கண்டிஷனா? சைல்டிஷா இருக்கு. எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. டீல் ஓகே …”என்று கையை நீட்ட ஸ்ரீயும் அவனின் கையை பிடித்து குலுக்கினாள்.

“சோ இன்று வீக்கெண்ட். இன்றிலிருந்து நம் கண்டிஷன்ஸை அப்பளை செய்ய ஆரம்பிச்சிடலாம். சரி உன் கண்டிஷன் படி உன் சமையலை நான் சாப்பிடணும். ஏதாவது வேண்டுமென்றால் சொல் நான் போய் வாங்கிட்டு வர்றேன். இல்லையென்றால் என்னுடன் வா இரண்டு பேரும் மார்க்கெட் போய் வாங்கிட்டு வந்திடலாம்…” என ஸ்ரீ புன்னகையுடன் தலையை உருட்டினாள். 

இருவரும் ஒன்றாக மார்க்கெட் சென்று சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். ஸ்ரீ மறுக்க மறுக்க அத்வைத் அவளுக்கு சமையலில் உதவி செய்ய ஸ்ரீயின் மனதிலிருந்த இத்தனை நாள் இருந்த இறுக்கம் மறைந்து லேசானது. கணவனுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதென்று தெரியாததால் அவனிடமே கேட்டு தான் எல்லாவற்றையும் வாங்கி வந்திருந்தாள். 

சமைத்து முடிப்பதற்குள் ஸ்ரீக்கு களைத்து போனது. சமைக்க தெரியமென்றாலும் இதுவரை வீட்டில் சமைத்ததே இல்லை. பத்மாவும் மகளை சமைக்க விட்டதில்லை. அவ்வப்பொழுது காஃபி தயாரிப்பது, தோசை ஊற்றுவது, சட்னி அரைப்பது, காய்கறிகள் வெட்டி கொடுப்பது என்று சின்ன சின்ன வேலைகளை மட்டும் செய்ய அனுமதிப்பார். அதுவும் அவளுக்கு திருமணம் முடிவானதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக எந்த வேலையையும் செய்ய விடவில்லை. மகளை ஒரு இளவரசி மாதிரி நடத்தினார் தாய். அதனால் என்னவோ இப்பொழுது முழு சமையலும் செய்யவும் உடல் களைத்து போனது. முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்ப சேலை முந்தானையால் ஒற்றிக்கொள்ள அத்வைதின் விழிகள் மனைவியை யோசனையுடன் நோக்கியது. 

பிரிட்ஜிலிருந்து சர்பத் சிரப் எடுத்து ஐஸ்வட்டர் கலந்து கொடுத்தான் குடிக்க சொல்லி.

“சாரி சமையல் செய்து பல மாசமாச்சு…”என்று அசடு வழிய அத்வைத் சிரிப்பை மென்றான். 

“சாப்பாடு ரெடி, சாப்பிடலாமா …”

“கண்டிப்பா சாப்பிடலாம், அதற்கு முன்னே நீ ரெப்பிரேஷ் செய்துட்டு வா. ரொம்ப டயர்டா இருக்கே …”என்றவன் மனைவி சமைத்ததை டேபிளின் மீது கொண்டு போய் வைக்க ஸ்ரீ புன்னகையுடன் அவளின் அறைக்கு சென்றாள். 

மனைவி வருவதற்குள் கிச்சனை சுத்தம் செய்து கழுவ வேண்டிய பாத்திரங்களை டிஷ் வாஷரில் போட்டுவிட்டு, ஹால் சோஃபாவில் அமர்ந்து டிவியை உயிர்ப்பிக்க அவனின் செல்போன் சிணுங்கியது. 

டிஸ்பிளேயில் நீதாவின் படம் ஒளிர, புன்னகையுடன் உயிர்ப்பித்து காதில் வைத்தான். 

“ஹ்ம்ம் சொல்லு நீதா, என்ன செய்யறே. நேற்று எங்கே போனே…? 

“டேய் நான் பார்ட்டிக்கு கிளம்பிட்டு இருக்கேன். நான் திரும்பி வர ஒரு வாரமாகும். அதனால் என்னை தேடி வீட்டுக்கு வராதே. அதை சொல்லத்தான் போன் செய்தேன். சரி நேரமாச்சு வண்டி வந்துடிச்சி. திரும்பி வந்ததும் உன் கேள்விகளுக்கு பதில் சொல்றேன்…”என்று அவனை பேசவிடாமல் தகவலை சொல்லிவிட்டு தொடர்பை துண்டிக்க அத்வைத் அதிர்ந்து போனான். 

‘பார்ட்டி எங்கே, யாருடையது, எதற்காக என்ற தகவலை சொல்லாமல் இதென்ன கேவலமான ஒரு விளக்கம். நேற்றும் வீட்டில் இல்லை, பார்ட்டிக்கு சென்றுவிட்டாள் என்ற தகவல் தான் கிடைத்தது. இன்றும் பார்ட்டி, அதுவும் ஒரு வாரம் என்றால் என்ன அர்த்தம். யாருடன் பார்ட்டிக்கு போகிறாள் என்ற கோபம் உண்டாக நீதாவின் நம்பருக்கு அழைத்தான். 

நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் வேறொரு தொடர்பில் இருக்கிறார் என்ற ரெக்கார்டட் வாய்ஸ் வர அத்வைதின் பற்கள் நறநறத்தது. 

‘என்னாச்சு இவளுக்கு ஏன் என்னை அவாய்ட் செய்கிறாள்…’ என்ற கோபம் உண்டானது. 

அவளுடன் தங்கியிருக்கும் ஷாலினிக்கு அழைத்து நீதாவை பற்றி விசாரித்தான். 

“உங்களிடம் அவள் சொல்லலையா அத்வைத், அவள் நரேனுடன் பெங்களுர் போயிருக்கிறாள், ஹாஸ்பிடலுக்கும் ஒரு வாரம் லீவ்…”

“ஓ யார் நரேன் …? 

“என்ன இப்படி கேட்கறீங்க, நரேன் பற்றி கூடவா சொல்லலை. அவர் நீதாவின் பெஸ்ட் ப்ரெண்ட்…”

“என்ன பெஸ்ட் ப்ரெண்ட், எனக்கு தெரியாதே இப்படி ஒரு ப்ரெண்டை. நீதா சொன்னதே இல்லையே…”

“இஸ் இட், நரேனும், நீதாவும் ஒன்றாக தான் பெங்களூரில் படிச்சாங்க. அவர் அங்கேயே டாக்டரா ஒர்க் பண்றார். என்ன காரணமோ நீதா இங்கே வந்து டாக்டரா பிராக்டிஸ் செய்கிறாள். போன வாரம் நரேன் வந்தார். அதன் பிறகு தினமும் போனில் பேசிக்கிறாங்க. இன்று கூட அவளுடன் டேட்டிங் போறதா என்னிடம் பேச்சு வாக்கில் சொன்னார். ஏன் இதுவரை நரேன் பற்றி நீதா சொன்னதே இல்லையா …”என்று வெள்ளேந்தியாக எல்லாவற்றையும் கூற அத்வைத் இறுகி போய் அமர்ந்திருந்தான். 

யாரோ அவன் தோளில் கைவைக்கவும் தன்னை சுதாரித்து, அப்புறம் அழைக்கிறேன் என்று கூறி தொடர்பை துண்டித்தவனின் முகம் ரத்த பசையின்றி வெளுத்து போனது. 

இத்தனை நேரம் சரியாக இருந்த கணவன் தான் அழைப்பது கூட தெரியாமல் கல்லாய் சமைந்து போய் அமர்ந்திருப்பதும், முகம் உணர்ச்சிகளை தொலைத்து போயிருப்பதையும் அவள் விழிகள் நகலெடுத்தது. அழைத்து பார்த்தவள் அவன் தன்னிலைக்கு வராமல் இருக்கவும், அவன் தோளை சிறு தயக்கத்துடன் மென்மையாக தொட்டு உசுப்பினாள். 

“என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க, போனில் யார்…? என்றாள் தயங்கி தயங்கி. 

மனைவியின் கேள்வியில் விழிகளை மூடி தன்னை நிதானித்து முகத்தில் வலிய புன்னகையை பூசினான்.

“நத்திங், வா சாப்பிடலாம்…”என்று எழுந்துச் சென்று டைனிங் டேபிளில் அமர, ஸ்ரீ அவனுக்கும் பரிமாறி, தனக்கும் பரிமாறிக்கொண்டாள். 

இருவரும் மௌனமாக சாப்பிட, ஸ்ரீயின் விழிகள் கணவனை நோக்கி நிமிர்ந்தது. அவனோ ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்க அவளின் இதழ்களில் மெல்லிய புன்னகையின் சாயல்.

“உங்களுக்கு சமைக்க தெரியுமா…? என்றாள் திடிரென்று. 

சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து மனைவியை ஒரு நொடி கூர்ந்து பார்த்துவிட்டு, இல்லையென்று தலையசைத்தான். 

“இதுவரை சமையல் ரூம் பக்கம் போனதே இல்லை. நான் சமைத்ததே உனக்காக மட்டும் தான்…”என ஸ்ரீ விக்கித்து போனாள். 

‘எனக்காக சமைத்தாரா, இப்பொழுது கூட எனக்கு உதவிகள் செய்தாரே, அதுவும் எனக்காக மட்டும் தானா? கடவுளே இது என்ன மாதிரியான அக்கறை, இல்லை அன்பு. யோசிக்க யோசிக்க அவளுக்கு புரியவில்லை. 

“ஹ்ம்ம் சாப்பாடு நல்லா இருக்கு ஸ்ரீ…”என்று பாராட்ட மெல்லிய புன்னகையில் ஏற்றுக்கொண்டாள். 

மீண்டும் சில நொடிகள் மௌனமாக இருவரும் சாப்பிட்டு முடிக்க, அவளுக்கு பாத்திரங்களை ஒழித்து போட உதவி செய்தான். வேலை முடிந்து ஸ்ரீ அவள் அறையில் முடங்க எத்தனிக்க ஒரு நிமிஷம் என்று நிறுத்தினான்.

“ஈவ்னிங் வெளியே போகலாம், ஐஞ்சு மணிக்கு ரெடியா இரு…”என ஸ்ரீயின் விழிகள் அவனை கேள்வியாக நோக்கியது.

“இன்றைக்கு உங்க நீதாவுடன் வெளியே போறதா இரண்டு நாள் முன்பு சொன்னீங்களே, போகலையா…? என்று கேட்டு நிறுத்த அத்வைதின் முகம் கோபத்தில் ஜுவலித்தது.