சிந்தையில் பதிந்த சித்திரமே – 20 precap

“அப்போ நான் கையை வெட்டிக்கிட்ட பிறகு மட்டும் எப்படி உங்க மனசை மாத்திக்கிட்டீங்க? உங்க பயம் போயிருச்சா?” என்று கேட்டாள்.

“மனுஷனோட உயிரே இல்லாதப்ப நம்ம வலி எல்லாம் எம்மாத்திரம் நயனிமா? என் மேல் உள்ள காதலுக்காக நீ உயிரையே கொடுக்கத் துணியும் போது, தேவையில்லாம என் மனசை நானே குழப்பிக்கிட்டு உன்னை எதுக்கு வருந்த வைக்கணும்னு தோணுச்சு.

நாம சேர்ந்து இருந்தால் உனக்கு வலி வரும்னு நினைச்ச நானே உன்னை விலக்கி வச்சாலும் அதே வலியைத் தானே நீ அனுபவிப்பன்னு யோசிக்காம போயிட்டேன். அப்போ எப்படி இருந்தாலும் நான் உனக்கு வலியைத் தான் தந்துட்டு இருக்கேன்.

இதே என்கூட நீ இருக்கும் போது வரும் வலிக்கு கூட நம்ம காதல் அதுக்கு மருந்து போட்டுடும். ஆனா நீ ஒருபக்கம், நான் ஒரு பக்கம் பிரிஞ்சி போன பிறகு வரும் வலி மரணத்தை விடக் கொடுமையா இருக்கும்னு தோன்றியது. அதனால் தான் என் தேவையில்லாத பயத்தை எல்லாம் தூக்கிப் போட்டுட்டேன்…” என்றவன் தோளில் இதமாகச் சாய்ந்து கொண்டாள் நயனிகா.

நாளை மாலை 4 மணிக்கு பதிவு. நான் fb யில் போஸ்ட் போடும் முன் 4 மணிக்கு தளத்தில் படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம்.

படித்து விட்டு அப்படியே சொல்லாமல் இங்கேயே கருத்து சொல்ல சுலபமான வழி உள்ளது. உங்கள் கருத்துக்களையும் சொல்லி விட்டு செல்லுங்கள். போன பதிவிற்கு எல்லாம் கமெண்ட் சரியாக வரவில்லை.

தினம் எபி சிலர் கேட்குறீங்க. நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் திங்கள், புதன், வெள்ளி மட்டுமே பதிவு. இந்தக் கிழமைகளில் சரியாக 4 மணிக்கு பதிவு வந்துவிடும்.