சர்வமும் அடங்குதடி உன்னிடம் – 2

தாலியை போட்டவுடன் ரூபாவின் கையை பிடித்து இழுத்து வந்து மணமேடையில் கண்கள் சிவக்க அமர்ந்திருந்த அஜயை கண்டுகொள்ளாமல் அக்னியை வலம் வந்தான் ரூபா தனக்கு நடந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் ராஜாவின் கைப்பிடிக்குள் தன் கை இருப்பதை கூட உணராமல் ராஜாவின் கை பிடியிலேயே நிற்க்க.
அதற்குள் கல்யாண மண்டபத்தில் சுற்றியிருப்பவர்கள் உறவினர்களின் சலசலப்பு ஆரம்பமானது.

“யாரும் அதிர்ச்சியாக வேண்டாம். நானும் ரூபாவும் காதலிச்சோம் நான் சுந்தர் சார் கிட்ட முறையை பொண்ணு கேட்டேன். அவர் எங்க கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கல. அதனாலதான் இந்த அதிரடியான முடிவு. அப்படித்தான சுந்தர் சார்.” ராஜா சுந்தரரைப் பார்த்து கேட்க.

ராஜாவின் கம்பீரக் குரலில் அதிர்ந்து சுயநினைவு பெற்று ரூபா அவன் கைப் பிடியில் இருந்து தன் கையை விடுவிக்க போராட அவன் பிடி இறுகியதே தவிர இம்மி அளவும் அசைக்க முடியவில்லை.

ராஜாவின் கேள்வியில் சுந்தர் அதிர்ந்து கோபத்துடனும் அதேசமயம் குழப்பத்துடன் இருக்க. ராஜாவின் பிஏ மணி சுந்தரின் காதில் ஏதோ கிசுகிசுத்தான்.

“என்ன மாமா நான் சொல்லுறது சரிதானே ஏன் சிலை மாதிரி நிக்கறீங்க பதில் சொல்லுங்க.” ராஜாவின் குரல் அழுத்தமாக ஒலித்தது.

மணி சொன்ன விஷயத்தில் சுந்தர் அரண்ட் போய். “ம்ம்ம் ஆமா ஆமா இவரு மேல எந்த தப்பும் இல்லை. என் மேல தான் தப்பு.” என சுந்தர் சொன்ன விஷயத்தில் முதன்முறை சுமதிக்கு கோபம் வர.
அஜய் கொலைவெறியில் சுந்தரை கண்களால் எரிக்க ஆரம்பித்திருந்தான்.

“ரூபா தன் அப்பாவா இப்படி சொன்னது. இவனும் நானும் காதலித்தோம்மா?. இவன் யார் என்று கூட எனக்குத் தெரியாதே.”மீண்டும் அதிர்ச்சியாகி நின்றாள்.

ராஜா ரூபாவின் கையை விடாமலேயே சுந்தர் சுமதியின் காலில் விழுந்து
“எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா.” எனக் கேட்க.

சுந்தர் மட்டுமே ஆசீர்வாதம் செய்ய சுமதி காலில் விழும் தன் மகளைத் தடுத்து நிறுத்தி. ரூபாவின் கண்ணீரைத் துடைத்து விட்ட சுமதி “நீ ஆழுகாம போமா. உன் மனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைச்சுக்கோ.”சுந்தரை முறைத்துவிட்டு மணப்பெண் அறைக்குள் அடைந்தார் சுமதி. அபி தன் அம்மாவை அழைத்துக் கொண்டே பின்னாடியே ஓட.

“மணி அந்த செக்புக் கொடு.” கல்யாணத்திற்கு சுந்தர் மற்றும் அஜய் செய்த மொத்த செலவையும் மொத்தத் தொகையாக எழுதி கையொப்பமிட்டு சுந்தர் கையில் கொடுத்தான் ராஜா.

சுந்தர் செக்கை கையில் வாங்கி இது எதற்கு என கேள்வியாக ராஜாவைப் பார்க்க.

“நடந்தது என்னோட கல்யாணம் இதுல கண்டிப்பா அஜய் செலவு பண்ணிருப்பாரு. அவர்கிட்ட என் மாமா கடனாளியாக நிற்கக்கூடாது அதுக்குத்தான் இந்த செக்.”

சுந்தர் ராஜாவின் மேல் எந்த தப்பும் இல்லை. இது காதல் திருமணம் தான் என்பது போல். ஆமாம், ஆமாம் என தலையாட்டியதற்க்கே பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்த அஜய். ராஜா செக்கை கொடுத்ததும் மாலையை கழுத்தில் இருந்து வீசி எறிந்து ராஜா என ஆக்ரோஷமாக கத்தினான்.

அஜயின் கத்தல் எதுவும் காதில் வாங்காமல் திமிராகவே ஒரு பார்வை அவனைப் பார்த்துவிட்டு. “நாங்க கிளம்புறோம் மாமா.” ரூபாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தான்.

ரூபாவை காரில் ஏற சொல்லி கண்ணசைவில் செய்கை செய்ய. அவள் காரில் ஏறாமல் அவனை விட்டு விலகி இரண்டு அடி தள்ளி நின்று முகத்தை திருப்பிக்கொள்ள.

நான் இப்படியெல்லாம் சொன்னா நீ கேக்கமாட்ட. உன்னை உன் வழியிலேயே வர வைக்கிறேன் பாரு. ரூபாவை நோக்கி முன்னேறிச் சென்று.

“நீ வர மாட்ட அப்படித்தான.”

அவளிடம் மௌனம் மட்டுமே பதிலாய் கிடைக்க.

“சரி நானே உன்னை தூக்கிட்டு போய் கார்ல உட்கார வைக்கிறேன்.”

“அவன் சொன்னதில் அதிர்ந்தாலும். அசராமல் ரூபா நிற்க.”

அவள் இடையில் தனது இடது கையை பதித்து. வலது கையால் கால்களைப் பிடித்து தூக்க முன்னேறும் சமயம் அவளை துள்ளிக் குதித்து ஓடி சென்று காரில் உட்கார.

“ஹீம்ம் அந்த பயம் இருக்கணும்.”

“பார்வதி அம்மாவுக்கு போன் பண்ணி நாங்க வர விஷயத்தை சொல்லிரு.” தன் காரை ஸ்டார்ட் செய்து ஓட்டிக்கொண்டே மணிக்கு உத்தரவிட்டு கிளம்பினான்.

அரை மணி நேர பயணத்திற்கு பிறகு மாளிகை போல் இருக்கும் வீட்டினை வந்தடைந்தனர். அவன் காரின் ஹாரன் சவுண்ட் கேட்ட உடனே கேட்டை திறந்தான் வாட்ச்மேன் லிங்கம்.

பார்வதி அம்மா கையில் ஆரத்தி தட்டுடன் ஓடி வர.

“மெதுவா வாங்கம்மா உங்க மருமக எங்கையும் போயிறமாட்டா.”

காரிலிருந்து இறங்கி இருவரும் தனித்தனியே நிற்க. “ஜோடியா நில்லுப்பா ஆர்த்தி எடுக்கணும். கண்ணு நீயும் தம்பி பக்கத்தில் நில்லுமா.” இருவரையும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார் பார்வதி.

“நீ வந்து விளக்கு ஏத்துமா.” பூஜை அறையை நோக்கி அழைத்துச் சென்றார்.

“பார்வதிம்மா ஒரு நிமிஷம்.”

“சொல்லுங்க தம்பி.”

“அப்பு எங்க.”

“குட்டிப்பையன் ரூம்ல தூங்குறான் தம்பி.”

“அவனை தூக்கிட்டு வாங்க.”

பார்வதி அம்மா அப்புவை எடுத்து வந்து ராஜாவின் கையில் கொடுக்க.

“அப்பு செல்லம் அப்பாவைப் பாருங்க. அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்டா. இப்போ உனக்கு சந்தோஷமா.”

அவன் அப்பா என்று சொல்லியதில் ரூபா அதிர்ச்சியின் உச்சத்துக்கே செல்ல.
இவ்வளவு நேரம் கடைப்பிடித்த மௌனத்தை உடைத்து “உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சா?.”

“ம்ம்ம் ஆமா கல்யாணம் ஆகிறுச்சு இவன் என் பையன் அப்பு.”

ஒரே நாளில் ராஜா தாலி கட்டியது. தன் அப்பா சொன்ன பொய்.இப்பொழுது இவன் திருமணம் ஆனவன் ஒரு குழந்தைக்கு தந்தை என கேட்டதும் அதிர்ச்சியை தாங்க இயலாது மயங்கி சரிந்தாள்.