கலைந்த ஓவியம் 14

இந்த அக்கா, தம்பி, அண்ணன், தங்கச்சி, இருக்கிற வீட்டில எல்லாம் போயி பாருங்களேன்… கருமம் எதுக்கு சண்டை போட்டுதுங்கன்னே தெரியாது சண்டை போடுவாங்க, கிட்டத்தட்ட டாம் அண்ட் ஜெர்ரி சண்டை போல தான் இருக்கும்..அந்த சண்டை நடக்கற களம் தான் வேணி விடு, டாம் அண்ட் ஜெர்ரி நம் கிருஷ்ணனும் பூங்கொடியும் தான்

“அம்மா,என் பென்சிலை காணோம்னு ஆரம்பிச்சு இப்ப என் மொபைலை காணோம்னு சொல்ற வரைக்கும் எல்லாமே கூட பொறந்த ஒரே பாவத்துக்காக  கிருஷ்ணன் மேல தான் பழியை போடுவா. இப்படி அராத்து புடிச்சவ தான் கிருஷ்ணன் தங்கை

இதுல சில பிரமிக்கத்தக்க பிறவிகளும் இருக்க தான் செய்யறாங்க, அது வேற யாரும் இல்லை நம்ம சரவணன், மகியும் தான்.. பழைய படத்துல வர பழைய சீன் எல்லாத்தையும் மொத்தமாக வாடகைக்கு வாங்கின மாதிரி “என் தங்கச்சி, கண்ணுல தண்ணி வந்தா என் கண்ணுல இருந்து இரத்தம் வரும்னு சொல்ற அண்ணன் சரவணன் தான்…

இன்னும் ஒரு சிலவங்க என் அண்ணன் தான் எனக்கு முத எதிரி, அவன் எனக்கு இப்பிடி பண்ணிட்டான் எனக்கு அவனை சுத்தமா பிடிக்கல, இந்த வகை நமக்கே தெரியும் யாருன்னு… எக்ஸ்ட்லி (exactly) நிவி அண்ட் நவின் தான்

” அம்மா எப்ப பாரு ஆம்பளை பையன்னு  இவனுக்கு தான் செல்லம் தறீங்க..,” என்ற கோப வார்த்தைகள் தான் அதிகம் சிவகாமி வீட்டுல கேட்கும்… இப்படி அண்ணன் தங்கச்சி கேடகிரில பல வகைகளும் பல பிரிவுகளும் இருக்க தான் செய்யறாங்க ..

#######

சரவணனிடம் பேசிவிட்டு விடுவிடுவென கோவிலை நோக்கி  சென்றவளின் கண்கள் தனக்கு எதிரில் வந்துக் கொண்டிருந்தவர்களை பார்த்தது…

“பாருடா அதுக்குள்ள ஜோடி போட்டுட்டு சுத்த ஆரம்பிச்சுட்டான்…’ என நினைத்தவள் அப்போது தான் மகி காலை அழுந்தி ஊன்றாது மெட்டி மெட்டி வருவது போல் தோன்றியது. நேராக இருவரிடமும் சென்றவள்

“என்னாச்சு டா…” என நவினிடம் கேட்டுக் கொண்டே மகியின் காலை பார்த்தாள்.

“படியில இடிச்சிக்கிட்டா, கால் சுளிக்கிருச்சு சொன்னா, அதான் கையை பிடிச்சு கூட்டிட்டு போறேன்…” என்றான்

‘ அடப்பாவி, முனுக்கு முனுக்குன்னு இருந்துட்டு எப்படியெல்லாம் பொய் சொல்றான் இவன்…’ என்பது போல் நவினையே பார்த்தாள் மகி.. நிவி அதற்கு பதில் சொல்லும் முன்பே அங்கு சரவணனும், கிருஷ்ணாவும் வர “என்னாச்சு சின்னாக்குட்டி…” என கிருஷ்ணாவும்.

“என்னாச்சு பாப்பா…” என சரவணனும் ஒரு சேர கேட்க”படியில இடிச்சுட்டன் அண்ணா, கால் சுளிக்கிடுச்சு…” என பாவமாக கூற “என்ன பாப்பா இப்படி தான் வருவியா கவனமா வர வேண்டியது தானே… எங்க காலை காட்டு…” என சரவணன்  குனிந்து அவளின் காலை பார்த்தான்…

“இல்லை அண்ணா ரொம்ப பெயின் இல்ல,..” என்றாள் மெல்ல.

“ஹ்ம்ம் சரி பாப்பா, போகலாமா…” அவளின் மற்றொரு கையைப் பிடித்து கொண்டேக் கூறினான்… சரவணன் தன் கையை பிடித்ததும் தன் அருகில் நின்ற நவினை அண்ணார்ந்து பார்த்தாள். அவன் அவளை புரிந்தது போல அவளின் கைகளை விட்டான்.. “போயிட்டு வரேன்…” என்பதை போல் மகி தலையாட்டிட  இவனும் இமை மூடி விடைக் கொடுத்தான். இருவரின் பார்வையும் செயலும் மூவரும் பார்த்து கொண்டு தான் இருந்தனர்.

“எப்பா, இந்த கண்ணு பேசும் பேசும்னு சொல்றது இது தானோ…” என கிருஷ்ணா நினைக்க “இப்ப, உன் தங்கச்சியோட ஆசையும், மனசும் எங்க போச்சு…” என்ற நிவேதாவின் கேள்வி தான் சரவணன் மனதில் ஓடிட தன் பக்கவாட்டில் நின்ற நிவேதாவை பார்த்தான்..

அவளோ புருவங்களை உயர்த்தி நமட்டு சிரிப்புடன் மகியையும் நவினையும்  கண்களால் காட்டினாள். அவளின் செய்கையில் கடுப்பானவன் “சரி நாங்க கிளம்பறங்க…” நவினிடம் கூறினான். சரவணன் நவினிடம் பேசவும் சட்டென  மகியின் மேலிருந்த பார்வையையும்

கையையும் விளக்கி
“சரிங்க…” என்றான்.

“வாடா போகலாம்…” என மகியை கை தாங்களாக அழைத்து சென்றான்.

“ஆமா கோவில்ல எதுக்கு அழகின்னு சொல்லி காமிச்ச, மாநிறமா இருக்கேன்னு குத்தி காமிக்கிறயா…” மூவரும் சென்று விட்டதை உறுதி செய்து விட்டு தான் கேட்டாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவனோ பதில் பேசாது நின்றாலும் அவனின் மனம் கவுண்டர் கொடுக்க தான் செய்தது’வேதாளம் முருங்கை காயோட காயா தொங்க ஆரம்பிச்சுடுச்சு…’ தன் அண்ணனின் ஆழ்ந்த பார்வையில் கடுப்பானவள “அந்த புள்ளைக்கு உன்னை யெல்லாம் பிடிச்சிருக்கு பாரேன், அந்த பொண்ணு அவ வாழ்க்கையே தியாகம் பண்றா…” மேலும் அவனை காயப்படுத்த வேண்டுமென்றே பேசினாள்.”பேச வேணுமுன்னே பேசுறா…” அவளின் குணத்தை நன்றாக அறிந்தவனாக  முணுமுணுத்தவன் முன்னால் நடந்தான்.

“நீ கெட்டக் கேடுக்கு ரதி மாதிரி பொண்ணு, ஹிம்ம் ஆண்டவன் சோதனை செய்யறான்..” என அவனை மேலும் குத்தி காட்டுவது போல் பேச, இவள் இப்படி தான் என்பதை போல் நவின் அவள் பேசுவதை காதில் கூட வாங்காது சென்றுவிட்டான்…

ஆனால் அங்கு வந்த கிருஷ்ணாவிற்கு நிவேதாவின் ஏளன பேச்சும், நவினின் அமைதியான நடைத்தையும் நன்றாகவே  தெரிந்தது… 

சரவணன், மகியை அழைத்து கொண்டு  முன்னால் செல்ல அவர்களுடன் இணைந்து நடந்த கிருஷ்ணனுக்கு நிவேதாவிடமும், நவினைடமும் சொல்லாமல் வந்தது நினைவு வரமீண்டும் இருவரையும் நோக்கி வந்தான். அப்போது தான் நிவேதா பேசும் பேச்சினை காதில் கேட்க நேரிட்டது.

“ஒரு மரியாதை இருக்கா பாரு,  எல்லாம் வெள்ளாடு மாதிரி அழகா இருக்கான்னு திமிரு…” என வாய்குள்ளையே நவினை வறுத்தெடுத்தவள் எதற்சியாக  பின்னால் பார்க்க கிருஷ்ணா நின்றிருந்தான்..

“நீங்க இன்னும் போகலயா..?” என்றாள் கேள்வியாக

“இல்லை மா சொல்லிட்டு போகலாமுன்னு வந்தேன்…” என்றான்  சட்டென எழுந்த கோபத்தை அடக்கியப்படி..

“ஒகே அண்ணா பாய்…” என கையாட்டி விடைபெற

“ஒரு நிமிசம்…” என்றான்.. என்ன என்பதை போல் பார்த்தாள்…

“அவன் அப்படி சொன்னதுக்கு அவன்கிட்ட சண்டைக்கே  போன.. இப்ப நீயே உன் அண்ணனை இறக்கி பேசறயே,..” என கோபமாக கேட்டான்..

“ஹாஹா, அவன் என்னோட எனிமியா இருந்தாலும் அது எங்களுக்குள்ள மட்டும் தான் அண்ணா, எல்லார்கிட்டயும் அதை காட்ட வேணும்னு இல்லையே. அண்ட் அவனை எனக்கு பிடிக்காதுங்கறதுக்காக  எல்லார் கிட்டயும் அவனை விட்டுக் கொடுத்துட்டு இருக்க முடியுமா சொல்லுங்க..  அவனை எது சொல்றதா இருந்தாலும் நான் மட்டும் தான் சொல்லுவேன்…” என்றாள் கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்து கொண்டு…

“ஆத்தி, பைத்தியம்..,” என்ற வாசனம் மனதில் ஓட அதை வெளியிலும் கூறிவிட்டான்…

“என்ன சொன்னீங்க…” என நிவி, கிருஷ்ணன் பக்கம் திரும்ப”ஹான் பாக்கியம், இப்படி ஒரு தங்கச்சி கிடைக்க உன் அண்ணன் பாக்கியம் பண்ணி இருக்கணும்னு சொன்னேன் ம்மா…” என்றான்  அவசரமாக

“அந்தளவுக்கு வொர்த் இல்லை நாங்க…” என்றவள் அவனிடம் விடைபெற்று கோவிலை நோக்கி நடந்தாள்.. *******

சீரான வேகத்தில் தன் வாகனத்தை இயக்கி கொண்டிருந்தவனின் மனம் முழுவதும் உலைகனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது.. அவள் பேசிய வார்த்தைகள் ரீங்காரம் போல் மனதில் ஓடிக்கொண்டே இருக்க,

“இவ பேசறது தான் சரிங்கற மாதிரி பேசிட்டு இருக்கா….” எனக் கூறி வண்டி ஸ்ட்டேரீங்கில் அடித்தவன் தன் அருகில் அமர்ந்திருந்த கிருஷ்ணாவை பார்த்தான். அவனோ இவனை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன டா, அவ பேசும் போது வாயை திறக்காம இருந்த இப்ப என்ன இப்படி பார்த்துட்டு வர…” என அவன் பார்வையில் எரிச்சலுற்றவனாய் கேட்டான்.

பின்னால் திரும்பி ஒருமுறை மகியை பார்த்தான் கிருஷ்ணன். அவள் நன்றாக உறங்கி கொண்டிருப்பதை உறுதி செய்து கொண்டவன் மெல்லிய குரலில் “அந்த பொண்ணு பேசனதுல எனக்கு எந்த தப்பும் இருக்கற மாதிரி தெரியல டா…” என கிருஷ்ணா சொல்ல, தன் அரிசி பற்களை நன்றாகவே கடித்தப்படி அவனை முறைத்தான்..

“ரொம்ப முறைக்காத நல்லா யோசிச்சு பாரு, முதல்ல நம்ம பாப்பா தானே வேண்டாம்னு சொன்னா…” என்றான் நிதானமாக.

“ஆனா என்கிட்ட அத்தையும், கொடியும் அப்படி சொல்லல, முதல்ல பையன் வீட்டுல வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னாங்க அந்த சமயத்துல நான் இருந்த டென்ஷன்ல நானும் அதை பெருசா கண்டுக்கல, ஆனா பாப்பா அவனை மறக்க முடியாம வேலைக்கு போறான்னு சொல்லும் போது தான் என்ன ஆனாலும் அந்த பையனை கல்யாணம் பண்ணி வைக்கலாம் தோணுச்சு, அதா அங்க போனேன் ஆனா இப்ப அவசரபட்டுட்டேன் தோணுது.. அங்க போகறதுக்கு முன்னாடியே பையனை பத்தி தெரிஞ்சு இருந்தா போயிருக்க மாட்டேன்…” என்றான் வெற்றுப்பாக“இப்பவும் நம்ம பாப்பா ஆசை படறா போல, கோவில்ல பாத்தல்ல இரண்டு பேரும் எப்படி கண்ணாலேயே பேசிகிட்டாங்கன்னு…” என்று மகியும் நவினும் பேசியதை மனதில் வைத்து கொண்டே கூறினான்.

அதற்கு சரவணன் பதில் சொல்லவில்லை மீண்டும் கிருஷ்ணாவை ஆரம்பித்தான். “நீ தான் கண்ணு அப்படி இருக்கு, மூக்கு இப்படி இருக்குன்னு சொல்ற, ஆனா நம்ம சின்னாக்குட்டி இதெல்லாம் பாக்கவே இல்லாத மாதிரி தான் தெரிஞ்சுது. அதுவும் அந்த பையனுக்கு அப்படி ஒன்னும் பெருசா  ஐ டிஃப்ரன்ஸ் தெரியல, நீ தான் தாம்தூமுண்ணு குதிக்கற…” என நிதானமாகவே கூறினான்…

“என் தங்கச்சி கோவில் சிலை மாதிரி இருக்கா டா…” என்றான் மீண்டும்..

“அவனும் அஜந்தா குகை ஓவியம் மாதிரி இருக்கான்…” என்றான் கிருஷ்ணன்..

“கொய்யால, வாய் இருக்குன்னு எது வேணும்னாலும் சொல்லலாம்னு சொன்ன கொன்றுவன்…” என சரவணன் அடிக்க கையை உயர்த்தினான்.

“இதோடா, இவங்க என்ன வேனா சொல்லலாமாம், நம்ம எதுவும் சொல்ல கூடாதாம் என்ன நியாயம் டா இது.. பொண்ணு சிலை மாதிரி இருகான்னா, பையன் அட்லீஸ்ட் ஓவியம் மாதிரி கூடவா இருக்க மாட்டான்.. எப்ப பாரு அழகா இருக்கற தின்க்ஸ் எல்லாத்தையும் பொண்ணுக்கே உவமையா வைச்சுட்டு, காட்டுல இருக்கற எல்லா மிருகத்தயும் பையனுக்கு உவமையா சொல்லிட வேண்டியது.. என்னவொரு வஞ்சகம் பாருங்க…” என கிருஷ்ணா ஆதாங்கமா பேச பேச

“ஐயோ சாமி கொஞ்ச நேரம் சும்மா வா டா, சம்பந்தமே இல்லாம பேசிட்டு, இப்ப எனக்கு என்ன பண்றதுன்னு சுத்தமா தெரியல, கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு… இதுக்காக தான் வீட்டுல பெரியவங்க இருக்கணும் சொல்லுவாங்க போல, எங்களுக்கு தான் யாருமே இல்ல, எனக்கு அவளும், அவளுக்கு நானும் இருக்க போயி தான் இப்படி வந்து நிக்குது எல்லாம்…” என விரக்தியாக பேச

“டேய் என்ன பேச்சு இது, நாங்க எல்லாம் இன்னும் இருக்கோம். அதை யோசிச்சுட்டு பேசு…இப்ப என்ன உனக்கு ஒரு தெளிவு வேணும் அது தானே, அப்ப நம்ம வீட்டு பொண்ணுங்களை பிடி..” என்றான் “புரில…” என புருவங்களை உயர்த்தி கேட்டான்

“எங்க இருந்து பிரச்சினை ஸ்டார்ட் ஆச்சோ அங்க இருந்து வா…” என்றான் பொறுமையாக
“என்னமோ உனக்கு தெரிஞ்சு இருக்கு அதை என்கிட்ட சொல்ல மாட்டற…” என்றவன் ஏதோ யோசனை வந்தவனாய்

“ஆமா, சடன்னா நீ இங்க ஏன் வந்து இருக்க…” என என்ற கேள்வியில் அமைதியாக சரவணனை பார்த்தான் கிருஷ்ணன்…