கலைந்த ஓவியமே 11

மகி வீட்டிலிருந்த ஒருவாரமும் சரவணனுக்கு உதவியாக தான் இருந்தாள். இப்போது மட்டுமல்ல சிறு வயதிலிருந்தே விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தால் காட்டிற்கு நீர் விடுவது, வரப்புக் கட்டுவது.உரம் வைப்பது, உப்பு வைப்பது என அனைத்தும் மகி தான்  கண்காணித்து கொண்டும் அவர்களுக்கு உதவியாகவும் இருப்பாள். மகி காட்டு வேலைகளை கவனித்துக் கொண்டதால் மற்ற வேலைகளை சரவணன் பார்த்துக் கொண்டான்…

இந்த ஒருவாரத்தில் பூங்கொடி சரவணன் இருக்கும் திசைக்குக் கூட வரவில்லை.., பல வேலைகளில் அண்ணன், தங்கை இருவருமே பூங்கொடி என்பவளை மறந்து தான் போனார்கள்.

கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடிய ஒரு வாரத்திற்கு மேலாகி இருந்தது… கால் நீட்டி அமர கூட நேரம் இல்லை என்பதைப் போல் காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு திறிந்தவர்கள் இன்று தான் சற்று நிதானமாக அமர்ந்தனர்.

இத்தனை நாட்களாக அவனின் நினைவு வந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றவளுக்கு இப்போதும் துளியும் முடியவில்லை, அவள் நினைத்து கூட பார்க்கவில்லை அவனின் குரல் தனக்குள் இப்படி வந்து ஒட்டிக் கொள்ளும் என்று…

தன் அண்ணனின் காதலுக்காகவாவது அவனை மறந்து தான் ஆகவேண்டும் என நினைத்து கொண்டவளின் மனமோ “அப்ப நீ கிருஸ்ணாவை கல்யாணம் பண்ணிக்க போறயா…” எனக் கேட்க

“அதுக்கு நான் சரின்னு சொன்னாலும் கிருஷ்ணா மாமா ஒத்துக்க மாட்டான்…” என உடனே மறுத்தாள்.

“அவனையும் வேண்டா சொல்லிட்ட, கிருஷ்ணாவும் கல்யாணம் பண்ண மாட்டான்னு சொல்லிட்ட அப்ப என்னதான் பண்ண போறே, இவனையே நினைச்சுட்டு உருகிட்டு இருக்க போறேன்னு பழைய ஹீரோயின் மாதிரி டயலாக் பேசிடாத பிளீஸ்…” என மனம் கேலி செய்ய

“என்ன பண்ணலாமுன்னு இன்னும் யோசிக்கல, ஆனா பூங்கொடி நினைக்கிற மாதிரி கிருஷ்ணாவும் நானும் கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்…” என மனதிற்கு பதில் கொடுத்தவளுக்கு தெரியவில்லை அந்த கிருஷ்ணா தான் மண மேடை வரைக்கும் மணவாளனாக வர போகிறான் என்று…

முற்றத்தில் இருந்த சோபாவில் கால் நீட்டிப் படுத்தபடி இருந்தவனின் எண்ணம் முழுவதும் நிவேதா தான் இருந்தாள்… அவளின் பேச்சும், செயலும் இன்றுவரை அவனுக்கு கோபத்தைக் கொடுத்தாலும் அவளின் மேல் வெறுப்பை உண்டாக்கவில்லை., அது ஏனென்றகேள்விக்கும் அவனுக்கு விடை கிடைத்தாகி விட்டது. இருந்தும் வலுக்காட்டாயமாக மனதினை அடக்கி வைத்திருக்கிறான் சரவணன்…

கிட்டதட்ட இந்த ஒரு வாரமும் அவளின் நினைவு துளியும் இவனுக்கு வரவில்லை என்பதை விட அவளின் நினைப்பை தனக்குள் வராதப்படி வேலையில் கவனத்தை செலுத்தினான்… முதல் இரண்டு நாட்கள் தான் அவளை மறக்க வேண்டும் என வேலையில் மூழ்கியவன் உண்மையாகவே அவளை மறந்து தான் போனான்.. இதில் இலவச இணைப்பாக தன் தங்கையின் திருமணத்தை பற்றியும் வேணியிடம் சிவகாமி கூறியதை பற்றியும் பேச வேண்டும் என்பதை மறந்து தான் போனான்…

வீட்டில் இருந்தால் நிச்சியம் மனம் ஏதாவது யோசிக்கும் என நினைத்தவள் முற்றத்தில் படுத்திருந்தவனை அழைத்தாள். “சொல்றா பாப்பா…” என எழுந்து அமர்ந்தவனின் அருகில் அமர்ந்தவள்

“எங்காவது வெளிய போகலாமா, இந்த வாரம் முழுக்க வேலை வேலைன்னு இருந்திட்டோம், கொஞ்சம் ரீலக்ஸஸா வெளிய போயிட்டு வரலாம். மேட்டூர் டேம் இல்லன்னா, கொடிவேரி இப்படி எங்காவது போகலாமா…” என்றாள் அவனுக்கும் அதுவே சரியென தோன்ற”ஹிம் போயிட்டு வரலாம் பாப்பா, கிளம்பி ரெடியாகி வா எங்காவது போயிட்டு வரலாம்…”எனக் கூற சிறு புன்னகையுடன் சரியென தலையாட்டியவள் வெளியில் செல்ல புறப்பட்டாள்…

அண்ணன், தங்கை இருவருமே அவர்களின் மனதில் இருப்பவர்களை மறக்க முயன்றனர் என்றால் இவர்களின் நினைவுகளுக்கு காரணமானவர்களோ சிவகாமியின் பேச்சிற்கு கட்டுப்பட்டு கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்…

“இவங்களோட ஒரே சல்லையா போச்சு…” என முணுமுணுப்புடன் நிவேதா கிளம்பி கொண்டிருக்க, நவினோ மகியின் நினைவிலேயே கிளம்பி கொண்டிருந்தான்…

அவனின் மனதை அறிக்கும் கேள்விக்கு அவளால் மட்டும் தானே பதில் கொடுக்க முடியும். பார்க்கலாம் இன்றைய நாள் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காம என்று…

*****

சிறிது நேரத்திலயே கிளம்பி வெளியில் வந்த சரவணனோ சமையல் அறையில் இருந்த வேலையாட்களிடம் மதியம் இருவருக்குமே உணவு வேண்டாமென கூறிவிட்டு மகிக்காக காத்திருந்தான்… என்றும் சுடிதார், குர்தாவில் இருப்பவள் இன்று தவாணியில் வெளியில் வந்தாள்.,

“என் அழகு பாப்பா, எவ்ளோ அழகா இருக்க நீ…” எனத் திருஷ்டி கழிக்க கிளிக்கி சிரித்தாள் அவனின் தங்கை.

“நீயும் தான் ண்ணா அய்யனார் கோயில் சாமி மாதிரி கம்பீரமா இருக்க…” என அவனுக்கு திருஷ்டி கழிக்க மெல்ல சிரித்தவன் “கோவிலுக்கு போகலாமா,..” எனக் கேட்க சரியென தலையாட்டியவள் அண்ணனுடன் இணைந்து நடந்தாள். இருவரும் வாசலை நோக்கி வரவும்

“டேய் மச்சி..” என்ற அழைப்பும் வர சரியாக இருந்தது. அண்ணன் தங்கை இருவரின் பார்வையும் ஒரே நேரத்தில் குரல் வந்த திசையை பார்த்தது. சரவணனின் விழிகள் ஆச்சரியமாக விரிந்தது என்றால் மகியின் விழிகளோ பயத்தோடு விரிந்தது…

“டேய் கிருஷ்ணா…”என்ற குதுகல அழைப்போடு எதிரில் இருந்தவனை அழைத்தவன் ஓடி சென்று கட்டிக் கொண்டான்.

மகியிற்கு பின் சரவணன் அவனாக இருப்பது கிருஷ்ணனிடம் தான்.அந்த லிஸ்டில் இப்போது இன்னொன்றும் சேர்ந்தது எல்லாம் வேறு கதை.

“வருசா வருசம் ஊருக்கு வாடான்னு கூப்பிட்டா வரவே மாட்ட, இப்ப என்ன திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்து இருக்க…” என்ற சரவணனின் கேள்வியில் சரவணனுக்கு பின்னால் நின்றிருந்த மகியின் மீது அவனின் பார்வை படிந்தது…

“என்ன சின்னக்குட்டி அங்கேயே நிக்கற, வா…” என கை நீட்டிட ஓடி வந்து அவனின் அருகில் நின்று கொண்டாள் அவனின் மகாலட்சுமி..

சரவணமுத்துக்கும், மகிக்கும் இடையில் நின்று கொண்டவன் “அப்பறம் மச்சி, என்ன மூஞ்சி செழிப்பா இருக்கு, யாராவதை லவ் பண்றயா..” எனக் கேட்டான் நமட்டு சிரிப்புடன்.. நிச்சியம் பூங்கொடியை தான் கூறுவான் என மகி எதிர்பார்க்க சரவணமுத்துவோ பதில் கூறாமல் கிருஷ்ணாவின் தோளில் முகத்தை அழுத்திக் கொண்டான்.

சரவணனின் செய்கையில் சத்தமாக சிரித்து விட்டான் கிருஷ்ணன்.. “அடேய் பாப்பா உன்னை தான் பாத்துட்டு இருக்கா…” என்றதும் அவனிடம் ஒரு விழி விரிப்பு வந்து மறைய தன் தங்கையை பார்த்து அசட்டு தனமாக சிரித்தான்.தன் அண்ணனின் இந்த முகம் இவளுக்கு முற்றிலும் புதிது…

தன் அண்ணன் காதலிக்கிறான் என்பதே உலக அதிசயமாக நினைத்தவள் இப்போது அவனின் வெட்கம் கலந்த சிரிப்பு ஏதோ பெரிய அதிசயத்தை பார்ப்பதைப் போல் பார்த்தாள் மகி…

“உன்னை தான் டா மையின் ஹீரோவா போட்டு இருக்கணும், மாத்தி செகன்ட் ஹீரோவா போட்டுட்டாங்க…” என கிருஷ்ணா சிரிப்புடன் சொல்லவும் அவனை செல்லமாக முறைத்தான் சரவணன்.

“சரி சொல்லு,யாரு அந்த பொண்ணு…” என கேட்க, முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது சரவணிடத்தில்.. “என்னடா முறைச்சு மலுப்பற, உண்மையை சொல்லு யாரு அந்த புள்ளை…” என கிருஷ்ணா கேட்க இம்முறை மெல்லிய சிரிப்பு அவனிடத்தில்.

“அது மாமா, நம்ம பூ….” என மகி ஆரம்பிக்கும் முன்பே அவளை பார்வையால் அடக்கினான் கிருஷ்ணன்…

மகி ஏதோ கூற வந்ததை உணர்ந்தவன் “என்னாச்சு பாப்பா…” எனக் கேட்டான்… அவன் அப்படி கேட்கவும் இத்தனை நாட்களாக மனதில் அழுத்திக் கொண்டிருந்த கேள்வியை கேட்டாள்.

“என்கிட்ட கூட நீ லவ் பண்றேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை அண்ணா,அதைக் கூட சொல்லாத அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன்…” என குரல் கரகரக்க கேட்டாள்.

“என்னடா நீயும் இவன் சொல்றான்னு என்கிட்ட கேட்கற,என் வாழ்க்கையில முக்கியமா என்ன நடந்தாலும் அதை உன்கிட்ட தான் முதல்ல சொல்லுவேன்னு உனக்கு தெரியுமா தெரியாதா…”என மகியிடம் பதில் கூறியவன் அருகில் நின்ற கிருஷ்ணனை முறைத்தான்.

“நம்ம யாரு வம்புக்கும் போறதில்லை,தும்புக்கும் போறதில்லை…” எனக் கூறியபடியே அவனைவிட்டு விலகி ஓடிட

“அடிங்க நாயே, கொஞ்ச நேரத்துல நல்லா இருந்த வீட்டுல கலவரத்தை கொண்டு வந்துருப்ப,இதுல யாரு வம்புக்கும் தும்புக்கும் போறதில்லையா, இரு டி வரேன்…” என்றப் படி கிருஷ்ணனை துரத்தினான் சரவணன்.

“அப்ப அண்ணா அவளை லவ் பண்ணலயா…அப்ப பூங்கொடி சொன்னது எல்லாம் பொய்யா, எப்படி ஏமாத்தி இருக்கா பாரு…” என நினைத்தவளுக்கு கோபம் சுள்ளென்று வந்தது… உடனே கொடியை தேடி சென்றாள் வேணியின் வீட்டிற்கு.

“கொடி, கொடி வெளிய வா…” என அந்த வீட்டில் ஹாலில் இருந்தப்படியே கத்தினாள் மகி… பெட்ரூமில் இருந்து வெளிவந்தவள்

“என்ன..” எனக் கேட்டு முடிக்கும் முன்பே அவளின் கன்னத்தில் மகியின் ஐந்து விரல்களும் பதிந்து போனது.

“அன்னைக்கு என்ன சொன்ன?? என் அண்ணனும், நீயும் ஒருத்தர் ஒருத்தரை லவ் பண்றீங்களா,?? இனிமே இப்படி ஏதாவது வந்து என்கிட்ட உளறிட்டு இருந்தன்னு வையேன், இருக்கிற நாலு கோனவால் முடியையும் பிச்சு எடுத்துருவேன்…” என சிலடிகள் திரும்பி நடந்தவள் மீண்டும் அவள் புறம் திரும்பி “அன்னைக்கு என்ன சொன்ன, என் அண்ணன் காசுல நான் திங்கறன்னா, சின்ன திருத்தம் என் அண்ணன் காசுல திங்க ஆசை படறது நீ தான், நான் இல்லை,…” என்றவள் அங்கிருந்து நகர, பொத்தென்ற சத்தம் கேட்டது.

கொடி தான் கிழே விழுந்து இருந்தால் ஏற்கனவே சரவணனின் அடியில் ஒரு வாரமாக காய்ச்சலில் படுத்திருந்தவள் இப்போது மகியின் அடியில் நிலைக் கொள்ளாமல் அப்படியே விழுந்து விட்டாள்.

அவள் விழுந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த மகியோ ஒடிசென்று அவளைத் தூக்கிட அப்போது தான் அவளின் உடல் சூட்டை உணர்ந்தாள்..

“ஐயோ…” எனப் பதறியப்படி

“என்ன டி ஆச்சு ஓடம்புக்கு முடியலயா…” என விசாரிக்க அவளை பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள் கொடி..

“எப்ப இருந்து உடம்பு சரியில்ல கொடி,பாரு உடம்பு கொதியா கொதிக்குது…” என்றவள் அவளைப் படுக்கையில் படுக்க வைத்து அவளுக்கு போர்த்தி விட்டாள்.

“சாரி டி, உடம்பு சரியில்லைன்னு எனக்கு தெரியாது நான் வேற அடிச்சிட்டேன்…” என்றவள் அவளின் கன்னத்தை வருட,கொடியின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வெளிவந்தது..

“ஐயோ சாரி டி சாரி சாரி… ரொம்ப வலிக்குதா, இரு தேங்கண்ணை எடுத்துட்டு வரேன்…” என்றவள் அவளின் கன்னத்தில் எண்ணெய் வைத்துவிட்டு “ஹாஸ்பிடல் போனாயா இல்லையா…” என கேட்டபடி நிமிர்ந்தாள்.

“ஹாஸ்பிடல் போயிட்டு வந்துட்டேன், தூங்கினா சரியாகிடும்,..” என்றவள் சிறு அமைதிக்கு பிறகு “சாரி மகி…” என்றாள், அவளின் சாரியில் மெல்ல சிரித்த மகியோ

“நானும் நீ சொன்னதை நம்பி இருக்க கூடாது,என் சூழ்நிலை நீ சொன்ன பொய்யை நம்ப வைச்சுடுச்சு, ஹக் பண்ணிட்டு இருக்கறத பாக்கவும் நீ சொன்னது தான் உண்மை என்று நினைச்சிட்டேன்..” என மகி கூறவும்

“அந்த சூழ்நிலையை நான் தான் கிரீயட் பண்ண, நீ, என்னை நம்ப வேணும்னு அப்படி பண்ணேன்…” என்றவள் அன்று நடந்தவைகளை சுருக்கமாக கூறி முடித்தாள்… (வேணி சொத்திற்கு ஆசை படுவது விட்டுவிட்டு மற்றதை மட்டும் கூறினாள்)

“உண்மையாகவே அண்ணன் மேல உனக்கு லவ் இருக்கா ???..” என்ற மகியின் கேள்வியில் மெல்லிய புன்னகை அரும்பியது கொடிக்கு.

“பயப்படாம போ, இந்த ஜென்மத்தில உன் அண்ணி நான் இல்லை…” என்றவள் கண் மூடிக் கொண்டாள்.

அவள் கண்களை மூடி கொண்டதும் அறையில் இருந்து வெளி வந்தவளின் மனமோ “என் அண்ணனடமிருந்து என்னைப் பிரிக்க இவர்கள் யார்??…” என குமுறியது.

வீட்டிலிருந்து கோபமாக வெளி வந்தவள் எதிரில் வந்துக் கொண்டிருந்த வேணியை மூக்கு விடைக்க பார்த்துவிட்டு அவரிடம் பேசாது அங்கிருந்து நகர்ந்தாள்.

“என்ன சொல்லிட்டு போறா, எதுக்காக வந்தா…” எனக் கேட்டபடி உள்ளே நுழைந்தார் வேணி… வேணியின் கேள்விக்கு துளியும் பதில் சொல்லவில்லை கொடி..

“பதில் சொல்றாளா பாரு, நான் சொன்னதை எதுவும் பண்ணாம நீயே ஏதாவது பண்ணிட்டு வந்து இப்படி படுத்திட்டு இரு, எல்லாம் போச்சு என் திட்டம் எல்லாம் மண்ணோடு மண்ணாகி போச்சு, இருநூறு ஏக்கர் நிலமும் பல கோடி சொத்தும் எல்லாம் வீணா போச்சு…” என புலம்பிக் கொண்டே அவளுக்கு மருந்தைக் கொடுக்க

“என்கிட்ட இப்படி புலம்பறதை விட்டுட்டு என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோன்னு முறைப்படி போயி மாமாகிட்ட கேட்க வேண்டியது தானே, அதை விட்டுட்டு ஏன் இப்படி பண்ண சொன்ன? என் மேல தான் தப்பு,நீ சொன்னது சரியா இருக்கும்னு நினைச்சது என் தப்பு தான், இப்ப கூட முடியாம படுத்துட்டு இருக்கேன். ஆனா நீ சொத்து போச்சுன்னு கவலைபட்டுட்டு இருக்க, போ நீயே போயி மாமாவை கேளு,…” எனக் கூறி வேணியின் வாயை அடைத்தாள் கொடி…

எப்படி கேட்பார்? என் மகளை திருமணம் செய்து கொள் என்று…??? பதினைந்து வருடங்களாக மூர்த்தியும்,வேணியும் இவர்களைப் பார்த்துக் கொண்டார்கள் என்பதை விட இவன் தான் இவர்களின் குடும்பத்தைக் பார்த்துக் கொண்டான் எனக் கூறினால் சரியாக இருக்கும். ஆம் விபத்தில் இறந்த சகோதரியின் குழந்தைகளை பார்க்க வந்தவரை இங்கேயே தங்கும் படிக் கேட்டுக் கொண்டது சரவணன் தான். தாயின் மூலம் தாய் மாமன் படும் கஷ்டத்தைக் கேட்டிருந்ததாலோ என்னவோ அவர்களை தங்களுடன் தங்கிக் கொள்ள கூறினான்.

பதினைந்து வயதிலேயே அதீத மன தைரியத்தையும் எந்த ஒரு முடிவெடுக்கும் திறனையும் கொண்டிருந்தான் சரவணன். எதையும் எதிர்க் கொள்ளும் விதமும் சரி  எதற்கும் துணிந்து நிற்கும் பக்குவமும் சரி அப்படியே அவரின் தங்கை போல என மூர்த்தி அடிக்கடி வேணியிடம் கூறி பெருமைப் பட்டு கொள்வார்… உண்மயிலேயே சரவணமுத்து என்பவன் கோபக்காரன் மட்டும் தான் அவன் தணிந்து பேசும் ஒரே ஆள் மகி மட்டுமே, அதனால் தான் மகியை வைத்து தங்களின் திட்டத்தை திட்டமிட்டார் வேணி… ஆனால் அதை பூங்கொடி தன் வாயாலேயே  தகர்த்து எறிந்து விட்டாள், அவள் மட்டும் அன்று வேணி கூறியதைப் போல கூறியிருந்தால் நிச்சியம் கிருஷ்ணா தான் மகியின் கணவனாக இருந்திருப்பான்…

‘மாப்பிள்ளை வேண்டாம் என கூறிவிட்டாள் என்ன கிருஷ்ணாவை மகிக்கு கொடுங்கள்…’ என கேட்கலாம் வேணி திட்டமிட, அதில் ஒரு லாரி குப்பையை அள்ளிக் கொட்டினான் அவரின் மகள் பூங்கொடி…

‘அவள் மாப்பிள்ளையை நினைத்து கவலை கொள்கிறாள் அதனால் அவளை வேலைக்கு செல் என்றேன்…’ எனக் கூறி அவள் அறியாமலயே பெரிய உதவியை செய்து இருக்கிறாள் பூங்கொடி.. மகி வேலைக்கு சென்றால் தான் சரவணனை நெருங்க முடியும் என நினைத்ததே பெரிய முட்டாள்தனம் தான்…  இதில் மகி மாப்பிள்ளையை நினைத்து கவலைக் கொள்கிறாள் என கூறியது மிகப்பெரிய முட்டாள்தனம் அல்லவா. சொல்லபோனால் இதுவும் ஒருவகையில் நன்மைக்கு தான்  சரவணன் காதலித்து திருமணம் செய்யும் வாய்ப்பை அல்லவா கொடுத்து இருக்கிறார்கள் அம்மாவும் மகளும். நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என சும்மாவா கூறினார்கள் பெரியவர்கள்.. என்னதான் தீயது நினைத்தாலும் அது அவர்களுக்கு நன்மையாக தான் முடிந்தது… பெரியவர்களை மட்டும் தான் அந்த அவர்களிடம் இருந்து பறித்துக் கொண்டானே தவிர மற்ற அனைத்தும்  கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறான் இறைவன்.

*****

“பாப்பா எங்க டா போன., கோவிலுக்கு போகலாமா…” என அறை வாசலில் வந்துக் கொண்டிருந்த மகியைக் கேட்டான் சரவணன்…

“கொடிக்கு உடம்பு சரியில்லைன்னு பாக்க போனேன் அண்ணா… சரி நம்ம போகலாம் அண்ணா.. மாமா எங்க காணோம்…” என கண்களால் கிருஷ்ணாவை தேடியப்படி கேட்டாள்.

“அவனும் கோவிலுக்கு வரேன்னு குளிச்சுட்டு வர போயிட்டான்…” என்றான் சிரிப்போடு”பூங்கொடிக்கு உடம்பு சரியில்லை, வந்தும் வராம நம்ம கூட வந்தா அத்தை ஏதாவது நினைக்க போறாங்க…” என மகி சொல்ல அதற்கு சரவணன் பதில் கூறும் முன்பே

“காச்சல் தானே,அதை அப்பறம் வந்து பாத்துக்கலாம்.. இப்ப நாம போகலாம்..” என்றபடி கிருஷ்ணா வந்துவிட அவனிடம் பதில் கூறாமல்

“அப்ப நம்ம கார்லயே போயிடலாமா அண்ணா ஒரே ஜாலியா இருக்கும்…” என்றாள் இளையவள்.. அவள் கூறியது காரிலயே மூவரும் கூடுதுறை கோவிலை நோக்கி புறப்பட்டனர்.

*****

ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி சிவா ஓம் நம சிவாய

என்ற பாடல் மென்மையாக ஒலித்தப்படி இருந்தது… கோவிலில் உள் நுழைந்ததும் கற்பூரம் சந்தனம், குங்குமம், சாம்பிராணி புகை, என மனம் வீசி கொண்டிருக்க அதை ஆழ்ந்து சுவாசித்தப்படி நவினும், சிவகாமியும் உள்ளே நுழைய இதெல்லாம் ஒரு பொருட்டாக கூட நினைக்காது நவினை வறுத்தெடுத்தப்படி வந்தாள் நிவேதா.

“ஆமா கோவில் கோவிலா போனா மட்டும் இவனுக்கு கல்யாணம் நடந்துடும் பாரு… எப்ப பாரு வெள்ளி, சனின்னு வந்தா போதும் கோவில் கோவிலா சுத்த வேண்டியது அதுக்கு இவனோட சேர்ந்து நானும் பலியாடு…” என முனகிக் கொண்டே அவர்களுடன் கோவிலுக்குள் நுழைந்தாள் நிவேதா.

” உன் நச்சு வாயை வைச்சுட்டு சும்மா இரு, எப்ப பாரு இவனை ஏதாவது சொல்லிட்டே இருக்கறது…உன்னால தான் தேடி வந்த மகாலட்சுமியும் போயிட்டா… உன் வாயை வைச்சுட்டு சும்மா இருந்திருந்தா அந்த சம்பந்தம் முடிஞ்சு இருக்கும்…” என நிவேதாவிற்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தார் சிவகாமி.

“ஆமா வரிசை கட்டிட்டு வருவாங்க இவனுக்கு பொண்ணு கொடுக்க…ஏதோ நீ கூலிங் கிளாஸ் போட்டுட்டு இருந்த போட்டோவை தரகர் கிட்ட கொடுத்ததுனால அதிஷ்டவசமா பொண்ணு அமஞ்சுது, ஆனா அதுவும் என்ன நினைச்சதோ வேண்டாம்னு சொல்லிட்டு போயிடுச்சு…” என ஏளனமாக கூற

“உன்னை என் வாயித்துல தான் பெத்தனான்னு சந்தேகமா இருக்கு டி, வாயா இல்லை தேள் கொடுக்கா டி..சத்தியமா சொல்றேன் நீ பேசற பேச்சுக்கு வாய் வாயா அடிக்கற பையன் தான் வரணும்னு அந்த ஆண்டவன் கிட்ட வேண்டிகிறேன்…” என சிவகாமி வேண்டிக் கொள்ள

“ஆமா ஆமா என் வாயை அவன் வாயால தான் அடிப்பான்…” எனக் கூற சட்டென அவளைத் திரும்பி முறைத்தார் சிவகாமி…

“நான் கம்னு தான் இருந்தேன்.. நீதான் என்னை பேச வைக்கற…” என தோளை குலுக்க

“நீயெல்லாம் பொண்ணே இல்லை…” என்பதை போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னால் சென்று கொண்டிருந்த மகனுடன் இணைந்து கொண்டார் சிவகாமி…

“அவ கிட்ட என்ன ம்மா சண்டை…” என நவின் கேட்க

“அது என்ன வாயா இல்லை தேள் கொடுக்கான்னு கேட்டுட்டு வந்தேன்.. எப்ப பாரு பெரிய வூட்டு கிழவி மாதிரி ஏதாவது சொல்லிட்டே இருக்கா…” என மகனிடம் குறைபாட”அவளை பத்தி தான் தெரியுமே அப்பறம் எதுக்கு அவகிட்ட வாய் கொடுக்கிறீங்க…” என்றான் கோவில் சன்னிதியில் நடந்துக் கொண்டே

“நான் எங்க வாயை கொடுத்தேன். அது என்கிட்ட தானே இருக்கு…” என நிவேதா இடையில் வர பக்கவாட்டாக தங்கையை பார்த்து சிரித்தவன் இடது புறத்தில் இருந்த தன் தாயை பார்த்து சிரித்தான்.

“நீயே பதில் சொல்லு இந்த கொடுக்குக்கு…” என்றவர் முன்னால் நடக்க நவினின் இதழ்கள் புன்னகை பூசிக் கொண்டது.

“என்ன டா…” என அவனை முறைத்து கொண்டே இடுப்பில் கைவைத்து கேட்டாள். நிவேதாவின் செய்கையில் மெல்ல சிரித்தவன் அவளின் தலையில் கைவைத்து

“அழகி…” எனக் கூறிவிட்டு முன்னால் செல்ல நிவேதாவின் இதழ்களில் புன்னகையும் விழிகளில் சிறு கோபமும் தோன்றியது.

இங்கு சிவகாமியோ ஈஸ்வரனின் பொற்பாதங்களில் தன் மன சோகத்தை இறக்கி வைத்தபடி இருந்தார்… “இன்னும் எத்தனை எத்தனை சோதனையை தர போற எங்களுக்கு. அவளுக்கும் வரன் அமையல, இவனுக்கும் வர வரன் எல்லாம் தட்டி தட்டிப் போயிட்டே இருக்கு, என் பையன் கிட்ட என்ன குறை இருக்கு நீயே சொல்லு, வெளிய அழகா இருக்கறவங்களுக்கு மனகுறைன்னு ஒன்னும் இருக்கும் என் பையனுக்கு மனசுல எந்த குறையும் இல்லையே ப்பா, அவனுக்கு ஏன் இன்னும் பொண்ணு அமையல,அவனுக்கு ஒரு நல்ல வழியை காட்டு ப்பா,..” என மனம் உருகி வேண்டி கொண்டவரின் காதில்

“அண்ணா,கிருஷ்ணா மாமா இங்க இருக்கு…” என்ற பெண்ணின் குரல் கேட்டது. சட்டென கண்களை திறந்தவர் குரல் வந்த திசையை பார்த்தார்… சிவகாமி மட்டுமல்ல,நவின், நிவேதா உட்பட அனைவரும் குரல் வந்த திசையை தான் பார்த்தனர்… இளஞ்சிவப்பு நிறத்தில் தாவணியும், பச்சை நிற பட்டுபாவாடையும் அணிந்தபடி முகம் முழுக்க சிரிப்போடு வந்து கொண்டிருந்தாள் சரவணமுத்துவின் தங்கை மகாலட்சமி… நவினின் பார்வை மகியிடம் இருந்தது என்றால் நிவேதாவின் பார்வை அவளுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தவனின் மேல் இருந்தது… ***

சத்தியமா கதை எப்படி போகுதுன்னு தெரியல, குடும்ப கதைன்னு வெறும் குடும்பத்தை மட்டும் முன் நிறுத்தி காட்டிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்.. அது மட்டும் இல்லை கான்செப்ட் kalyanam, so கல்யாணத்துல என்ன என்ன நடக்குது எப்பிடி எல்லாம் ஒரு பேச்சு மாறும், ஒரு பையன் நல்லா இருந்தா என்ன சொல்லுவாங்க, இப்படி பொண்ணு பையனை சுத்தி ndakkarathu தான் கதை, அப்படி தான் போகுதுன்னு நினைக்கிறேன்… காதல் திருமணம் என்றால் ஹீரோ ஹீரோயின் பேசுவாங்க இங்க அரேஞ்ச் மேரேஜ் சோ கண்டிப்பா ஹீரோ ஹீரோயின் தவிர மற்ற ellarum தான் பேசுவாங்க😂😂😂 அப்பறம் காதல் வரும். அப்பறம் ரொம்ப முக்கியமான விஷயம். ஒரு செட் ஜோடி தான் இப்ப seruvanaga அடுத்த பார்ட்ல அடுத்த ஜோடி😄😄அதுல கண்டிப்பா love thaan varumnungo..

முதல் கலைந்த ஓவியமான நவினை இந்த பார்ட்ல முடிச்சுட்டு அடுத்த கலைந்த ஓவியங்களை அடுத்த ப்பார்ட்ல பாக்கலாம், don’t worry போட்டி முடிவு வர வரைக்கும் இங்கேயே தொடரலாமான்னு அக்காகிட்ட கேட்டுட்டு இங்கேயே மீதியை போடறேன்… Love scene varum நம்புங்க