🖊️துளி 40👑

அபிமன்யூ அவளது கையைப் பிடிக்கவுமே திரும்பிய ஸ்ராவணி அவன் கூறியதைக் கேட்டுவிட்டு “முதல்ல என் கையை விடுடா” என்க அவன் முடியாது என்று மறுப்பாய் தலையசைத்தான்.

தலையசைத்தபடியே அவளது இடையை தனது கரங்களால் வளைக்க வாயிலில் அஸ்வினுடன் நின்று கொண்டிருந்த மேனகா அஸ்வினிடம் “டேய் உன் ஃப்ரெண்ட் என்னடா பண்ணுறான்? இவனை..” என்றபடி உள்ளே செல்ல எத்தனிக்க அஸ்வின் பதறிப்போய் அவளது கையைப் பிடித்து அங்கிருந்து இழுத்துச் சென்றுவிட்டான்.

அவளை ஹாலுக்கு அழைத்துவந்தவன் “உனக்கென்ன பைத்தியமா? அவங்க ஏதோ பேசிக்கிறாங்க. நம்ம வாசல்ல நின்னு பார்த்ததே தப்பு. இதுல நீ உள்ளே வேற போற?” என்று படபடக்க

மேனகா கடுப்புடன் “உன் ஃப்ரெண்ட் வனி கிட்ட நடந்துக்கிற விதம் மட்டும் சரியாடா?” என்று கேட்க

அஸ்வின் ஆயாசத்துடன் “அவன் கிட்ட சைசென்ஸ் இருக்குமா. அப்பிடியே இருந்தாலும் ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ஃப்க்குள்ள இருக்கிற பிரச்சனையில நம்ம தலையிடக் கூடாது மேகி” என்று அறிவுறுத்தினான்.

மேனகா உதட்டைச் சுளித்துக் கொண்டு “ஆனா நான் தலையிடுவேன். ஏன்னா பாரு அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சதே நான் தான். சோ என்னோட வனி வாழ்க்கை ஒரு பாழுங்கிணத்துல விழாம காப்பாத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கு” என்று சொல்ல பதிலுக்கு அவன் பேச இவ்வாறு அவர்களின் விவாதம் அனுமார் வால் போல் நீண்டது.

அறையினுள்ளே ஸ்ராவணி அபிமன்யூவின் கைவளையத்துக்குள் இருந்தவளுக்கு ஊட்டியில் இருந்ததைப் போல அன்றைக்கும் மூளை ஸ்தம்பித்துத் தான் போய் விட்டது. ஆனால் சில கணங்களில் விழித்துக் கொண்ட அவளின் மூளை “வனி இவன் கிட்ட இருந்து விலகிடு. இல்லனா அன்னைக்கு மாதிரி ஏதாச்சும் பண்ணி வச்சுடுவான்” என்று எச்சரிக்க அவளின் மனம் அதைக் கேட்க மறுத்தது.

அவனுடைய அணைப்பில் அவள் நிற்பது ஒன்றும் முதல் முறை இல்லையே. அதோடு விக்ரமின் சிறு தொடுகை கூட அசௌகரியத்தைக் கொடுப்பதாக எண்ணுபவளுக்கு அபிமன்யூவின் அருகாமை அவ்வாறான எந்த தயக்கத்தையும் கொடுக்கவில்லை என்பது அவள் மனமறிந்த உண்மை. அவளின் மனம் நினைக்கும் விஷயங்கள் அனைத்தையும் அவளின் கண்களின் வாயிலாக அறிந்ததாலோ என்னவோ அபிமன்யூவின் அணைப்பானது இன்னும் இறுகவே செய்தது.

அவளின் அந்த சிறு பதற்றம் கூட அவனுக்கு அழகாகத் தோன்ற “ஃபர்ஸ்ட் டைம் நான் ஹக் பண்ணுனப்போ நீ இப்பிடி டென்சனா இல்லயே. அவ்ளோ கியூட்டா, ஸ்மார்ட்டா என் கூட எந்த டென்சனும் இல்லாம டான்ஸ் பண்ணுன பொண்ணா இது?” என்று சொன்னபடி அவளின் முகத்தைக் கையில் ஏந்திக் கொண்டான் அவன்.

அவள் இன்னும் சிலையாக நிற்கவே மெதுவாக “இன்னைக்கும் உனக்கு ஃபீவர் வரும்னு நெனைக்கிறேன்” என்று சொன்னவாறு அவளின் இதழைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டவன் அதில் முத்தமென்னும் கவிதையை எழுதிவிட்டு நிமிர்ந்தான்.

“இதுக்கு என்ன பனிஷ்மெண்ட் குடுத்தாலும் ஓகே. டெய்லி இந்த கிரைமை பண்ணி உன் கிட்ட பனிஷ்மெண்ட் வாங்க நான் ரெடியா இருக்கேன் வனி” என்று ஆழ்ந்த குரலில் சொல்ல ஸ்ராவணி “பனிஷ்மெண்ட் தானே. குடுத்துட்டாப் போச்சு” என்றுச் சொல்லிவிட்டு தன்னுடையை கன்னங்களைத் தாங்கும் அவனது கரத்தை விலக்கிவிட்டு அந்த அறையில் சுற்றும் முற்றும் எதையோ தேடினாள்.

அபிமன்யூ ஆர்வத்துடன் “என்ன தேடுற வனி?” என்று கேட்கும் போதே அவள் தேடிய பொருள் கிடைத்துவிட மேஜைக்கு கீழே இருந்து அதை எடுத்துக் கொண்டே “ம்ம் துடைப்பக்கட்டை” என்று சொல்ல

அவன் குழப்பத்துடன் “அது எதுக்கு? ரூம் கிளீனா தானே இருக்கு?” என்று சொல்லிவிட்டு அந்த அறையை ஆராய்ந்தபடி கூற அவள் துடைப்பத்துடன் அவன் அருகில் வந்து “கிளீன் பண்ண இல்லடா. உன்னை அடிக்கிறதுக்கு” என்றபடி அதை ஓங்க அபிமன்யூ ஒரு கையால் அவளது ஓங்கிய கையைப் பிடித்துக் கொண்டான்.

பதற்றத்துடன் “ஏய் இப்போ நான் என்ன பண்ணிட்டேனு துடைப்பத்தாலே அடிக்க வர்ற நீ? இதுல்லாம் தப்பு வனி. அதை கீழே போடுடி” என்று சொல்ல அவன் கையை உதறியவள் அவனை அடிப்பதற்குள் அவன் வெளியே ஓடிவிட்டான்.

“ஓடவாடா செய்யுற?  இன்னைக்கு நீ செத்த” என்றபடி அவளும் அவனைத் துரத்திக் கொண்டு செல்ல இருவரும் ஹாலின் நடுவில் இருந்த சோஃபாவின் பின்னே எதிரும் புதிருமாக நின்றனர்.

ஸ்ராவணி முறைப்புடன் “இங்கே பாரு! நீயா அடி வாங்கிக்கிட்டனா கொஞ்சம் மெதுவா அடிப்பேன். சப்போஸ் எனக்கு ஆட்டம் காமிச்சனு வையேன்! அடியும் அதுக்கு ஏத்த மாதிரி பலமா இருக்கும்” என்று எச்சரிக்க

அவன் “ஏய் ஒரு கிஸ் பண்ணுனதுக்கு இப்பிடியாடி? நான் பொறந்ததுல இருந்து எங்க அம்மா கூட என்னை ரெண்டு தடவை தான் அடிச்சிருக்காங்க. அதுவும் உன்னால தான். இதுல்லாம் நல்லதுக்கு இல்ல வனி. முதல்ல அதை கீழே போடுடி” என்று பதற்றத்துடன் கத்த அந்த சத்தம் கேட்டு அஸ்வினும் மேகியும் பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் பதறி ஓடிப் போய் பார்க்க அங்கே கையில் துடைப்பத்துடன் ஸ்ராவணியைப் பார்த்ததும் அஸ்வின் “துடைப்பத்துல அடி வாங்குற அளவுக்கு என்னடா பண்ணி வச்ச” என்று எண்ணிக் கொண்டே மேனகாவைப் பார்க்க அவளோ அந்த காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

அபிமன்யூ அஸ்வினைப் பார்த்து “அச்சு! அந்த துடைப்பத்தை அவ கிட்ட இருந்து வாங்குடா” என்று சொல்ல அவன் ஸ்ராவணியை நோக்கி முன்னேறுவதற்குள் மேனகா அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“சார் எங்கே போறிங்க?”

“உன் ஃப்ரெண்ட் நடந்துக்கிற விதம் கொஞ்சம் கூட நல்லா இல்ல. அபியை அடிக்கிறதுக்குள்ள துடைப்பத்தை வாங்கப் போறேன்”

“அஹான்! அவ கிட்ட லைசென்ஸ் இருக்குடா. அப்பிடியே இருந்தாலும் ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ஃப்க்குள்ள இருக்கிற பிரச்சனையில நம்ம தலையிடக் கூடாது அச்சு” என்று அவன் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள அவனால் நகரவே முடியவில்லை.

அதற்குள் ஸ்ராவணி அபிமன்யூவை நெருங்கி கையை ஓங்க அவன் கண்களை மூடிக்கொண்டான். ஆனால் அவன் மேல் அடி எதுவும் விழாததால் கண்ணைத் திறந்து பார்க்க ஸ்ராவணி தான் கையைக் கட்டிக் கொண்டு நின்றாள். அவன் கண்கள் துடைப்பம் எங்கே என்று ஆராய அது சற்று தூர தள்ளி கிடந்தது.

அவள் அவனிடம் நெருங்கியவள் அவன் சட்டைக் காலரைப் பிடித்து “இனிமே என் கிட்ட இப்பிடி நடந்துக்கிறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு பத்து தடவை யோசிக்கணும். சரியா?” என்று புருவம் உயர்த்திக் கேட்க அவன் நல்லப்பிள்ளையாக சரியென்று தலையாட்டிவிட்டு அவள் விலகுவதற்குள் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடிச் சென்று அவன் அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டான்.

ஸ்ராவணி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நிற்க அஸ்வினால் அதைக் கண்டு சிரிக்க மட்டுமே முடிந்தது. அவன் சிரிப்பதைக் கண்ட மேனகா “இந்த உலகத்துல ரொமான்ஸ் சீனை பார்த்து சிரிச்சவன் நீயா தான் இருப்ப” என்று கேலியாகச் சொல்ல அவளை ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தவன் “பாருடா! உனக்கு ரொமான்ஸ்கிற வார்த்தை கூட தெரிஞ்சுருக்கு. நாட் பேட் மேகி” என்க அவள் கண்ணாடியை தூக்கிவிட்டு பெருமைப்பட்டுக் கொண்டாள்.

இந்த காட்சிகள் எல்லாம் அரங்கேறி சில நிமிடங்கள் கழிய அபிமன்யூ அவனது அறையிலிருந்து பூனை போல வெளியே வந்தவன் அஸ்வினைத் தேட அவன் பால்கனியில் ஒரு மோடாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அங்கே விரைந்தான்.

அவன் அருகிலேயே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன் கருங்கடலாய் இருக்கும் வானத்தையும், சாரலாய் வீசும் மழையையும் ரசித்தவாறே “சென்னை கூட அழகா மாறிடுச்சுல்ல அச்சு” என்றான் ரசனையுடன். அஸ்வினுக்கும் அவனுக்கு சிறுவயதிலிருந்தே மழை என்பது மிகவும் பிடித்த விஷயம் என்பதால் அஸ்வினும் அவனது கருத்தை ஆமோதிக்க மேனகா ஒரு டிரேயில் கோப்பைகளுடன் வர என்ன என்று எட்டிப் பார்த்தான் அஸ்வின்.

அதற்குள் அவர்களிடன் வந்தவள் “பவர் இல்லாம பால் கெட்டுப் போயிடுச்சு. சோ பிளாக் காபி தான் போட்டேன்” என்றபடி அவர்களிடம் டிரேயை நீட்ட அஸ்வின் அதை எடுத்துக் கொண்டே கேலியாக “மழைக்கு இதமா ஒரு விஸ்கி பிராண்டினு கொண்டு வந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்று சொல்ல அபிமன்யூ சிரித்தபடி அவனுக்கு ஹைஃபை கொடுத்தான்.

மேனகா பொய்யாகப் புன்னகைத்தபடி “விஸ்கி பிராண்டி இருக்கானு தெரியல. பட் வனி கையில வச்சிருந்த துடைப்பக்கட்டை இன்னும் ஹால்ல தான் இருக்கு. நான் வேணும்னா….” என்று இழுக்க அஸ்வின் அவளைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு “தெய்வமே தெரியாம கேட்டுட்டேன்” என்றுச் சொல்ல மேனகா அந்த டிரேயில் இருந்து ஒரு கப்பை தானும் எடுத்துக் கொண்டு ஒரு மிடறு அருந்தினாள்.

காபியின் கசப்பை உணர்ந்தவள் “வனி! காபில சுகர் போட மறந்துட்டேன். சுகர் கொண்டு வாடி” என்க ஸ்ராவணி கிச்சனில் இருந்து சர்க்கரை ஜாடியுடன் வந்து இருவருடைய கப்புகளிலும் போட்டுக் கலக்கிக் கொடுத்தாள்.

அபிமன்யூவிடம் “உனக்கு சுகர் வேண்டாமா?” என்று கேட்க அவன் புன்னகையுடன் “வேண்டாம்” என்று சொல்ல அஸ்வின் “டேய் காபில சுத்தமா சுகர் இல்லடா” என்க

அபிமன்யூ அவன் தோளில் கையைப் போட்டபடி ஸ்ராவணியை காதலுடன் பார்த்தபடி “ஒன்னும் இல்லடா அச்சு. காலையிலேயே ஸ்வீட் சாப்பிட்டேனா அந்த இனிப்பு அப்பிடியே மனசுல நிக்குதுடா. இன்னும் ஒரு வாரத்துக்கு எதுலயும் சுகர் போட்டு சாப்பிட வேண்டிய அவசியமே இல்ல” என்று சொல்ல ஸ்ராவணி அவனை முறைத்துவிட்டு படபடத்த இதயத்துடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

கிச்சனில் சென்று நின்று கொண்டவளை அவளது மனசாட்சி “என்ன ஆச்சு வனி உனக்கு? அவன் கிட்ட வந்தா நீ ஏன் வீக் ஆக ஆரம்பிச்சிடுற?” என்று கேட்க அவளோ “நான் என்ன பண்ணுறது? இது வரைக்கும் எந்த பையனும் என்னை நெருங்கவே நான் அலோ பண்ணுனது இல்ல. விக்ரம் கொஞ்சம் அட்வாண்டேஜ் எடுத்தா அவ்ளோ கோவம் வர்ற எனக்கு இப்போ ஏன் கோவமே வரல? ஒரு வேளை அவன் சொன்ன மாதிரி நானும் அவனை லவ் பண்ண ஆரம்பிச்சிடுவேனோ? நோ நோ வனி! இது நல்லதுக்கே இல்ல” என்று தனக்கு தானே பேசிக் கொண்டிருக்க யாரோ வரும் அரவம் கேட்க அவள் மேனகா என்று நினைத்துக் கொண்டாள்.

“கப்பை சிங்கில போடு மேகி. நான் அலம்பி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சில்லிட்டுப் போன காபியை அருந்த ஆரம்பித்தவள் “எப்போவும் உனக்கு மேகி நினைப்பு தானா? கொஞ்சமாச்சும் என்னைப் பத்தியும் யோசிம்மா” என்ற அபிமன்யூவின் குரலில் அவளுக்குக் காபி சிரசில் அடிக்க அவள் இரும ஆரம்பித்தாள்.

அவன் கப்பை வாஷ்பேசினில் போட்டுவிட்டு தண்ணீரை அவளுக்கு நீட்டியபடி அவளது முதுகை தட்டிக்கொடுத்தபடி “மெதுவா குடி வனி. என்ன அவசரம்?” என்று இலகுவான குரலில் சொல்ல அவள் தண்ணீரைக் குடித்துவிட்டு அவனிடம் டம்ளரை நீட்டினாள்.

அதை வாங்கி ஓரமாக வைத்தவன் அவள் நின்ற சமையல் மேடையின் இருபுறமும் கையை ஊன்றி அவளை நகர விடாமல் செய்தபடி “நீ என்ன யோசிக்கிறனு எனக்கு புரியுது. உனக்கு எங்கே என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிடுவியோனு ஒரு பயம். அது உன்னோட கண்ணுல நல்லாவே தெரியுது” என்று குறும்பாகச் சொன்னபடி அவள் கண்களைப் பார்க்க அவளோ அவன் மீது கைவைத்து விலக்க முயன்றவளாய் “முதல்ல கொஞ்சம் தள்ளி நில்லு. உன்னோட புளூடே ஸ்மெல் எனக்கு மூச்சு முட்டுது” என்று சொல்லிக் கொண்டே முகத்தை அவனிடமிருந்து மறைக்க முயன்றாள்.

அபிமன்யூ “பாருடா நீ என்னோட பெர்ஃபியூம் முதற்கொண்டு கவனிச்சிருக்கியா வனி? பட் இதுல ஆச்சரியப்படுறதுக்கு என்ன இருக்கு? மனசுக்குப் பிடிச்சவங்களோட ஒவ்வொரு அசைவும் நமக்குத் தெரியாமலே நம்ம மனசுல பதிஞ்சுடுமே” என்று ரசனையுடன் கூறிக்கொண்டே அவளது முன் நெற்றியில் விழுந்த கூந்தலை அவன் ஒதுக்கிவிட அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்த பார்வையில் வழக்கமான கோபமோ, வருத்தமோ இல்லாமல் இனம் புரியாத ஏதோ உணர்வு இருந்ததை கண்டுக் கொண்டான் அவன்.

அந்தப் பார்வையில் இருந்தது தவறான எண்ணம் என்று கண் இல்லாதவன் கூட சொல்ல மாட்டான். அதில் இருந்தது ரசனை மட்டுமே. தாஜ்மஹாலை முதலில் கண்டவர்களும், புல்லின் மீது இருக்கும் பனித்துளியை ரசிப்பவர்களும், சிறு குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பில் மயங்கியவர்களும் மட்டுமே உணரக் கூடியதான ரசனை அது.

அவளது ரசனை நிறைந்த பார்வையும், குறுஞ்சிரிப்பில் விரியத் தயாரான இதழ்களும் அவனுக்குள் மகிழ்ச்சி பிரவாகத்தைத் தோற்றுவிக்க அவனது இதழ்களும் அவளுடன் சேர்ந்து சிரிக்க தயாரானது.