💞அத்தியாயம் 4💞

வாழ்க்கைல எதிர்பார்க்காம நிறைய இன்சிடெண்ட்ஸ் நடக்கும். நிறைய பேரை நம்ம மீட் பண்ணுவோம்ஆனா சிலரை பாத்ததும் அவங்களோட ரொம்ப நாள் பழகுன உணர்வு வரும்ஃப்ளைட்ல எனக்கு பக்கத்து சீட்ல இருந்த அந்த ரெண்டு பொண்ணுங்களை பாத்ததும் எனக்கு அப்பிடி தான் தோணுச்சுஃபர்ஸ்ட் டைம் ஃப்ளைட்ல வர்றாங்க போலஅவங்களோட பிஹேவியர் எனக்கு இலக்கியாவை நியாபகப்படுத்துச்சுஅண்ணா அண்ணானு என் மேல உயிரையே வச்சிருந்தவதிடீர்னு இல்லாம போனதும் எனக்குள்ள உண்டான வெறுமை இன்னைக்கு இந்த பொண்ணுங்க அன்பாப்ரோனு கூப்பிடறப்ப காணாம போகுது

                                                           –தனஞ்செயன்

காரிலிருந்து இறங்கிய ஷான்வியிடம் “குட்டிம்மா டுமாரோ ஷார்ப்பா நைன் ஓ கிளாக் ரெடியா இரு… அண்ணா வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்… வயசுப்பொண்ணு கால்டாக்சியில போறது சேப்டி இல்ல” என்று சொல்லிவிட்டு அவளுக்கு டாட்டா காட்டிவிட்டுக் காரை கிளப்பிக்கொண்டு சென்றான் தனஞ்செயன்.

அவன் கிளம்பிச் செல்லும் வரை புல்வெளியிலேயே நின்றிருந்த ஷான்வியின் மனம் நிறைந்திருந்தது. எத்துணை நாட்கள் கழித்து இவ்வளவு அக்கறையான வார்த்தைகளைக் கேட்டிருக்கிறாள்! அதுவும் ‘குட்டிம்மா’ என்ற அழைப்பு அவளது தந்தைக்கு மட்டுமே உரிமையானது.

இன்றைய தினம் முழுவதும் நடந்த மகிழ்ச்சியான இனிய சம்பவங்களை மனதுக்குள் மீண்டும் அசை போட்டபடி புல்வெளியினூடே நடந்து சென்றாள். மாடியில் அவர்களின் அறைக்குள் தன்வியும் தங்கைக்காக தான் காத்திருந்தாள்.

கார் சத்தம் கேட்டதும் அஸ்வினியும் ஷான்வியும் தான் திரும்பி விட்டனர் என்று எண்ணியவள் இவ்வளவு நேரம் அவளுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்த அனிகாவை அவளது அறைக்குப் போகச் சொன்ன நேரத்தில் தான் ஷான்வி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்தவள் அனிகாவைக் கண்டதும் “வாட் அ சர்ப்ரைஸ் அனிகுட்டி? அம்மா இல்லனதும் தைரியமா எங்க ரூமுக்கே வந்துட்டிங்க போல” என்றபடி அவள் கன்னத்தைக் கிள்ள அச்சிறுமி கிளுக்கிச் சிரித்தாள்.

“அப்போ அஸுக்கா கூட நீ வரலயா ஷானு?” என்று வினவிய தமக்கையிடம் இல்லையென மறுத்தவாறே

“நான் தனா அண்ணா கூட கார்ல வந்தேன்… இனிமே டெய்லிக்கும் அவரே என்னை மார்னிங் பிக்கப் பண்ணிக்கிறேனு சொல்லிட்டாரு… ஈவினிங்கும் வீட்டுல கொண்டு வந்து விட்டுடுவாராம்… தனா அண்ணா ரொம்ப ஸ்வீட் தெரியுமா?” என்று தனஞ்செயனை புகழ்ந்து தள்ளினாள் ஷான்வி.

அன்றைய தினம் தாங்கள் இருவரும் சேர்ந்து செய்த வேலைகள் அனைத்தையும் தன்வியிடமும் அனிகாவிடமும் பகிர்ந்து கொள்ள, அனிகா ஆசையாக

“ஷானுக்கா உனக்கு ஆப்பிள் பை செய்ய தெரியுமா? அது என்னோட ஃபேவரைட்” என்று சொல்லிவிட்டு நாக்கைச் சுழற்ற அவளின் குண்டுக்கன்னத்தில் முத்தமிட்ட ஷான்வி

“உனக்கு இன்னும் என்னென்ன பிடிக்கும்னு லிஸ்ட் போட்டு வை… இனிமே ஒவ்வொரு வீக்கெண்டும் செஞ்சு அசத்திடலாம்” என்று சொல்ல அனிகாவும் அவளும் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.

வெளியே காரின் சத்தம் கேட்டதும் வருவது அஸ்வினி தான் என்று தெரிந்ததும் இரு சகோதரிகளும் அனிகாவை அவளது அறைக்கு அவசரமாக அனுப்பிவிட்டனர்.

அஸ்வினி வீட்டுக்குள் நுழைந்தவள் நேரே தன்வி இருக்கும் அறைக்குள் சென்றாள். அங்கே ஷான்வியும் இருக்கவே இவள் வீட்டுக்கு வந்து விட்டதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டாள். கூடவே

“ஆக்சுவலி நடந்த விசயத்துக்கு நான் சாரி கேட்டுக்கிறேன் ஷான்வி. அவன் என்னோட தம்பி மாதிரி… நான்னு நினைச்சு தான் உன்னை…” என்று தயக்கத்துடன் நிறுத்த ஷான்வி அவசரமாக குறுக்கிட்டு

“ஐயோ அக்கா! நான் அதை அப்போவே மறந்துட்டேன்… இட்ஸ் ஓகே… யாருமே வேணும்னு தப்பு பண்ண மாட்டாங்க… நீங்களும் நானும் இன்னைக்கு ஒரே கலர் ட்ரஸ், ஒரே ஹேர்ஸ்டைல்… அதுல கன்பியூஸ் ஆகிட்டாருனு நினைக்கேன்… நாட் அ பிக் டீல் அக்கா” என்று சொல்லிவிட அஸ்வினிக்கும் பெரும்பாரம் மனதை விட்டு இறங்கிய உணர்வு. இருவரிடமும் தலையசைத்துவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் ஷான்வி பெருமூச்சு விட்டவள் அஸ்வினி யாருக்காக மன்னிப்பு கேட்டாளோ அவனைப் பற்றி எண்ணியவாறே கடுகடுத்த முகத்துடன் உடை மாற்றத் தொடங்கினாள். தன்வியோ தங்கையில் முகத்தில் உண்டான கோபச்சிவப்பைக் கண்டு துணுக்குற்றவளாய் என்ன விசயம் என்று வினவ ஷான்வி அவளைக் கோபப்படுத்திய சம்பவத்தையும் அச்சம்பவத்தின் காரணகர்த்தாவையும் பற்றி குமுறலுடன் பேச ஆரம்பித்தாள்.

ஹோட்டலில் அன்று தான் முதல் நாள் என்பதால் ஆர்வத்துடன் தனஞ்செயனுடன் சேர்ந்து டோனட்டுகளைப் பொரித்து எடுத்துக் கொண்டிருந்தவளை அஸ்வினி வந்து அழைக்கவும் அவனிடம் அனுமதி பெற்று அவளுடன் சென்றாள் ஷான்வி.

ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் இருக்கும் அதன் நிர்வாக அலுவலகத்தில் இருந்து ஷான்வியின் சில அடையாளச்சான்றுகளைக் கேட்டிருக்க அஸ்வினி அதற்காக தான் அவளை அழைக்க வந்ததாகச் சொல்லிவிட்டு மின்தூக்கியில் ஷான்வியுடன் மூன்றாவது தளத்தில் வந்து இறங்கினாள்.

அவள் செல்ல வேண்டிய இடத்தைக் காட்டிவிட்டு வெளியே இருந்த வரவேற்பு பெண்ணிடம் இண்டர்ன்ஷிப்புக்கான நேர்முகத்தேர்வு பற்றி வினவ ஆரம்பித்தாள் அஸ்வினி.

ஷான்வி அவள் சொன்ன இடத்துக்குச் சென்று தனது மொபைலில் மென்பிரதியாக வைத்திருந்த அடையாளச்சான்றுகளை அவர்களிடம் சமர்ப்பித்தவள் அதற்கு ஒப்புதல் கிடைத்ததும் கிளம்பலாமா என்று கேட்டாள்.

“உங்களோட ஐடி கார்ட் டுமாரோ கிடைச்சிடும் மிஸ் ஷான்வி.. யூ மே கோ நவ்” மென்மையான புன்னகையுடன் பதிலளித்த பெண்ணிடம் புன்முறுவல் பூத்துவிட்டு வெளியேறினாள்.

வெளியே வந்தவள் அஸ்வினியைக் காணாது தேடினாள். வரவேற்பு பெண்ணிடம் “வேர் இஸ் அஸ்வினி மேம்?” என்று கேட்ட அடுத்த வினாடியே யாரோ பின்னே இருந்து அவளது தோளோடு சேர்த்து அணைத்து நின்றதை உணர்ந்து சிலையானாள்.

“நான் இண்டர்னா ஜாயின் பண்ணிட்டேன் அஸூக்கா… எல்லாம் உன் முகத்தைப் பார்த்துட்டுப் போன குட்லக்கால தான்… தேங்க்யூ சோ மச்” என்று கம்பீரமான ஆண்குரல் ஒன்று ஒலிக்க அந்த ஆண்மகனின் கரங்கள் அவளைத் தோளோடு சேர்த்து அணைத்திருந்தது.

அந்நேரத்தில் அஸ்வினி எங்கேயோ சென்று திரும்பியவள் சிலையாய் நின்ற ஷான்வியையும் அவளது முகம் நோக்காது தோளோடு அணைத்து நின்ற ஆடவனையும் கண்டு திகைப்பில் வாயைப் பிளந்தாள்.

“டேய் சித்து என்னடா பண்ணுற?” என்றவளின் குரலில் சத்தம் வந்த இடத்தை நோக்கிய அந்த ஆடவனும் அதிர்ந்தான். அஸ்வினி என்று எண்ணித் தான் அணைத்திருந்தது வேறு ஒரு பெண்ணையா என அதிர்ந்து ஷான்வியை விட்டு விலகினான்.

அஸ்வினி இன்னுமே அதிர்ச்சி விலகாது நின்ற ஷான்வியிடம் வந்தவள் அவளருகே நின்றவனிடம் “சித்து! வர வர உன் சேட்டைக்கு அளவே இல்லாம போயிட்டிருக்கு” என்று கண்டிக்க ஷான்வி அப்போது தான் தன்னருகில் நின்றிருந்த அந்த உயரமானவனைப் பார்த்தாள்.

அவன் அஸ்வினியின் அதட்டலுக்கு அலட்டாமல் “இப்போ என்ன நடந்துச்சு அஸூக்கா? தெரியாம நீனு நினைச்சு இந்தக் குட்டிப்பொண்ணை ஹக் பண்ணிட்டேன்… கம் ஆன் கேர்ள்ஸ்… நீங்க ரெண்டு பேரும் ஒரே கலர் ட்ரஸ் அண்ட் சேம் ஹேர் ஸ்டைல்… ஹவ் கேன் ஐ நோ?” என்று தோளைக் குலுக்கி கையை விரித்த பாவனையில் ஷான்விக்கு இரத்த அழுத்தம் உயரத் தொடங்கியது.

அஸ்வினி அதை கவனித்தவாறே அவனிடம் பத்திரம் என ஆட்காட்டிவிரலை நீட்டி எச்சரித்தவள் அவளுக்குச் சமையலறையில் இருந்து அழைப்பு வரவும் ஷான்வியைக் கிளம்பச் சொல்லிவிட்டு அந்த சித்துவையும் கவனம் என மீண்டும் எச்சரித்துவிட்டு அகன்றாள்.

அவள் சென்றதும் அந்த சித்து என்பவனை முறைக்கத் தொடங்கினாள் ஷான்வி. அவளது முறைப்பை பொருட்படுத்தாது அவள் உயரத்துக்குக் குனிந்து அவள் முகம் நோக்கியவாறே

“நான் ஒன்னும் கொலைக்குத்தம் பண்ணல… ஜஸ்ட் அ ஹக்… அதுவும் அஸ்வினிக்கானு நினைச்சு பண்ணிட்டேன்… அதுக்கு ஏன் நீ என்னமோ என்னோட முறைப்பொண்ணு மாதிரி இப்பிடி முறைக்கிற?” என்று மீண்டும் தோளைக் குலுக்க

“வாட்? ஜஸ்ட் அ ஹக்கா? இதுவே நீ இந்தியால என் கிட்ட இப்பிடி பிஹேவ் பண்ணிருந்தா நான் யாருனு உனக்கு காமிச்சிருப்பேன் இடியட்… யாரு என்னனு பாக்காம ஹக் பண்ணிட்டு சாரி கூட கேக்காம வக்கணையா பேசுற… தப்பு பண்ணிட்டோமேனு கொஞ்சம் கூட கில்டியா ஃபீல் பண்ணல… நீ எல்லாம் என்ன ஜந்து?” என்று திட்டித் தீர்த்தாள் ஷான்வி.

அவள் பேசிய இத்தனை வார்த்தைக்கும் சேர்த்து வைத்து அவன் சொன்ன ஒரே பதில் “இதுக்கு ஏன் நான் கில்டியா ஃபீல் பண்ணணும்? மிஸ்டேக்கா இருந்தாலும் ஒரு கியூட் டாலை ஹக் பண்ணுனதுக்கு நான் ரொம்ப ஹேப்பியா தான் ஃபீல் பண்ணுறேன்… இனிமே இப்பிடி ஒரு சான்ஸ் எப்போ கிடைக்குமோ?” என்பது தான்.

பதிலைச் சொல்லி கண் சிமிட்டிவிட்டு குறும்பாக நகைத்தவன் ஆட்காட்டிவிரலையும் நடுவிரலையும் சேர்த்துவைத்து நெற்றியில் தொட்டு சலாம் போட்டுவிட்டுக் கிளம்பினான்.

அவன் சொன்ன வார்த்தையின் கடுப்பின் உச்சத்துக்குச் சென்றவள் அவனைத் திட்டுவதற்குள் தனஞ்செயனிடம் இருந்து அழைப்பு வரவே சமையலறையை நோக்கிச் சென்றுவிட்டாள். அங்கே சென்று சில மணி நேரங்களுக்கு அவனது கரம் பதிந்த தோளில் உண்டான குறுகுறுப்பு அகலவில்லை.

இப்போதும் நினைத்தாலும் அவனது கண்சிமிட்டல் அவளுக்கு எரிச்சலை உண்டாக்கியது. சிரமத்துடன் அவனிடமிருந்து சிந்தனையை வேறு புறம் திருப்ப விரும்பியவள் தன்வியிடம் பேச்சை மாற்றினாள்.

“அந்த இடியட் என் மூடை ஸ்பாயில் பண்ணிட்டான்… எரிச்சலோட தான் கிச்சனுக்குப் போனேன்… அங்க தனா அண்ணா ரெயின்போ கேக் செஞ்சு முடிச்சுருந்தாரு… உடனே நாங்க எல்லாரும் அது கூட சேர்ந்து செல்பி எடுக்கலாம்னு நான் எல்லாரையும் கூப்பிட்டு நிக்கவச்சேன்… அப்போ தான் அந்த அழகான மொமண்ட் வந்துச்சு” என்று சொன்ன ஷான்வி அந்த தருணத்துக்குள் மீண்டும் நுழைந்து கொண்டாள்.

அவள் செல்பி ஸ்டிக்குடன் அனைவரையும் சிரிக்கச் சொல்லிவிட்டு அதை உயர்த்திய வினாடி “மே ஐ ஜாயின் வித் யூ கய்ஸ்?” என்ற கம்பீரக்குரல் காதில் விழ அனைவரும் விருட்டென்று திரும்பிப் பார்க்க சமையலறையின் வாயிலில் வெள்ளை நிற சீருடையில் சிகை நெற்றியில் புரள வசீகரப்புன்னகையுடன் நின்றிருந்தான் விஸ்வஜித் என்ற வீ.கே.

அவனை நேரில் கண்ட அந்நொடியில் ஷான்விக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை. அவளை அறியாது கண்கள் சந்தோசத்தில் விரிய இதழ்கள் சிரிப்பைச் சுமக்க ஆரம்பித்தது. விஸ்வஜித் அதற்குள் உள்ளே வந்தவன் தனஞ்செயனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு ஷான்வியிடம் கை நீட்ட அவளோ என்ன செய்யவென்று புரியாது விழித்தாள் ஒரு நொடி.

பின்னர் அவள் பின்னே நின்ற ரோசியின் கைமுட்டி இடித்ததும் சுதாரித்தவள் அவன் கையைப் பற்றிக்கொண்டாள்.

“கங்கிராட்ஸ் அண்ட் வெல்கம் டூ ராயல் கிராண்டே ஃபேமிலி” என்று சொல்லிவிட்டுச் சிரித்தவனின் செய்கையில் அவளுக்கு மயக்கம் மட்டும் தான் வரவில்லை.

இந்த இளம்வயதில் இவ்வளவு புகழுக்கு மத்தியிலும் அனைவரிடமும் இயல்பாகப் பேசிச் சிரிக்கும் அவனது எளிமையில் கவரப்பட்ட ஷான்வி அவனைத் தனது ரோல்மாடலாக நினைத்ததற்கு மிகவும் பெருமையாக உணர்ந்தாள்.

தனஞ்செயனிடம் உரையாடும் விஸ்வஜித்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் ரோசி கேலியாக “உனக்கு முன்னாடியே வீ.கேவை தெரியுமா?” என்று கேட்க மறுப்பாய் தலையசைத்தவள்

“நோ… ஹீ இஸ் மை ரோல்மாடல்… அவரை நேர்ல பாத்த சந்தோசத்தை என்னால வார்த்தையால சொல்ல முடியல… வானத்துல பறக்குற மாதிரி இருக்கு ரோசி” என்று சொல்லிவிட்டுக் கன்னம் குழிய புன்னகைத்த தருணம் இப்போது நடந்தது போல கண் முன் வந்து சென்றது.

கூடவே “இனிமே இப்பிடி ஒரு சான்ஸ் எப்போ கிடைக்குமோ?” என்று சொல்லிக் கண்சிமிட்டியவனின் நினைவும் வர

“நானும் உன்னை மறுபடி மீட் பண்ணுறதுக்கு இன்னொரு சான்சுக்குத் தான் வெயிட் பண்ணுறேன்டா… அப்போ என்னைப் பார்த்துச் சிமிட்டுன கண்ணை நோண்டி கையில குடுக்கிறேன்” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள் ஷான்வி.

அவள் இவ்வாறான சிந்தனையில் உழன்று கொண்டிருக்க, தன்வி தங்கை சொன்ன அனைத்தையும் கேட்டுவிட்டு இனி அவளுக்குப் பணியிடத்தில் பிரச்சனை எதுவுமிராது என நிம்மதியாய் உணர்ந்தாள்.

அதே நேரம் தனஞ்செயன் அவனது நண்பனின் ஃப்ளாட்டை பகிர்ந்திருப்பவன் நண்பனிடம் ஷான்வியையும் தன்வியையும் பற்றி பேசிக் கொண்டிருந்தான்.

“நம்ம இலக்கியா கூட இப்பிடி தான் வாய் ஓயாம பேசுவா மோகன்… எனக்கு ஷானுவைப் பார்த்தா அவளை மாதிரியே தோணுது… தனு அப்பிடியே எங்கம்மா மாதிரி… பொறுப்பான அக்காவா தங்கச்சிய பத்திரமா பார்த்துக்கணும்ங்கிற கவலை அவளோட ஒவ்வொரு செய்கையிலயும் தெரியுதுடா… நல்ல பொண்ணுங்க… கடவுள் அவங்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் குடுக்க கூடாது”

இவ்வாறு சொன்னவனுக்கு மாலையில் கிளம்பும் போது அஸ்வினி ஷான்வியிடம் பேசியது நினைவுக்கு வந்தது. முன்னே பின்னே தெரியாத ஊரில் இளம்பெண்ணை டாக்சி பிடித்துப் போ என்று சொன்ன அஸ்வினியின் மீது அவனுக்குக் கோபம் வந்தது. இதுவே அவளது சொந்தத் தங்கை என்றால் இப்படி விடுவாளா என்ற எரிச்சலும் தான்!

பரிதாபமாய் நின்ற ஷான்வியைப் பார்க்க இயலாது கையோடு தன்னுடன் காரில் அழைத்து வந்த போது தான் ஷான்வியும் தன்வியும் சமீபத்தில் பெற்றோரை இழந்த நிகழ்வு அவனுக்கு ஷான்வியின் மூலம் தெரியவந்தது.

அவனுமே சமீபத்தில் தாயாரை இழந்திருந்ததால் அவர்களின் மனநிலை இப்போது எப்படி இருக்கும் என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதே நேரம் விட்டேற்றி மனோபாவத்துடன் வாழும் அஸ்வினியுடன் அவர்கள் தங்கும் நிலை ஏற்பட்டதற்காக அவனால் வருத்தப்பட மட்டுமே முடிந்தது.

ஆண்பிள்ளைகளாக இருந்தால் தன்னுடன் தங்க வைத்துக் கொள்ளலாம். பெண்பிள்ளைகளாகப் போய் விட்டார்களே என்ற ஆதங்கம் தான் அவனுக்கு. அதே நேரம் ஆதரவு தேடி வந்த பெண்களிடம் விட்டேற்றியாக நடந்து கொள்ளும் அஸ்வினி மேல் ஏனோ நல்லெண்ணம் வர மறுத்தது அவனுக்கு.