❣️அத்தியாயம் 10❣️

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

“பேஸ்ட்ரி செஃப் ஆகுறதுக்கு முதல்ல பொறுமை ரொம்ப அவசியம்… பிகாஸ் பேகிங் கிச்சனோட ஒவ்வொரு இன்சும் நம்ம பொறுமைய ரொம்பவே சோதிக்கும்… இன்க்ரீடியன்ஸ்ல சின்னதா மாறுதல் வந்தாலோ, பேக் பண்ணுற டைம் கூடவோ குறையவோ செஞ்சாலோ அவுட்புட் டோட்டலா கொலாப்ஸ் ஆகிடும்… பேஸ்ட்ரி ஐட்டம்சை பொறுத்த வரைக்கும் சீக்கிரமா செஞ்சு முடிக்கிறதை பெர்ஃபெக்டா செஞ்சு முடிக்கிறது தான் முக்கியம்… கிரியேட்டிவிட்டி ரொம்ப ரொம்ப அவசியம்… பிகாஸ் நம்ம பேக் பண்ணுன பேஸ்ட்ரிய மக்கள் நாக்கால ருசி பாக்குறதுக்கு முன்னாடி முதல்ல கண்ணால தான் ருசிக்கிறாங்க… அதுக்கு டெகரேசன் தான் அடிப்படை… அடுத்து ஒரு திறமையான பேஸ்ட்ரி செஃப் தனக்குனு சில பேக்கிங் ஹாக்ஸ் வச்சிருக்கணும்… நான் அடிக்கடி யூஸ் பண்ணுற ஹாக், கேக் பேட்டர்ல ட்ரை ஃப்ரூட்ஸ் சாக்கோ சிப்ஸை சேர்க்குறதுக்கு முன்னாடி அதுல மாவு தூவி வச்சிடுவேன்… அப்ப தான் பேட்டர்ல அது சுருங்கி போகாம ஈவனா தெரியும்”

                                   -கிளிசரின் பாட்டிலின் பொன்மொழிகள்….

தங்கள் இல்லத்தில் நடந்தேறிய நிகழ்வுகளால் உச்சபட்ச அதிர்ச்சியில் இருந்த யோகாவை அவரது தோழிகள் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க இளையவர்களோ வர்ஷாவின் அறையில் குழுமியிருந்தனர்.

விஷ்ணு தங்கையை அடிக்கடி முறைக்கவும் “முறைக்காதண்ணா… நான் ப்ராப்ளம் இவ்ளோ சீரியஸ் ஆகும்னு யோசிக்கவே இல்ல” என்றாள் அவள் பரிதாபமாக.

ஷிவானி இடையே புகுந்து “அவளே பாவம், குழம்பிப் போயிருக்கா… நீ வேற கூட கொஞ்சம் அவளை டென்சன் ஆக்காத விச்சு” என்றவள் வர்ஷாவிடம் நேரடியாகவே “உனக்குச் சாணக்கியனை பிடிச்சிருக்கா?” என கேட்க

“எனக்கு அவனைச் சுத்தமா பிடிக்கல அண்ணி… நீ எத்தனை தடவை கேட்டாலும் என்னோட பதில் இது தான்… அன்னைக்கு நான் அவன் வீட்டுக்குப் போனது ஜெய்யை அவனோட ஆள் எதுவும் பண்ணிடுவானோனு பயந்து தான்… அதை தனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிட்டு இன்னைக்கு நம்ம வீடு வரைக்கும் வந்துட்டான் அந்த ராஸ்கல்” என்று குமுறினாள்.

ஷிவானிக்கும் அவளது நிலமை புரிந்தது. இருப்பினும் அடுத்து என்ன செய்வது என்று தான் புரியாதநிலை.

அதற்கு ஜெயஸ்ரீ ஒரு தீர்வைக் கூறினாள்.

“நீ ஏன் டேரக்டா அவன் கிட்டவே பிடிக்கலனு சொல்லக்கூடாது?”

“நோ! அப்பிடி பண்ணுனா அது நமக்குத் தான் பேக்ஃபயர் ஆகும்” என்று நீண்டநேர யோசனைக்குப் பிறகு வாயைத் திறந்தான் ஆதித்யா.

நால்வரும் அவனை நோட்டமிட “லுக்! இப்ப வரைக்கும் யோகா அத்தையோட மனநிலை கொந்தளிப்பா தான் இருக்கு… விக்னேஷ் மாமா என்ன சொல்லுவார்னு வெயிட் பண்ணி பார்த்துட்டு அடுத்த மூவ்வை எடுத்து வைக்கணும்… பட் அது ஸ்மார்ட் மூவா இருக்கணும் லைக் சாணக்கியனோட மூவ்ஸ் மாதிரி” என்றான் அவன்.

நால்வரும் அதற்கு தலையாட்டுகையிலேய் நான்கு குடும்பத் தலைவர்களும் வரும் அரவம் கேட்டது. வரும் போதே “யோகா” என்று உற்சாகமாக அழைத்தபடி வந்தார் விக்னேஷ். அவரோடு வந்த அவினாஷின் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம்.

பின்னோடு வந்த வருணும் ஜெயசந்திரனும் கூட சந்தோசமாகத் தான் இருந்தனர். என்னவாயிற்று இந்நால்வருக்கும் என அவரவர் இல்லத்தரசிகளோடு புத்திரச்செல்வங்களும் மாடி வராண்டாவில் நின்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.

விக்னேஷ் நேரடியாக யோகாவிடம் வந்தவர் “நம்ம கூடிய சீக்கிரமே யூனிகார்ன் குரூப் சேர்மனோட சம்பந்தி ஆகப் போறோம்” என்று சொல்லி இளையவர்களை ஆட்டம் காணச் செய்தார்.

அவினாஷோ “வர்றப்பவே ஸ்வீட் வாங்கிட்டு வரலாம்னு நான் சொன்னேன்… இந்த மடையன் கேட்டா தானே!” என்று குறைபட

“மிஸ்டர் வினயன் பாக்குறதுக்கு எவ்ளோ சிம்பிளா இருக்குறார் தெரியுமா? கோடீஸ்வரன் நம்ம கிட்ட பணிவா பேசணும்னு என்ன அவசியம் இருக்கு? எல்லாம் நம்ம வர்ஷாவோட நல்ல மனசுக்குக் கிடைச்ச சம்பந்தம் தான்” என்று வருண் வேறு புளங்காகிதமடைந்தார்.

ஆனால் ஜெயசந்திரன் மட்டும் பெரிதாக எதுவும் கூறாது நின்றார். யோகா அவரை நோக்கிவிட்டு

“இன்னைக்கு அந்தப் பையன் நம்ம வீட்டுக்கே வந்து என்ன காரியம் பண்ணிருக்கான் தெரியுமா?” என்ற கேள்வியோடு விக்னேஷிடம் சாணக்கியனின் அடாவடித்தனத்தை புட்டுப் புட்டு வைத்தார்.

பெண்கள் நால்வரிடமும் அவனுக்கு அவ்வளவாக நல்லப்பெயர் இல்லை என்றதும் ஆண்கள் அணியின் முகம் வாட்டமுற்றது.

வருண் தான் யோகாவைச் சமாதானப்படுத்தினார்.

“எல்லாம் காதல் படுத்துற பாடு யோகா… கொஞ்சம் யோசியேன், நம்ம எல்லாரும் ஃப்ரெண்ட்ஸா அறிமுகம் ஆனப்ப நீயும் விக்கியும் லவ்வர்ஸ், அவியும் ரியாவும் கிட்டத்தட்ட ப்ரேக்கப் ஆகுற ஸ்டேஜ், ஜெயாவும் ஸ்ரீகுட்டியும் ஜஸ்ட் ஃப்ரென்ட்ஸ், நானும் கீத்துவும் என்னனு வரையறுக்க முடியாத ரிலேஷன்ஷிப்ல இருந்தோம்… ஆனா காலப்போக்குல காதல் அழுத்தமா வரவும் நம்ம எவ்ளோ பைத்தியக்காரத்தனம் பண்ணுனோம்னு நம்ம நாலு ஜோடிக்கும் நல்லாவே தெரியும்…

நம்மளோட ஒவ்வொரு கெட்-டுகெதரும் எவ்ளோ கிறுக்குத்தனமான மொமண்ட்ஸ் நிறைஞ்சதுனு யோசிச்சுப் பாரேன்… ஊருக்கு நம்ம எல்லாருமா சேர்ந்து போனப்ப கை வலிக்க வலிக்க திருமலை கோயில் படிக்கட்டுல உன்னை விக்கி தூக்கிட்டுப் போனான்… மத்தவங்க பாக்குறாங்கங்கிற கவலை எதுவுமில்லாம அவன் மனசுல தோணுனதை செய்ய காரணம் அவனோட லவ்… இப்ப இந்தப் பையனும் அதை  தானே செஞ்சிருக்கான்… வர்ஷாவை பாத்திருக்கான், அவ கிட்ட ரெண்டு மூனு தடவை பேசி அண்டர்ஸ்டாண்டிங் வந்ததும் அவனோட பேரண்ட்ஸ் கிட்ட அறிமுகப்படுத்திருக்கான்… இன்னைக்கு அவனோட ஃபாதர் விக்கி கிட்ட பேசப்போறார்னு தெரிஞ்சதும் ஆர்வக்கோளாறுல வீட்டுக்கே வந்து மோதிரம் போட்டுட்டான்… இது அவன் எந்தளவுக்குத் தீவிரமா வர்ஷாவை காதலிக்கிறான்னு காட்டுது யோகா” என்று சாணக்கியனை ஆதரித்து முழு நீள பிரசங்கத்தை ஆற்றி முடித்தார்.

விக்னேஷும் மனைவியைச் சமாதானம் செய்தார்.

“இன்னைக்கு மிஸ்டர் வினயன் எங்க ஹாஸ்பிட்டல்ல ரீசண்டா சர்ஜெரி முடிஞ்ச சென்ட்ரல் மினிஸ்டர் ஒருத்தரை பாக்குறதுக்கு வந்திருந்தார்… அப்ப தான் என் கிட்ட சுருக்கமா இந்த விசயத்தைச் சொன்னார்… ஹாஸ்பிட்டல்ல வச்சே எல்லாத்தையும் பேச வேண்டாம்னு அவங்களோட பீச் ஹவுசுக்கு என்னை இன்வைட் பண்ணுனார்… நான் தான் என்னோட ஃப்ரெண்ட்ஸுக்குத் தெரியாம எந்த டிசிசனும் எடுக்க மாட்டேன்னு இவங்க மூனு பேரையும் அழைச்சிட்டு அங்க போனேன்… போனதும் அவங்க பையனோட லவ் பத்தி முழுசா சொல்லிட்டார்… எனக்கு இந்தச் சம்பந்தத்துல சந்தோசம் தான்… ஆனா வர்ஷாவுக்கும் பிடிக்கணும்ல, அதான் பொண்ணை கேட்டு சொல்லுறேன்னு பதில் சொன்னேன்”

யோகா அவரது பேச்சை அமைதியாக கேட்க ரியாவோ “எல்லாம் ரொம்ப வேகமா நடக்குற மாதிரி இருக்கு விக்கி… அதான் யோகா யோசிக்கிறா” என்றார்.

“அந்தப் பையன் தடாலடியா வந்து மோதிரம் போட்டதும் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்துச்சு… ஆனா நம்ம லவ் ஸ்டோரியோட கம்பேர் பண்ணுறச்ச இந்த தடாலடி ஒன்னும் புதுசில்லையேனு தோணுது” என்று கீதா வேறு தன் பங்குக்கு சாணக்கியனின் செய்கைக்கு விளக்கம் அளிக்க முடிவில் நான்கு குடும்ப பெரியவர்களுக்கும் சாணக்கியனைப் பிடித்துப் போயிற்று.

ஆனால் மாடி வராண்டாவிலோ இளையவர்கள் கொதித்துக் கொண்டிருந்தனர்.

“பார்த்தியாடா உன் டாடிய? அவர் மட்டும் அந்தக் காலத்துலயே லவ் மேரேஜ் பண்ணுவாராம்… ஆனா பொண்ணுனு வந்துட்டா மட்டும் என்னனு கேக்காம அரேஞ்ச் மேரேஜுக்கு ஏற்பாடு பண்ணுவாராம்” என்று கொந்தளித்தாள் ஷிவானி.

ஜெயஸ்ரீ அவள் தலையில் தட்டினாள்.

“மக்கு மாதிரி பேசாத ஷிவாக்கா… அந்தச் சாணக்கியன் நம்ம வர்ஷூவும் அவனை லவ் பண்ணுற மாதிரி கதை கட்டி விட்டிருக்கான்… விக்கி மாமா அதை நம்பிட்டார்” என்றாள் அவள்.

விஷ்ணு இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன் தங்கையின் கரத்தைப் பிடித்தான். அவள் என்னவென ஏறிட

“இப்பவே போய் இந்த சம்பந்தத்துல உனக்கு இஷ்டமில்லனு அப்பா கிட்ட சொல்லுவோம் வா” என்று அவளை அழைத்தான்.

ஷிவானிக்கும் ஜெயஸ்ரீக்கும் அதுவே சரியென பட்டது.

“இது ஸ்மார்ட் மூவ் இல்ல விச்சு”

இடையிட்டது ஆதித்யாவின் குரல். அவனது பேச்சில் நால்வரும் குழம்பினர்.

அவனோ நிதானமாக எழுந்தான்.

“இப்ப வர்ஷா இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லனு சொல்லிட்டா சாணக்கியன் ஓ.கேனு சொல்லி ஒதுங்கிக்கிற டைப் மாதிரி எனக்குத் தோணலை… அவன் எல்லார் கிட்டவும் வர்ஷாவும் அவனும் காதலிக்கிற மாதிரி கதை கட்டி ஸ்மார்ட்டா மூவ் பண்ணிருக்கான்… இவ இல்லைனு சொன்னா ரெஸ்ட்ராண்ட்ல அவனோட இவ பேசுனது, அவன் வீட்டுக்குப் போனதைலாம் எடுத்து விடுவான்… சோ நம்மளும் அவனை மாதிரியே ஸ்மார்ட்டா மூவ் பண்ணணும்”

“அதுக்கு இப்ப என்ன செய்யணும்?”

ஆதித்யா வர்ஷாவை பார்த்தான்.

“நீ இந்தச் சம்பந்தத்துல உனக்கு முழு சம்மதம்னு சொல்லிடு வர்ஷா”

வர்ஷா பதறினாள்.

“அப்பிடி சொல்லிட்டா அடுத்த நிமிசமே எங்கேஜ்மெண்ட், மேரேஜ்னு அவன் கடகடனு ஏற்பாடு பண்ணிடுவான் ஆதி”

“பண்ணட்டும்… அது தான் நமக்கு வேணும்” என்றான் ஆதித்யா படு கூலாக.

“டேய்! நீ பேசுறது சுத்தமா புரியலை”

விஷ்ணுவும் ஷிவானியும் எரிச்சல்படவும் “சில் கய்ஸ்” என்று இரு கரங்களையும் சரணாகதியாக உயர்த்தினான்.

பின்னர் “இப்ப மட்டும் வர்ஷா நோ சொல்லிட்டா அவன் சும்மா இருக்க மாட்டான்… நம்ம ஃபேமிலிக்கு எதாச்சும் தொந்தரவு குடுப்பான்… பெரிய பிசினஸ் டைகூன் வேற… சொல்லவா வேணும்? சோ அவனைப் பொறுத்தவரைக்கும் எல்லாம் சுமூகமா நடக்குற மாதிரி ஒரு இல்யூசனை உண்டாக்கிட்டு நம்ம யாருக்கும் தெரியாம ப்ளான் பண்ணி இந்தக் கல்யாணத்த கடைசி நேரத்துல நிறுத்தணும்” என்றான்.

“அப்ப மட்டும் அவன் சும்மாவா இருப்பான்?”

“கண்டிப்பா இருக்க மாட்டான்… ஆனா அவன் யாரை வச்சும் ப்ளாக்மெயில் பண்ணாத தூரத்துல வர்ஷா இருப்பா” என்றவன் தனது முழுத்திட்டத்தை விளக்கினான்.

அதை கேட்டு முடிந்ததும் விஷ்ணு தனது சந்தேகத்தைக் கேட்டான்.

“இப்ப வர்ஷா உடனே ஓ.கேனு சொன்னா கூட அவன் சந்தேகப்படுவான் ஆதி… அதோட அவனுக்குத் தெரியாம நமக்கு உதவ யார் இருக்காங்க?”

“அஜித் மாமா” என்றான் ஆதித்யா புன்னகையுடன்.

நால்வரின் முகமும் தெளிந்தது. ஏனெனில் அஜித்தும் பிரபலமான தொழிலதிபர் தான். சாணக்கியனின் அளவுக்கு இல்லாவிட்டாலும் அவருக்கும் செல்வாக்கு இருக்கிறதே!

“லுக் கய்ஸ்! சாணக்கியன் வர்ஷாவோட இளகுன மனசை, பயந்த சுபாவத்தை யூஸ் பண்ணி தான் தன்னோட காரியத்த சாதிச்சுக்கிறான்… அவன் கான்டாக்ட் பண்ண முடியாதபடி அவளை அழைச்சிட்டுப் போறது என்னோட பொறுப்பு… அதுக்கு அஜித் மாமா கிட்ட நான் ஹெல்ப் கேக்குறேன்… அண்ட் வர்ஷா, நீ நாளைக்கு என்னோட அவனை மீட் பண்ண வர்ற” என்றான்.

“எதுக்கு?”

“இந்த மேரேஜ்ல உனக்குச் சம்மதமில்லனு சொல்லுறதுக்கு… ஏன்னா நீ  உடனே ஓ.கே சொல்லிட்டா அவனுக்குச் சந்தேகம் வந்துடும்… சோ அவன் கிட்ட சம்மதமில்லனு அடம் பிடிக்கணும்…  நான் உன்னைச் சமாதானம் செய்யுற மாதிரி ஆக்ட் பண்ணி அவனோட நம்பிக்கைய ஜெயிச்சிடுவேன்… அவன் எல்லாம் ஸ்மூத்தா போகுறதா நினைக்குறப்ப க்ரேட் எஸ்கேப்… அதுக்கு அப்புறம் நீ இங்க இருந்தா தானே உன்னை பயம் காட்டி காரியம் சாதிப்பான்?”

“பட் நம்ம இங்க இருந்து எங்க போனாலும் அவன் நம்ம ஃபேமிலிய தொந்தரவு பண்ணுவான் ஆதி… அதோட மேரேஜ் வரைக்கும் வந்து அது நின்னுச்சுனா அப்பா அம்மாக்கு எவ்ளோ பெரிய தலைகுனிவுனு யோசி”

கவலையாய் முடித்தாள் வர்ஷா. ஆதித்யாவோ அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கினான்.

“நம்ம இங்க இருந்து போனதும் அஜித் மாமா நம்ம ஃபேமிலிய புரொடக்ட் பண்ணுவார்… அண்ட் உங்கப்பா அம்மாவ பத்தி ஏதோ சொன்னல்ல, கொஞ்சம் கூட கவலையில்லாம பணக்காரச்சம்பந்தம்னு வந்ததும் பொண்ணோட சம்மதத்தைப் பத்தி கூட கவலையில்லாம வாக்கு குடுத்துட்டு வந்திருக்காரே அவருக்கு நல்ல பாடம் கத்துக் குடுக்கணும்டி ஜி.பி… அவருக்கு மட்டுமில்ல, அவரோட ஃப்ரெண்ட்சுக்கும் தான்… அங்க மண்டைய ஆட்டிட்டு இங்க வந்து மகள் கிட்ட சம்மதம் கேக்கணும்னு பேருக்குச் சொல்லுறார்… அவங்க என்ன சொன்னாலும் நம்பிடுவாரா? உனக்குக் காதலிக்குற அளவுக்குத் தைரியம் கிடையாதுனு எங்களுக்கே நல்லா தெரியும்… அந்த வினயன் காதலிக்கிறாங்கனு சொன்னாராம், இவர் சம்மதம்னு சொன்னாராம்… சுத்த ரப்பிஷா இருக்கு… இப்ப கூட உன் கிட்ட ஒரு வார்த்தை கேக்கணும்னு தோணாம அங்க யோகா ஆன்ட்டிய சம்மதிக்க வச்சிட்டிருக்கார்… இந்த ஓல்டீஸ்கு நம்ம கட்டாயம் ஒரு பாடம் கத்துக் குடுத்தே ஆகணும்… இதுல நோ செண்டிமெண்ட்” என்றான் குரலில் சற்றும் இளக்கமின்றி.

பின்னர் என்ன? அவனது திட்டப்படி வர்ஷாவின் பெற்றோர் வினயனிடம் சம்மதம் தெரிவித்தார்கள். கையோடு சாணக்கியனைத் தனியே சந்திக்க வேண்டுமென வர்ஷா அவனிடம் கூறினாள்.

அவனும் சம்மதிக்கவே இருவரும் கஃபே மெர்காரா எக்ஸ்ப்ரசில் சந்திப்பதாக முடிவு செய்தனர்.

சொன்னபடி வர்ஷா வந்தாலும் சாணக்கியனின் முகத்தில் புன்னகையில்லை. காரணம் அவளுடன் ஆதித்யாவும் வந்திருந்தான். வந்தவன் சாணக்கியனுக்கு ஒரு வணக்கத்தைப் போட அவனும் வேண்டாவெறுப்பாக தலையாட்டி வைத்தான்.

அவனது மனவோட்டம் என்னவென பரிசோதிக்க வந்தவன் சாணக்கியனின் பொறுமையைத் தான் அதிகளவுக்குச் சோதித்தான் எனலாம். அந்தளவுக்குக் கேள்வி மேல் கேள்வி கேட்டான்.

“ப்ரோ நீங்க டிஸ்யூ கம்பெனி ரன் பண்ணுறிங்களா?”

அடுத்த கேள்வியை ஆர்வமாக கேட்டான் ஆதித்யா. அவனருகே அமர்ந்திருந்த வர்ஷாவோ இப்போது இது முக்கியமா என்பது போல பார்த்து வைக்க சாணக்கியனோ “இல்லையே” என்று தோளை மறுப்பாக குலுக்கினான்.

“தென் ஹேன்கி கம்பெனி?” என்று அடுத்த கேள்வியை வீச அதற்கும் இல்லை தான்.

“ஏன் கேக்குறிங்க ஆதி?” என்று புரியாது கேட்டான் சாணக்கியன்.

“அது ஒன்னுமில்ல… ஏன்னா யோகா அத்தம்மா பெத்த இந்த ரத்தினத்துக்கு முணுக் முணுக்னு கண்ணீர் வந்துடும்… பிஞ்சு மனசு… ஒரு எறும்பு செத்துப் போனா கூட அதுக்கு ஃபியூனரல் வைக்கணும்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற பொண்ணு… இவ அழ ஆரம்பிச்சானா இங்க ஒரு மினி தாமிரபரணியே ஓடும்னு எங்க ஆச்சி கூட கிண்டலா சொல்லுவாங்க தெரியுமா? சோ இப்ப இல்லனாலும் பின்னாட்கள்ல நீங்க டிஸ்யூ ஆர் ஹேன்கி மேனுபேக்சரிங் கம்பெனி ஓப்பன் பண்ணுனா உங்களுக்குச் செலவு மிச்சம்” என்று சிரிக்காமல் விளக்கம் கொடுத்தான் ஆதித்யா.

வர்ஷா அவனது விளக்கத்தால் கொந்தளித்தவள் மேஜைக்கு அடியில் அவனது காலை மிதித்து தனது கொந்தளிப்பைத் தீர்த்துக்கொண்டாள்.

பின்னர் சாணக்கியனை தீர்க்கமாகப் பார்த்தவள் “லீவ் ஹிஸ் யூஸ்லெஸ் வேர்ட்ஸ்… நான் இங்க வந்தது எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லனு சொல்லிட்டுப் போகத் தான் மிஸ்டர் சாணக்கியன்… ஐ ஹேவ் அ ட்ரீம்… அதை அக்சீவ் பண்ணுறதுக்கு, அதுல கொஞ்சநாள் மூழ்கி திளைச்சு வாழுறதுக்கு ஐ நீட் சம் டைம்… அதுக்குள்ள கல்யாணம் ஃபேமிலிங்கிற வட்டத்துக்குள்ள புகுந்துக்க எனக்குப் பிடிக்கல… சோ உங்க புரோபசலை என்னால ஏத்துக்க முடியாது” என்றவள் அங்கிருந்து எழுந்தாள்

“நம்ம கிளம்பலாம் ஆதி” என்கவும் ஆதித்யா எழ அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்த சாணக்கியனின் விழிகளிலோ சுவாரசியம் ஏறியது.

இதழ்கள் சிரிப்பில் வளைய மெச்சுதலாய் புருவங்களை ஏற்றியிறக்கியவன் “வெல் மிஸ் வர்ஷா விக்னேஷ்… உங்க முடிவை நீங்க சொல்லிட்டிங்க… அப்பிடியே என் முடிவையும் கேட்டுட்டுப் போங்க” என்க ஆதித்யாவும் வர்ஷாவும் அங்கேயே நின்றனர்.

சாணக்கியன் கரங்களை மேஜை மீது குவித்தவன் “நான் உன்னை மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு உன் கிட்ட சொன்னது நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பியானு பெர்மிசன் கேக்குறதுக்கு இல்ல மை டியர் லிட்டில் ஏஞ்சல்… ஐ லவ் யூ, சோ யூ ஹேவ் டு லவ் மீ… யூ ஹேவ் நோ ஆப்சன் டியர்” என்றான்.

அவனது இந்தப் பேச்சுத்தொனியில் அதிர்ந்தது வர்ஷா மட்டுமல்ல, ஆதித்யாவும் தான்

அவர்களது அதிர்ச்சியை பரிபூரணமாக கிரகித்துக் கொண்ட சாணக்கியனோ “உனக்கு என்னைப் பாத்தா எப்பிடி தெரியுது? நீ வேண்டாம்னு சொன்னதும் எங்கிருந்தாலும் வாழ்கனு பாட்டு பாடிட்டு ஒதுங்கிப் போயிடுவேன்னு நினைச்சியா ஏஞ்சல்? இம்பாசிபிள், நான் எது மேலயாச்சும் ஆசைப்பட்டா அதை எனக்குச் சொந்தமாக்கிக்க எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவேன்… சோ உன்னோட ஆட்டிட்டியூடை ஓரம் கட்டிட்டு பீ ரெடி டு பிரிப்பேர் யுவர்செல்ஃப் ஃபார் அவர் ஃபியூச்சர்” என்று சொல்லிவிட்டு கரங்களை தலைக்கு அண்டை கொடுத்து நாற்காலியில் சாவகாசமாகச் சாய்ந்து கொண்டான்.

வர்ஷாவோ இதற்கு மேல் இங்கே நிற்பது கூட பாவம் என்பது போல ஆதித்யாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

ஆதித்யாவோ அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே “வாவ்! வாட் அ மேன்! இப்பவே இந்தளவுக்கு பொசசிவ்வா இருக்காரே, இந்த மனுசன் உன்னை தன்னோட காதலால குளிப்பாட்டிடுவார் ஜி.பி… மார்க் மை வேர்ட்ஸ்” என்று சொன்னபடியே காரைக் கிளப்பினான்.

வர்ஷாவோ ஷீட் பெல்டை போட்டப்படியே “மண்ணாங்கட்டி” என்று வெடித்தாள்.

ஆதித்யா நமட்டுச்சிரிப்புடன் “கம் ஆன் ஜி.பி… இன்னைக்கு பொண்ணுங்க விரும்புறது இந்த மாதிரி அடாவடி பசங்களை தான்… ஐ மீன் இப்ப இருக்குற பொண்ணுங்களுக்கு பாய் ஃப்ரம் நெக்ஸ்ட் டோர் டைப் ஹீரோவ விட ரூடா பிஹேவ் பண்ணுற ஆன்டிஹீரோவ தான் பிடிக்குதும்மா… இட்ஸ் ட்ரூ” என்றான் ஸ்டீரியரிங் வீலை வளைத்தபடி.

“அதுல்லாம் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் (Stockholm syndrome) இருக்குற கேஸ்களா இருக்கும்… தன்னை எப்பவும் ஒருத்தன் அடக்கி ஆளணும், உடல்ரீதியாவும் மனரீதியாவும் அவன் தன்னைக் காயப்படுத்தி ரசிக்கணும், அந்த வேதனைல அவன் மேல தான் காதல்ல விழணும்ங்கிற மாதிரி கிறுக்குத்தனமெல்லாம் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் இருக்குறவங்களோட மெண்டாலிட்டி… பை காட்ஸ் க்ரேஸ், எனக்கு அப்பிடி எந்த சிண்ட்ரோமும் இல்ல… நான் அமைதியான பொண்ணு தான், சாது தான்… அதிர்ந்து பேசுனா கூட அழுதுடுவேன் தான்… அதுக்காக ஒருத்தன் என் விருப்பம் இல்லாமே என்னோட வாழ்க்கைல நுழையுறதுக்கு நான் அலோ பண்ண மாட்டேன் ஆதி… சாதுவான பொண்ணுனா அடாவடியான ஆம்பளையோட அடக்குமுறைக்கு விழுந்து தான் ஆகணும்னு எந்தக் கட்டாயமும் இல்லையே”

உறுதியாகச் சொல்லிவிட்டு கரங்களை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டவள் முதல் முறையாக ஆதித்யாவைப் பிரமிப்பில் ஆழ்த்தினாள்.

அழுமூஞ்சி, கிளிசரின் பாட்டில் என அவளுக்கு விதவிதமாய் பெயர் சூட்டி கேலி செய்தவன் அன்று அவளது தெளிவையும் முதிர்ச்சியையும் கண்டு வாய் மூடிப் போனான் என்பதே உண்மை!