வணக்கம்

வணக்கம் அன்பூக்களே!

நான் உங்கள் பவளமல்லி.

முதலில் எழிலன்பு தள நிர்வாகிக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து நான் இக்கதை உலகிற்கு புதியவள். ‘வண்ணங்களோ.. கீர்த்தனங்களோ..’ கதை என்னுடைய ஒரு புதிய முயற்சி.

இசை குடும்பத்தில் நடக்கும் ஒரு எதிர்பாரா விபத்து, அதனால் விளையும் ஒரு விரிசல். அதை சரி செய்ய காதல் என்னும் அஸ்திரத்தை பயன்படுத்தி வெற்றி கண்டார்களா என்பதே கதை சுருக்கம்

வரும் ஞாயிறு முதல் கதைக்கான அத்தியாயங்கள் பதிவேற்றம் செய்துவிடுவேன். மறக்காமல் படித்து உங்களின் மேலான கருத்துக்களை இங்கு தளத்தில் பகிரவும்.

நான் முகநூலில் இல்லை. தொடர்ந்து எனக்கும் என் கதைக்கும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

நட்புடன்,

பவளமல்லி 🥰