முன்பே காணாதது ஏனடா(டி) – 42

செழியன் நர்மதாவை அவளது வீட்டில் விட்டு வந்து இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது.

இந்த இரண்டு நாட்கள் பிரிவையே அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதற்கு முன் எப்படியோ ஆனால் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்த பின்பு ஏற்படும் உணர்வை புரிந்து கொள்ள முடியாமல் தத்தளித்தான்.

அதன் விளைவாக அடுத்த நொடியே மதுரையை நோக்கி பயணமானான்.

இரண்டு நாளில் திரும்பி வந்த மருமகனை பார்த்த பிறகு தான் ராஜாராம் கண்மணி தம்பதியினருக்கு நிம்மதியே வந்தது.

நர்மதா வெளியே சென்றிருந்தாள். அவளுக்காக காத்திருந்தான் செழியன்.

அறையில் அமர்ந்து இருந்த செழியன் நர்மதாவின் வருகையில் எழுந்து நின்றான்.

செழியன்,”ஏங்க சீக்கிரம் கிளம்புங்க நாம ஊருக்கு புறப்படனும்”

“நான் வரல”

“ஏன்?” என்றான் தயக்கமாக

“நீங்க தான சொன்னீங்க”

“எ..ன்ன சொன்னேன்..”

“உங்கள டிவோர்ஸ் பண்ணிட்டு நான் காதலிச்சவரையே கல்யாணம் பண்ணிக்கோங்கனு”

தன் வாயில் இருந்து சொன்னபோது உண்டான வலியைவிட அவளது வாயில் இருந்து கேட்கும் போது  பல மடங்கு அதிகமாக இருந்தது வலி.

“நான் அவர போய் பார்த்தேன் ஒகே சொல்லிட்டாரு. அதனால சீக்கிரம் டிவோர்ஸ்கு ரெடி பண்ணுங்க” என்றவள் பெட்டில் அமர்ந்து கொண்டாள்.

இதயத்தை குத்தி கிழிப்பது போல் வலியை உணர்ந்தான் திருமணமா அதுவும் தன் மனைவிக்கு இன்னொருவனுடன் ஏற்கமுடியுமா தன்னால் என பலமுறை மனதின் உள் கேட்டுக் கொண்டான்.

அசையாது நின்றிருந்தான் அவளும் அவனை பார்வை தாழ்த்தாமல் பார்த்திருந்தாள்.

சில நிமிடத்தில் தன்னை மீட்டு கொண்டவன் அவள் அருகில் சென்று அமர்ந்து கைகளை பற்றினான்.

“ஏங்க நீங்க…  பொய் தான சொல்றீங்க”

“இல்ல…  உண்மை தான் நேத்தே போய் பேசினேன். அவருக்கும் ஒகே தானாம். சீக்கிரம் உங்க வீட்டுல இருந்து அவர் வீட்டுக்கு வந்துடுனு சொன்னாரு”

செழியனுக்கு அழுகையுடன் கோபமும் சுள்ளென ஏறியது. அவனது வீட்டுக்கு வர வேண்டுமா நர்மதா தன் மனைவி தன் முதல் காதல் என்னால் விட்டுக்கொடுக்க இயலாது என கற்பனையில் தெரியாத நர்மதாவின் காதலனுடன் சண்டையிட்டான்.

“நீங்க அங்க போக கூடாது நான் அதுக்கு அனுமதிக்கமாட்டேன்.”

“ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்க நீங்க தான உறவை முறிச்சுக்கலாம்னு சொன்னிங்க”

“அ… து… ” என மேற்கொண்டு சொல்ல தயங்கினான்.

“நான் ஏதோ உளறிட்டேன். என்னால உங்கள யாருக்கும் தரமுடியாது. எனக்கு நீங்க வேணும்.”

“நான் ஒரு மனுசி அது உங்களுக்கு நினைவு இருக்கா. ஏன் ஆம்பளைங்க எல்லாரும் இப்படி இருக்கீங்க. எப்பவும் உங்க முடிவு தானா! இஷ்டமா இல்லையானு எங்ககிட்ட கேட்க மாட்டீங்களா. போணு சொன்னா போகனும் இருனு சொன்ன இருக்கனும் இல்ல!” என கேட்டு அழுதாள்.

அவன் பதில் பேச முடியாமல் நின்றான். செழியன் தான் நடந்து கொண்டதை பற்றி யோசித்து பார்த்தான் அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என அனைத்தையும் அவனேதான் அனுமானித்தான் நர்மதாவிடம் எதுவும் கேட்கவில்லை அவள் சம்பந்தப்ட்ட காரியங்களுக்கு அவளிடம் கலந்து ஆலோசிக்காமல் தானே முடிவு செய்தான் 

செய்த தவறை திருத்தி கொள்ள நினைத்தவன் அவளது கையை பற்றி “சாரி சாரி நர்மதா நான் உங்ககிட்ட கேட்டு இருக்கனும். சின்ன வயசுல இருந்து எனக்கு சொந்தமானத யாருக்கிட்டையும் கொடுக்கமாட்டேன். ஓவர் பிடிவாதம் சட்டுனு வர கோபம் இதனால நான் எப்படி நடந்துக்கிறேனு பல நேரம் தெரிய மாட்டேங்குது என்ன மன்னிச்சுடுங்க பிளீஸ்”

அவனது அளவுக்கு மீறிய அழுகையை பார்த்த நர்மதா இலகினாள்.  இரண்டு நாள் பிரிவு அவனுக்கு மட்டும் அல்ல அவளுக்கும் தன் கணவன் மீது காதலை உணர வைத்தது.

கண்ணீரை துடைத்தவள் “சரி மன்னிச்சுட்டேன் டிவோர்ஸ் பேப்பர்ஸ்கு ரெடி பண்ணுங்க” என்றாள்.

“என்னங்க இது மறுபடியும் முதல இருந்து ஆரம்பிக்குறீங்க”

“பின்ன வேற என்ன செய்யட்டும் நான் உங்க பொண்டாட்டி ஆனால் வாங்க போங்கனு ஏதோ மூனாவது மனுசங்கிட்ட பேசுறது போல பேசுறீங்க”

“ஓ…  அது தான் கோபமா சாரி இனிமே உன்ன வாங்க போங்கனு கூப்பிட மாட்டேன்” என்றான் கண்ணீரை துடைத்தபடி.

“ம்…” என்றவளின் முகம் இன்னும் தெளிவில்லாமல் இருக்க “என்னாச்சு” என கேட்டபடி அவள் முகத்தை தாங்கினான்.

“நான் ரொம்ப தப்பான பொண்ணா?”

அவளது கூற்றில் அதிர்ந்தவன் “என்ன பேசுற நீ அப்படி எல்லாம் இல்ல”

“இல்ல நான் கல்யாணத்துக்கு முன்ன ஒருத்தர விரும்புனது நூறு சதவீதம் உண்மை. அது இனக்கவர்ச்சி கிடையாது. அப்படி இருக்க இப்போ உங்களையும் புடிச்சுருக்கு அதான் என்ன நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்கு”

“லூசு பொண்டாட்டி” என அவளது தலையில் தட்டியவன் “சரி சொல்லு இப்பவும் அந்த பரதேசி மேல லவ் இருக்கா” என்றான் நடுங்கும் குரலுடன்.

அவளது தலை அனிச்சையாக இல்லை என ஆடியது. அவளது செயலில் இதழ் நிறைய புன்னகைத்தான்

“அம்மு…  இங்க பாரு நமக்கு ஒருத்தர் மேல காதல் வர்ரது தப்பு இல்ல. காதல் ஒன்னும் கொச்சையான விஷயம் இல்லையே காதல் அப்படிங்குறகு அன்பின் அதிகபட்ச வரையறை தான்.”

யோசனையோடு இருந்த அவளது முகத்தை பார்த்து பெருமூச்சுவிட்டவன் “என் பெரியம்மா சொல்வாங்க கல்யாணம் சொர்க்கத்துல நிச்சயக்கப்படுமா. இன்னார்க்கு இன்னார் தானு நாம பிறக்கும் போதே முடிவு ஆகிருமாம். உன் தலையில இந்த செழியன் பேரு தான் எழுதி இருக்கு போல”

மூக்குவிடைக்க நிமிர்ந்தவள் “அப்படி இருந்தால் ஏன் உங்கள முன்னாடியே நான் பார்க்கமா போனேன். எதுக்காக  சொந்தம் ஆகாதுனு தெரிஞ்சும் இன்னோரு விஷயத்துல நமக்கு அதிகபடியான ஆசைய உண்டாகனும்” என கேட்டாள்.

“ஏன்னா வாழ்க்கை சுவாரசகயமா போக வேண்டாமா?. நம்ம வாழ்க்கைக்கு தேவையானது உடனே கிடைச்சுட்ட அதோட அருமை நமக்கு தெரியாம போயிடுமே அதான்.”

“ம்…  இவ்வளவு தெளிவா பேசுறீங்க ஆனால் கல்யாணம் ஆன நாள் இருந்து இப்போ கொஞ்ச நேரம் முன்ன வரைக்கும் தப்பு தப்பா யோசிச்சீங்க நடந்துகிட்டீங்க”

“நான் எப்பவும் எல்லா விஷயத்துலையும் தெளிவா தான் இருப்பேன். உன்னோட விஷயத்துல மட்டும் கொஞ்சம் கிறுக்கு ஆயிடுறேன்.”

‘கொஞ்சம் இல்ல ரொம்பவே’ என முணுமுணுத்தாள்.

பெட்டில் இருந்து இறங்கி கீழே அமர்ந்தவன் அமர்ந்தபடியே மேலே இருந்த நர்மதாவின் மடியில் தலை வைத்து சிறிது நேரம் படுத்துக் கொண்டான்.

அவனது தீடீர் செயலில் ஒரு நிமிடம் அதிர்ந்து தெளிந்தாள்.

அவளது மடியில் படுத்த வண்ணம் தலையை மட்டும் திருப்பி அவளை பார்த்தான்.

“நர்மதா உனக்கு என்ன பிடிக்குமா?” என கேட்டான் சற்று முன். அவளது வாய்மொழியாக கேட்டறிந்த பின்பும்.

“ம்… புடிக்கும்.”

“புடிக்கும்னா வெறும் பிடித்தம் மட்டும் இல்ல. அதையும் தாண்டி..”  என அவன் சொல்ல முடியாமல் தயங்க

அவளது வாயை தன் கை கொண்டு அடைத்தவள் தலையை இடம் வலமாக ஆட்டினாள்.

“இப்போதைக்கு எதுவும் கேட்க வேண்டாம் நானும் எதுவும் சொல்ல வேண்டாம் சரியா!”

“ம்… ” என தலை அசைத்தவன் நொடி நேரம் கூட தாமதியாமல் மனைவியை அழைத்துக் கொண்டு அன்னபுறம் சென்றுவிட்டான்.

தொடரும்…