முன்பே காணாதது ஏனடா(டி)- 4

     தன்னை முறைத்து கொண்டிருக்கும் தனது பாஸ் தாராவிடம் கண்களால் கெஞ்சி கொண்டிருந்தான்.  இந்த ஒரு முறை தன்னை மன்னிக்குமாறு.

“ஏன் லேட்டு…”

“மேடம் கோவில் போய்ட்டு வந்தேன் அதான் லேட்”

“ஸ்கூல் பசங்க மாதிரி ரீசன் சொல்லாதிங்க குமரன்”

“சாரி மேம் இனிமே இந்த மாதிரி ஆகாது”

“அப்படியா அப்போ ஈவினிங் ஓவர் டியூட்டி பாருங்க ஒகே .இப்ப போய் உங்க வேலையை பாக்கலாம்.”

“மேம்… மேம்…”

“டு வாட் ஐ சே” என்று கடின குரலில் கூறி விட்டு அவன் பதில் கூறும் முன் அவள் அறை நோக்கி சென்று விட்டாள்.

இவனும் முகத்தை தொங்க போட்டு கொண்டு தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.

—————————

நர்மதா தான் பணிபுரியும் அலுவலக லிஃப்ட் முன் நின்றிருந்தாள்.

வெகு நேரமாக முயற்சித்தும் திறந்துக் கொள்ளவில்லை.

வாட்ச்மேன் வந்து “மேடம் லிஃப்ட் வேலை செய்யலை இப்பதான் மெக்கானிக்கு கால் பண்ணிட்டு வரேன். லிஃப்ட் ரெடியாக லேட்  ஆகும் மேடம்”

“ஒகே அண்ணா”என்று அவரிடம் விடைபெற்றுக் கொண்டு “ஐயோ படி ஏறனுமா ” என்று தன்னை நொந்து கொண்டே படிகளில் ஏற ஆரம்பித்தாள்.

அவளது தளம் ஐந்தாவது.  முதல் இரண்டு தளங்கள் தாண்டி மூன்றாவதை கடக்கும் போது அங்கே படிகளின் ஆரம்பத்தில் இரண்டு காதல் புறாக்கள் இதழ் அமுதம் அருந்தி கொண்டிருந்தனர்.

அதனை பார்த்து விட்டு கண்களை அகல விரித்தாள்.  இரண்டொரு நொடியில் தன்னை மீட்டு கொண்டவள் ,

க்கும்….  என்று செருமினாள்.  ஆனால் அவளது செருமல் அவர்களது செவியை சென்று அடையவில்லை.

‘இன்னும் பயிற்சி வேண்டுமோ…’என்று தன்னிடமே கேட்டுக் கொண்டாள்.

“ஏய்…  சீ சீ கருமம் என்ன பண்றீங்க எருமைகளா….” என்று கத்தினாள்.

அதன் பிறகே சுயம் அடைந்தவர்கள் திரு திருவென முழித்தனர். அந்த ஆண் அசடு வழிந்தபடி அப்பெண்ணின் பின் தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டான்.

“ஏய்…  நர்மதா பார்த்துடியா” என்று கேட்டாள் அந்த பெண் . நர்மதாவின் பக்கத்து டேபில் பெயர் டெய்சி

“வாய்ல நல்ல அசிங்கமா வந்துரும்… “

“அ.. து லவ்வர்ஸ்குள்ள இதெல்லாம் சாதாரணம்.  உ..ன்.. ன..  யாரு ஸ்டெப்ஸ் பக்கம் வரசொன்னா அதா லிஃப்ட் இருக்குல அதுல போக வேண்டியதுதான.”

“லிஃப்ட் ரிப்பேர் மூதேவி எல்லாரும் கொஞ்ச நேரம் ஸ்டெப்ஸ்ல தான் வருவாங்க ஃபிரி ஸோ காட்டாம கேபின் போங்க.”

தலையை சொரிந்து கொண்டே அவ்விடம் விட்டு சென்றனர்.

“கணேஷா இதெல்லாம் நீ பாத்துட்டு தான இருக்க ஆனா நான் பாரு ஆறு மாசம பாத்துட்டு தான் இருக்கேன் இன்னும் பேர் கூட தெரியாது உன்னோட பக்தன எப்படிதான் கரெக்ட் பண்றதோ…” என்று புழம்பிவிட்டு தன்னுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.

…….

மாலை ஆறு மணி

தாரா, “டேய் குமரா…  வா கிளம்பலாம்”

குமரன் தன் தோழியும் பாஸும் ஆன தாராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் வேலையில் கவனம் ஆனான்.

“டேய் நான் கூப்பிட்டுட்டு இருக்கேன் நீ என்னடானா அந்த பொட்டில எதையோ தட்டிட்டு இருக்க”

“சாரி மேடம் என்னோட பாஸ் நான் லேட்டா வந்ததால ஒவர் டியூட்டி பாக்க சொல்லி இருக்காங்க அதனால உங்க கூட வெட்டி கதை பேச எனக்கு நேரம் இல்ல நீங்க கிளம்பலாம்.”

“சரி………….  காலையில எல்லார் முன்னாடி திட்டுனதுக்கு சாரி…  உன்ன பார்த்து நாளைக்கு மத்தவங்களும் தப்பு செய்ய வாய்ப்பு இருக்கு அதனால தான்  திட்டுனேன்.  இப்ப வா முக்கியமா உங்கிட்ட பேசனும். “

———————-

குமரன் ,”ஏதோ பேசனும் சொல்லிட்டு அமைதியா இருந்த என்ன அர்த்தம்”

ஆனால் அவள் தன்னுடைய அமைதியை கலைப்பதாக தெரியவில்லை.

அவளை ஆழ்ந்து நோக்கியவன்,  “மறுபடியும் உன் ஹப்பிகூட சண்ட போட்டியா”

அவளது கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் அவள் கன்னத்தை நனைத்தது.

“இவ்ளோ லவ் பண்ற அப்புறம் யாரோ ஏதோ சொன்னாங்கனு அவர பிரிஞ்சு வாழறது உனக்கு சரியா  தோனுதா சொல்லு .”

“நான் அவருக்கு சரியா குமரா ஹி இஸ் வெரி டேலன்ட் அன்ட் மில்லியனர் ஆல்சோ.  நானும் கொஞ்சம் அவருக்கு ஈக்குவலா இருந்தா தான அவருக்கும் பெருமை.”

“போ….  லூசு லவ் நீ சொல்ர ஸ்டேடஸ் அப்புறம் டேலண்ட் பார்த்து வராது. கூடிய சீக்கிரம் உன்னோட இந்த ஈகோ அப்புறம் முட்டாள் தனமான எண்ணத்தை தூக்கி குப்பையில போட்டுட்டு அவரோட சேர்ந்து வாழற வழிய பாரு .. என்ன… “

“ம்…  யோசிக்கிறேன்.”

“குட். கிளம்பலாம் வா டைம் ஆச்சு”

——————-

கார்த்திக் தன் நண்பர்களுடன் அவனது ஏரியாவின் என்ட்ரென்ஸில் உள்ள திண்டில் அமர்ந்து இருந்தான்.

அவனது நண்பர்கள் அவ்வழியே செல்லும் பெண்களை கேலி பேசி கொண்டிருந்தனர்.

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த குமரன் இதனை கவனித்துவிட்டு வண்டியை அவர்கள் புறம் நிறுத்தினான்.

‘ஹாய் அண்ணா’ என்றனர் கார்த்தியின் நண்பர்கள்

ஹாய்…. என்று கூறிவிட்டு “கார்த்தி போலாமா” என்றான்

அவனும் நண்பர்களிடம் விடைபெற்று அண்ணனின் வண்டியில் ஏறினான்.

“கார்த்தி….”

“சொல் ணா”

“நீங்க இப்போ பண்ணிட்டு இருந்தது சரியா”

“அண்ணா….  அ.. து பசங்க தா சும்மா…..  நான் ஒன்னும் பண்ணல”

“நீ வேடிக்க பார்க்குறது சரியா! அவங்க உன்னோட பிரண்ட்ஸ் தான!”

“சாரி அண்ணா”

“இதோ பாரு கார்த்தி ஒரு பொண்ணு அன்கம்ஃபர்டபுலா அன்செக்யயூரா ஃபீல் பண்ற செயல் மட்டும் இல்ல பார்வையும் தப்புதா..”

“புரிஞ்சது அண்ணா”

“ம்..  உன் பிரண்ட்ஸ் கிட்ட இத பத்தி பேசு நான்  அவனுங்கல கண்டிகிறதுக்கும் ஒரு பிரண்டா நீ அவங்களுக்கு குடுக்குற அட்வைசுக்கும் வித்தியாசம் இருக்கு சரியா”

“நான் அவங்கள மாத்துவேன் அண்ணா”

“ம்.. நல்லது.”.

———————

நான்கு நாட்களுக்கு பிறகு

இரவு 8.00 மணி

சென்னை – மதுரை டிரெயின்

டிரிங்… டிரிங்…..

மைத்ரி,  ” ஹலோ”

சுமி,  ” மைத்ரி எல்லா ஓகே தான”

மைத்ரி,  ” ம்..  ஓகே தாண்டி இந்த கம்பாட்மண்ட்ல வெறும் லேடிஸ் மட்டும் தான் ஒன்னும் பிரச்சனை இல்ல “

சுமி, ” சரி…  அப்புறம் சாரிடி ஒர்க் முடிய லேட் ஆகிருச்சு அதான் சென்ட் ஆஃப் பண்ண வர முடியல “

மைத்ரி , ” ஏய்..  லூசு நமக்குள்ள என்னடி சாரி “

சுமி,  ” சரி எப்போ ரீச் ஆவ “

மைத்ரி,  ” நாளைக்கு யர்லி மார்னிங் ரீச் ஆகிடுவேன்”

சுமி, ” ஒகே பாய் குட் நைட் “

மைத்ரி, “ம்..  பாய் குட் நைட்..

தொடரும்…