முன்பே காணாதது ஏனடா(டி) – 32

அடுத்து வந்த ஒரு வாரமும் மைத்ரியை அலுவலகத்தில் விடுவதும் மீண்டும் அழைத்து வருவதும் குமரனின் வாடிக்கையாகிற்று.

சுஜிக்கு தன் வண்டியை கொடுத்துவிட்டாள்.

சுஜி, “அண்ணி என்னால நீங்க ரொம்ப கஷ்டபடுறீங்க. வண்டிய நீங்களே எடுத்துட்டு போங்க…”

“ஐய்யோ…  அதெல்லாம் வேண்டாம். நீயே கொண்டு போ…”

“இல்ல அண்ணி உங்கள கஷ்டபடுத்துற மாதிரி தோணுது.”

“நீ எனக்கு நல்ல காரியம் பண்ணி இருக்கமா சு…ஜி………”

“புரியல”

“உங்க அண்ணன கரெக்ட் பண்ண வேண்டாமா?” என்று சலித்துக் கொண்டாள்.

“ஓ…. ஓ…. அப்படி…. “

“ம்…. ம்…. “

“சரி சரி நடக்கட்டும். ஒரு… ஒரு மாதம் கழிச்சு வண்டிய கொடுத்தா போதுமா…. “

“ஒரு மாதம் தானா….”

“அதுக்கு மேல போனா அண்ணே கண்டுபிடிச்சுரும்… “

குமரன் அறையில் இருந்து தயாராகி வெளிவந்தான்.

ம்ஹும்… என செருமிய சுஜி “அண்ணி அண்ணன் வந்துருச்சு…”

“ஒகே…” என்று ரகசிய குரலில் சொன்னவள் அவன் முன் சென்று நின்றாள்.

நிமிர்ந்து பார்த்தவன் “ரெண்டு நிமிசம் இந்த ஷீ மட்டும் போட்டுக்குறேன்” என்றான்.

தலை ஆட்டியவள் அருகிலே நிற்க அவன் கைபேசிக்கு அழைப்பு வந்தது.

அதை ஏற்று காதில் வைத்தவன் பேசிக்கொண்டே ஷீ லேசை கட்ட முனைய சிரமப்பட்டான்.

அதை கவனித்தவள் சைகையில் தான் பார்த்துக் கொள்வதாக கூறி அவன் அருகில் அமர்ந்து ஷீ லேசை கட்டிவிட்டாள்.

புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தவனின் கண்களில்பட்டது. சேலை இடைவெளியில் இருந்து வெளியே தெரிந்த பளிங்கு இடுப்பு.

பார்த்ததும் மூர்ச்சையாகி போனான். கண்கள் தடுமாற ஆரம்பித்தது. வாய் உளற அழைப்பை துண்டித்து கொண்டு எழுந்து நின்றான்.

அதற்குள் மைத்ரியும் ஷீ லேசை கட்டி நிமிர்ந்தாள். அவன் அன்று அவளை சேலையில் ரசித்ததை கண்டுகொண்டாள் மைத்ரி. கண்டுகொள்ளாமல் எப்படி அது தான் ஆயிரம் முறை பார்த்துவிட்டானே. அன்றிலிருந்து தினமும் சேலையில் தான் வலம் வருவது.

குமரன் தான் ஒரு வழியாகி போனான்.

“போகலாம்ங்க…”

“ஆ… ஆ.. போலாம்”

அவன் சென்று தன் பைக்கை எடுக்க இவளும் பின் சென்றாள்.

இருவரும் புறப்படும் சமயம் வாசலுக்கு விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தினார் சுந்தரி.

“என்ன அத்தை” இப்பொழுது மைத்ரி குமரனின் பெற்றோரை அத்தை மாமா என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டாள்.

“பூ வாங்கி வச்சேன் மா சொல்ல மறந்துட்டேன். திரும்பு”

அவள் சிரிப்புடன் திரும்ப தலையில் வைக்க முனைந்தார். அதற்குள் உள்ளிருந்து குக்கர் விசில் சத்தம் கேட்க “டேய் குமரா இத பிடி அவளுக்கு வச்சுவிடு உங்க அப்பாக்கு கஞ்சி வச்சேன் நான் போய் பாக்குறேன். ரொம்ப கொலஞ்சுட்டா நல்லா இருக்காது” என பரபரத்தவரே அவன் கையில் பூவை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

பூவை கையில் வைத்து திருதிருவென முழித்தவனை பாரக்க அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

சின்ன சிரிப்புடனே “கொடுங்க… ” என கையை நீட்டினாள்.

அசடு வழிந்தவாரே கொடுத்துவிட்டான்.

பின் அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய இவள் ஏறி அமர்ந்து கொள்ள அவர்கள் பயணம் தொடர்ந்தது.

அவள் அலுவலகத்தின் வாயிலில் பைக்கை நிறுத்தினான். இறங்கி கொண்டவள் அவனிடம் தலை அசைத்து சொல்லிக் கொண்டு கிளம்ப “மையூ…” என்ற அழைப்பில் இருவரது கவனமும் பக்கவாட்டில் திரும்பியது.

அவளுடன் பணிபுரியும் சிவா என்ற கேமராமேன் நின்று கொண்டிருந்தான். ஆர்டிக்கல் எழுதுவதற்கு சில நேரம் சில இடங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால் அவனை தான் உடன் அழைத்து செல்வாள்.

நெருங்கிய நண்பன் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் உண்மையான நம்பகமான நண்பன் என்று சொல்லலாம். எப்பொழுதும் கலகலவென பேசுபவன் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிடுவான்.

“மையூ…  யூ லுக் கார்ஜியஸ் வா.. வ்….  செம்ம…. சேலை மல்லிபூ குங்குமம் ப்பா….  சேன்ஸே இல்ல…”

“நிஜமாவா… “

“சத்தியமா…  ஒரு போட்டோ எடுத்துக்காட்றேன் நீயே பாரு” என்றவன் தன் கையில் இருந்த கேமராவால் புகைபடம் எடுக்க இங்கே ஒருவனுக்கு பற்றிக் கொண்டுவந்தது.

இருவரையும் முறைப்புடன் பார்த்து நின்றான் குமரன். அவனது முக மாறுதலை கவனித்துவிட்டாள் மைத்ரி ‘பாருடா நம்ம ஆளுக்கு நம்ம மேல ஏதோ இருக்கு போலையே பொசசிவ் ஆகுறாரு. இன்னும் கொஞ்சம் கடுப்பேத்துவோமா’ என்று யோசித்தாள்.

“சிவா….  எங்க காட்டு” என அவன் தோளை ஒரு கையால் பற்றிக் கொண்டு கையில் உள்ள கேமராவை எட்டிப்பார்த்தாள்.

கடுப்பான குமரன் பொறுமை காக்க முடியாமல் சிறுகுரலில் “மைத்ரி” என்று அழுத்தி கூப்பிட்டான்.

“ஹே….  குமரன் நீங்க இன்னும் கிளம்பலையா.ஆபிஸ் டைம் ஆகல” என்றாள்.

“கொஞ்சம் பக்கம் வர்ரையா” என்றான்.

இவள் அருகில் சென்று நின்றதும் இடுப்பு சேலையை இழுத்து இடுப்பை மறைத்தார்படி சொருகினான்.

விக்கித்து போனாள் மைத்ரி. “நாளையில் இருந்து நீ சேரி கட்ட வேண்டாம் ஒழுங்க சுடிதார் போடு” என்று கடுகடுவென கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் சுயநினைவு வந்தவள் சுற்றிமுற்றி பார்க்க நல்ல வேளையாக இவன் செய்த காரியத்தை யாரும் பார்க்கவில்லை.

….ஃவ்பூ.. என பெருமூச்சுவிட்டவள் முகத்தை அழுந்த துடைத்து கன்ன சிவப்பை மறைத்தபடி சிவா இருக்கும் இடம் நோக்கி சென்றாள்.

சிவா குமரன் மைத்ரியை அழைக்கும் போதே நகர்ந்து சென்றிருந்தான்.

…..

அன்னபுறம்

நர்மதா சோகமே உருவமாக அமர்ந்து இருந்தாள். தன் மன்னவனை எண்ணி தான். ஒருவார காலமாக தன்னுடன் இருந்து அனைத்துமானவனாக மாறி சேவை செய்தவன் இந்த ஒரு வாரமும் பாரா முகம் காட்டினான்.

உடல்நிலை சரியில்லாமல் போன இந்த ஒரு வாரமும் நன்றாக யோசனை செய்து பார்த்தாள். முதல் காதல் தன் வாழ்வில் முடிந்த அத்தியாயமாக மாறி போயிருக்க நிகழ் காலத்தை தான் கெடுத்து கொள்வதை உணர்ந்து கொண்டாள்.

ஆனால் ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாக இருந்தது. ஆனால் கணவன் என்ற இடத்தில் செழியனின் பெயரும் முகமும் பதிந்து போனது.

காய்ச்சல் கண்ட பொழுது காளையவனின் கவனிப்பு கன்னியவளின் காதலுக்கான முதல் அத்தியாயமாக அமைந்தது.

மனம் மன்னவனை எண்ணி மந்தமாக இருக்க அறைக்குள் நுழைந்தாள் மஞ்சு.

“நர்மதா… “

“அக்கா… “

“என்னாச்சு உனக்கு ஏன் ஒருமாதிரி இருக்க… உடம்பு இன்னமும் சரி ஆகலையா. “

“இல்ல அக்கா அப்படி இல்ல இப்போ பரவா இல்ல…” என கூறி மௌனமாகிவிட அவளது கைகளை பற்றிக் கொண்டாள் மஞ்சுளா.

“நர்மதா கல்யாணம் ஆன எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்குற மாதிரி தான் உனக்கு இப்போ இருக்குற பயம்.

புதுவீடு புதுமனுசங்க யார் எப்படி இருப்பாங்க நம்மள புரிஞ்சுப்பாங்களா அன்பா இருப்பாங்களா இப்படி எல்லாம் கேட்டு மனசு கிடந்து தவிக்கும்.

அந்த நேரம் புகுந்த வீட்டு மனுசங்கள புது ஆளா பார்க்காம எல்லாரும் உன்னோட கற்பனை வாழ்க்கையில இருக்குற உனக்கு புடிச்ச கதாப்பாத்திரமா மாத்திபாரு.”

நர்மதாவிற்கு புத்தகங்கள் புடிக்கும் என செழியன் கூறியதை நினைவில் வைத்து மஞ்சுளா பேச தெளிந்துவிட்டாள் நர்மதா.

அவளது அறிவுரையின் படி தன் கற்பனை உலகில் உருவகப்படுத்தி வைத்திருந்த சகோதரி கதாபாத்திரத்தில் மஞ்சுளாவை பொருத்தி பார்த்தவள் அவளை அணைத்துக் கொண்டாள்.

மஞ்சுளாவும் புன்னகையுடன் கைகளை மேல் எழுப்பி நர்மதாவை கட்டிக்கெண்டாள்.

தொடரும்…