முன்பே காணாதது ஏனடா(டி) – 31

கதிரின் அணைப்பில் இருந்தாள் மஞ்சு . மனைவியின் கழுத்தில் முகம் புதைத்தவரே பேச்சை தொடங்கினான் கதிர்

“மஞ்சு”

“ம்”

“செழியனை கவனிச்சையா”

“ஏன் அவனுக்கு என்ன?”

“இல்லடி  அவன் முகமே சரி இல்ல டவர் கிடைக்கலன்னு மொட்டைமாடில நின்னு போன் பேசிட்டு இருந்தேன். வேஸ்ட் போட்டு வைக்குற ரூம்ல இருந்து கண்ணை தொடச்சுட்டே வந்தான்”

அணைப்பில் இருந்து விலகி அவன் முகம் நோக்கியவள் “என்ன சொல்றிங்க அழுதார்னு சொல்றிங்களா”

“தெரியல அப்படி தான் தோணுது”

“என்ன பண்ணலாம்”

“நீ அந்த பொண்ணுகிட்ட பேசி பாரேன்” 

“பேசலாங்க ஆனால் நர்மதா எங்களோட ஒட்டவே மாட்டேங்குற தள்ளி தள்ளி போறா”

“ஏய் அந்த பொண்ணு சிட்டில வளர்ந்த பொண்ணுல அதான் மிங்கில் ஆக கொஞ்சம் நாள் எடுக்கும்” 

“ஹலோ அப்போ நாங்க மட்டும் எங்க வளர்ந்தோமா”

“நீ வேற மாதிரிடி என் பொண்டாட்டி” என அவன் வேற ஒன்றுக்கு அடிப்போட டக்கென்று அவனைவிட்டு எழுந்து அறை வாயிலுக்கு ஓடிவிட்டாள். 

ஏமாற்றத்துடன் பார்த்தவனிடம் “கவலைபடாதீங்க புருஷன் சார் நான் நர்மதாகிட்ட பேசுறேன் நீங்க சாப்பிட்டு வேலைக்கு கிளம்புங்க” 

“போடி எருமை உனக்கு வேணும் போது வருவல அப்போ கவனிச்சுக்குறேன்” 

“போயா” என பலிப்பு காட்டிவிட்டு ஓடிவிட்டாள் 

குமரன் மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் அப்பொழுது தூரத்தில் தெரிந்த பஸ் ஸ்டாண்டில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பது போல் தோன்றியது. புடவை அணிந்து இருந்தாள். மனதிற்கு மிகவும் நெருக்கம் போல் தோன்ற என்ன இந்த உணர்வு என்று குழம்பிய மனதுடன் பஸ் ஸ்டாண்டு நோக்கி வண்டியை செலுத்தினான் 

மைத்ரி தான் நின்றிருந்தாள் இதுவரை அவளை புடவையில் பார்த்தது இல்லை காலையிலும் அவன் விரைவாக சென்றுவிட அவளை காணாமல் போனான்.குமரன் தன் முன் வண்டியை நிறுத்தவும் இன்ப அதிர்ச்சியுற்றாள். 

“இங்க என்னங்க”

” பஸ்க்கு வைட்டிங்”

“உங்க ஸ்கூட்டி என்னாச்சு”

“அது சுஜிக்கு எதோ ப்ராஜெக்ட் ஒர்க்குனு சொன்னா. நிறைய கம்பெனி அலையனும். பஸ்சல போனா அலைச்சல் அதான் வண்டிய அவகிட்ட கொடுத்துவிட்டேன்”

“சரி வாங்க நானும் வீட்டுக்கு தான் போறேன்” 

“இல்லைங்க பரவா இல்ல நான் பஸ்ல வரேன் அதுமட்டும் இல்ல கோவிலுக்கு வேற போகணும் “

“அதனால என்ன போற வழில போயிட்டு போலாம் “

உள்ளுக்குள் மகிழ்ந்தவள் ஏதோ அவனுக்காக தான் ஒப்பு கொண்டது போல் முகத்தை வைத்து கொண்டு பைக்கில் ஏறி அமர்ந்தாள்

ஏனோ அவளை அடிக்கடி பார்க்க வேண்டும் என்பதுபோல் தோன்ற சைடு மிரரை சரி செய்து அவளது முகம் தெரியும் படி வைத்தான்.

இந்த உணர்வுகள் எல்லாம் அவனுக்கு புதிதாக தோன்றியது. நர்மதாவிடம் தோன்றவில்லை என்று பொய்யெல்லாம் அவன் மனதிடம் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் அதைவிட இன்னும் ஒன்று கலந்து இருப்பதாக தோன்றியது.

அதைபற்றி பெரிதும் ஆராயாமல் கோவிலை நோக்கி வண்டியை செலுத்தினான்.

இருவரும் கடவுள் முன் நின்று வேண்டி கொண்டனர். மைத்ரி தனக்கு கிடைத்த குடும்பத்திற்காக நன்றி தெரிவித்தான். குமரன் தந்தை இப்பொழுது எழுந்து நடமாடுவதால் நன்றி சொன்னான்.

எப்படிபட்ட சூழ்நிலை வந்தாலும் கடவுள் மேல் அவன் கொண்ட நம்பிக்கை போனதில்லை. தந்தையின் உடல் நலகுறைவின் போதும் சரி காதல் தோல்வி அடைந்த போதும் சரி அவன் கடவுளை பலி சொல்லாமல் தான் அதை கடந்து வர வேண்டும் அதற்கான பலத்தை கொடு இறைவா என்றே வேண்டினான்.

இருவரும் சிறிது நேரம் கடவுளின் சன்னிதானத்தில் அமர்ந்தனர்.

மைத்ரி, “இங்க உட்காந்தா மனசு ரொம்ப லேசா ஆகிடுதுல”

மெல்லிய புன்னகையுடன் ம்..  என்றான்.

“ஏங்க…  நான் ஒன்னு கேட்பேன் கடவுள் சன்னிதானம் உண்மைய மட்டும் தான் சொல்லனும்”

“கேளுங்க…”

“அது…  நீங்க என்ன புடிச்சுதான் கல்யாணத்துக்கு ஒகே சொன்னீங்களா இல்ல அன்கிள் சொன்னாருனு ஒத்துக்கிட்டீங்களா?”

அவளை ஆழந்து நோக்கியவன் “அப்பா சொன்னாருனு தான் ஒத்துக்கிட்டேன்.”

அவள் முகம் சட்டென்று மாறிவிட்டது. மனது வலித்தது. இருப்பினும் நிதர்சனம் புரிந்தது. பார்த்த சில நாட்களிலே எப்படி காதல் தோன்றும் அதுவும் இல்லாமல் தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது எப்படி அவரால் அதை பற்றி யோசிக்க முடியும் என நியாயமாக கேள்வி கேட்டது.

ஆனால் காதல் கொண்ட மனமோ ‘ஏன் நானும் பார்த்ததும் தான் லவ் பண்ணுனேன்’ என்று விதண்டாவாதம் செய்ய ‘இரண்டு சந்திப்பும் ஒன்னா அப்போ அவரு உன்னோட முகத்தை கூட பார்த்து இருக்கமாட்டாரு.’

‘அது எப்படி பார்க்காம போவாரு கழுத்துல பல் தடம் பதியிற அளவு விழுந்து இருக்கோம்..’

‘ஏய் மெண்டல் நியாபகம் இருந்த அவரு எப்பவோ கேட்டு இருப்பாரே’ என மாற்றி மாற்றி மனதின் உள்ளேயே சண்டையிட்டு கொண்டிருக்க குமரன் அழைத்துக் கொண்டிருப்பது செவிக்கு எட்டவில்லை.

“மைத்ரி… மைத்ரி… ” என அவளை உழுக்க நிகழ்உலகம் மீண்டாள்.

“என்னங்க எவ்வளவு நேரமா கூப்பிடுறேன். தியான நிலைக்கு போயிட்டீங்களா”

“இல்ல…  அது..  ஏதோ யோசனை”

“சரி கிளம்பலாமா”

“ம்…  ம்…  கிளம்பலாம்”

அவன் முன்னே சென்று பைக்கை ஸ்டார் செய்ய தன் தலையிலே தட்டிக் கொண்டவள் வெட்க சிரிப்புடன் அவன் பின் ஏறிக் கொண்டாள்.

இம்முறை கம்பியை பிடித்திருந்த கையை அவன் தோளில் வைத்தாள்.

அதை கவனித்தவன் “ஏங்க நான் சொன்னதுக்கு எதுவும் பதில் சொல்லலை.”

அப்பொழுது தான் அவளுக்கு  தான் மனதோடு சண்டையிட்டு கொண்டிருந்த போது ஏதோ சொல்லி இருக்கிறான் என புரிந்தது

“எ.. ன்ன.. என்ன சொன்னீங்க”

“அதாங்க டைம் வேணும்னு கேட்டேனே. என்னால உடனே அக்சப்ட் பண்ண முடியல. ஆனால் போக போக உங்கள புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்.”

அவன் வேறொரு அர்த்ததில் சொல்ல அதை சரியாக தவறாக புரிந்து கொண்ட மைத்ரி அவன் தன்னை தீண்டாதே என மறைமுகமாக சொல்கிறான் என எண்ணி கைகளை எடுத்துக் கொண்டான்.

உண்மையில் அதன் பின் தான் அவன் அவளது தீண்டலை வேண்டி நின்றான். மனதின் ஆசைகள் மூளைக்கு புரியாமல் போக எதுவும் பேசாமல் வீடுவந்து சேர்ந்தனர்.

தொடரும்…