முன்பே காணாதது ஏனடா(டி) – 24

மாரியை டிஸ்சார்ஜ் செய்த கையோடு மைத்ரியையும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டனர் குமரன் குடும்பத்தார்.

தோழி நிலை இனி நன்றாக இருக்கும் என்ற நிம்மதியுடன் சுமியும் அவளிடம் இருந்து விடைபெற்று சென்னை நோக்கி பயணமானாள்.

பாவம் அவளும் என்ன செய்வால் தோழிக்காக இரண்டு வாரங்கள் பணிக்கு விடுப்பு எடுத்துவிட்டாள்.  இதற்கு மேலும் விடுப்பு எடுத்தால் அலுவலகத்தில் பதில் சொல்ல வேண்டி இருக்கும். மேலும் விடுமுறை நாளுக்கான சம்பள பணம் குறையும். இதனால் வீட்டிற்கு அனுப்பும் பணமும் குறையும். கணக்கு காட்ட வேண்டும். காரணமாக மைத்ரியின் விபத்தை கூறினால் ‘அப்படியாம்மா பணி என்ன பணி?  மைத்ரியை முதலில் கவனித்துக் கொள்’ என்று கூறும் தாராள மனம் உடையவர்கள் இல்லை அவர்களது குடும்பம்.

சாதாரண நடுத்தர குடும்பம் அவர்களது. அவளது பணியினால் வரும் வருமானத்தில் தான் அவர்கள் வாழ்வின் பல தேவைகள் இருக்கிறது.

மைத்ரியின் வாழ்வை எண்ணி பரிதாபம் கொள்ள முடியுமே அன்றி அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

அவளை பார்த்துக் கொள்ள அந்த குடும்பம் உள்ளது. நம் குடும்பத்தை பார்த்துக் கொள்ள யார் இருக்கிறார்கள். தோழிக்கு உதவி செய்யலாம் ஆனால் பணியை ஒதுக்கி வைத்தால் நம் நிலை என்ன ஆகும் என்று சாதாரணமாக என்னும் பெற்றோர் தான் அவர்களும்.  

மனதில் தோழியை உடன் இருந்து பார்த்துக் கொள்ள ஆசை இருந்த போதும் அதை செய்ய இயலா சூழ்நிலை.

ஆனால் ஒன்று மட்டும் நிஜம் தன் தோழியின் வாழ்வில் இனிமேல் நடக்கும் அனைத்தும் நன்மைகளே சரியான இடத்தில் உள்ளாள். அவள் வாழ்வு சிறக்கும். அந்த நிம்மதியுடன் தன் அடுத்த வேலையை நோக்கி பயணமானாள் சுமி.

கீழே விழ இருந்த மைத்ரி பிடித்தவன் கைதாங்கலாக அவளை அழைத்து சென்று அவளது அறையில் இருந்த கட்டிலில் அமர வைத்தான்.

அவனது கைகள் பட்ட இடை கூச்சத்தில் நெளிந்தது. அவனது மூச்சுக் காற்று உரசிய கழுத்து பகுதி சிலிர்த்தது. ஒரு வித அவஸ்தையில் இருந்தவளின் நிலையை புரிந்து கொண்டவன் “சாரிங்க…  அது…  நீங்க கீழ விழ போனிங்கல அதான்…  நா.. ன்..” என அவன் தடுமாறி பேச

“இல்லைங்க நான் உங்கள தப்பா நினைக்கல நீங்க சங்கடப்படாதீங்க.. “

“அம்மாவ வர சொல்லவா.. “

ஆ… என விழித்து பார்த்தாள். அவன் என்ன கேட்க வருகிறான் என புரியாமல்.

அவளது முக பாவனையை கண்டவன் வாசல் புறம் கையை காட்டியவன் “இல்லை… வெளியே போனீங்கல அதான் எதுவும் உதவி வேணுமானு…”

“இல்லைங்க…  சுந்தரி ஆன்டி பாவம் என்னையும் கவனிச்சுக்கனும் மாரி அன்கிள்ளையும் கவனிச்சுக்கனும்.  நான் சீக்கிர குணமானா அவங்களுக்கு பாரம் குறையும்லா. அதான் ஸ்டிக் இல்லாம நடக்க முயற்சி பண்ணுனேன்.”

“அதுக்காக உடலே ஏன் வருத்திக்குறீங்க. இந்த நிலமைல உங்களுக்கு உதவி தேவைப்படும்.”

குமரனுக்கு அவள் தனக்காக நிச்சயிக்கபட்ட பெண் என்றும் தான் காதல் தோல்வியில் இருக்கிறோம் என்றெல்லாம் அப்பொழுது பெரிதாக தோன்றவில்லை சகமனுசியாகவும் தன் தந்தையின் வாழ்வை காப்பாற்றி தந்த தெய்வமாகவே அவளை பார்த்தான்.

“உதவிக்காக காத்து இருந்துட்டே இருக்க கூடாது. நம்மால முடியும்னு தோனுச்சுனா செஞ்சுடனும். அது மட்டும் இல்லாம என்ன  நானே கவனிச்சுக்குறது எனக்கு புதுசு இல்ல. “

அவளது குணத்தை எண்ணி வியந்தவன் அவளை பிரம்மிப்பாய் பார்த்தான். சின்ன காயம் பட்டாலெ தாம் தூம் என கத்தும் தன் செல்ல தங்கை சுஜி தான் நியாபகம் வந்தது அவனுக்கு.

சிறிதாக உடல்நிலை சரி இல்லை என்றாலும் சுந்தரியை பாடாய் படுத்திவிடுவாள் அவள்.

அதற்காக அவள் ஒன்றும் குணம் குறைந்தவள் இல்லை. உடல் நிலை சரியில்லா நேரம் மருந்து மாத்திரைகளை விட தாயின் அரவணைப்பு தானே மனம் முதலில் தேடும்.

தாய் இல்லையென்றாலும் தனக்காக துடிப்பவரை அருகாமைக்காக ஏங்கும். அதை தக்க வைத்துக் கொள்ள சுஜி போல் சில செல்ல இம்ஷைகள் செய்து தான் விடுகிறோம்.

ஆனால் அது சிலருக்கு எட்டா கனியாக போய் விடுகிறது.  இதோ அவன் எதிரில் இருக்கும் மைத்ரிக்கு உடல் நிலை சரி இருந்தாலும் இல்லை என்றாலும் அவளை அவள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவளது கடந்த கால நிலை எப்படி இருந்திருக்கும் என அவள் மீது பரிதாபம் கொண்டவன் அவளை கனிவுடன் பார்த்தான்.

“சரிங்க நீங்க நல்லா முயற்சி எடுங்க… ஆனா இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என கூறியவன் வெளியேறி விட்டான்.

அவளுக்கு முகம் சுருங்கிவிட்டது.  அவன் தன் அருகிலே இருக்க வேண்டும் அவனிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என மனம் துடித்தது. பொறு மனமே காலம் வரும் என அதனை அடக்கியவள் சிறிது நேரம் தூங்கலாம் என முடிவு எடுத்து கண்களை மூடினாள்.

……..

செழியின் தன் புல்லட்டில் அன்னபுறத்தின் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தான். சுதாகரன் ஒரு குட்டி டெம்போவில் சில நவீன மர அலமாரிகளும் அட்டை பெட்டிகளும் ஏந்தியபடி அவனை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.

பெரிய வீட்டின் முன் நின்றது அவர்களின் வாகனம்.

சுதாகரன்,”ஏப்பா மெதுவா இறக்குங்க எல்லாத்தையும்” என தன்னுடன் அழைத்து வந்திருந்த இரு வாலிபர்களை வேலை ஏவினான்.

அவனின் கத்தலில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்தனர்.

“மருமகனே என்ன இதெல்லாம்” என வள்ளி சுதாகரனிடம் கேட்க

“உங்க மகன கேளுங்க பெரியத்தை”

சந்திரன், “டேய் செழியா என்னடா இது”

“அப்றம் சொல்றேன் அப்பா” என்றவன் பின்  அருகில் இருந்தவனிடம் மெதுவாக அனைத்தையும் தூக்கி தனது அறைக்கு வாருங்கள் என்றான்.

தானும் ஒரு அட்டை பெட்டியை எடுத்துக் கொண்டவன் முன்னே செல்ல மற்றவர்களும் அவனை பின் தொடர்ந்தனர்.

சில கட்டளைகளை இட்டவன் கீழிறங்கி வர சரி அண்ணே என்ற அவர்களும் அவன் சொன்ன வேலையை செவ்வனே செய்து அவனை தொடர்ந்து கீழ் இறங்கி ஹாலை அடைந்தனர்.

மகாவில் இருந்து குட்டி வாண்டு ஹரி வரை அனைவரும் அவனை ஆவலாக பார்த்தனர்.

ஆம் மகாவும் அவளது மகள் கணவர் அனைவரும் செழியன் நர்மதா திருமணத்தை முடிவு செய்த பின் பழையபடி தங்களது வீட்டிற்கே வந்துவிட்டிருந்தனர்.

மொழி, “என்ன அணணா இது… “

செழியன், “அது… “

தொடரும்