முன்பே காணாதது ஏனடா(டி)- 2

அதிகாலை வேலை அவ்வீட்டின் உள் ஒரு பெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது வேறு எதற்கு நாம் நாயகி மற்றும் அவளின் உடன் பிறப்புகளை எழுப்புவதற்கே

‘எவ்வளவு நேரமா எழுப்புறே எழுந்துக்க மாட்டிதுங்களே வர வர  பயம் விட்டு போச்சு’

“ஏய்…..  இப்போ எழுந்துக்க போரிங்களா இல்லையாடி ” , கண்மணி .

“அம்மா 5 மினிட்ஸ் “, கவிதா .

“அம்மா நான் எழுந்துட்டேன் சும்மாதான் கண்ண மூடி இருக்கேன்”, துளசி .

“அம்மா ஆபிஸ் பத்து மணிக்கு தான மா கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் மா பிளீஸ் “, நர்மதா.

இப்படி ஆளுக்கு ஒன்று சொல்லியவாறு உறக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தனர்

கண்மணி, “அடியே இன்னைக்கு பிரதோசம் டி நல்ல  நாள் அதுவுமா இவ்வளவு நேரம் தூங்குனா வீடு விளங்குமாடி நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு போர வீட்டுல இப்படி தூங்குங்கடி உங்கள ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்னைதான் எப்படி பிள்ளை வளர்த்து இருக்கா பாருனு திட்டுவாங்க”

பிரதோசம் என்ற வார்த்தையை கேட்டவுடன் துள்ளிகுதித்து கொண்டு எழுந்தாள் நர்மதா .

‘ஐயையோ பிரதோசம் கோவிலுக்கு போகனுமே இத எப்படி மறந்தே சே…. சீக்கிரம் கிளம்பனும்.’  என்று  வேகவேகமாக கிளம்பி கொண்டிருந்தாள் நர்மதா. இடையில் மற்ற இருவரும் தங்களை சுத்த படுத்தி கொண்டு படிக்க அமர்ந்து விட்டனர்.

இவ்வாறாக கிளம்பிக் கொண்டிருக்கையில் வாசலில் ஏதோ சலசலப்பு ஏற்பட சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்தார் கண்மணி. அந்த ஏரியாவின் கூர்கா நின்று கொண்டிருந்தார். 

கண்மணி, “ஏய் பிள்ளைகளா டிவி மேல பர்ஸ் இருக்கும் அதுல இருந்து பணம் எடுத்து அவர்கிட்ட கொடுங்க”

ஆனால் அவரின் தவ புதல்விகள் இதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை. கடுப்பான கண்மணி அவர்களது அறையை எட்டி பார்த்தார். நர்மதா தலை சீவி கொண்டிருந்தாள் மற்ற இருவரும் புத்தகத்தை திறந்து வைத்து அதனை பார்த்து கொண்டு இருந்தனர்.

கண்மணி, “அடியே நர்மதா நான் சொல்றது காதுல விழுதா இல்லையா”

நர்மதா, “அம்மா நான்தான் கிளம்பிட்டு இருக்கேன்ல அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட வேண்டியது தான”

கண்மணி, “அவளுக ரெண்டு பேரும் எழுந்து எவ்வளவு அக்கறையா படிக்குறாங்க நீ வேலைக்கு தான கிளம்புற போய் எடுத்து கொடுத்துட்டு வா.”

நர்மதா, “அம்மா….  நா… “

அதற்குள் வெளியே இரண்டு மூன்று முறை அவர் அழைத்து விட்டார். 

கண்மணி, “முதல போய் கொடுத்து அனுப்பி விட்டு விட்டு வாடி அப்புறம் கேக்குறே உன்னோட புராணத்த”

அவளோ தங்கைகள் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு போய் அவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு திரும்பி வந்து தன் தாயிடம் முறையிட்டால் “மா நீ இன்னமுமா அவங்க ரெண்டு பேரையும் நம்புற….. படிக்குறேனு சொல்லி புக்கை திறந்து வச்சு தூங்குறாங்கமா ரெண்டு பேரும். வா….. வந்து பாரு.”

கண்மணி, “சும்ம உன்ன ஒரு வேலை சொன்னதும் அவளுகள குறை சொல்லாத போ போய் கிளம்பு.”

நர்மதா, “என்ன?……. மா…”

அதற்குள் வெளிய பூங்காவிற்கு ஜாகிங் சென்றிருந்த தந்தை ராஜாராம் உள்ள நுழைந்தவர் இவர்கள் பேச்சை கேட்டுவிட்டு என்ன பிரச்சினை என்று கேட்க கண்மணி “ஒரு பிரச்சினையும் இல்ல உட்காருங்க டீ எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே சென்று விட்டார்.

நர்மதா, “என்னைக்கு நான் சொல்றது இவங்க கேட்டு இருக்காங்க இன்னைக்கு கேட்க”  என்று புலம்பி விட்டு கிளம்புவதற்கு ஆயத்தமானாள்.

நர்மதா, “அம்மா லேட்டாச்சு என்னோட லன்ச் பாக்ஸ் எங்க”

கண்மணி, “இந்தாடி…. இரண்டு நிமிசம் பொறு… டிபன் ரெடி பண்ணிட்டேன் உக்காரு சாப்பிடுவ”

நர்மதா, “மா நானே  லேட் ஆகுதுனு சொல்றேன் நீ என்னடானா இன்னும் இரண்டு நிமிஷம் ஆகும்ற எனக்கு டிபன் வேண்டா”

கண்மணி, “மரியாதையா சாப்பிட்டு போ ஏற்கனவே எலும்பு தோலுமா இருக்க நாளைக்கு கல்யாணம் ஆகி போற வீட்டுல உன்ன ஒ…. “

நர்மதா, “ம்மா… ம்மா…  போதும்” என அவரது பேச்சை இடை நிறுத்தி விட்டு “உன்ன ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்னதா எப்படி பிள்ளை வளர்த்து இருக்கா பாருனு திட்டுவாங்க. அதானா….ஆரம்பிக்காதிங்க மா… நான் வெயிட் பண்றேன் போய் எடுத்துட்டு வாங்க…”

அவர் கொண்டு வந்து வைத்ததும் மற்றொரு பாக்ஸில் அதை பேக் செய்து “நான் ஆபிஸ் போய் சாப்பிட்டுகிறேன்” என்று அவர் பதில் சொல்லும் முன்பே அவ்விடத்தை காலி செய்திருந்தாள்.

வீட்டை விட்டு வேக வேகமாக ஓடி வந்தது இதோ அவள் வீட்டில் இருந்து இரண்டு மூன்று தெரு தள்ளி இருக்கும் அந்த ஏரியாவின் பிரசிதி பெற்ற விநாயகர் கோவில்.

உள்ளே நுழைந்ததும் லாட் கணேஷாவிடம் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு தன் கண்களை சுற்றி அலையவிட்டாள்.  அப்படி அவள் கண்கள் சுற்றும் போது லாட் கணேஷாவின் பார்வை அவள் மீது நக்கலாக படிவது போல் தோன்றியது.

அவரை பார்த்து உள்ளுக்குள்ளே “ஹி ஹி”  என்று கேவலமாக இழித்துவிட்டு “என்ன கணேஷா இன்னைக்கு ரொம்ப பாலிஷா அப்படியே மினுக்குற ஓ… இன்னைக்கு பிரதோசம் ல அதானா …” என்று மானசீகமாக அவருடன் பேசி கொண்டிருந்தாள்.

அதற்கு அவரோ “நீ வந்த விஷயம் என்னனு எனக்கு தெரியும் சும்மா என்ன வணங்குற மாதிரி எல்லாரு முன்னாடியும் சீன் போடாம நீ தேடி வந்த ஆள் உனக்கு பின்னாடி தான் இருக்காங்க போய் வந்த வேலைய பாரு” அப்படினு கோவில் மணியை அடித்து அவளுக்கு தெரிவித்தார் லாட் கணேஷா.

அவளின் எதிர்பார்ப்பிற்குரியவனோ தன் தாயுடன் ஏதோ உரையாடி கொண்டே வந்து கொண்டிருந்தான்.

அவன் திரும்பி இவள் புறம் பார்வையை திருப்ப இவளோ சட்டென்று கணேஷாவின் புறம் திரும்பி அவரை வணங்குவது போல் பாவனை செய்தாள்.

தொடரும்…