முன்பே காணாதது ஏனடா(டி) – 19

மகா வீட்டின் வாசலில் நின்றிருந்த கவிதா  தனக்கு எதிரே வந்து கொண்டிருந்த நர்மாதவை பார்த்து அவளிடம் ஓடினாள்.

“அக்கா எங்க போன”

“சும்மா அப்படியே வயல சுத்தி பார்த்துட்டு வந்தேன்”

“என்னையும் கூட்டி போயிருக்கலாம்ல”

“அதுக்கு மேடம் குறட்ட விட்டு தூங்காம முழுச்சு இருக்கனும். “

“சீ…  பே…” என்று உடன் பிறந்தவளை திட்டி விட்டு தாயின் அருகே சென்றவள் நர்மதா வந்து விட்டதை பற்றி தெரிவித்தாள்.

“எங்கடி போவ…  டிரஸ் என்ன ஈரமா இருக்கு “

“இங்க தான் மா இருந்தேன் கத்தாதீங்க…”

“வந்த இடத்துல எதிர்த்து எதிர்த்து பேசாத “

மகா “விடுங்க கண்மணி எங்க போயிருக்க போறா… “

கணவனின் அக்கா பேசியவுடன் மறு பேச்சு பேச முடியாமல் அமைதி ஆனார் கண்மணி.

நர்மதாவும் கவிதாவும் துளசியும் தாயின் வாயை அடைக்கும் அத்தையை தெய்வமென திரும்பி பார்த்தனர்.

……

வீட்டிற்கு வந்த செழியன் உடை மாற்றி கொண்டு வந்து கூடத்தில் அமர்ந்தான்.

கதிர் மஞ்சுளா அறையில் இருந்து அழுது கொண்டே வெளியே ஓடி வந்தான் ஹரி.

“அச்சோ….  என்னோட பெரிய மனுசன் எதுக்கு அழுவுறீங்க” என அவனை செல்லம் கொஞ்சிய படி தூக்கி கொண்டான்.

“ம்மா..  அடி..க்.. து”

“நீங்க என்ன பண்ணீங்க தங்கம்… “

“இல்ல…  ” என்று தான் எதுவும் பண்ண வில்லை என்பது போல் கூறினான்.

அறையில் இருந்து கோபமாக வெளியே வந்த மஞ்சு “ஹரி இங்க வா… “

“மாத்தேன்…”

“அடம் பண்ணாத இந்த டிரஸ் போடு.. “

“என்னாச்சு அண்ணி….”

“வர வர ரொம்ப செல்லம் பண்றான். எல்லாம் உங்க அண்ணன சொல்லனும்”

“இவளுக்கு என்ன திட்டலனா தூக்கம் வராது” என்று புலம்பிக் கொண்டே கதிரும் வந்து சேர்ந்தான்.

சமையல் அறையில் இருந்து உணவு பதார்த்தங்களை டைனிங் டேபிலில் அடுக்கிய வள்ளி அனைவரையும் சாப்பிட அழைத்தார்.

எல்லோரும் வந்து அமரந்தனர்.

“அப்றம் மகா வீட்டுக்கு போய் ஏதோ பேசி வந்திங்கனு சேதி வந்துச்சு” என பேச்சை தொடங்கினார் ரத்தினம்.

“அது…  வந்து பெரியப்பா….”  என செழியன் திணற

“மொழி கல்யாணம் பத்தி பேச போனோம் மாமா…”  என்று மஞ்சுளா கூறினாள்.

“அப்பா…  அங்க மகாமா எப்படி பேசுவாங்கனு தெரியாது உங்கள கூட்டி போய் தலை குனிய வைக்க விருப்பம் இல்ல. அது தான் நாங்க மட்டும் போனோம். “

“ம்… ” என்று உணவை அருந்தியவர். “ராஜாராம் வந்துருக்கான்” என்றார்.

செழியன் பெரிய தந்தையை நிமிர்ந்து பார்த்து மீண்டும் உணவில் கவனமானான். அவர் அடிக்கொரு முறை வருவதே அதனால் அவனுக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை.

“கூட குடும்பத்தையும் கூட்டி வந்து இருக்கான். “

செழியினின் கைகள் அந்தரத்தில் நின்றது. அனைவருக்கும் தான். ஒரு நிமிடம் சூழ்நிலை அமைதியாக கழிய “மா…. ” என்ற ஹரியின் விளிப்பில் சமநிலை அடைந்தது.

தன் முன் நீட்டி இருந்த தாயின் கைகளையும் தாயையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி. அவனுக்கு ஊட்ட பட்டுக் கொண்டிருந்த உணவு தடை பட்டு போனதே அதனால் தான் அவன் தாயை அழைத்தது.

கதிர் மனதில் தன் மகா அம்மாவை ‘என் செல்ல அம்மா’ என்று கொஞ்சினான்.  தான் கூறி வந்த வார்த்தைக்கு பொருள் அறிந்து கொண்டு செயல்படுகிறார் என அவருக்கு மனதில் பாராட்டு கடிதம் இயற்றினான்.

செழியனுக்கு சொல்ல இயலாத உணர்வு.  மனதிலும் அடிவயிற்றிலும் ஏதோ பண்ணியது அவனுக்கு.

அதே நேரம் வீட்டின் வாயிலில் வந்து நின்றிருந்தார் மகா.

அனைவரும் உணவில் இருந்து எழுந்து வாசலுக்கு விரைந்தனர்.

“தம்பி குடும்பம் வந்துருக்கு…  நீங்க எல்லாரும் வந்து தான் பொண்ணு கேட்கனும். “

வள்ளிக்கு மகா கூற வரும் வார்த்தையின் பொருள் புரிய “நிச்சயமா வரோம் மகா…  உள்ள வா… ” என்றார்.

“இல்ல நான் பண்ணுன தப்ப சரி செஞ்சுட்டு திரும்ப வரேன்” என்றவர் மதியம் உணவுக்கு வீட்டிற்கு வருமாறு அழைத்து விட்டு சென்று விட்டார்.

அவர் சென்றதும் அனைவரும் செழியனை பார்க்க அவன் ஓடி வந்து பெரிய அன்னையை அணைத்துக் கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டான். எதனால் இவை அனைத்தும் சாத்தியம் என்பதெல்லாம் அவன் ஆராயவில்லை. இத்தனை வருடங்கள் வராதா தாய் வந்ததே பெரிய விசயாமாக இருந்தது.

…….

மதியம் அனைவரும் மகாவின் வீட்டிற்கு சென்றனர்.  மொழியும் மகாவும் பம்பரம் போல் சுழன்று வேலை பார்த்தனர். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் தருணம். எத்தனை நாள் கனவு இது. குடும்பம் பழைய சூழ்நிலைக்கு மாறியது.

ராஜாராம் குடும்பதினரும் மற்றவர்களிடம் நன்றாக பழகினர்.  செழியனின் பார்வை வீட்டை சுற்றி வட்டம் அடித்தது தன்னவளை தேடி.

நர்மதாவின் தங்கைகளோ ‘வாவ்…  மாமா எவ்ளோ அழகா இருக்காரு’ என தங்களுக்குள் அவனை மெச்சியபடி இருந்தனர்.

செழியனின் தேடலுக்கு சொந்தமானவளோ அப்பொழுது தான் பின் புறம் இருந்து உள்ளே நுழைந்தாள்.

“நர்மதா  இங்க வா ….” எனும் கண்மணியின் குரலில் செழியன் படபடக்கும் மனதுடன் வேகமாக திரும்பி பார்க்க சிலையாகி போனான்.

காலையில பார்த்து நர்மதாவா..  என்று சந்தோஷம் அடைந்தான்.

………

இரண்டு நாட்கள் முழுதாக முடிந்து விட்டது. குமரன் பணத்திற்காக அலைந்து விட்டான் எங்கும் கிடைத்த பாடில்லை. தோழி தாராவிடம் கேட்கலாம் என்றால் கணவனோடு இப்பொழுது தான் சமாதானம் ஆகி வெளிநாடு சென்றிருக்கிறாள். அவளை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை.

பணம் கிடைக்காத நிலையில் என்ன செய்ய என்று யோசித்து யோசித்து பயமும் அழுகையும் தான் வந்தது. தனியாக அறையில் அமர்ந்து கதறி அழுதான்.

திடீரென நர்மதாவின் நினைவு வர அவளிடம் கேட்டால் என்ன என்ற யோசனை தோன்றவும் அவளது அலுவலகம் நோக்கி புறப்பட்டான்.

ஏற்கனவே இவன் தனது பணியை முடித்து ஒப்படைத்தாயிற்று அதனால் பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. நர்மதாவின் அலுவலகத்தில் பணிபுரிவது அன்றே கடைசி நாள் என்பதால் தான் அன்று அவளை வெளியே அழைத்துச் சென்று காதலை தெரிவிக்க நினைத்தது. அதுவும் தோல்வியில் சென்று முடிந்து விட்டது.

அலுவலகத்தில் நுழைந்து நர்மதாவை தேடினான். எங்கும் அவள் இல்லை. விசாரித்ததில் அவள் வெளியூர் சென்றிருப்பதாக பதில் கிடைத்தது.

கைபேசி எண்ணை மாற்றிக் கொள்ளாத தங்கள் முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினான். அலுவலகத்தில் யாரிடமாவது வாங்கலாம் என்றால் பணி அனைத்தும் முடிந்துவிட்டது இதன் பிறகு சென்று வாங்கினால் அவள் பெயர் கலங்கபடுமோ என்று குழம்பினான்.

சம்மந்தப்பட்ட பெண்ணிடமே எண்ணை வாங்குவது வேறு மற்றவரிடம் இருந்து வாங்குவது வேறு என்று அவனது யோக்கிய மனது இதயத்தை இடித்து உரைக்க அந்த முயற்சியை கைவிட்டான்.

எல்லா கதவுகளும் பூட்டபட்டதாக கருதினான். தந்தையின் உடல் நிலையை எண்ணி மனதில் பயம் நிமிடத்திற்கு ஒரு முறை அதிகரித்து கொண்டே இருந்தது.

…….

சுந்தரியும் கார்த்தியும் ஒரு விதமான அலைச்சலுடனும் எதையோ எண்ணி தவித்து கொண்டிருப்பதாகவும் மைத்ரிக்கு தோன்ற தோழியிடம் அது பற்றி விசாரித்தாள்.

அவளின் தொடர் கேள்விகளுக்கு இறுதியாக மாரியின் உடல் நிலை பற்றி கூறினாள் சுமி.

தொடரும்…