முன்பே காணாதது ஏனடா(டி)- 18

இரவு முழுவதும் கண் விழித்து மைத்ரி இருந்த அறை வாசலிலே தவம் இருந்தனர் சுமியும் சுந்தரியும்.

நேற்றையில் இருந்து இருவரும் வேண்டாத தெய்வமில்லை. அவள் நல்லபடியாக குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இறைவனையும் தூங்க விடவில்லை. அவர்களும் தூங்கவில்லை.

கார்த்திக் மெல்ல தாயிடம் பேச்சுக் கொடுத்து மைத்ரியை பற்றி அறிந்து கொண்டான். அவனுக்கு மைத்ரி மீது நல்ல எண்ணம் உண்டானது. மதிப்பும் உண்டானது.

அவனும் கடவுளிடம் அவளின் உயிரை மீட்டுத்தருமாறு வேண்டிக் கொண்டான்.

குமரன் இரவு முழுவதும் தந்தையின் அருகிலேயே இருந்தான். அவரது கையை விடாமல் இறுக பிடித்தபடி அமர்ந்திருந்தான்.

மருந்தின் உபயத்தில் மாரி நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.

மைத்ரியின் பெட்டின் அருகே அமர்ந்து இருந்தனர் கார்த்தி சுமி சுந்தரி மூவரும்.

எதார்தமாக திரும்பிய கார்த்தி தான் முதலில் கண்டான் மைத்ரியின் இமை திறந்து கொள்ள சிரமப்படுவதை.

உடனடியாக தாயை அழைத்து கூற அவரும் திரும்பி பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். சுமியும் அருகில் வர கார்த்திக் டாக்டரை அழைத்து வர ஓடினான்.

கண்களை திறந்தவள் எதோ பேச முயற்சிக்க மற்ற இருவரும் அவளது முயற்சியை புரிந்து கொண்டனர். 

“ஸ்ட்ரெயின் பண்ணிகாத மைத்ரி” என்று தடுத்தாள் சுமி.

ஆனால் அவள் சுந்தரியை பார்த்து ஏதோ கேட்க முயன்று கொண்டே இருந்தாள்.

“அன்கிள் நல்லா இருக்காருடா… பயப்படாத… ” என்று அவளது எண்ணப் போக்கை உணர்ந்து பதில் அளித்தார் சுந்தரி.

அவள் மீண்டும் அவரையே பார்க்க  சுமியிடம் இருந்து கைபேசியை பெற்று சுஜிதாவிற்கு அழைத்தார்.

“ஹலோ சுஜி அப்பா கிட்ட போன் குடு”

“எங்கமா இருக்கீங்க… “

“நீ குடு முதல… “

அவள்  தந்தையிடம் சென்று அவரை எழுப்பி கொடுத்தாள். தந்தையை எழுப்பும் பொழுது அப்பொழுதே எழுந்த குமரனும் தந்தையை கவனிக்க ஆரம்பித்தான்.

“சொல்லுமா…”

“என்னங்க மைத்ரி கண் முழுச்சிட்டா ரெண்டு வார்த்தை பேசுங்க”

அதன் பிறகு மாரி மைத்ரியிடம் பேசிய பிறகே அவள் சமாதானம் அடைந்தாள்.

இதற்கிடையில் கார்த்தியும் மருத்துவருடன்  அவ்விடம் வந்து விட்டான்.

சில பரிசோதனைகள் மேற்கொண்டவர் அவள் நலம் உடன் இருக்கிறாள், இனி எந்த பிரச்சினையும் இல்லை என்பதை தெரிவித்து வெளியே சென்று விட்டார்.

இங்கு குமரனோ பலத்த யோசனையில் இருந்தான். தந்தை உணர்வு குவியலாக பேசிக் கொண்டிருந்தாரே யார் அது என்று ஆச்சரியபட்டான்.

அதை பற்றி தம்பியிடம் கேட்டான்.

“கார்த்தி அப்பா யார் கூடவோ பேசுனாங்க. யாரு டா அது…”

கார்த்தி மைத்ரியை பற்றி அண்ணனிடம் கூற அவள் மீது அளவுகடந்த மரியாதையும் நன்றி உணர்வும் வந்தது. அவளுக்கு தான் நன்றிகடன் பட்டதாக எண்ணினான்.

சிறிது நேரத்தில் அவளை பார்க்க அவளது அறை சென்றான். உறங்கி கொண்டிருந்தாள் அவள். அவனுக்கு அவளை சந்தித்த நிகழ்வு எதுவும் நினைவில் இல்லை.

அவள் அருகில் அமர்ந்தவன் மனதளவில் அவளுக்கு நன்றியை தெரிவித்தான். பின் சில நிமிடம் அங்கிருந்தவன் மீண்டும் தந்தை அறைக்கு சென்றுவிட்டான்.

……..

வாய்க்கால் நீருக்குள் இருந்து எழுந்தனர் செழியனும் அந்த பெண்ணும்.

“சாரிங்க”

“பராவா இல்ல….  ஆமா ஊருக்கு புதுசா…  உங்கள இதுக்கு முன்ன பாத்தது இல்ல. யாரு வீட்டுக்கு வந்து இருக்கீங்க….”

அவனை வெகுவாக முறைத்தவள் “ஹலோ…. உதவி பண்ணுனதோட நிறுத்திக்கங்க என்ன பத்தி மூனாவது ஆள் உங்க கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல” என்றவள் திரும்பி பாராமல் சென்றாள்.

சென்றவளை ங.. என பார்த்து நின்ற செழியன் ‘இந்த பொண்ண இதுக்கு முன்ன எங்கையோ பார்த்து இருக்கோமே எங்க’ என்று மனதில் கடந்த கால நிகழ்வுகளை ஓட்டிக் கொண்டிருந்தான்.

அதற்குள் அவனது சிந்தைனையை கலைக்கும் விதமாக அவள் துண்டை பிடித்து இழுத்த போது கையில் இருந்து கீழ் விழுந்த கைபேசியின் ஒலி கேட்டது.

அதனை எடுத்து உயிர்பித்தவன் அப்படியே தான் வந்த வேலையை பார்க்க சென்றான்.

……..

உறக்கத்தில் இருந்து கலைந்த மைத்ரி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அவ்வறையில் கார்த்திக் மட்டுமே இருந்தான். அவனும் திரும்பி நின்றவாறு தனக்கு தெரிந்த நபர்களிடம் தந்தையின் ஆபரேஷனுக்கு பண உதவி கேட்டுக் கொண்டிருக்க எங்கும் கிடைத்தபாடில்லை. வருத்தமுடன் திரும்பியவன் மைத்ரி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து அவள் அருகில் சென்றான்.

அவள் கண் விழித்த போது அவன் அங்கு தான் இருந்தான். மருத்துவரையும் அவன் தான் அழைத்து வந்தான் ஆனால் அப்பொழுது அவள் இருந்த மன நிலைக்கு அவளால் அவனை கவனிக்க இயலவில்லை.

“முழுச்சிட்டிங்களா…  வலி எதுவும் இருக்கா…”  என்று அன்பொழுக கேட்க அவளோ சிறிதாக சிரித்து புரியாமல் பார்த்தாள்.

கார்த்தியை விட மைத்ரி மூன்று வருடம் பெரியவள் தான் இருந்தாலும் அவனது உடல் வாகு அவளுக்கு அவனை தன்னை விட பெரியவனாகவே தோன்ற வைத்தது.

“என்னங்க அப்படி பாக்குறீங்க நான் கார்த்தி, மாரிமுத்து சுந்தரி அவங்களோட பையன்”

மைத்ரிக்கு சட்டென்று முகம் மாறி விட்டது . அவன் மகன் என்று கூறியதும் அன்கிள் ஆன்டி தனக்காக கூறிய மாப்பிள்ளை இவன் தானா என்று எண்ணினாள்.

அவனிடம் சகஜமாக பேச முடியாமல் தயங்க அதனை புரிந்து கொண்டவன் “தயக்கம் வேண்டாம் எதாவது உதவி வேணுமா…”

“இல்லை சுமி… “

“அவங்க இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தாங்க. இப்போதா போய் சாப்பிட்டு வர சொன்னேன். அதான் போய் இருக்காங்க…  அம்மா அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்க போய் இருக்காங்க… ” என்று அவள் அடுத்ததாக கேட்க இருக்கும் கேள்விக்கும் சேர்த்தே பதில் உரைத்தான்.

அவள் ஏதோ கூற வந்து பின் கூறாமல் அமைதி காக்க “என்னாச்சு” என்று அவளது அருகில் வந்தான். அவள் ஏதோ அசோகரியமாக படுத்திருப்பது தெரிய அவளை பரிசோதித்தான்.

“கொஞ்சம் இருங்க” என்று வெளிவந்தவன் ஒரு நர்ஸை அனுப்பி வைத்தான்.

அவள் வந்து மைத்ரியை பரிசோதித்து விலகி இருந்த சிறுநீர் டியூபை சரிபடுத்தி சென்றார். கார்த்திக் வருங்கால மருத்துவர் என்பதால்   அவனுக்கு இது போன்ற விஷயங்கள் சாதாரணம் ஆகினும் மைத்ரி தான் அவமானமாக உணர்ந்தாள்.

கார்த்தியை தவறாக எண்ணவில்லை அவள். மனதில் அவனுக்கு நன்றி கூட தெரிவித்தாள். அவளது நிலையை எண்ணியே அவளுக்கு கோபம். அந்நிய ஆண்மகனின் முன் தன் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று கவலை கொண்டாள்.

அறையின் உள் நுழைந்த கார்த்தி அவளது புருவ முடிச்சையும் கண்களின் அலை கலைப்பையும் பார்த்து புரிந்து அவளை நெருங்கி அவளது தலை கோதி “என்னோட அம்மாவா இருந்தா செய்ய மாட்டேனா” என்றான்.

அவனது வார்த்தை அவளது உயிரை ஊடுருவியது. கண்களில் நீர் நிறைய நன்றியுடன் பார்த்தாள். கார்த்திக் மீது தற்போது மரியாதை பன்மடங்கு பெருகியது. தனது மாரி அன்கிள் வளர்ப்பு என்றும் தவறாது என்று தனக்குள் சொல்லி கர்வம் உற்றாள்.

தொடரும்…