முன்பே காணாதது ஏனடா(டி) – 17

மகனின் காதலை பற்றி அறிந்த மகா திகைத்து போனார். தன் மகனின் மனதில் இப்படி ஒரு ஆசை முளை விட்டிருக்கும் என்று அவர் துளியும் எண்ணவில்லை.

ஆனால் அங்கு முளை விட்டதோடு அல்லாமல் பெரிய விருட்சமாக மாறி உள்ளதை அறிந்தால் நொருங்கி போவார்.

தான் செய்த தவறை தானே சரி செய்கிறேன் என்று முடிவு எடுத்தவர் தம்பியின் குடும்பத்தாருக்கு உடனடியாக அழைப்பு விடுத்தார்.

மறுபுறம் அழைப்பு ஏற்கபட்டது.

“ஹலோ அக்கா…  நல்லா இருக்கியா மாமா நல்லா இருக்காரா பாப்பா என்ன செய்யுது” என அடுக்கடுக்காக கேள்வி கேட்க

அனைத்திற்கும் பதில் உரைத்தவர் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதை தெரிவிக்க

“நானே நாளைக்கு உன்ன பார்க்க வரனும்னு இருந்தேன் அக்கா”

“என்ன விஷயம் பா”

“ஒன்னும் இல்ல அக்கா உன்ன பார்க்க வந்து நாளாச்சுல அதான்”

“சரிபா அப்போ புள்ளைங்களையும் அழச்சிட்டு வா…”

சிறிது நொடிகள் யோசித்தவர் குழப்பத்துடனே சரி என்று கூறினார்.

……..

சுதர்சன் தன் தாய் தந்தை முன்பு நின்றிருந்தான்.

காதலை பற்றியும் அதனால் மொழி குடும்பத்தில் உண்டான தகராரு பற்றியும் உரைத்து விட்டான்.

அதற்கான் எதிர் மொழி தான் தாய் தந்தையரிடம் இருந்து வரவில்லை.

“என்ன இருந்தாலும் அவங்க பெரிய இடம் நம்ம தகுதி தெரியாம ஆசை படுறது தப்புயா…” என்றார் அவன் தந்தை சிவகுமார்.

“அப்பா மொழி என் உசுரு என்னால விட முடியாது. அது மட்டும் இல்லாம…” அவன் மேற் கொண்டு பேச வருவதற்குள் பளாரென அறைந்து இருந்தார் அவன் தாய் சுகந்தி.

“சுகா… “

“நீங்க சும்மா இருங்க ஒத்த புள்ளையாச்சேனு செல்லங்குடுத்து வளர்த்தா பெத்தவங்களையே எதிர்த்து பேச சொல்லுதா…”

“அம்மா நீ என்ன அடிச்சாலும் கொன்னாலும் எனக்கு மொழி வேணும்” என்றவன் தந்தையின் காலடியில் சென்று அமர்ந்தான்.

“அப்பா நான் என்ன ஆசை பட்டாலும் நீங்க அத எனக்காக கொடுத்து இருக்கிங்க. இப்போ மொழிய கேக்குறேன் மறுத்துடாதீங்க பா….”

“என்னால சட்டுனு பதில் சொல்ல முடியலையா… கொஞ்சம் அவகாசம் கொடு” என்றவர் எழுந்து தன் வேலைகளை பார்க்க சென்றார்.

அம்மாவின் புறம் திரும்ப அவரோ சமையல் அறையில் தன்னை புகுத்தி கொண்டார்.

……

மருத்துவமனையில் மாரிமுத்து கண் திறந்தார். எதிரே மனைவியும் பிள்ளைகளும் நின்றிருந்தனர். குமரன் தவிர்த்து சுமியும் கூட அங்கு தான் நின்றிருந்தாள்.

கண் முளித்தவர் முதலில் கேட்டது மைத்ரியை தான்.

அவள் நலம் என்று அனைவரும் சொல்லி சமாளித்தனர். ஆனால் அவர் நம்ப மறுத்து படுக்கையில் இருந்து எழுவதற்கு முயற்சி செய்தார்.

கார்த்திக்கும் சுஜியும் ஆச்சரிய பட்டனர் தந்தையின் செயலில். அவரின் உயிரே தன் பிள்ளைகள் தான் அப்படி இருக்க அவர்கள் கண்ணீரோடு எதிரில் இருக்க யாரோ ஒருவருக்கான அவரின் தவிப்பு வித்தியாசமாக பட்டது அவர்களுக்கு.

கடைசியில் அவர்களது விவாதம் கதவு திறக்கும் சத்தத்தில் நின்றது. குமரன் தான் உடனடி தேவைக்காக பணம் எடுக்க சென்றிருந்தான். மேலும் தந்தையின் மருத்துவ செலவுக்கான பணத்தை ஏற்பாடு செய்ய முனைந்து கொண்டிருந்தான்.

தந்தையை எழுந்து அமர்ந்து சாய்ந்திருப்பதை பார்த்தவன் விரைந்து அருகில் சென்றான்.

அப்பா என்றவன் அவரின் தோள் அருகில் முகத்தை புதைத்தவன் கண்ணீர் விட்டான்.

எல்லாரும் சமாதானம் செய்தும் பலனில்லை. அழுது தீர்த்தான்.

…….

மாலை சோர்வுடன் வீடு வந்து சேர்ந்தாள் நர்மதா.  மதியம் அவசரமாக கிளம்பிய குமரன் அதன் பிறகு அவளுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை.

உள்ளே நுழைந்தவளை வரவேற்றது என்னவோ பரபரப்பாக தயாராகி கொண்டிருந்த குடும்பம் தான்.

“என்ன மா எங்க கிளம்புறீங்க எல்லாரும் பரபரப்பா.”

அம்மா பதில் கூறாமல் வேலையில் கவனமாக இருக்க தங்கையின் புறம் பார்வையை செலுத்தினாள்.

தங்கைகள் இருவரும் உடைகளை அடுக்குவதில் தீவிரமாக தேர்ந்து எடுத்துக் கொண்டிருந்தனர்.

துளசி.”அடியே அது என்னோட துப்பட்டா”

“என்னோட இந்த டிரஸ்கு இது தான் சரியா இருக்கும்” என ஒரு டாப்பை எடுத்து அவளிடம் நீட்டினாள் கவிதா.

“நீ தான்டி அக்கா. நியாயமா நீ தான் எனக்கு தரனும்.”

“ஏன் எப்பவும் நாங்க தான் விட்டு தரனுமா”

“உன்ன…”  இருவரும் சண்டை பிடிக்க ஆரம்பிக்க அவர்களை விலத்திய நர்மதா எங்கே கிளம்புகிறீர்கள் என்று வினவ

அதில் குஷியாகியவர் உற்சாகமாக உரைக்க ஆரம்பித்தனர்.

துளசி, “மகா அத்தை ஊருக்கு…”

கவிதா, “நியாபகம் இருக்கா அக்கா சின்ன புள்ளையில நாம திருவிழாக்கு போயிருக்கோம். “

“ம்… ம்…  நியாபகம் இருக்கு.”

“செம அக்கா. மகா அத்தை பையன் இப்போ எப்படி இருப்பாரோ…” என்றாள் விட்டத்தை பார்த்து…

துளசி, “ரொம்ப பீல் பண்ணாத…  அப்பாகிட்ட சொல்லிடுவேன்…”

“குட்டி சாத்தான்….”

“சீ…  பே…. “

“அக்கா  சொல்லு மாமாவ பார்க்க நீ எக்ஸைட்டா இல்ல… “

“ஏய் எனக்கு யாரையும் நினைவு இல்ல. திருவிழா இராட்டினம் வயலு இது மட்டும் தான் நியாபகம் இருக்கு”

“போ.. க்கா…”  என்று சலித்துக் கொண்டு விட்டு  தன் பணியை செய்ய ஆரம்பித்தாள் கவிதா.

………

அதிகாலை வேலை அன்னபுறத்தின் உள் நுழைந்தது அந்த கார்.

ராஜாராம் குடும்பத்தினர் தான். கார் சொந்த காரில்லை வாடகை கார் தான். இரவு நேரம் கிளம்புவதால் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கார் காரரிடம் வாடகைக்கு பேசி அழைத்து வந்து விட்டனர்.

குடும்பம் முழுவதும் உறக்கத்தில் இருக்க நர்மதா மட்டும் உறக்கமின்றி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

…….

அதிகாலை வேலை வழக்கம் போல் எழுந்து கிளம்பிய செழியன் ஏனோ இன்று வழக்கத்தை விட உற்சாகமாக உணர்ந்தான்.

வயலை நோக்கி சென்றான். வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது எதிரில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதில் நிமிர்ந்து கரையை பார்க்க பெண் ஒருத்தி பயந்த படி நின்று கொண்டிருந்தாள்.

நாய் விடாது குரைக்க அருகில் சென்றான். அப்பெண் உதவிக்கு ஆள் கிடைத்த சந்தோஷத்தில் அவன் புறம் ஓடினாள்.

அதுவும் விடாமல் அவள் பின்னே வர அவனை பிடித்துக் கொண்டு சுற்றி சுற்றி வந்தாள்.

செழியன் நாயை அங்கிருந்து துரத்தினான். அதுவும் சென்று விட நிம்மதியுற்றவள் அவனை விட்டு நகர முயற்ச்சிக்க கால் இடரி அருகில் வயலுக்கு பாய்ந்து கொண்டிருந்த நீர் நிறைந்த வாய்க்காலில் விழுந்தாள்.

விழப் போகும் பயத்தில் பிடிமானத்திற்காக செழியனின் துண்டை பிடித்து இழுக்க கழுத்தோடு போட்டிருந்த அவனது துண்டு அவனையும் சேர்த்து இழுத்து விட்டிருந்தது.

தொடரும்…