முன்பே காணாதது ஏனடா(டி) – 13

சுமி மைத்ரியின் அழுகைக்கான காரணம் கேட்கவும் இதுவரை நடந்த அனைத்தையும் ஒப்பித்தாள்.

முதல் முறையாக குமரனை சந்தித்தது மாரிமுத்து சுந்தரி தம்பதியினரின் பாசம் அவர்களின் வேண்டுகோள் அனைத்தையும் எடுத்துரைத்தாள். ஆனால் குமரனது பெயர் கூட அவளுக்கு தெரியாது என்பதை மறைத்துவிட்டாள்.

சுமி, “இவ்வளவு நடந்துருக்கு எங்கிட்ட எதுவுமே சொல்லல…”

“சுமி பிளீஸ் புருஞ்சுக்கோ. இப்போ கிடச்ச விஷயம் எல்லாமே எனக்கு புதுசு.  நான் அதுல மூழ்கி என்னையே மறந்துட்டேன்.  அதனால தான் இப்போ என்ன செய்றதுனு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன். “

“இப்போ என்ன சொல்றதுனு எனக்கு தெரியல மைத்ரி எந்த ஐடியாவும் வர மாட்டிங்குது.”

“எனக்கும் சுத்தமா என்ன பண்றதுனு தெரியல சுமி.  என்னால அவர மறக்கவும் முடியல அதே சமயம் ஆன்டி அன்கிள் பேச்ச மறுக்கவும் முடியல.

ஆரம்பத்துல அவங்க கூட்டுக்குள்ள நானும் இணைய மாட்டோமானு ரொம்ப ஏங்கினேன். ஆனா… இப்போ….”  என அதற்கு மேல் தன் நிலையை எவ்வாறு விளக்க என தெரியாமல் வார்த்தைகளை தேடி தொண்டை அடைத்தது.

“சரி நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு…”

“ம்….”

“ஒருவேளை நீ அவங்க பையன கல்யாணம் பண்றதுல சம்மதம் இல்லனு சொன்ன அவங்களோட பாசம் குறைய வாய்ப்பு இருக்கா…..”

“நிச்சயமா இல்ல சுமி ஆன்டி அன்கிள் அப்படிபட்டவங்க இல்ல…”

“சரி…  நீ உன்னோட காதல நீ காதலிக்குறவன் கிட்ட சொல்லிட்டையா…”

“இல்ல….. “

“இல்லையா…  அப்போ எப்ப சொல்லுவ…”

“தெரியல….”

“ஏய்…  எதுக்கு எடுத்தாலும் இல்ல தெரியலனா என்ன அர்த்தம்.

சரி அவரோட நம்பர் குடு. நான் பேசிக்கிறேன்”

“நம்பர் இல்லடி….”

“சரி பெயர் என்ன? எங்க இருக்காங்கனு சொல்லு. நான் மதுரைக்கு கிளம்பி வரேன்…”

“பெயர் தெரியாதுடி….. “

“என்ன….  மைத்ரி என்ன உலருற….  பேர் தெரியாத…”

“அவர் யார் என்ன ஏதுனு கூட தெரியாது… “

“முதல நீ எல்லாத்தையும் தெளிவா சொல்லு… “

இதற்கு மேல் மறைக்க முடியாது என்பதை உணர்ந்த மைத்ரி நடந்தவைகளை தெளிவாக உறைத்தாள்.

இவளது மறுமொழியை கேட்ட எதிரிபுறத்தில் பலத்த மௌனம்.

“சுமி…  சுமி…  எதாவது பேசு… “

“ஓகே.. மைத்ரி எல்லாத்தையும் விட்டுத்தள்ளு…  உன்னோட மனசுக்கு என்ன தோணுது…  அத கேளு. அதுதான் சரியான பதிலா இருக்கும்.”

“நான் யோசிக்கனும் சுமி…. “

“முதல ரிலாக்ஸா தூங்கி எந்திரி. அதுக்கு அப்புறம் பொறுமையா யோசி. நான் நாளைக்கு மதுரை  வரேன்.”

சரி என்று அழைப்பை துண்டித்தவள் உறங்குவதற்கு முயற்ச்சிக்க குமரனே கண் முன் தோன்ற உறங்க முடியாமல் தவித்தாள்.

படுக்கையில் இருந்து எழுந்தவள் அலமாரியை திறந்து தூக்க மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டு உறங்கி போனாள்.

அவளது வேலை சம்மந்தமாக அவளுக்கு அடிக்கடி தலைவலி வருவதால் சில நாட்களுக்கு முன்பு வரை தூங்குவதில் பிரச்சனை இருந்தது.  அதற்கு தீர்வாக மருத்துவரின் பரிசீலனையில் வாங்கி வைத்திருந்த மாத்திரை இப்பொழுது உதவியது.

……….

காசி மொழியின் திருமண தேதியை சொல்லிவிட்டு சென்றதில் இருந்து நிலையில்லாமல் தவித்தான் சுதாகரன்.

அதன் பிறகு அருள்மொழியை சந்திக்க முயற்ச்சித்தான்.  ஆனால் அடுத்தடுத்து வந்த வேலை பழுவின் காரணமாக அது முடியாமல் போயிற்று.

…….

குமரனும் நர்மதாவும் நாளைய நாளுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

நாளை என்ன உடை அணியலாம் என இருவரும் தங்களிடம் உள்ள நல்ல உடையை தேர்வு செய்து இரவே எடுத்து வைத்தனர்.

நாளை அணிய இருக்கும் உடையை கையில் வைத்துக் கொண்டு நாளை எப்படி பேசுவது என கண்ணாடி முன் நின்று யோசித்துக் கொண்டிருந்தான் குமரன்.

‘ஒருதடவ சொல்லி பார்ப்போமா…’ என்றவன் ஆழ மூச்சிழுத்துவிட்டு கண்ணாடியை பார்த்து “ஐ…  ல.. வ்.. யூ நர்மதா” என சொன்னவன் வெட்கப்பட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

அவன் உடைகளை கலைத்துப் போடும் போதே வந்துவிட்ட கார்த்தி அண்ணணின் வித்தியாசமான செயல்களை கவனிக்க ஆரம்பித்தான்.

அவன் காதலை தெரிவித்ததும் வாயை பிளந்தவன் “அண்ணா…’  என்று அதிர்ச்சியில் கத்திவிட அதிர்ந்து திரும்பிய குமரன் வேகமாக சென்று அவன் வாயை பொத்தினான்.

“டேய் கத்தாத…”  என்று கண்களை பெரிது படுத்தி மெதுவாக கூற சரி என்பதாக தமையன் தலை அசைத்ததும் கைகளை எடுத்துக் கொண்டான்.

பின் கதவை சாத்தியவன் தம்பி அவனை அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தினான்.

‘அண்ணா….  நீ…  லவ் பண்றியா…. “

ஆமாம் என தலையை அசைத்தவன் “டேய்  கார்த்தி இப்போதைக்கு யாருக்கும் சொல்ல வேண்டாம். நாளைக்கு நான் அந்த பொண்ணுக்கிட்ட பிரபோஸ் பண்ண போறேன்…  அவ பதில் என்னனு தெரிஞ்சுட்டு அதுக்கு அப்புறம் அப்பா….  அம்மா சுஜிகிட்ட சொல்லிக்கலாம்.”

“உன்ன யாரு அண்ணா புடிக்கலனு சொல்லுவங்க….  அம்மா…  அப்பா…  ரெண்டு பேரும் கண்டிப்பா ஒத்துப்பாங்க…  அவங்களுக்கு உன்னோட சந்தோஷம் தான் முக்கியம்.  ஆல் தி பெஸ்ட்….”  என்று கை கொடுக்க

அவனது கைகளை குழுக்கிய குமரன் ‘தாங்க்ஸ் டா… ” என்று உரைத்தான்.

“சரி அண்ணா ரொம்ப நேரம் முழிச்சுருக்காம நிம்மதியா தூங்கு அப்பதா நாளைக்கு நல்ல ஃபிரஸ்ஸா அழகா இருப்ப.”

அவன் கூற்றுக்கு இணங்கி தம்பி அவனை கட்டிக் கொண்டு உறங்கிவிட்டான்.

அவன் உறங்கியதும் விழித்து பார்த்த கார்த்தி அவனது முகத்தை கண்ணிமைக்காமல் பார்த்தான்.

“முதல் முறை உனக்காக ஒன்ன ஆசை பட்டுருக்க அண்ணா…  கண்டிப்பா அவங்களும் உன்ன காதலிப்பாங்க…. ” என்றவன் ‘கடவுளே எங்க அண்ணா ஆசைபடுற பொண்ணு அவன காதலிக்கனும்’ என்று வேண்டிக் கொண்டான்.

ஆனால் கடவுளோ

அண்ணன் விரும்பியவள் அவனை விரும்ப வேண்டும் என பிரார்த்தனை வைத்தாயே அவளே வாழ்க்கை துணையாக வேண்டும் என்று வேண்டவில்லையே பாலகா என்றார்.

……….

அலுவலகத்திற்கு தயாராகி அமர்ந்திருந்தாள் மைத்ரி.

எழுந்ததில் இருந்து இப்போது வரை நன்றாக யோசித்து பார்த்துவிட்டாள். தான் இப்பொழுது எடுத்து இருக்கும் முடிவே சரி என்று மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டவள் கபோடை திறந்து குமரனின் நினைவுகளை அடங்கிய டைரியை திறந்தவள் தன் முடிவை எழுதினாள்.

“சாரி அழகா…  எனக்கு வேற வழித் தெரியல…  நான் ஆசைபட்ட எதுவுமே எனக்கு கிடச்சது இல்ல. 

எம்மேல பாசங்காட்டவும் யாருமே இல்லையே எதுக்காக வாழுறோம்னு தெரியாம இருந்தேன்.

அந்த கவலை எல்லத்தையும் போக்க எனக்காக கடவுள் அனுப்பி வச்ச அன்கிள் ஆன்டிய கடைசி வர என்னோட வச்சுக்கனும் அப்டினு தோணுது…  நான் ரொம்ப செல்ஃபிஸ் இல்ல” என்று எழுதி முடித்தவள் கதறி அழுதாள். அதனால் ஏற்பட்ட கண்ணீர் துளி அந்த பக்கத்தை நனைத்தது.

………..

உற்சாகத்துடன் பணிக்கு புறப்பட்டாள் நர்மதா. அவளின் வாழ்க்கைக்கான திருப்பு முனை அன்று அவளுக்காக காத்திருந்தது.

அவளுக்கு மட்டும் அல்ல மாரி முதல் மகா வரை அனைவரது வாழ்விலும் திருப்பு முனைகளை தாங்கி இருந்தது அன்றைய நாள்.

தொடரும்…