மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 1
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
முன் யாம பொழுது சற்று நேரத்திற்கு முன்பு வரை இருந்த ஆர்பாட்டமும் குதுகழிப்பும் அடங்கி அவர்களுள் இருந்த சோர்வு மற்றும் நிம்மதியின் காரணமாக, நித்திராதேவி அனைவரையும் தன் அன்பு கரங்களால் அணைத்து கொண்டாள்.
அந்த பெரிய வீட்டின் ஒன்றிரண்டு அறைகளில் மட்டுமே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது.அதில் ஒரு அறையின் ஆளுயர கண்ணாடியின் முன் அமரவைக்கபட்டிருந்தாள் அவள்.
இளநீல நிற புடவை உடுத்தி நீண்ட கூந்தலை பின்னலிட்டு தலைநிறைய மல்லிகையை சூட்டினார் சுற்றி இருந்த பெண்கள். கயல்விழிகளுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக கண்மையை தீட்டி வானவில் புருவங்களுக்கு இடையில் கோபுர வடிவ பொட்டு வைத்து அதன் கீழ் சிறிதளவு குங்குமம் வைத்தனர். கைகள் முழுவதும் கண்ணாடி வளையல்களும் கழுத்தில் ஒற்றை சங்கிலியும் சிறிய ஜிமிக்கி வைத்த காதணியும் அணிந்து அழகு பதுமையென இருந்தாள் அவள் .
பயந்த விழிகளும் துடிதுடிக்கும் இதயத்துடனும் வேர்த்து நடுங்கும் உள்ளங்கைகளும் பூமியில் இருந்து நழுவி விழுவது போல் தோன்றும் கால்களும் என புதுப்பெண்ணிற்கு உரிய நாணத்துடனும் பயத்துடனும் தயாராகி கொண்டிருந்தாள் முதல் இரவிற்காக
அவளது தாயும் அத்தையும் திருஷ்டி கழித்து எல்லா பெண்களுக்கும் கூறப்படும் அதே அறிவுரைகளை வழங்கி அவனது அறைக்கு அனுப்பி வைத்தனர். நடுங்கும் கைகளுக்கு பற்றுக்கோளாக பால் சொம்பை கெட்டியாக பிடித்து கொண்டு அடிமேல் அடிவைத்து அந்த அறைக்குள் நுழைந்தாள் நம் நாயகி யாழ்நிலா.
அவ்வறை முழுவதும் பூக்களாலும், வாசனை திரவியத்தின் நறுமணத்தாலும் நிறைந்து இருந்தது. அறையின் நடுவில் இருந்த கட்டிலில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது .அதன் நடுநாயகமாக அமர்ந்திருந்தான் அவன் யுக்தயன்நம் நாயகன்.
நெடுநெடுவென உயரத்துடனும் கச்சிதமான உடற்கட்டுடனும் சிவந்த நிறத்துடனும் வான்லோக ராஜகுமாரனை போல் கம்பிரமாக அமர்ந்திருந்தான். அவன் கண்கள் கோவை பழம் போல் சிவந்து இருந்தது கை முஷ்டிகள் இறுகி போய் காணப்பட்டது பற்களை கடித்தபடி உள்ளங்கைகளை அழுந்த பற்றிய படி அமர்ந்திருந்தான் .
உள்ளே நுழைந்த அவளோ கதவை தாழ் போட்டு விட்டு அவன் அருகில் வந்தாள் அவன் அமர்ந்திருந்த நிலை அவளுக்கு அச்சமூட்டியது. எச்சில் விழுங்கி கொண்டாள். வெகு நேரமா அசையாமல் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள் .
அவளின் புறம் திரும்பி அவளை முறைத்த அவனோ “வந்து உக்காருனு தனியா சொல்லனுமா” .என்றான்.
பதறியடித்து கொண்டு அவன் அருகில் அமர்ந்தாள். அமர்ந்த வேகத்தில் கைகளில் வைத்திருந்த பால் செம்பின் மேல் வைக்கப்பட்டிருந்த தம்ளர் கீழ விழுந்து சிறிதளவு பால் துளிகள் அவன் மேல் சிந்தியது .
அத்துளிகளை பார்த்துவிட்டு அவளை நிமிர்ந்து அழுத்தமாக பார்த்தான்.
அதன் அர்த்தம் புரிந்தவள் செம்பை மேசையின் மீது வைத்துவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள். அடுத்து அவன் கேட்ட கேள்வியில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.
“எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா” அதிர்ச்சியில் இருந்தவள் இதயம் பல மடங்காக எகிறி குதித்தது.
“புதுசா உனக்கு “அவ்வளவுதான் கண்ணில் இருந்து கண்ணீர் கன்னங்களை நனைத்தது.
“ஏய் இப்போ என்ன கேட்டேன்னு இப்படி அழுது சீன் போடுற”
அடுத்து அவன் கேட்ட கேள்வியில் அவனை பைத்தியமா என்பது போல் பார்த்தாள்
“ஆமா உன் பெயர் என்ன?”
“உன்கிட்டேதான் கேக்குறேன் காதுல விழுதா இல்ல செவிடா”
“யா….ழ்….நிலா“
“ம் என்னோட பெயர் தெரியுமா?”
தெரியும்.
பதில் கூறியவளையே கூர்ந்து பார்த்து கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்து மெல்லிய குரலில்
“யுக்தயன்” என்றாள் .
“பரவா இல்ல பேரையாவது சொன்னையே எங்க இதுக்கும் ஒப்பாரி வைப்பையோனு நினைச்சேன் என் தலையெழுத்தை பாத்தியா உன்னெலாம் கட்டிக்கணும்னு எழுதி இருக்கு.”
“யாராவது first night இப்படி வருவாங்களாடி கொஞ்சம் கூட பேஷன் சென்ஸ் இல்ல உனக்கு உன்னெல்லாம் ……”
அவளுக்கோ அவன் பேச பேச அழுகையாக வந்தது.
“இதோ பாரு இது என்ன பொறுத்தவரைக்கும் ஒரு அக்ரிமெண்ட் தான் சரியா”
அவளோ அவன் கூறிய வார்த்தையில் பேந்த பேந்த முழித்தாள்.
“என்ன மேடம் முழிக்குறிங்க மறதியா ?”
“நியாபகம் இருக்குல்ல நாம போட்ட ஒப்பந்தம் வெறும் ரெண்டு வருசம்தா நம்ம கல்யாண வாழ்க்கை எல்லா அது வரைக்கும் என்னோட விஷயத்துல நீ தலையிட கூடாது அதுபோல உன்னோட விஷயத்துல நானு தலையிட மாட்டேன் “.
“என்ன முகத்துல நிம்மதி தெரியுது” என்று கூறி அவளை இழுத்து தன் அருகில் போட்டுக்கொண்டு அவள் மேல் படர்ந்தான் .
மருட்சியோடு பார்த்து கொண்டிருந்தவளின் கன்னத்தில் இருந்து கழுத்து வரை தன் விரல்களால் கோடு இழுத்தான். நாம போட்ட ஒப்பந்தப்படி என்னோட தேவையா நீ தீர்த்து வை உன்னட தேவையை நான் தீர்த்து வைக்கிறேன் உனக்கு என்ன வேணும்னாலும் நீ என்கிட்ட தாராளமா கேக்கலாம் பணம் , நகை, துணி,இந்த மாதிரி எது கேட்டாலும் வாங்கித்தரேன் .அதே மாதிரி எனக்கு எப்பலா வேணுமோ அப்போலா உன்ன எனக்கு தரணும்.
அவன் கூறிய இந்த வரிகளில் அவள் வெடித்து அழுக ஆரம்பித்து விட்டாள் . அவள் அழுகவும் அவள் மீதிருந்து எழுந்த யுகி “என்னடி நாடகம் ஆடுற அன்னைக்கு பத்திரத்தில சைன் பண்ணும் போது எதுவும் சொல்லல இப்போ என்ன ?”
“இப்படி அழுது எஸ்கேப் ஆகிடலாம்னு நினைப்பு ? உன்ன நா ரொம்ப நல்லவன்னு நம்பிருவேன்னு பாக்குறியா ? அது எப்பவும் நடக்காது எல்லாரையும் நல்லவா மாதிரி ஏமாத்துறல அது மாதிரி என்னையும் ஏமாத்த முடியாது ” என்று கூறிவிட்டு திரும்பி அருகில் இருந்த லைட்டை அணைத்து விட்டு படுத்துவிட்டான்.
விவரம் தெரிந்த நாளில் இருந்து தனது திருமண வாழ்க்கை பற்றி பல கனவுகளோடு இருந்த நிலாவிற்கு தன் வாழ்வில் நடந்த விஷயங்களை ஜீரணிக்க முடியவில்லை. தான் அவன் கண்களுக்கு கெட்டவளாக உருவக படுத்த பட்டிருக்கிறோம் என்ற உண்மை அவளை பெரிதும் பாதித்தது அவன் நினைப்பது போல் தான் இல்லை என்பதை கூறுவதற்கு கூட அவளுக்கு பலன் இல்லை .
காலையில் இருந்து நின்று கொண்டே இருந்தது கால்களில் வலியை ஏற்படுத்தி இருக்க கண்களோ தனக்கான ஓய்வை வேண்டியது. உறங்குவதற்கா தலையணை எடுக்க முயற்சித்தவளின் விரல்கள் அவனது தோள்களை உரசிட வெடுக்கென்று திரும்பினான் அவன் திரும்பிய வேகத்தில் தள்ளாடியவளோ அவன் மீதே விழுந்தாள்.
“இன்னொரு முக்கியமான விஷயம் என்னோட அனுமதி இல்லாம என்ன தொடக்கூடாது ,என் சம்மந்தப்பட்ட பொருளையும் தொடக்கூடாது. புரிஞ்சதா ?”என்று கூறி பட்டென்று அவளது இதழில் இதழ் பதித்துவிட்டு திரும்பி படுத்துவிட்டான் .
தன்னுடைய விருப்பம் பற்றி யோசித்த அவன் அவளின் விருப்பம் பற்றி யோசிக்க மறந்துவிட்டான் .
மறந்து விட்டான் என்று சொல்லவதை விட மறுத்துவிட்டான் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் .
யுக்தயன் கொஞ்சம் முரடன் என்றும் தன்னிடம் ஏதாவது ஏடாகூடமாக நடந்து கொள்வான் என்பதை எதிர்நோக்கினாள் யாழ்நிலா . இருந்தாலும் அவன் தன் உணர்வுகளை மதிப்பான் என்று நம்பினாள் . ஆனால் இவ்வளவு மோசமானவனாக இருப்பான் என்றுஅவள் துளியும் நினைக்கவில்லை .
அவளது நினைவுகளோ சில நாட்களுக்கு முன்பு யுக்தயன் தன்னை சந்திக்க விரும்புவதாக கூறிய நாளை நோக்கி சென்றது .
தொடரும் ……