மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 10

ஏரியின் மறு கரையை அடைந்தவர்கள் படகில் இருந்து கீழிறங்கினர். தூக்கம் கலைந்த நிலா ஏரி நீரால் தன் முகத்தை கழுவி சுத்தப்படுத்தி கொண்டு யுகியின் அருகில் வந்து நின்றாள்.

படகோட்டி அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு மீண்டும் மறு கரையை நோக்கி புறப்பட்டான்.  இக்கரையின் ஓரத்திலும் படகுகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

சின்னரசு, “சரி தம்பி செத்த நேரம் அந்த பாறையில உக்காருங்க “

தன்னுடைய உடமைகளில் இருந்து ஒரு பாட்டிலை கையில் எடுத்தார்.  அதனுள் இருந்த திரவத்தை இருவர் கைகளிலும் கொடுத்து கால்களில் தடவ கூறினார்.

இருவரும் அவர் கூறியதுபோல் செய்தனர். அவரும் சிறிது எடுத்து தன் காலில் தடவியபடி “அடுத்து நாம போகப்போற பாதையில நிறைய அட்டப்பூச்சிகள் இருக்கும்.  இந்த திரவம் தடவுனா அது நம்ம காலுல ஏறாம இருக்கும்பா”

யுகி, “சரிங்க ஐயா..”

திரவத்தை தங்களுடைய கால்களிலும் காலணிகளிலும் பூசிக்கொண்டனர்.

பின் மீண்டும் காட்டுக்குள் பயணத்தை தொடர்ந்தனர்.

யுகியின் சட்டையில் பொருத்தப்பட்டிருந்த கேமாரா அனைத்தையும் பதிவு செய்தது.  மேலும் தன் கைகளில் உள்ள கேமராவின் மூலம் சுற்றி இருந்த மரம் செடி கொடிகளோடு சில அறிய வகை பறவைகளையும் பதிவு செய்து கொண்டான்.

நடந்து சென்ற பாதையில் ஒரு நதி ஓடிக்கொண்டிருக்க அதன் அருகில் சென்றனர்.

சின்னரசு, “தம்பி இருங்கப்பா இப்போ வந்துடுறேன். “

யுகி, “ம்…  சரிங்க “

நிலா, “மாமா…  இந்த தண்ணிய குடிச்சு பாருங்களே ரொம்ப டேஸ்ட்டா இருக்கு “

யுகி, “ம் சுத்தமான தண்ணில அத கண்டிப்பா இங்க பக்கத்துல எதாவது அருவி இருக்கனும் அங்க இருந்துதா இந்த நதி உற்பத்தி ஆகி இருக்கனும் “

நிலா, “எப்படி சொல்றீங்க “

யுகி, “ஒரு யூகம் தா……
இப்போ ஏன்டி மொறைக்குற “

நிலா, “பின்ன எதோ புத்திசாலித்தனமா சொல்ல போறீங்கனு பார்த்த யூகம்னு சொல்றீங்க “

யுகி, “எல்லாருக்கும் எல்லாம் தெரியாது பொண்டாட்டி…. நானு சாதாரண மனுசன் தா”

‘ஆனா எனக்கு நீங்க ஹூரோ தான்’என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

யுகி, “என்னடி சொல்ற சத்தமா சொல்லு “

நிலா, “அ.. து..  இயற்கை…. இயற்கை அழைக்குது “

யுகி, “ஓ… சரி துணைக்கு வரவா “

என்ன என்று முறைத்தவள் “அவசியம் இல்ல ” என்று கூறி சற்று தூரம் தள்ளி சென்றாள். 

யுகி, “ரொம்ப தூரம் போய்டாதடி “

நிலா, “ஆ…  சரி.. சரி.. “

அவள் அப்படி சென்றதும் இப்படியாக சின்னரசும் வந்துவிட்டார்

சின்னரசு, “பாப்பா எங்க தம்பி “

யுகி, “பாத்ரூம் வருதுனு போனா ஐயா “

சின்னரசு, “ரொம்ப தூரம் போயிடலேயே பா”

யுகி, “இல்ல ஐயா பக்கத்துல தா வந்துருவா “

…..

நிலாவோ கண்கள் கலங்கி முகம் வேர்வையில் நனைந்து பயத்தில் நடுங்கி கொண்டு நின்றிருந்தாள்.

அவளின் எதிரே கரிய நிறத்தில் பழுப்பு நிற கண்களோடு வாயில் இருந்து சற்று முன்பு வேட்டையாடிய ஏதோ ஒரு மிருகத்தின் இரத்தம் வழிந்தோட சிறிய உருமளோடு அவளை பார்த்து கொண்டிருந்தது கரும்புலி ஒன்று.

அது அவளை சுற்றி வட்டமிட்டது அசையாமல் அதே இடத்திலே நின்றிருந்தாள்.

இன்று தன் இறப்பு உறுதி என்ற எண்ணத்திற்குள் சென்றுவிட்டாள்.  அவள் கண் முன்பு வந்ததெல்லாம் அவளது மனாளனின் முகமே ‘மாமா. நா உங்கள ரொம்ப காதலிக்குறேன் மாமா அத கடைசி வர உங்க கிட்ட சொல்ல முடியாம போக போதே மாமா’ என்று கண்ணீர்வடித்து கொண்டிருக்க கரும்புலி ஒரு உறுமலுடன் அவள் மேல் பாய்ந்தது.

பாயத்தில்’ ஆ….  ‘என்று அலறினாள் சத்தமாக

அவளது மரண ஓலம் காட்டின் அனைத்து திசைகளிலும் எதிரொலித்தது.

யுகியின் செவியில் நுழைந்த தன்னவள் மரண ஓலம் அவனை சிலையாக நிற்க செய்தது.  அதுவும் ஒரு நிமிடம் தான் மறுநிமிடம் இதயம் படுவேகமாக துடித்தது.

அவள் சென்ற திசையை நோக்கி ஓடினான்

கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட நாலாபுறமும் கத்தி அழைத்தான் தன்னவளை

“யாழு… யாழு.. “

“யாழு..
எங்க இருக்க என்னாச்சுடி ….  யாழு… “

அனைத்து திசைகளிலும் அழைந்தான். அவள் கிடைத்தபாடில்லை.

“யாழு…  பிளீஸ் வந்துரு யாழு….  ஏய்.. பயமா இருக்குடி…  எங்கிட்ட வந்துருடி..  பிளீஸ்.. “

“யாழு…  உனக்கு ஒன்னும் இல்லைல…  யாழு… ” என்று கத்திக் கொண்டிருக்க கரும்புலியின் உறுமல் சத்தம் கேட்டது.  அவன் பின்னோடு வந்த சின்னரசு தம்பி அது கரும்புலியோட சத்தம்.

அவனுக்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது.  தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்தான்.  ‘யாழுக்கு எதுவும் இல்ல அவ எங்கிட்ட வந்துருவா’ என்று ஜெபம் போல் சொல்லிக் கொண்டே சத்தம் வந்த திசையை நோக்கி பைத்தியம் போல் ஓடினான்.  சின்னரசும் அவன் பின்னோடு ஓடினார்.

…….

கரும்புலி தன் மேலே பாயவும் பயத்தில் ‘ஆ’ வென அலறி இரு கைகளால் பெருக்கல் குறி போல் தன் முகத்தை மறைத்து பின்னோக்கி வளைந்தாள்.

அவளை நோக்கி பாய்ந்த கரும்புலியின் பக்கவாட்டில் இருந்து ஒரு உருவம் அதன் மேல் பாய்ந்து அவளின் பக்கவாட்டில் சரித்தது.

கண்களை திறந்து பார்த்தவள் தன் முன் நடந்த காட்சியில் மயங்கி சரிந்தாள்.

கரும்புலிக்கும் அந்த உருவத்திற்கும் இடையே கடும் போட்டி நடந்து கொண்டிருந்தது யார் பலசாலி என்று. 

திணவேறிய தோள்களும் பரந்த மார்பும் முறுக்கேறிய உடற்கட்டும் சிவந்த கண்களும் என கரும்புலிக்கு போட்டியான பலத்துடன் அதனிடம் சண்டை இட்டு கொண்டிருந்தான் அக்காட்டின் முடிசூட அரசன் ருத்ரன்.

கரும்புலியின் கூரிய நகங்கள் அவன் மார்பை குத்தி கிழித்தது.  அவனது குறல் வளையை கடிக்க முயற்ச்சித்தது. அதனை பார்த்து தான் நிலா மயங்கியது.

கரும்புலியுடன் போராடிய ருத்ரன் அதனை மூர்ச்சையாக்க முயற்ச்சித்து கொண்டிருந்தான்.  காட்டின் ராஜா அவனுக்கு அதனை ஒன்றும் இல்லாமல் ஆக்குவது பெரிய காரியம் இல்லை தான். ஆனால் அவனால் அதன் உயிரை எடுப்பது முடியாத காரியம். கரும்புலிகள் அழிந்துவிட்டதாக கருதப்படும் நிலையில் எங்கிருந்தோ வழிதவறி வந்த அதனை கொல்ல மனது வரவில்லை.

அவன் ஒரு வேட்டைகாரன் தான் இருப்பினும் அவர்கள் உள்ளும் ஈரம் இருக்கத்தானே செய்யும்.  தேவைக்காக மட்டுமே வேட்டையாடுபவன் அவன்.  வேட்டையாடுதலையே பிரதானமாக கொண்டவன் அல்ல.

அவ்வழியாக சென்று கொண்டிருந்தவன்
முதலில் அதனை கண்டவுடன் மகிழ்ச்சியே அடைந்தான்.  அதனை தூரத்தில் இருந்தே பார்த்து கொண்டிருந்தவன் அதன் பார்வையும் உடல் மாற்றத்தையும் கூர்ந்து கவனித்தவன் அதன் எதிரில் பயத்துடன் நின்று கொண்டிருந்த நிலாவை கண்டு நிலமையின் தீவிரத்தை அறிந்தான்.

துரிதமாக அவ்விடத்தை அடைந்தவன் அவளை தாக்க முற்படும் வேளையில் விரைந்து செயல்பட்டு அதனை மடக்கிபிடித்தான்.

ஒருவழியாக அதனை மூர்ச்சையாக்க செய்து அதனிடம் இருந்து விலகி நிலாவின் அருகில் வந்தான்.

மயங்கி இருந்தவளை தன் கைகளில் தூக்கி கொண்டான்.

…….

கரும்புலியின் சத்தத்தில் அவ்விடத்தை அடைந்த யுகி கண்டது தரையில் மயங்கி கிடந்த கரும்புலியை தான்.

அதனை சுற்றிலும் பார்வையை சுழற்றினான்.  அவன் பார்வை வட்டத்திற்குள் விழுந்தான் நிலாவை தாங்கி கொண்டுவந்த ருத்ரன்.

அவளை கண்டதும் தான் அவனுக்கு உயிரே வந்தது. அந்நிலையிலும் ருத்ரன் அவளை மாரோடு அணைத்து தூக்கி இருந்ததை பார்த்தவன் எரிச்சல் உற்றான்.  அந்த எரிச்சலுக்கு காரணம் அவன் நிலாவின் மீது கொண்ட காதலே.

இந்த சில நிமிடங்களில் உணர்ந்து கொண்டான் அவனது காதலை.  அவள் இன்றி தன்னால் இருக்க முடியாது அவளுக்கு ஏதேனும் என்றால் தன்னால் தாங்கி கொள்ள இயலாது என்பதை புரிந்து கொண்டான். ‘அவளுக்கு எதுவும் ஆக கூடாது ‘என்று ஜெபம் போல் சொல்லிக் கொண்டவன் ‘அவளுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் அதனை தனக்கே கொடுக்குமாறும்’ வேண்டி கொண்டான்.

அவள் அருகில் ஓடியவன் ருத்ரனின் கையில் இருந்து நிலாவை வாங்கியவன் அவளை தன் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டான்.

யுகியின் கையில் நிலாவை கொடுக்கும் போதே ‘பிரச்சனை இல்லை பயத்தில் ஏற்பட்ட மயக்கமே’ என்று உரைத்துவிட்டான் ருத்ரன்.

தன் கையணப்பில் இருந்தவளின் முகம் முழுவதும் முத்தத்தால் நிறைத்தான்.  பின் ஓரளவு உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் ருத்ரனை பார்த்து மனதார  நன்றி கூறினான்.

நன்றிக்கு பதிலாக ஒரு சிரிப்பை பதில் அளித்தான் எதிரில் இருந்தவன்.  அவனது புன்னகையுடன் கூடிய வதனம் ஒரு நிமிடம் யுகியையும் கவர்ந்தது உண்மையே.

ஆம் அழகனே அவன். கரிய நிறமாக இருந்தாலும் அவன் முகத்தில் எப்பொழுதும் ஒரு பொலிவு காணப்படும். தன் இன மக்களின் செல்ல பிள்ளை அவன்.  அவனது பலம் பலவீனம் அனைத்தும் அவன் மக்களே.

தொடரும்….