மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 8

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

காப்பகத்தில் நுழைந்தனர் இருவரும் அங்குள்ள அதிகாரிகளிடம் தன் மனைவியை அறிமுகப்படுத்தினான் யுக்தயன்.

நேற்று இவ்வூருக்கு வந்ததும் அதிகாரிகளை சந்தித்து பேசிவிட்டான். மேலும் படம் பிடிப்பதற்கான அனுமதியும் ஏற்கனவே போனில் பேசும் போது ஒப்புக்கொண்டுவிட்டனர்.  அதன்பிறகே அவர்கள் ஊரில் இருந்து கிளம்பியது.

அவர்கள் இருவரும் உடன் ஒரு கைடையும் ஏற்றிக் கொண்டு வனப்பகுதியை நோக்கி புறப்பட்டது அந்த ஜீப்.

(பின் வருவன அனைத்தும் என் கற்பனையே)
யுக்தயன் தன்னுடைய கேமராவை ஆன் செய்து கையில் வைத்துக் கொண்டான் மேலும் ஒரு கேமராவை ஜீப்பின் கை பிடியில் வெளியில் பார்ப்பது போல் பொருத்தினான்.

வனப்பகுதியில் பாதை கரடுமுரடாக இருப்பதால் சரியாக பதிவு செய்ய இயலவில்லை. சிறிது தூர இடைவெளியில் ஜீப்பை ஆங்காங்கே நிறுத்த சொல்லி பதிவு செய்து கொண்டான்.

அவர்களது ஜீப் சென்று கொண்டிருக்கையில் வழியில் ஒரு அழகான புள்ளிமான் கூட்டம் இருந்தது. சத்தம் இட கூடாது அமைதியாக பாருங்கள் என்றார் உடன் வந்த கைட்.

புள்ளிமானை பார்த்த நிலா அதன் அழகில் சொக்கி போய் கண்களை அகல விரித்து ரசித்தாள்.

புள்ளிமானின் அழகை விட தன் மனைவியின் அபிநயம் காட்டும் வதனம் கொள்ளை அழகாக தெரிந்தது யுக்தயனுக்கு.  அவளையும் தன் கேமராவில் படம் பிடித்துக் கொண்டான்.
நிறுத்தி இருந்த ஜீப்பில் பொருத்தபட்டிருந்த கேமரா சரியான  ஃபோக்கஸில் மானை படம் பிடித்துக் கொண்டிருந்தது. 

இவனோ மனைவியின் முகத்தை படம் பிடித்துக் கொண்டிருந்தான்.  அழகு முகத்தில் திடீரென மாற்றம் நொடியில் கண்கள் பயத்தை தத்தெடுத்திருந்தது அவளது முக மாற்றத்தை தொடர்ந்து புள்ளிமானின் மரண ஓலம் கேட்டது.

மான் இருந்த திசையை திரும்பி பார்த்தவன் பிரம்மித்துவிட்டான். ஒரு பெரிய புலி அம்மானை வேட்டையாட முயன்று கொண்டிருந்தது. ஆனால் அம்மான் அப்புலியின் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டது.

இப்பொழுது அந்த புலியின் பார்வை இவர்களது ஜீப்பின் புறம் திரும்பியது. 

ஏற்கனவே கைட் சத்தமிட கூடாது என்று கூறியதால் நிலா தன் கைகள் இரண்டையும் வாயில் மேல் வைத்து அமைதி காத்திருந்தாள்.  அவள் கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

பொதுவாக புலிகள் உணவு சங்கிலியின் உச்சியில் இருப்பவை.  அவை விலங்குகளுக்கோ மற்றவைளுக்கோ பயப்படுவதில்லை.

ஆனால் அறிமுகம் இல்லாதவைகள்,  நெருப்பு, ஆபத்தான வேட்டையாடுபவர்கள் இவற்றிற்கு பயப்படும்.

அறிமுகம் இல்லாதவைகள் என்றால் அதற்கு தெரியாத ஒலிகள் உதாரணமாக துப்பாக்கி சத்தம் இது போன்றவைகளுக்கு பயம் கொல்லும்.

வேட்டையில் தோல்வியடைந்த அந்த புலி ஜீப்பை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. அதற்கு ஜீப் மற்றும் மனிதர்கள் அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் பழக்கமாகிவிட்டது.

இரும்பு கூண்டால் மறைக்கப்பட்டிருந்த ஜீப்பை சுற்றி வலம் வந்தது.  பிறகு ஜீப்பின் இரும்பு கம்பியின் மேல் கால்களை பதித்து நிமிர்ந்து நின்றது.

பயத்தில் வெளுத்து போனது நிலாவின் முகம். யுக்தயனின் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் கைகளை இறுக பற்றி கொண்டாள்.

புலியை வெகுசிரத்தையாக படம் பிடித்துக் கொண்டிருந்தவனோ அவளது செயலில் எரிச்சல் உற்று “யாழு…  புலி வெளியதா இருக்கு இரும்பு கூண்ட தாண்டி உள்ள வரமுடியாது பயப்படாத” என்றான் சிறு குரலில் அழுத்தமாக.

அவனது குரலில் சற்று தெளிந்தவள் சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள். நிஜத்தில் அப்புலி அவர்களை தாக்கவில்லை ஜுப்பை சுற்றி சுற்றி பார்த்தது.

என்ன நினைத்ததோ நிலாவின் புறம் வந்த புலி தனது நகங்களால் ஜுப்பை பிராண்டியது. அதன் நகங்கள் அவளுக்கு வெகு அருகாமையில் வந்து சென்றது.

யுக்தயன் விரைவாக செயல்பட்டு யாழ்நிலாவை தன் அனைப்பிற்குள் கொண்டு வந்தான்.  அம்முயற்ச்சியில் புலியின் நகம் அவன் கைகளில் கீறிவிட்டது. பல்லை கடித்து பொறுத்து கொண்டான்.

தன்னிடம் உள்ள லைட்டரின் மூலம் அருகிலிருந்த துணியில் நெருப்பை பற்ற வைக்கலாம் என்ற எண்ணம் முட்டாள் தனமாக தோன்றியது யுக்தயனுக்கு. தாங்கள் இருக்கும் இடத்தில் பற்ற வைத்தால் ஒன்று ஜுப்பில் பரவி வெடித்துவிடும் வெளியே தூக்கி எறிந்தால் ஏதேனும் செடி கொடிகளில் பட்டு காட்டுத் தீ பரவக்கூடிய அபாயம் உள்ளதை யுகித்தான்.

யுக்தயனுக்கு முன் பின் இச்சூழ்நிலையை கையாண்டு பழக்கம் இல்லாததால் வெகுவாக குழம்பி போனான்.

காப்பக விலங்குகளை அச்சுறுத்தல் கூடாது என்பதால் இதுவரை அமைதி காத்த கைட் இதற்கு மேல் பொருமை காத்தால் நிலைமையை சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து தன்னிடம் இருந்த தூப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார்.

அச்சத்தத்திற்கு பயந்த புலி ஜுப்பை விட்டு அகன்று காட்டுக்குள் ஓடி மறைந்தது.  துப்பாக்கியின் சத்தத்தில் பறவைகள் எகிறி பறக்க காப்பக அதிகாரிகள் கைட் உடன் வாக்கிடாக்கி மூலம் தொடர்பு கொண்டு திரும்பி வருமாறு கூறினார்கள்.

ஜுப்பை திருப்பி மீண்டும் வந்த வழியே சென்றனர்.  யுக்தயன் வலியில் அலறினான் . நிலாவின் கைகள் நடுக்கமுற்று கண்களில் இருந்து கண்ணீர் வலிந்து கொண்டே இருந்தது.

தன்னை காப்பதற்கு முனைந்தவனுக்கு அடிபட்டுவிட்டதே என்று கவலை கொண்டாள்.

……..

யுக்தயனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மயக்க ஊசியின் உதவியால் உறங்கி கொண்டிருந்தான். 

நிலாதான் மயக்க ஊசி செலுத்த கூறியது.  அவன் வலியில் முகம் சுனங்குவதை அவளால் பார்க்க முடியவில்லை.

உறங்கி கொண்டிருப்பவனின் அருகில் அமர்ந்து அவனது முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.  பின் அவனது அடிபடாத கையின் புறம் படுத்துகொண்டு அவன் நெஞ்சில் தலை சாய்த்து அவனை இறுக கட்டிக்கொண்டாள்.

சில மணி நேரங்களுக்கு பிறகு கண் விழித்தவன் கண்டது தன்னை கட்டிக்கொண்டு உறங்கும் தன் மனைவியை தான். 

இளநகை ஒன்று தோன்றியது அவன் முகத்தில்.  அவளோ நன்கு உறங்கி போயிருந்தாள் இவ்வளவு நேரம் அழுத கலைப்பில்.

யுக்தயனும் குனிந்து அவளது உச்சியில் முத்தமிட்டு மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான்.

…….

மாலையில் தான் கண் விழித்தனர் இருவரும்.  காப்பக அதிகாரிகள் வந்து நலம் விசாரித்து சென்றனர்.

நிலா வெளியே அடுக்கி வைத்திருந்த அவர்களது பொருட்களை எல்லாம் மீண்டும் பேக்கில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

அதனை கவனித்தவனோ

“என்ன பண்ற… “

நிலா, “நாம கிளம்புறோம்… “

“எங்க “என்றான் ஏதோ புரிந்தது போல் கடுமையாக

அவன் புறம் திரும்பியவளோ அவனை பார்த்து “நீங்க நினைக்கிற மாதிரி தான் ….ஊருக்கு புறப்பட”

யுகி, “பைத்தியமா நீ.. “

நிலா “ஆமா..  பைத்தியம் தா உங்களுக்கு அடிபட்ட உங்கள விட அதிகமா துடிக்குதுல இங்க “என்று தன் நெஞ்சை தொட்டு காட்டியவள் “நா பைத்தியம் தா” என்றாள்.

அவளது கூற்றை கேட்டவன் இறக்கையின்றி பறந்தான் வானில்
தன்னை சமன்படுத்தி கொண்டு

“யாழு…  இதெல்லாம் சகஜம் இப்படி நடந்ததுகாக எல்லாரும் இந்த இடத்தவிட்டு போகனுமா..  இல்ல இதனால இங்க சுற்றுலா பயணிகள் யாரும் வராம இருங்காங்கலா..”

தூரமாக நின்றவளை கை நீட்டி அருகில் அழைத்தான்.  அருகில் வந்தவளை இழுத்து நெஞ்சில் போட்டுக் கொண்டவனோ

முதல் நாளே தன் டாக்குமண்ட்ரி உபயோகமான ஃபுட்டேஜ் கிடைத்ததை பற்றி எடுத்து சொன்னான்.

அவளோ சமாதானம் ஆனது போல் இல்லை.

“இங்க பாரு யாழு… அது ஒரு விலங்கு அதோட சுபாவமே அதுதா  என்ன பொருத்தவரைக்கும் மனுசங்கள விட அது ஆபத்து குறைவான உயிரினம் தா. “

இப்படி இன்னும் ஏதேதோ பேசி ஒருவழியாக அவளை சம்மதிக்க வைத்து விட்டான்.

அவனது நெஞ்சில் சாய்ந்திருந்தவளை வம்பு இழுக்கும் விதமாக  அவளிடம்

“யாழு …. ஆனா நீ அக்ரிமண்ட் பொண்டாட்டினு நிருபிச்சுட்ட பாத்தியா “

அதிர்ந்து அவனை பார்த்தவளிடம் “உண்மையான காதல் பொண்டாட்டினா என்னோட லட்சியத்துக்கு துணை இருந்து இருப்பா இப்படி தடை சொல்லி இருக்கமாட்டா” என்றான்.

‘என்ன..  அக்ரிமண்ட் பொண்டாட்டியா அவனுக்காக துடிக்கிறேனே என் காதல் புரியவில்லையா’ என்று மனதுள் கதறினாள். அவனது வார்த்தை அவளை வதைத்தது.

அவளது மனமே அவளிடம் கேட்டது அவன் மீது காதாலா என்று..  ஆம் என்றாள் அதனிடம்.

தொடரும்..