மீட்டாத வீணை தருகின்ற ராகம் / 7

இனிய சண்டைகளுடன் உறங்கிபோனார்கள் நால்வரும்.  நடு இரவில் உறக்கம் கலைந்து எழுந்த நிலா ஏதோ உந்துததலில் எக்கி மறுபுறம் படுத்திருந்த கணவனை பார்த்தாள்.  தந்தை மகன் இருவரும் கட்டிபிடித்து தூங்கி இருந்தனர்.

தூக்கத்தில் இந்திரன் புரண்டு படுக்க லேசாக தூக்கம் கலைந்து சிணுங்கினான் யுக்தயன்.

தூங்குவதற்கு முன் கண்மணியின் அருகில் தூங்குவதற்கு சண்டையிட்ட இருவரும் இப்பொழுது யாருக்காக சண்டை இட்டரோ அவர்களைவிடுத்து இருவரும் கட்டி அணைத்து தூங்குவதை பார்க்க சிரிப்பாக இருந்தது.

நிலா, “இவரா புரிஞ்சுக்குறது ரொம்ப கஷ்டம் போலயே “

மறுநாள் காலை

புறப்படுவதற்கு தயாராகி வெளியே வந்த நிலா பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருந்த யுக்தயனை பார்த்து ஸ்டக் ஆகி நின்றுவிட்டாள்.

“அய்யோ நிலா உம் புருசன் இன்னைக்கு இவ்வளவு அழகா இருக்காரே அப்பட்டமா சைட் அடிச்சு அசிங்கபட்டுடாத கன்ட்ரோல் கன்ட்ரோல் ” என்று தன்னக்குள்ளே பேசிக் கொண்டாள்.

யுகி, “என்ன மகாராணி அப்படியே நின்னுட்டீங்க தூக்கி வந்து உக்கார வைக்கனுமோ”

அவனை முறைத்து பார்த்து கொண்டே அருகில் சென்றாள்.

அவள் பின்னே அவளது பெற்றோரும் மாமனார் மாமியாரும் வந்தனர்.

இன்று இருவரும் புறப்படுவதால் காலையிலேயே நிலாவின் பெற்றோர் வழி அனுப்புவதற்காக வந்துவிட்டனர்.

கண்மணி, “டேய் யுகி பண்டிகை சமயத்துல வர முடியுமானு பாருடா கல்யாணம் முடிஞ்சு வர பண்டிகை நிறைய சம்பிரதாயம் இருக்கு. “

தன் தாயை ஒரு பார்வை பார்த்தவன் “செரிமா முயற்சி பண்றேன்”.

பின் இருவரும் அவர்களிடம் விடைபெற்றனர்.

பைக்கில் ஒருபுறம் காலை தொங்கப்போட்டு அமர்ந்துவந்தாள்.

மேடு பள்ளங்களில் அவன் வேகமாக செல்ல இவள் கீழே விழுந்து விடுவேனோ என்று அச்சம் உற்றாள்.

நிலா, “என்னங்க வண்டிய நிறுத்துங்க “

யுகி, “எதுக்கு “

நிலா, “நிறுத்துங்க சொல்றேன்”

யுகி, “நிறுத்திட்டேன் என்ன “

கிழே இறங்கியவள் காலை இருபுறமும் போட்டு அமர்ந்து கொண்டு போகலாம் என்றாள்.

அவனும் அவளை திரும்பி பார்த்துவிட்டு வண்டியை எடுத்தான்.

“டேய் யுகி உன்னோட பிளான் ஒர்க் அவுட் ஆகிருச்சு டா அவளாவே டபுள் சைட் போட்டு உக்கார வச்சுட்ட நீ கிரேட் டா”என்று தன்னைத் தானே மனதில் புகழ்ந்து கொண்டான்.

மேலும் அரைமணி நேர பயணத்திற்கு பிறகு மீண்டும்

நிலா, “என்னங்க” என்றாள்

மறுபடியும் சிங்கிள் சைட் உட்கார போறாளோ என்று பயந்தில் “இப்போ என்ன” என்று சற்று கடின குரலில் கேட்டான்.

அதில் மிரண்டவள்” இல்ல ஒன்னும் இல்ல “என்றாள்.

இவனும் எதுவும் சொல்லாமல் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தவன்.
அவள் தன்னிடம் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக இருப்பதை சைட் மிரரில் கவனித்தவன்.பைக் ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான்.

யுகி, “காலைல 8 மணிக்கு சாப்பிட்டது இப்போ 12.30 ஆச்சு சாப்பிடலாம்.”

நிலா, “ம்.. ” என்றாள்.

இருவரும் உள்ளே சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தனர்.

“என்ன இவ ஏதோ சொல்ல தயங்குன ஒருவேள ரெஸ்ட் ரூம் போகனும் போலனு நெனச்சா இவ என்ன கை மட்டும் கழுவிட்டு உக்காந்துட்டா  நாமலே என்னனு கேப்போமா வேண்டா அவளே சொல்லட்டும். “

உணவு வந்தவுடன் உண்டுவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.

யுகி, “உனக்கு ஏங்கிட்ட எதாவது கேக்கணுமா.”

நிலா, “அது வந்து மாமா இப்போ நீங்க இந்தியன் பாரஸ்ட் பத்தி டாக்குமண்ட்ரி பண்ணப்போரிங்கல “

“ஆமா…. “

நிலா, “இல்ல இந்தியா முழுக்க பைக்லேயே போகப் போறோமா “

இக்கேள்வியில் பைக்கை சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன் அவள் புறம் திரும்பி “அப்போ மேடம் இந்தியா டூர்க்கு பிளான் பண்ணி இருக்கிங்க அப்படி தான”

“அப்போ இல்லையா மாமா “என்று அவள் அப்பாவியாக கேட்க அள்ளி கொஞ்ச வேண்டும் போல இருந்தது அவனுக்கு.
இடம் கருதி மனதை அடக்கி கொண்டான்.

பைக்கை ஓரம் கட்டி ஒரு மரத்தின் கீழ் நிருத்தினான். அவள் இறங்கியவுடன் அம்மர நிழலில் அமர்ந்து அவளையும் அருகே அமரச் சொன்னான்.

யுகி, “உனக்கு நா தெளிவா சொல்றேன் கேளு. “

“நாங்க லண்டன்ல இருந்தோம் உனக்கு தெரியும்ல “

நிலா, “ஆமா “

யுகி, “ம்…  அங்க ஒரு பெரிய வோல்ட் வைட் சேனல் இருக்கு அந்த சேனல்லா நிறைய சாகசம் பொழுதுபோக்கு நிகழ்ச்சி டாக்குமண்ட்ரி இந்த மாதிரி டெலிகாஸ்ட் பண்ணுவாங்க. அந்த சேனல்காக நா இதுவரைக்கும் இரண்டு டாக்குமண்ட்ரி ரெடி பண்ணி குடுத்து இருக்கேன்.  இப்போ அவங்க அதுல வொர்க் பண்ற இந்தியன்ஸ் கிட்ட இந்தியன் பாரஸ்ட் பத்தி டாக்குமண்ட்ரி ரெடி பண்ண சொன்னங்க எல்லாரும் ஆளுக்கு ஒரு ஸ்டேட் செலக்ட் பண்ணுனாங்க நா தமிழ்நாடு செலக்ட் பண்ணுனே.  சோ நாம தமிழ்நாடு காட்டு பகுதிக்கு தா போக போறோம். “

நிலா, “ஓ…..  அப்படியா நாங்கூட இந்தியா முழுசும்னு நெனச்சே “

யுகி, “உனக்கு இந்தியா டூர் என்ன பாரின் டூரே கூட்டிட்டு போறேன் “

நிலா, “நிஜமாவா.. “

யுகி, “ஆமா ஹனிமூன்க்கு …”

ஆ..  என அதிர்ச்சியில் வாயை பிளந்தாள்.

யுகி, “ஏன்டி கண்ண இவ்ளோ பெருசா விரிக்குற கிஸ் அடிக்கனும் போல இருக்கு  ரோடாச்சேனு பாக்குறேன். “

வேகமாக எழுந்தவள் “கிளம்பலாம்” என்றாள் . “பாருடா கிஸ் அடிக்க அவ்ளோ இன்ட்ரஸ்டா” என்று கேட்டுகொண்டே அவள் அருகில் வந்தான்.

அவள் இரண்டடி பின்னால் நகர “ரொம்பத்தான்…  நாம இரண்டு பேர் மட்டும் தனியாதா இருக்க போறோம் கவனிச்சுகிறேன்” என்று கூறி பைக் ஸ்டார்ட் செய்தான்.

வீட்டிலிருந்து கிளம்பி சரியாக 9 மணி நேர பயணத்திற்கு பிறகு சத்தியமங்கலம் பகுதிக்குள் அவனது பைக் நுழைந்தது. காலை எட்டு முப்பது மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி ஒரு வழியாக 5மணிக்கு சத்தியமங்கலம் வந்தாகிற்று.

அங்கே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்தனர். ரிசப்சனில் சாவியை வாங்கி கொண்டு ரூம்மிற்கு சென்றனர்.

ரூமில் நுழைந்து கதவை சாத்தியது தான் தாமதம் அவளை இழுத்து சுவரில் சாய்த்து இதழை சுவைக்க ஆரம்பித்தான்.

இறுதியாக அவளது கண்களிலும் மென்மையாக முத்தம் இட்டான்.

அவனை வெறிக்க பார்த்து கொண்டிருந்தவளிடம் “நான் தா அப்பவே சொன்னேலே கிஸ் அடிக்கனும் போல இருக்குனு…..  ம்..  ” என்று அழகாக புருவங்களை ஏற்றி இறக்கியதில் சொக்கி போனாள்.

“அது எப்போ சொன்னதுடா எவ்வளவு நேரம் ஆச்சு இப்போ அத நிறைவேத்திக்கிட்டானே “என்று எண்ணவும்  தவறவில்லை.

யுகி, “செரி ஃபிரஷாகிட்டு இரு நா இப்போ வந்துடுறேன் ” என்று கூறி எங்கோ வெளியில் சென்று விட்டான்.

இரவு எட்டு மணிக்கு மேல் அறைக்கு வந்தவன் அவளை அழைத்து கொண்டு மீண்டும் வெளியே சென்றான்.

அவளை ஒரு தள்ளுவண்டி உணவகத்திற்கு அழைத்து சென்று அங்கே ஒரு இருக்கையை இழுத்துபோட்டு அவளை அமர வைத்தான்.

யுகி, “உனக்கு என்ன புடிக்கும் சொல்லு ஆர்டர் பண்றேன் “

“சிக்கன் ரைஸ்” என்று வேகமாக சொன்னாள்.

புன்முறுவல் ஒன்றை கொடுத்துவிட்டு அவன் கேட்டதை வாங்கி வந்தான்.

அதை அவள் ஆவலோடு வாங்கி சாப்பிட்டாள். உணவை முடித்துக் கொண்டு இருவரும் சற்று தூரம் நடந்து சென்றனர்.

நிலா, “தேங்க்ஸ் மாமா “

யுகி, “எதுக்கு..”

நிலா, “என்னோட ரொம்ப நாள் ஆசைய நிறைவேத்துனதுக்கு”

என்ன என்று புரியாமல் பார்த்தவனிடம் “அது சாப்பாடு வாங்கி குடுத்திங்கல  எனக்கு ஸ்ட்ரீட் புட் சாப்பிடனும்னு ரொம்ப ஆசை ஆனா அப்பா திட்டுவார் கூட்டிட்டு போகமாட்டார். “

“ஓ… “

அவனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை சாதாரண கடையில் சாப்பிடுவதற்கே இவ்வளவு சந்தோசபடுபவள் மன நிறைவடைபவள் எப்படி என் சொத்தின் மீது ஆசைக் கொண்டு கையெழுத்து இடுவாள் , குழம்பினான். ஆனால் அவள் எப்படிபட்டவளாக இருந்தாலும் சரி அவளை விட்டுவிடக்கூடாது தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தான்.  தனக்கு மட்டுமே அவளிடம் அதிக உரிமை இருப்பதாக எண்ணினான்.  அது காதல் என்பதை அறிய மறந்தான்.

இருவரும் அறைக்கு வந்து வீட்டாருக்கு அழைத்து பேசிவிட்டு உறங்கிபோனார்கள்.

அடுத்த நாள் காலை

அவனது பைக் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் செல்லும் பாதையில் திரும்பியது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என்பது இந்தியாவின்  தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட  பகுதி மற்றும் புலிகள் காப்பகம் .

இங்கு ஐந்து தனித்துவமான காடுகள் உள்ளன.

2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட வனவிலங்கு கணக்கெடுப்பில் 

10 வங்கப் புலிகள் , 866 இந்திய யானைகள் , 672 கௌர்ஸ்கள் மற்றும் 27 சிறுத்தைகள் 

 2,348 புள்ளிமான்கள் , 1,068 கரும்புலிகள் , 304 சாம்பார் மான்கள் , 77 குரைக்கும் மான்கள் மற்றும் நான்கு கொம்புகள் கொண்ட மிருகங்கள் , 843 காட்டுப்பன்றிகள் உட்பட நான்கு கூடுதல் வகை கொம்பு மிருகங்கள் மற்றும் 43 சோம்பல் கரடிகள் . 

மேலும் மோயார் ஆற்றின் அருகே உள்ள இடங்களில் பிரபலமான காட்டு எருமை மாடுகளை கணக்கெடுப்பு குழுவினர் கண்காணித்தனர். ( கூகுள் ஆண்டவர் தயவில் எடுத்தது)

தனது டாக்குமண்ட்ரிக்கான முதல் நாள் பணியை தொடங்கினான் யுக்தயன்.

தொடரும்…