மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 5

நான்கு நாட்கள் கடந்துவிட்டது. அன்றைய விவாதத்தின் முடிவில் அவளை அழைத்து  செல்வதாக ஒப்புக் கொண்டான். அவளை பிரிந்து செல்வது மனதில் ஒருபுறம் வலித்து கொண்டே இருந்தது.  இப்போது சற்று நிம்மதியளித்தது. இந்த உணர்வு எதனால் என்று ஆராய அவன் விரும்பவில்லை.  அவனுக்கு பிடித்திருந்தது அவளை பற்றி எண்ணுகையில். ஆனால் அவள் மேல் இருந்த கோபம் மட்டும் மறையவில்லை. எது எப்படியோ இதை இப்படியே விட்டுவிடுவது நல்லது என எண்ணினான்.

நிலாவிற்கும் அவன் இன்னும் ஒரு வாரத்தில் புறப்பட்டுவிடுவேன் என்று கூறியது கவலையாகத்தான் இருந்தது. என்னதான் இருவருக்குள்ளும்  ஊடல் இருந்தாலும் அவனை பிரிய வேண்டும் என நினைக்கவில்லை அவள்.

இவ்வாறு பிரிய முடியாமல் ஏங்குபவள் தான் இரண்டு வருட ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டாள் என்றால் நம்ப இயலுமா. திருமணம் அவள் மனதை இன்று மாற்றிவிட்டதா? இரண்டு வருடம் முடிந்ததும் அவனை பிரிய முடியாமல் தவிப்பாளா இல்லை பிரிந்து செல்வாளா வரும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மறுவீட்டிற்கு செல்தல் தாலி பிரித்து கோர்த்தல் அனைத்தும் முடிந்துவிட்டது.

அறையில் இருந்து வெளிவந்த யுகி சமையல் அறையை நோக்கி

யாழு… யாழு…  என கத்தினான்.

கூடத்தில் அமர்ந்திருந்த  இந்திரன் ,”யாரை  கூப்பிடுறே டா “

யுகி, “ம்…. ஏ பொண்டாட்டி “

இந்திரன், “அவ பெயர் நிலா தான”

யுகி, “முழு பெயர் யாழ்நிலா ஏ அவளுக்கு நீங்க தா பெயர் வச்சிங்கலாம் அத்தை சொன்னாங்க இப்ப ஏதோ தெரியாத மாதிரி கேக்குறீங்க. “

இந்திரன், “அது இல்லடா நாங்க எல்லாம் நிலானுதா கூப்பிடுவோம் நீ யாழுனு சொன்னியா அதா.. “

யுகி, “என்ன அதா… நீங்க மட்டும் உங்க பொண்டாட்டிய மணிமானு கூப்பிடுறீங்க நா எதாவது கேக்குறனா… “

இந்திரன், “செரி செரி விடுடா சண்டைக்கு வராத, யாழு தா அவ பெயர் ஓகேவா எம்மா யாழு இங்க வாமா… “

யுகி, “அவ எனக்குதா யாழ் உங்களுக்கு இல்ல.. “

இந்திரன், ” செரிடா மகனே நா அப்படி கூப்பிடல “

உள்ளே இட்லி பொடிக்கு மிக்சியில் அறைத்து கொண்டிருந்தவளோ கணவனின் குறல் கேட்டு அதை நிறுத்திவிட்டு வெளியே வந்தாள்.

நிலா, “சொல்லுங்க மாமா… “அனைவர் முன்பும் அவர்கள் ஊடலை வெளிபடுத்த விரும்பவில்லை. அதனால் அனைவர் முன்பும் மாமா என்றே அழைத்தாள்

யுகி, “போய் ரெடியாகு வெளியே போக வேண்டிய வேலை இருக்கு “

நிலா, “இதோ பத்து நிமிஷம் வந்துடுறேன்.”

……
காரில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை அழைத்தான் யுகி.

நிலா, “ஆ..  சொல்லுங்க.. “

யுகி, “ஸி…  நா கொஞ்சம் கோபகாரன். முன்ன பின்ன பேசி இருந்த அத பெருசா எடுத்துக்காத. இனி நாம ரெண்டு பேரும் சேர்ந்து டிராவல் பண்ண போறோம். “

நிலா, “என்ன… “

யுகி, “அது  ஏங்கூட வரேல அத பத்தி சொன்னேன். சோ இந்த இறுக்கமான சூழ்நிலை நமக்குள்ள வேணா. அட்லீஸ்ட் ப்ரண்ட்ஸ் மாதிரி இல்லனாலும் கோ டிராவலர் மாதிரி இருக்கலாமே. “

நிலா, “ம்…  ஒகே “

யுகி, “நீ என்ன முன்னாடி எப்படி கூப்பிடுவியோ அப்படியே கூப்பிட்டு “

நிலா, “எப்படி கூப்பிட்டேன். “

யுகி, “அதா மா..  மாமா.. னு.. “

நிலா, “ம் சரிங்க மா..மா..”

அவள் மாமா என்று கூறியவுடன் மறுபுறம் திரும்பி அழகாக சிரித்து கொண்டான்.

இவளது கன்னங்களும் அந்தி வானமாக சிவந்தது.

ஒரு ஜவுளி கடை முன் காரை நிறுத்தினான்.

யுகி, “நம்ம பாரஸ்ட் போறோம்ல அங்க நீ யூஸ் பண்றதுக்கு உனக்கு வேண்டிய டிரஸ் வாங்கிக்க. “

நிலா, “ம்…. “

இருவரும் உள்ளே நுழைந்தனர். அங்கே இருந்த ஊழியர்களின் புடவை பிரிவை பற்றி விசாரித்தாள் நிலா.

யுகி, “எக்ஸ்கியூஸ் மீ நாமா போக போறது பாரஸ்ட், திருவிழாக்கு இல்ல. காட்டுல சிங்கம் புலி  யானைலா துரத்துனா சேலை கட்டிகிட்டு எப்படி ஓடுவ. “

நிலா, “என்ன…..   சிங்கம் புலியா “

யுகி, “வாய பொலக்காத வாடி… “

நிலா, “மாமா.. நெஜமாவே சிங்கம் புலி இருக்குமா…  சொல்லுங்க மாமா.. “

யுகி, “வீட்டுக்கு போனதும் பொறுமையா
சொல்றேன். இப்போ நீ செலக்ட் பண்ணு.

என்னடி முழிக்குற செலக்ட் பண்ணு.. “

நிலா, “அது வந்து மாமா.. எனக்கு சேலை சுடிதார் போட்டுதா பழக்கம். “

யுகி, “சரி வா நானே செலக்ட் பண்றேன். “

அவனே அவளுக்கான துணிகளை பார்த்து பார்த்து எடுத்தான். லைட் டீசர்ட் ஜீன்ஸ் குர்த்தா இது போன்றவைகளை எடுத்தான்.  ஒரு ஜீன்ஸ் ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட் கொடுத்து போட்டு காட்ட சொன்னான்.

அதை வாங்கி கொண்டு டிரையல் ரூம் சென்றாள். சிறிது நேரம் கழித்து தலையை மட்டும் வெளியே நீட்டி யுகியை அழைத்தாள்.

நிலா, “மாமா.. “

யுகி, “என்னடி..”

நிலா, “அது இந்த டிரெஸ் வேண்டாம் மாமா.. “

யுகி, “ஏன்டி”

அவள் பதில் கூறாமல் நகத்தை கடித்து கொண்டே தலையை மட்டும் வெளியே நீட்டி தரையை பார்த்தாள்.

இது சரிவராது என அவனும் அவளை தள்ளிக்கொண்டு டிரையல் ரூம் உள்சென்றான்.

அவன் திடீரென உள்ள நுழைந்ததும் அதிர்ந்தவள் தன் இரு கை கொண்டு தன்னை மறைத்துக் கொண்டாள்.

அவளது செய்கை அவனுக்கு சிரிப்பை தான் வரவழைத்தது.

யுகி, “கை கீழ இறக்கு “

நிலா, “ம்கும்..  அது துணி ரொம்ப லேசா இருக்கு மாமா. கை வேற இல்ல ” என்று சிணுங்கினாள்.

யுகி, “அட எடுடி” என்று கைகளை பிரித்து விட்டான்.

அவளை கீழிருந்து மேலாக பார்த்தவன் அசந்து போனன் மனைவியின் அழகில். அவளுக்கு அவ்வளவு அழகாக இருந்தது. சில நொடிகளில் தன்னை மீட்டு கொண்டு

ஒரு நிமிஷம் இங்கேயே இரு வந்துடுறேன் என்றான்.

வெளியே சென்று இரண்டு நிமிடத்தில் மீண்டும் வந்து அவளை  நெருங்கி  தான் கொண்டு வந்த ஓவர்கோட்டை அவனே போட்டுவிட்டான்.

அது அவளது கழுத்தில் இருந்து இடுப்புவரை இருந்தது. இந்த கோட் அவளை இன்னும் அழகாக காட்டியது.

யுகி, “ம்.. இப்ப ஒகே வா.. “

நிலா, “நல்லா இருக்கு மாமா.. “

யுகி, “சேரி டிரஸ் மாத்திகிட்டு வா. நா வெளியே இருக்கேன்.”

உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவள் தன் கணவனின் அருகில் சென்றாள்.

“பில் பே பண்ணிட்டேன் அந்த டிரஸ் குடு அதுக்கு பில் போட்டுடலாம்” என்று கூறி பில் கவுண்டரில் கொடுத்துவிட்டு உள்ளாடைகள் பிரிவிற்கு சென்றான்.

உள்ளே நுழைய இருந்தவனின் கைகளை பிடித்தவளோ “நீங்க எங்க போறீங்க நா வாங்கிட்டுவறேன்.”

யுகி, “எதுக்கு அங்க எல்லாம் நா தான எடுத்தேன். இங்கயும் நானே எடுக்குறேன்.”

நிலா, “அ..து.. அது நாந்தா சொல்றேல நா எடுத்துட்டுவறேன்.உங்களுக்கு…சை.. சைஸ் தெரியாது. “

அவள் அருகில் நெருங்கி காதில் ஏதோ சொல்ல அதிர்ந்துவிட்டாள்.

நக்கலாக சிரித்துவிட்டு அவள் கன்னம்தட்டி அங்கிருந்து சென்றுவிட்டான்.

இவளோ பேய் அறைந்தது போல் நின்றிருந்தவள் யாரோ அவளை கடந்து செல்லும் போது இடித்துவிட்டு சென்றதில் தன்னிலை அடைந்து பின் அவனை வாய்குள்ளே திட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

இங்கு அவனோ அவளை நினைத்து சிரித்துக் கொண்டான். அவளிடம் இப்படி நடந்துகொள்வது ஏனோ பிடித்திருந்தது.

தொடரும்…