மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 4

இருவரின் உடலும் உரசி இருவருக்குள்ளும் பல ரசாயன மாற்றங்களை தோற்றுவித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் இமை வெட்டாது பார்த்து கொண்டிருந்தனர். அவனின் கண்கள் தாபத்தை கணக்கில்லாமல் கொட்டிகொண்டிருந்தது.

தன் பெருவிரலால் அவளின் உதட்டை வருடி கொடுத்தான்.  அவளுள் நடுக்கம் ஏற்பட்டு தன் சேலை தலைப்பை இறுக பற்றிக் கொண்டாள். 

யாழு…  என்று கிறக்கமாக அழைத்து அவளின் கழுத்தில் தன் முகத்தை அழுத்தினான்.
மெதுவாக கழுத்தில் முத்தத்தை பதிக்க ஆரம்பித்தான்.

மாமா..  என்றவள் தன் கைகளை சேலை தலைப்பில் இருந்து எடுத்து அவனது தோள்களை அழுந்த பற்றிக் கொண்டாள்.

அவனது கைகளும் அவளிடம் எல்லை மீற ஆரம்பித்தது.  பெண்மைக்கே உண்டான விழிப்புணர்வினால் அவனது கைகளை தடுத்தாள். அதில் எரிச்சல் உற்றவனோ கழுத்தில் அழுத்தமாக கடித்தான் மேலும் அவனது கைகள் அவள் இடையை இறுக பற்றி இருந்தது.

கழுத்தை சுற்றி கணக்கில்லாமல் முத்தத்தை வழங்கினான். அவளுக்கு மூச்சு முட்டியது. அவன் தன் மொத்த பாரத்தையும் அவள் மேல் படர விட்டிருந்தான்.  கழுத்தில் இருந்த இதழ்கள் மெதுவாக மேலேறி அவளது இதழை அடைந்தது.

நிமிடங்கள் கடந்தும் முடிவு வரவில்லை கண்கள் சொருக அவனது தலை முடியை பற்றி தன்னோடு இணைத்துக் கொண்டாள்.  அதில் இன்னும் போதை ஏற அவளை அப்படியே தன்னோடு மேலும் இறுக்கி கொண்டு முத்தத்தை தொடர்ந்தான். அவள் மூச்சுக்காக ஏங்க அவளை விடுவித்தவன் அவளின் காதோர முடியை எடுத்து காதின் பின் சொருகிவிட்டு அவளது முகம் பார்த்தான்.

முகம் அந்தி வானமாய் சிவந்திருந்தது. “என்ன உம்மேல காதல் வந்து இதெல்லாம் பண்ணுனேனு நினச்சியா. நெவர் உன்னமாதிரி ஒருத்தி மேல காதல்….  காமடியா இல்ல… அப்புறம் எதுக்கு இந்த மாதிரி பண்ணுனேனு பாக்குரியா அக்ரிமெண்ட் நியாபகம் இருக்குல. நா எப்போ கேக்குறேனோ அப்போலா உன்ன தரனும்னு அதா நீ அதுபடி நடக்குறியானு செக் பண்ணுனேன்” என்று கூறி குளியலரைக்குள் சென்றுவிட்டான்.

யாழ்நிலா மொத்தமாக நொருங்கிவிட்டாள் அவனின் வார்த்தையில். தன் மீதே கோபம் வந்தது எதற்காக அவனது தொடுகைக்கு இப்படி மயங்குகிறாய் என்று தன்னையே கேட்டுக் கொண்டாள். 

தான் அவ்வளவு பலவீனமானவளா அல்லது அவன் மீது காதல் துளிர்த்துவிட்டதா அது எப்படி சாத்தியம் அவனை சந்தித்த நாள் முதல் இன்று வரை இருவருக்குள்ளும் ஒரு சுமுகமான உறவு இல்லை. பிறகு எப்படி காதல் விடை தான் கிடைத்தபாடில்லை.

கண்களை அழுந்த துடைத்து கொண்டவள் அறையைவிட்டு வெளியே சென்றாள்.

இங்கு குளியலரைக்குள் நுழைந்தவனின்  நிலைமை அவளுக்கு மேல் குழம்பி போய் இருந்தது.  தான் ஏன் அவளது விஷயத்தில் ஒவ்வொரு முறையும் தடுமாறி போகிறோம் என்றே தெரியவில்லை.  ஒரு பெண்ணின் அனுமதி இன்றி அவளை தன் கை பொம்மையாக மாற்ற துணிந்துவிட்டேனே என்று வருத்தம் கொண்டான்.

ஒரு வேளை அவள் மீது இருந்த பிடித்தம் காதலாக முன்னேறிவிட்டாத இல்லை இந்த திருமணம் மஞ்சள் கயிறு இவையெல்லாம் அவள் மீது அதிக உரிமையை எடுக்க சொல்கிறதா ஒன்றும் புரியவில்லை. அவள் தான் வேண்டும் என்றே தன் முன் நின்று தன்னை மயக்க பார்க்கிறாள் என்று மனசாட்சி இன்றி அவள் மீதே பழி சுமத்தினான்.

——-

சமையல் அறையில் அத்தை கண்மணிக்கு உதவி செய்து கொண்டிருந்தாள் யாழ்நிலா.

அவளது மாமனார் இந்திரன் காபி அருந்தியபடியே பேப்பர் படித்து கொண்டிருந்தார்.  கீழே இறங்கி வந்த யுகி தந்தையின் அருகில் அமர்ந்து தந்தையிடம் இருந்த பேப்பரை பிடுங்கி படிக்க ஆரம்பித்தான்.

மும்முரமாக படித்து கொண்டிருந்தவனின் முன் ஒரு கை காபியை நீட்டியது. தன்னவள் தான் வருவாள் என எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏமாற்றத்தை முகத்தில் காட்டாமல் சிரித்த முகமாக காபி கப்பை கையில் எடுத்துக்கொண்டான்.

சிறிதுநேரம் தந்தையுடன் பேசி கொண்டிருந்தான். பேச்சு தந்தையிடம் இருந்தாலும் கண்கள் நிலாவை தேடி அழைந்தது. அவளோ சமயல் அறையைவிட்டு வெளிவரவே இல்லை.

கண்மணி , தந்தை மகனை உணவருந்த அழைத்தார். இருவரும் டைனிங் டேபிளில்  அமர்ந்தனர்.  நிலா உணவு பதார்த்தங்களை மேசையின் மீது அடுக்கினாள்.

யுகி நிலாவை தான் உற்று நோக்கினான்.  அவளது முகம் காலையில்  இருந்து சோகத்தை தத்தெடுத்திருந்தது. அதனை பார்த்தவனின் மனது அவளுக்காக வாதாடியது. நீ செய்தது தவறு யுகி ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்வது சரியில்லை என்றது.

அதற்கு அவனோ அவள் மட்டும் பத்திரத்தில் கையெழுத்து இட்டு என்னை ஏமாற்றினாள் அது மட்டும் சரியா என்று எதிர்வாதம் புரிந்தது.

அவன் தன் தரப்பில் இருந்து மட்டுமே இருந்து யோசித்தானன்றி தான் பத்திரத்தை நீட்டும் பொழுது அவள் நிலை என்னவாக இருக்கும் என யோசிக்க மறக்கிறான்.

இங்கு நம்மில் பலரும் இது போன்றே. ஒரு விஷயத்தில் பிறர் நிலையில் இருந்து யோசித்தால் பாதி பிரச்சினை முடிந்தது.

இவர்கள் இருவரும் அதுபோலே தான் யுகி நிலாவின் இடத்தில் இருந்து யோசித்து இருந்தாலோ நிலா யுகியின் இடத்தில் இருந்து யோசித்து இருந்தாலோ பிரச்சினை பாதி முடிந்துவிடும். பின் முழுதும் முடிந்து சாதாரண தம்பதிகளை போல் திருமணம் ஆன இந்த புதிய தருணங்களை சந்தோசமாக செலவிட்டிருப்பர்.

உணவு உண்டு கொண்டிருந்த யுகி ,” மா…  இன்னும் எதாவது சடங்கு சம்பிரதாயம் இருந்தா இந்த ஒரு வாரத்துக்குள்ள முடிக்கிற மாதிரி பாருங்க. “

இந்திரன் மனதுக்குள் “எதுக்கு ஒரு வாரம்னு அவசரபடுத்துறான் ஒரு வேளை ஹனிமூன் போறானோ ” என்று எண்ணிக் கொண்டார்.

கண்மணி, “எதுக்குடா அவசரப்படுத்துற இப்ப என்ன அவசரம் ஏற்கனவே கல்யாணத்துக்காக உங்கள எல்லாரும் பாடா படுத்திட்டோம். கொஞ்சம் இரண்டு நாள் ரிலாக்ஸ் பண்ணுங்கடா. அதுவும் இல்லாம சொந்தகாரங்க எல்லாம் முத பஸ்க்கு டிரைனுக்குனு விடியகாலைலதா கிளம்பி போனங்க போன கையோட எப்படிடா திரும்ப வருவாங்க “

யுகி, ” மா…  கல்யாணம்தா கிராண்டா பண்ணியாச்சுல மத்த சடங்கெல்லாம் நம்ம இரண்டு வீடு மட்டும் இருந்த போதும். “

அப்பொழுது மறுவீட்டிற்கு அழைக்க வந்த நிலாவின் பெற்றோரும் யுகியின் கருத்தை ஆமோதித்தனர்.  நேற்று இரவு நிலாவை முதலிரவுக்கு அனுப்பி விட்டு அவளது தாய் தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பொதுவாக  சிலரது பழக்கவழக்கபடி திருமணம் ஆன இரவு பெண்ணின் தாய் தந்தையர் மாப்பிள்ளை வீட்டில் தங்கமாட்டார்கள்.  ஆனால் நிலாவின் பயந்த முகத்தை பார்த்த அவளது தாய் கனகா சிறிது நேரம் கழித்து வருவதாக கூறி கணவரை மட்டும் தங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். பின் நிலாவை யுகியின் அறைக்கு அனுப்பி விட்டு தனது வீட்டிற்கு சென்றார்.

இந்திரன், “என்ன மச்சான் அவன் சொல்றானு நீங்களும் ஒத்துக்கிறீங்க . ஒத்த புள்ளைய பெத்து வச்சுருக்கோம் வேற யாருக்கு செய்யப்போறம் சொல்லுங்க. “

சுரேஷ், ” புரியுது மச்சான் இப்போ செய்யலனா என்ன நாளைக்கு பொறக்கப்போற பிள்ளைகளுக்கு செஞ்சுக்குவோம். ” என்றார்.  மேலும் அவருக்குள்ளும் சிறிய கலக்கம் தங்களது நிலையை எண்ணி. திருமணத்திற்கே கையிருப்பு காலியாகிவிட்டது. மேற்கொண்டு வேண்டும் என்றால் கடன் வாங்க வேண்டியது இருக்கும் என யோசித்தார்.

யுகி, “எதுவா இருந்தாலும் இந்த ஒரு வாரம்தா அதுக்கு அப்புறம் என்னால இங்க இருக்க முடியாது. இந்தியன்  பாரஸ்ட் பத்தி  டாக்குமென்ட்ரி பண்ண போறேன். “

இந்திரன் மைன்ட் வாய்ஸ் அதான பாத்தேன் இவன் ஹனிமூன் போயிட்டாலும்.

கண்மணி, ” என்னடா இப்படி சொல்ற கல்யாணம் ஆகி ஓரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள இப்படி சொல்ற. “

யுகி, “ஏற்கனவே இருந்த பிளான்தா மாத்திக்க முடியாது”

கண்மணி, “ஓ…  மாத்திக்க முடியாதா அப்ப சரி எங்க போறதா இருந்தாலும் உம் பொண்டாட்டியையும் கூட்டிகிட்டு போ”

யுகி, ” மா….  விளையாடுறையா நா போக போறது காடு அங்க எப்படி இவள கூட்டிட்டு போக முடியும் “

கனகா, ” மாப்பிள்ளை கல்யாணம் முடிஞ்ச கையோட அவள விட்டுட்டு போறது சரியாபடல கொஞ்சம் யோசிங்களேன். “

தொடரும்….