மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 32

அறையில் அமர்ந்து இருந்தவனின் மனமோ… அருவிக்கரைக்கு சென்றிருந்த நாட்களை அசை போட்டது.  அந்த அருவிக்கரை தானே அவன் வாழ்க்கையை மாற்றியது.

பின்னே இல்லையா அங்கிருந்து வரும் போது தானே மழையில் நனைந்து காய்ச்சலை இழுத்து வைத்து மருந்தாக அவளின் காதலைப் பெற்றது.

……….

இன்னும் சில நாட்கள் நகர நிலாவும் கண்மணியும் அவனின் மன்னிப்பை எதிர் நோக்கி காத்திருந்தனர்.

அவனும் பலவாறு முயன்று கொண்டிருந்தான் தன்னை மாற்றிக் கொள்ள ஓரளவு அதில் வெற்றியும் கண்டுவிட்டான்.

ஆனால் குட்டி தயாதான் ரொம்பவும் சிரமப்பட்டு போனார். பிறந்ததில் இருந்து சுரேஷ் கனகாவின் அரவணைப்பில் இருந்தவன் அவர்களை விடுத்து தந்தை வீட்டுக்கு வந்தவுடன் மிகவும் வாடிவிட்டான்.

இந்திரன் கண்மணியும் அவன் அன்பிற்குரிய தாத்தா பாட்டியே. ஆனால் இருப்பத்து நான்கு மணிநேரமும் உடன் இருந்த தாத்தா பாட்டியை ரொம்பவே தேட ஆரம்பித்தான்.

இதனால் ஆரம்பத்தில் ஏக்கத்தினால் காய்ச்சல் கூட கண்டுவிட்டான்.  பின் அவர்களும் கொஞ்ச நாட்கள் அவனுடனே இருந்து ஏதுதோ கூறி அவனை பழைய நிலைக்கு மாற்றினர்.
………….
நிலாவோ யுக்தயன் கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டி கேட்டுக் கொண்டதால் அந்த டைமை அவனுக்கு கொடுத்தாள். ஆனால் அவனைவிட்டு விலகவில்லை.  அருகில் இருந்து அவன் தேவைகளை பார்த்து பார்த்து செய்தாள்.

ஒரு காலம் தான் ஏங்கியவை எல்லாம் தற்பொழுது தனக்கு கிடைக்க அதை ஏற்கத்தான் முடியவில்லை யுக்தயனால்.
……….

“யாழு…. யாழு….” என்று கத்திக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் யுக்தயன்.

அவன் கத்துவதை பார்த்து குட்டி தயாவும் “யாழு…”  என்று கத்த “அடிங்…”  என்று கூறி அவனை துரத்தினான் யுக்தயன்.

பிள்ளை அவனும் வீடு முழுக்க சுற்ற இவனும் விடாது துரத்த கடைசியில் யாழ்நிலாவின் வருகையால் அவர்களது விளையாட்டு நின்றது.

யுகி, “யாழு…  சீக்கிரம் ரெடியாகு…  ஒன் வீக்குக்கு தேவையான் துணி அப்றம் வேற ஏதுவும் தேவைனா எல்லாத்தையும் எடுத்து வச்சுக்க.”

நிலா, “எதுக்குங்க….”

யுகி, “சத்தியமங்கலம் காப்பகத்துல இருந்து போன் பண்ணி இருந்தாங்க”

“சின்னரசு ஐயா தா பேசுனாரு உங்க அண்ணனுக்கு கல்யாணம் முடிவாகிருச்சா. அவன் வெளிய போக கூடாதுன்றதால சின்னரசு ஐயா கிட்ட சொல்லி நமக்கு தெரியப்படுத்த சொல்லி இருக்கான்.  நாம கிளம்பலாம்.”

நிலாவிற்கு பயங்கர சந்தோசம் தன் உடன்பிறவா சகோதரன் மற்றும் தோழிக்கு திருமணம் அல்லவா.  உடனே அனைத்தையும் எடுத்து வைத்து புறப்பட்டனர்.

………

இதோ மீண்டும் அதே காட்டுப்பயணம் தங்கள் வாழ்க்கையின் பொக்கிஷ நினைவுகள்.  அதனை எல்லாம் மீண்டும் கண்டதும் இருவருக்கும் கண்ணீர் சுரந்தது.

யுகி அடிக்கொரு முறை இங்கு வருவான் தான்.  அப்பொழுதும் அழுவான்.  இப்பொழுதும் அழுகிறான். அப்பொழுதெல்லாம் தன்னுடன் தன் யாழ் இல்லையே என எண்ணி கவலையில் அழுவான்.  இப்பொழுது அவள் தன்னுடன் இருக்கிறாள் என்ற ஆனந்தத்தில் அழுகிறான்.
…………

கிராமத்தில் நுழைந்தவர்களை அனைவரும் ஆராவாரத்துடன் வரவேற்றனர்.

குட்டி தயா அங்கிருப்பவர்களை வியப்புடன் நோக்கினான்.

நிலா ஓடிச் சென்று ருத்ரனை அணைத்துக் கொண்டாள். 

சத்தம் கேட்டு குடிலுக்குள் இருந்த குழலி வெளியே வந்து பார்க்க நிலாவின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தாள்.

ருத்ரன் இடம் இருந்து பிரிந்த நிலா குழலியை கட்டிக் கொண்டு திருமணத்திற்கு வாழ்த்துச் சொன்னாள்.

நிலாவிடம் இருந்து பிரிந்த ருத்ரன் யுகியை நெருங்கி அவனை கட்டிக் கொள்ள யுகியின் கையில் இருந்த தயாவிற்கு தான் இருவரும் இடையில் மாட்டிக் கொண்டு மூச்சுக்கு ஏங்கினான்.

அதன் விளைவால் அவன் திமிர அதன் பிறகே ருத்ரன் விலகினான்.

ருத்ரா, “ஐயோ…  மன்னிச்சுருடா..  மருமகனே..  வாங்க வாங்க..  மாமாட்ட  வாங்க” என்று கூற தந்தையை பார்த்தவன் அவன் தலையாட்டவும் ருத்ரனிடம் தாவினான்.

தயாளன் அப்படியே அந்த மக்களுடன் ஐக்கியமாகி விட நிலாவும் யுகியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடிலுக்குள் சென்றனர்.

அவர்கள் முன்பு தங்கியிருந்த அதே குடில் தான்.  குழலியின் ஏற்பாடு தான் அனைத்தும்.

அறைக்குள் நுழைந்தவர்களின் எண்ண அலைகள் அருவிக்கரை போய் வந்த அந்த ஒரு வார தினங்களுக்கு சென்றது.  அவர்கள் கடைசியாக சந்தோசமாக இருந்தது அந்த குடிலில் தானே.

குடிலின் ஒரு மூலையில் நின்றிருந்த யுக்தயனை அணைத்தாள் நிலா.  அவன் எதுவும் ரியாக்ட் செய்யவில்லை.

நிலா, “மாமா…  இந்த இடம் நியாபகம் இருக்கா”

யுகி, “ம்… “

நிலா, “நாம இங்கையே இருந்து இருக்கலாம் இல்ல..”

“ம்…”  என்று கூறியவனின் கைகள் மேலெழுந்து அவளை அணைத்தது.
அவனும் அவள் கூறியது போல் எண்ணாத நாள் இல்லை.

அவனை அணைத்து இருந்தவள் மெல்ல தன் பாதங்களை மேல் உயரத்தி அவன் இதழ்களில் முத்தமிட்டாள்.

யுக்தயனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.  நான்கு வருடங்களுக்கு பிறகு தன் மனைவியிடம் இருந்து பெரும் முத்தம்.  எத்தனை நாட்கள் இருந்த ஏக்கம் இந்த முத்தம். காதலில் காமமும் ஒரு அத்தியாயம் தானே.

ஆரம்பித்த அவளுக்கு அதனை தொடரும் வழி தெரியவில்லை. தடுமறியவளை அணைத்து அவனே அழைத்துக் கொண்டு போனான் அந்த மாய உலகிற்கு.

இருவருக்கும் பிரிய துளியும் மனதில்லை. வெளியே கேட்ட சிரிப்பு சத்தத்தில் தன்னிலை அடைந்து விலகினர்.

பின் இருவரும் வெளியே சென்று பார்க்க ஊர் தலைவரின் மடியில் அமர்ந்திருந்த தயாளன் அவரின் பெரிய மீசையை பிடித்து இழுத்து விளையாடி கொண்டிருந்தான். அதனை பார்த்த மக்கள் ரசித்து சிரித்தனர்.

நிலா, “டேய்… தயா பெரியவங்க கிட்ட அப்படிலா பண்ணக்கூடாது..”

ஊர் தலைவர், “விடுடாமா..  எம்பேரன் எம்மீசைய பிடிக்காம வேற யாரு பிடிப்பாங்க சொல்லு….”

அவளும் புன்னகை புரிந்தவள் மகனின் சேட்டைகளை ரசிக்க ஆரம்பித்தாள்.
………………

ருத்ரனின் திருமணமும் முடிந்தது.  ஒரு வழியாக குழலி ஆசைப்பட்டது போல் இந்த வருட மருதாணி திருவிழாவிற்கு அவளது அண்ணன் கையால் மருதாணி வாங்க போகிறாள்.

காட்டுக்குள் இருந்த இந்த ஒரு வாரத்தில் யுக்தயனும் பழைய நிலைக்கு மாறி இருந்தான். யுகியும் நிலாவும் பிரிந்து இருப்பது காட்டு அம்மனுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ யுகியின் மனதில் ஏதோ மாயஜாலம் நிகழ்த்தி அவனை பழைய படி மாற்றிவிட்டது.

வழக்கம் போல நிலாவின் பின் சுற்ற ஆரம்பித்துவிட்டான். நிலாவும் மனதார அந்த காட்டிற்கு நன்றி சொன்னாள்.  இந்த காடு அவளது வாழ்வில் விலைமதிக்க முடியாத பல பொக்கிஷ நினைவுகளையும் சொந்தங்களையும் கொடுத்திருக்கிறது அல்லவா…

கடைசியில் தாங்கள் கிளம்பும் நேரம் மீண்டும் அண்ணன் தங்கை இருவரும் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அவர்களையே குறு குறுவென பார்த்த இரண்டு தயாக்களும் நிலா அவர்களை கவனித்ததும் ஒரே சமயத்தில்

“ஹவ் கியூட் ….”
“அவ் கியூத் ….”  எனக் கூற அந்த அழகை அவளால் ரசிக்காமல் இருக்கமுடியவில்லை.
…………

இந்திரனும் யுகியும் இப்பொழுதெல்லாம் கண்மணியுடன் ஓரளவிற்கு பேச ஆரம்பிக்க அவரும் சந்தோசமாகவே வலம் வந்தார். சுரேஷும் கனகாவும் அடிக்கடி யுகியின் வீட்டிற்கு வந்து பேரனுடன் தங்கள் நாளை கழித்து சந்தோசமடைந்தனர்.

மேலும் சில நாட்கள் நகர யுக்தயன் தன் நிறுவனத்தில் அவன் அறையில் எதோ டென்சனாக தேடிக் கொண்டிருந்தான்.

அது சில குழந்தைகளின் படிப்பு செலவிற்கு வேண்டிய பணத்தை கலெக்ட் செய்வது பற்றிய மீட்டிங்கிற்கான கோப்புகள்.  இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.  ஆனால் பைலை காண வில்லை.

அந்த நிறுவனத்தின் வெளியே நின்றிருந்த நிலா தயாளனை அவர்களின் டிரைவரோடு இருக்க கூறிவிட்டு உள் நுழைந்தாள்.

டிரைவர், “தயா குட்டிக்கு என்ன வேணும்… “

தயா, “சாத்லேட்…. “

டிரைவர், “ஓகே நாம சாக்லேட் வாங்கிட்டு வருவோம் அம்மா அப்பாவ கூட்டிட்டு வரட்டும்” என்று அந்த நம்பிக்கைக்கு உரிய டிரைவர் பக்கத்தில் இருந்த கடைக்கு அவனை அழைத்துச் சென்றார்.

உள்ளே நுழைந்த நிலாவோ ரிசப்சனில் போய் அங்கிருந்தவளை அழைத்தாள்

நிலா, “எக்ஸ்கியூஸ் மீ”

ஜனனி, “எஸ் மேம்.. “

நிலா, “நா..  மிஸ்டர் யுக்தயன பாக்கனும்”

ஜனனி, “அப்பாயின்மென்ட் இருக்கா மேடம்”

நிலா, “ஐயோ…  இல்லையே நிலானு சொல்லுங்க தெரியும்.”

நிலாவை மேலும் கீழுமாக பார்த்த ஜனனி “வெயிட் பண்ணுங்க மேம் கால பண்றேன்” என்று கூறி ரிசிவரை எடுத்தாள்.

நிலாவும் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

யுக்தயனின் அறைக்கு கால் செய்த ஜனனியோ ஒரு பெண் தங்களை பார்க்க வந்துள்ளதாக கூற இப்பொழுது தான் முக்கியமான மீட்டிங்கிற்கு செல்ல வேண்டியதால் யாராக இருந்தாலும் சற்று நேரம் காத்திருக்க கூற அவளும் நிலாவிடம் கூற சரி என்று அவளும் காத்திருக்க துவங்கினாள்.

இரண்டு மணி நேரம் முடிந்துவிட்டது. அவன் வரவில்லை.  ரிசப்சனிற்கு வந்த
சுனேனா அங்கே நிலாவை நக்கலாக பார்த்துக் கொண்டிருந்த ஜனனியிடம் நெருங்கி எண்ணவென்று வினவ அவள் நடந்ததை கூறினாள்.

சுனேனா, “என்ன…  நிலானு சொன்னா தெரியுமாவா….  நம்ம சார் எந்த பொண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாரு.  இவ என்ன ஓவரா சீன் போட்டு பேர சொல்ல சொல்றா.. “

ஜனனி, “அதான்டி நா சார்கிட்ட பேரு எதுவும் சொல்லல. “

சுனேனா, “ம்..  சரியான வேலை பண்ணுன. ஒரு முக்கியமான பைல் காணோம்னு தேடி இப்பதா கண்டுபிடிச்சோம். சார் எங்க வச்சாருனு மறந்து போய்டாரு.  நல்ல வேளை கிடச்சுருச்சு.  அதனால இப்போதா மீட்டிங் ரூம் போய் இருக்காரு வர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும்.”

ஜனனி, “அப்போ இவ வெயிட் பண்றது வேஸ்ட் “

சுனேனா, “சரி பொறு என்ன பண்றானு பாப்போம் “

இரண்டு மணி நேரம் கடந்திருக்க வெளியே இருந்து கால் செய்த டிரைவரிடம் கொஞ்சம் லேட் ஆகும் போல வெயிட் பண்ணுங்க அண்ணா என்று கூறியவள் மீண்டும் காத்திருக்க தொடங்கினாள்.

நேரம் ஆக ஆக ஒருவித டென்சனில் பார்வையை தரையில் பதித்து கோபமாக அமர்ந்திருந்தாள்.

நிலாவின் மூன்று மணி நேர காத்திருப்பிற்கு பின் மீட்டிங்கை முடித்துக் கொண்டு வெளியே வந்தான்.

மீட்டிங்கிற்கு வந்த முக்கியஸ்தர்களுடன் என்ட்ரன்ஸ் நோக்கி வந்து கொண்டிருந்தவனோ அங்கே அமர்ந்திருந்த நிலாவை பார்த்து ஆனந்த அதிர்ச்சியுற்றவன்.

“யாழு…” என்று கத்திவிட்டான்.  அவன் கத்தலில் மொத்த அலுவலகமும் அவன் புறம் திரும்பியது. அதனை எல்லாம் பொருட்படுத்த வில்லை அவன்.

“யாழு…  எப்ப  வந்த…”  என்று கேட்டுக்கொண்டே அருகில் நெருங்கியவனை தன் கையில் இருந்த சிறிய கைபையினால் மொத்து மொத்தென மொத்திவிட்டாள்.

அவளது ரப்பர் பை அவனுக்கு வலியை கொடுக்க “யாழு…  அடிக்காத” என்று அவளை சுற்றியே ஓடினான்.  “ஏய்…  வலிக்குதுடி…”

நிலா, “நல்லா வலிக்கட்டும்…  மூனு மணி நேரமா வெயிட் பண்றேன்..  எனக்கு எப்படி இருக்கும்…”

யுகி, “ஏய் மறந்துட்டேன்டி… நீதா வந்துருக்கேனு…  தெரியாது…”

நிலா, “ஓ..  அப்ப மத்தவங்கனா உங்களுக்கு இலப்பமா….”

யுகி, “லூசு…  நா அப்படி சொல்லலடி…”

இப்படியாக இவர்கள் சண்டை இட்டுக் கொண்டிருக்க மொத்த அலுவலகமும் வாயை பிளந்து கொண்டு பார்த்தது.

வெளியே டிரைவரிடம் அடம்பிடித்து உள்ளே வந்த தயாவோ அவர் கையில் இருந்து திமிரி இறங்கி ஓடினான்.

வேகமாக சென்றவன் தாயை…  தள்ளிவிட்டு..  “அப்பாவ..  அதிக்காத.. ” என்றான்.

“என் செல்லம்”  என்று அவனை தூக்கிக் கொண்டான் யுக்தயன்.

தயா அப்பா என்று கூறியவுடன் அனைவருக்கும் நெஞ்சே வெடித்துவிட்டது. அவர்கள் இன்னும் அவனை ஒரு பெண் அடித்துக் கொண்டிருப்பதையும் அதை கோபம் போல் காட்டிக் கொண்டு ரசித்துக் கொண்டிருப்பவனையும்  நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு இருக்க..  ஒரு பாலகன் வந்து அப்பா என்றால் எப்படி.. 

எல்லோரையும் விட ஜனனி மற்றும் சுனேனா இருவருக்கும் பேரதிர்ச்சி.
“சட்ட கிழிஞ்சுருந்த தச்சு முடிச்சிடலாம்” என்ற நடிகர் விவேக்கின் நிலமை தான்.

நிலா, “யாரா இருந்தாலும் இவ்ளோ நேரம் காக்க வைக்காதீங்க மாமா….”

யுகி, “நா சுத்தம மறந்து போய்ட்டேன் யாழு….”  என்று பாவமாக முகத்தை வைக்க

தயாவும் நிலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு கடைசியில் யுக்தயனை பார்த்து

“ஹவ் கியூட்”
“அவ் கியூத்…”  என்று கூற மேலும் முகத்தை பாவமாக வைத்தான் யுக்தயன்.

அவனின் இந்த புதிய அவதாரத்தைப் பார்த்த மொத்த அலுவலகமும் பேயறைந்தது போல் பார்த்தனர் தங்கள் முதலாளியை.

மீட்டிங்கிற்கு வந்த ஒரு பெரிய தொழிலதிபரின் சிரிப்பு சத்தத்தில் இருவரும் அவர் புறம் திரும்ப

நிலா ஒரு சிரிப்புடன் “ஹாய் அங்கிள்..  எப்படி இருக்கீங்க…” இரண்டொரு முறை அவரை வெளியில் சந்தித்து உள்ளதால் சகஜமாக பேசினாள்.

“ஃபைன்டாமா  ஹாய்  பட்டு..”  என தயாவை பார்க்க அவனும் அழகாக சிரித்து “கா… ய்.. ” என்றான்.

“ஹோ….  கியூட்டி.”.  என அவனை சிறிது நேரம் கொஞ்சியவர் அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார்.

பின்  ஊழியர்கள் அனைவரும் அவர்களை சூழ்ந்து

“சார் உங்களுக்கு மேரேஜ் ஆகிருச்சா… “

“எங்ககிட்ட சொல்லவே இல்லையே… “

“சார் மேடம் அழகா இருக்காங்க”

“உங்க பையன் செம கியூட்..”

இப்படி வரிசையாக அவர்கள் பேசிக் கொண்டே போக..

“வெயிட் ….  வெயிட் …. உங்க எல்லார்கிட்டையும் சொல்லாததுக்கு சாரி…  அண்ட் கண்டிப்பா உங்க எல்லாருக்கும் பார்ட்டி ஒன்னு அரேஜ் பண்ணுறேன்.  கண்டிப்பா எல்லாரும் வரனும்.”

“என்ன பார்ட்டி சார்..”

“அது…  எங்களோட  5th ஆனிவர்சரி…”

“சூப்பர் சார்… “

பின் அவர்கள் எல்லாம் கலைந்து சென்றுவிட அருகில் நின்றிருந்த டிரைவர்.

“அம்மா…  அங்க ஃபங்சன்  ஸ்டார்ட் பண்ண போறாங்களா….. நீங்க எப்ப வருவீங்கனு இந்திரன் சார் எங்கிட்ட கால்பண்ணி கேட்குறாரு”

யுகி, “ஐயோ இன்னைக்கு உன்னோட டிராயிங் கலெக்சன் சேல் ஆகுதுல…  சாரி யாழு…  வரவர ரொம்ப மறந்து போயிடுறேன்.”

நிலா, “அய்யோ…  அப்படி எதுவும் இல்ல மாமா…  இன்னைக்கு என்னோட திறமை எல்லாருக்கும் தெரிய வருதுனா அதுக்கு காரணம் நீங்க தா..” அனைத்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்தவன் மனையாளை டீலில் விட்டுவிடுவானா என்ன…

யுகி, “ம்…  சரி வா போலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு ஓவியங்கள் ஏலம் எடுக்கும் இடத்திற்கு செல்ல அங்கே ஏலம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

அதில் நிலாவின் ஓவியம் அதிக விலையில் ஏலம் போனது.
ருத்ரன் அன்று கரும்புலியுடன் போராடினானே அந்த காட்சி தான் அங்கு ஓவியம் ஆகி இருந்தது.  இவள் கூட கண்களை சாசர் போல் விரித்து பார்த்து மயங்கினாளே..  அந்த காட்சியை தான் வரைந்திருந்தாள்.

ஏலத்தில் கிடைத்த பணத்தை தற்போது தன் கணவன் தொடங்கியிருக்கும் அனைத்து குழந்தைகளின் கல்வி உதவித்தொகை கிடைப்பதற்காக ஆரம்பித்த முயற்ச்சியில் முதல் பங்கை அவளே கொடுத்தாள்.
……….

இங்கு சோகமே உருவாக கேன்டினில் அமர்ந்திருந்தனர் ஜனனி சுனேனா இருவரும்.

சுனேனா, “சரி விடுடி வெறும் கிரஷ் தானா “

ஜனனி, “அதான அப்புறம் ஏன்டி உம்முனு இருக்கோம்.. “

சுனேனா, “லைட்டா ஃபீல்லா தா இருக்குல.”

“ஏய் ஜனனி சுனேனா நம்ம கம்பனில இன்னைக்கு புது கேமரா மேன் ஜாயின் பண்ணிருக்கான்டி ஆளு செம்மையா இருக்காரு…” என்று சொன்னபடி அவர்கள் அருகில் வந்து அமர்ந்தாள் அவர்களுடன் பணிபுரியும் ஒருத்தி.

“அட போடி… ” என்றனர் இருவரும்.

“ஏய்..  அதோ அவன் தான்டி…”

  அவர்கள் திரும்பி பார்க்க இவ்வளவு நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த அந்த கேமாரா மேன் அவர்களின் பக்கத்து டேபிலில் அமர்ந்தான்.

“ஏய்…  இவன் தாண்டி நமக்கு புது கிரஷ்…”  என்று அவனை பார்க்க ஆரம்பித்தனர்.

பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “அசிங்கமா பண்றோம்ல….”
” இல்ல… “

என்று கூறி தங்களை தாங்களே காரித்துப்பிக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க சேன்றனர்.
………
ரம்மியமான இரவு பொழுதில் தன் மனையாளுடன் காதல் செய்து கொண்டு இருந்தான் யுக்தயன்.

இருவரும் ஒரு போர்வைக்குள் படுத்திருக்க அவள் தலை அவன் நெஞ்சில் சாய்ந்திருக்க கண்களை மூடி இருவரும் அத்தருணத்தை ரசித்தனர்.

பின் கண்களை திறந்து நிமிர்ந்து பார்த்த நிலா யுக்தயனின் தாடையை பிடித்து “என்னோட தயா மாமா சந்தோசமா இருக்காரா….”

சிறு சிரிப்புடன் “என்னோட யாழு எங்கூட இருந்த நா எப்பவும் சந்தோஷமா இருப்பேன்” என்று கூறியவன் அவளை அணைத்துக் கொண்டு உறங்கி போனான். மன்னவனின் முகத்தை ரசித்துக் கொண்டிருந்த அவளும் கண்களை மூடி உறக்கத்திற்கு சென்றனர்.

இவர்கள் இப்படியே என்றும் பிரியாமல் சேர்ந்து இருப்பர் என்ற நம்பிக்கையோடு நாமும் விடைபெறுவோம்.

முற்றும்..

……………

ஒரு வழியா ஒரு கதைய முழுசா எழுதி முடுச்சுட்டேன் பிரண்ட்ஸ். அப்படியே கதைய பத்தின உங்க கருத்து என்னனு சொன்ன சந்தோசப்படுவேன்.