மீட்டாத வீணை தருகின்ற ராகம்- 3
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
கண்களால் ஒருவரை ஒருவர் பருகி கொண்டிருந்த இருவரின் கவனமும் அருகில் இருந்த டேபிலில் மீதிருந்து விழுந்த டம்ளரால் இயல்புக்கு திரும்பியது.
முதலில் நினைவு திரும்பிய நிலா யுகியிடம் உட்காருங்க மாமா என்றாள்.
மாமா என்ற வார்த்தையில் ஸ்தம்பித்து விட்டான் யுகி. நெஞ்சுக்குள் சில்லென்ற உணர்வு.
தான் இவ்வளவு நேரம் ரசித்தவள், தான் காண வந்த பெண் என்பதை அறிந்து கொள்ள அவனுக்கு அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை.
அவள் தான் என்று தெரிய வந்ததும் ஏன் என்றே அறியாமல் ஒரு இதம்.
ஹாய்… என்றான் அவளிடம்
அவளும் ஹாய்… என்றாள்.
அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை அமைதி காத்தனர். கடை ஊழியர் வந்து ஆடர் கேட்க தன் மவுனம் கலைத்து இரண்டு காபி என்றான்.
நிலாவோ மனதிற்குள் நல்ல வேலை எனக்கும் சேர்த்தே ஆடர் கொடுத்துவிட்டார். இவரை பார்த்ததிலிருந்தே நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கிச்சு. எப்படி ஆடர் கொடுக்குறதுனு யோசிச்சேன் அவரே கொடுத்துட்டார்.
பின் மீண்டும் மவுனம். யுகியின் மனதோ அதா பொண்ண புடிச்சுருச்சுல வீட்டுக்கு போய் ஓகே சொல்லிரு என்றது.
மூளை இல்லா மூளையோ நீ கொண்டுவந்த அக்ரிமண்ட் பத்தி பேசி பாறேன் என்றது.
நாம் எப்போது மனது சொல்வதை கேட்டிருக்கிறோம். நாம் பெரும் அறிவு ஜீவி என்று எண்ணிக் கொண்டு மூளை சொல்வதைதானே கேட்கிறோம். நம் நாயகன் மனது சொல்வதை கேட்டு நடப்பவனாகினும் தவறு இழைப்பது மனித இயல்பு தானே.
இதோ தன் முட்டாள் தனத்தை ஆரம்பித்துவிட்டான்.
இதோ பாருங்க எனக்கு சில கன்டிசன் இருக்கு என்று ஆரம்பித்தான். இவளும் அவன் என்ன கூறுவானோ என்று ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
வெயிட்டர் வந்து அவர்களது ஆடரை மேசையின் மீது வைத்துவிட்டு சென்றான்.
அவன் சென்றதும் அக்ரிமென்டை எடுத்து டேபிளின் மீது வைத்தான். என்ன என்பது போல் அவள் பார்க்க அக்ரிமெண்டை அவள் புறம் நகர்த்தினான்.
அதை பிரித்து படித்து பார்த்தவளின் முகத்திலிருந்து எதையும் அவனால் கண்டு கொள்ள முடியவில்லை.
அதனை படித்தவளின் மனமோ பெரும் புயலில் சிக்கி தவிப்பதுபோல் உணர்ந்தாள். அதனை படிக்கும் பொழுதே காலையில் அவளது தந்தை அவளிடம் கூறிய வார்த்தைகளே நினைவலையில் வந்து சென்றது.
இந்த கல்யாணம் கண்டிப்பா நடந்தே ஆகனும். அதுதா என்னோட விருப்பமும். பாத்து பக்குவமா பேசனும் நிலா எதாவது பேசி கல்யாணம் தடபட்டுட கூடாது புரிஞ்சதா. உன்னோட இந்த கல்யாணத்தை நினச்சு நாங்க நிறைய கனவுகளோட இருக்கோம் நினைவுள இருக்கட்டும். இல்ல காதல் கீதல் எதாவது இருக்க
ஐயோ …அப்படி எல்லா எதுவும் இல்ல அப்பா.
உம்மேல நம்பிக்கை இருக்கு காப்பாத்திக்க
இது அனைத்தும் நினைவில் வந்ததும் அவளுக்கு இப்பொழுது தான் என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை. தந்தையிடத்தில் அக்ரிமெண்ட் பற்றி கூறி திருமணத்தை நிறுத்த துணிவில்லை. அதே சமயம் ஒப்பந்தத்தை பற்றி வீட்டில் கூறி யுகிக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்க விருப்பம் இல்லை. ஏனோ அவனை யாரும் தவறாக பார்த்துவிடுவார்களோ என்று ஐயம் கொண்டாள். எதனால் இவ்வுணர்வு என பிரித்தறிய அவளுக்கு வாய்ப்பில்லை அந்நிமிடம் ஏனெனில் யுகி அவளின் முகத்தைதான் பார்த்து கொண்டிருந்தான்.
நடுங்கும் கைகளால் அவன் கொடுத்த பத்திரத்தை கைகளில் எடுத்தாள். கண்களை இறுக மூடி வேகவேகமாக கையெழுத்து போட்டு முடித்தாள்.
பேனாவை டேபிலில் வைத்து நிமிர்ந்த நிலாவின் கண்களில் அகப்பட்டது என்னவோ முகம் இறுகி கண்கள் சிவந்து அமர்ந்திருந்த யுக்தயன் தான்.
ஆல்ரைட் நல்ல படிச்சு பாத்திட்டையா வேகமா சைன் பண்ணிட்ட ம்… அவ்வளவு ஆசையோ… என இருபொருள்பட கோபத்திலும் தன் விருப்பம் பொய்யாய் போன ஆதங்கத்திலும் கூறிவிட்டான்.
ஆம் அவன் விருப்பம் தான் அவளிடம் ஒப்பந்த பத்திரத்தை கொடுத்தால் கோபபடுவாள் திட்டுவாள் பத்திரத்தை கிழித்து போடுவாள் குறைந்த பட்சம் முறைக்கவாவது செய்வாள் என ஈதிர்பார்த்தான். அவள் கையெழுத்து இட்டது பெரும் அதிர்ச்சியை அளித்தது. வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு பெண்ணின் மீது ஏற்பட்ட உணர்வின் ஆயுட்காலம் இவ்வளவு விரைவிலே முடிந்து போகும் என எதிர்கொள்ளவில்லை. அவனும் அறிந்திருக்க வாய்ப்பில்லையே நிலாவின் வீட்டில் இத்தகைய சூழ்நிலை என்று மேலும் அவனுக்கு சுரேஷை பற்றி ஒன்றும் தெரியாதே. அவன் அறிந்ததெல்லாம் தன் அத்தையின் கணவர் அவ்வளவே.
இந்த திட்டம் அனைத்தும் திருமணத்தை நிறுத்த அவன் எடுத்த ஆயுதம் தான் அதுவே தன்னை குத்தி கிழிக்கும் என நினைக்காது போனான்.
அவன் இத்திட்டத்தை எடுத்ததன் காரணமே வேறு ஆயிற்றே. எந்த ஒரு பெண்ணும் இப்படி ஒரு ஒப்பந்தத்தை ஒப்புகொள்ள மாட்டார்களே. அதையும் மீறி அவள் கையெழுத்து இட்டது பெரும் அதிர்ச்சியை அளித்தது. அவளை கேரக்டர்லெஸ் பெண்ணாக அவனிடம் உருவகபடுத்தியது. பணம் என்று குறிப்பிடவும் எதற்கும் தயார் என்பது போல் கையெழுத்து போட்டுவிட்டாலே என்று அவளை மிகவும் கேவலமாக எண்ணத் தூண்டியது. அதற்கு மேலும் அங்கே அமர்ந்தால் தன் எண்ண போக்கு வெளிபட்டுவிடுமோ என்று எண்ணினான்.
ஆல்ரைட் சி யூ அகைன் இன் தி மேரேஜ் என கூறி விட்டு கிளம்பிவிட்டான்.
அவன் சென்றது தான் தாமதம் வேகமாக கழிவறைக்குள் தன்னை புகுத்திக்கொண்டாள். இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரை மடை திறந்த வெள்ளம் போல் கொட்டிதீர்த்தாள்.
…..
இதை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தவளோ எப்படி உறங்கினாளோ தெரியவில்லை.
காலையில் கண் திறக்கும் போது கண்டதென்னவோ யாருடனோ செல்பேசியில் சீரியசாக பேசிக் கொண்டிருந்த தனது மணாளனை தான்.
விடியர்காலை இளஞ்சூரிய வெளிச்சம் அவன் முகத்தில் பட்டு முகம் தங்கமென ஜொலித்தது. சன்னல் ஓரம் நின்றிருந்தான். காற்றில் அலை பாயும் கேசத்தை அழகாக கோதி கொண்டிருந்தான்.
கண்களை அகல விரித்து அவனை தான் அப்பட்டமாக சைட் அடித்து கொண்டிருந்தாள். அவளது மனமோ வெக்கங்கேட்டவளே நேத்து நைட் அவன் நடந்துகிட்டது மறந்து போச்சா என்று காறி துப்பியது.
அதனை துடைத்து கொண்டவள் விரைவாக சென்று கழிவறையில் தன்னை புகுத்திக்கொண்டாள்.
தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வெளியே வந்தவள் கண்டது இன்னமும் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்த தன்னவனை தான்.
வெளியே செல்ல மனம் இல்லாமல் கட்டிலிலே அமர்ந்துவிட்டாள். மறுபடியும் தனது சைட் அடிக்கும் பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
போன் பேசி முடித்து விட்டு திரும்பியவன் கண்டது அவனை ரசித்து கொண்டிருந்த அவனவளை தான். அவன் பார்த்தவுடன் கட்டில் இருந்து குதித்து இறங்கினாள். சேலை தலைப்பை கைகளால் திருகி கொண்டிருந்தவள் தரையை நோக்கி தன் பார்வையை திருப்பினாள்.
அன்றலர்ந்த மலராக நின்றிருந்தவளை மேலிருந்து கீழாக பார்த்தவனோ மெதுவாக அவளை நெருங்கினான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அவனது காலடி தன்னை நோக்கி வருவதை அறிந்தவள் பின்னோக்கி நகர்ந்தாள். அவனும் அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தான்.
பின்னோக்கி சென்றவள் சுவறில் மோதி நின்றாள்.
இருவருக்கும் இடையே நூலளவு கூட இடைவெளி இல்லை. அவளது உடலோடு தன் உடல் முழுவதும் உரசுவது போல் நெருங்கி நின்றான்.
தொடரும்…