மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 26

நாட்கள் அதன் போக்கில் நகர மேலும் ஒரு மாத காலம் முடிந்து விட்டது. யுக்தயனிடம் நிலா பேச வில்லை என்றாலும் அவன் நாள் தவறாது வந்து அவளை பார்த்துவிட்டுச் செல்வான்.

நாள் முழுவதும் கூட அங்கேயே தங்கிவிடுவான்.  சுரேஷ் தான் அவனை முறைத்தப்படியே சுற்றி கொண்டிருப்பார் ஆனால் நம் நாயகனோ அவரை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

தந்தையின் அறிவுரையின் படி தன் உயிரை சந்தோஷமாக பூமிக்கு வரவேற்க ஆயத்தமானான்.

இவன் இப்படியே சுற்றிக் கொண்டிருந்தால் அவன் பணி செய்யும் நிறுவனம் அமைதியாக இருக்குமா.  அவன் அடிக்கடி அனுப்ப வேண்டிய ரிப்போட்டுகள் எதுவும் அனுப்பபடாமல் இருக்க அவனை தொடர்பு கொண்டு விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

முன்பு சத்தியமங்கலத்தில் இருக்கும் போதும் சரி அந்த மலைவாழ் கிரமாத்தில் இருந்து வந்த பின்பும் சரி சில ரிப்போட்டுகளை மேலிடத்திற்கு சமர்பிப்பான்.  ஆனால் கடந்த இருமாத காலமாக அவன் எந்த செய்தியும் அனுப்பாததால் அழைத்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

யுக்தயன் தன் மனைவி மகவின் நினைப்பில் மற்றதை மறந்துவிட்டான்.  இன்று அவன் மேலிடத்தில் பேசியதும் மனதில் பாரம் ஏறியது.  அவர்களை பிரிந்து செல்ல வேண்டுமா என்று கவலை கொண்டான்.

மறுநாள் நிலாவை காணச் சென்றவன் அவளிடம் தான் புறப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை எடுத்துக் கூறினான்.

நிலாவிற்கு அழுகை வந்தது ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.  எங்கே தான் அழுதால் கணவன் நிம்மதியின்றி செல்வானோ என்று எண்ணியவள் முயன்று தன்னை அவன் முன் சகஜமாக காட்டிக் கொண்டாள்.

கணவன் வேலை என்று வந்துவிட்டால் சுற்றத்தை மறந்துவிடுவான் என்று அறிந்திருந்தவள் இம்முறையும் வேலையின் பொருட்டு அவன் தங்களை மறந்து கொஞ்சமேனும் நிம்மதியாக இருக்கட்டும் என நினைத்தாள். அதனால் தன் வருத்தத்தை அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை. 

ஆனால் அவள் விடயத்தில் அவன் எப்பொழுதும் இயல்புக்கு மாறாக முரண்பாடாகத் தான் இருக்கிறான் என்பதை அறியவில்லையே.

நிலா சாதரணமாக இருப்பதை கண்ட யுக்தயன் அவளுக்கு தான் பிரிந்து செல்வதில் வருத்தமே இல்லையோ என்னை அந்தளவிற்கு பிடிக்காமல் போய் விட்டாத என்று தவறாக எண்ணினான்.

அவளிடம் இருந்து விடை பெற்றவன் தன் மாமியரிடம் வந்து தான் மீண்டும் பணிக்கு புறப்படுவதாக கூறியவன் தன் மனைவியையும் மகவையும் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் புறப்பட்டு சென்றதும் அறையில் இருந்த நிலா கதறி அழுதாள். அதுவரை அடக்கி வைத்தே கண்ணீரெல்லாம் காட்டாற்று வெள்ளம் போல் பெருகி ஓடியது.

யுக்தயன் முன்பு சத்தியமங்கலத்தில் மனைவியின் அருகாமைக்காக எந்தளவிற்கு மெதுவாக பணியை செய்தானோ தற்பொழுது  மனைவியின் அதே அருகாமைக்காக ஓய்வு உறக்கமின்றி பணியை தொடர்ந்தான்.

சிக்னல் கிட்டும் நேரம் எல்லாம் மனைவிக்கு அழைத்து பேசுவான். நேரம் காலம் எல்லாம் கருத்தில் கொண்டதில்லை அவன்.  நடு இரவுக் கூட அழைப்பான். அவள் தூக்கத்தை கெடுக்க கூடாது என்று எண்ணுவான் ஆனால் அவள் மேல் உள்ள அளப்பறியா காதல் அவனை அமைதியாக இருக்க விடாது.

தனிமை நெருப்பாய் கொள்ளும். ஒவ்வொரு இடங்களை பார்க்கும் பொழுதும் மனைவியின் நியாபகம் வந்து ஒட்டிக் கொள்ளும்.

புலியை பார்த்தாலும் சரி யானையை பார்த்தாலும் சரி அவளது நினைவுகளே அவனை ஆக்கிரமிக்கும். அவ்வப்பொழுது அவள் வரைந்த ஓவியங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருப்பான்.

அந்த ஓவியங்களுக்கு சேதாரம் ஏற்படா வண்ணம் அதற்கு உறை இட்டு வைத்திருந்தான். போனில் அவள் பதில் கூறவில்லை எனினும் பேசிக் கொண்டே இருப்பான்.

சில நேரம் அவள் குரலை கேட்டே ஆக வேண்டும் என்று உள்ளம் துடிக்கும் பொழுது “ஒரே ஒரு தடவை பேசுறியா..  யாழு…. உங்குறல கேக்கனும் போல இருக்கு”  என்று கரகரத்த குறலில் கூறுவான்.

அந்த குறலில் செத்தே விடுவாள் நிலா. தாயுடன் பேசுவது போலவும் தன் வயிற்றில் வளரும் சிசுவிடம் பேசுவது போலவும் அவனுக்கு தன் குறலை கேட்க செய்வாள்.

இவனும் ஒரு சிறு நம்பிக்கையுடன் தன் நாட்களை கடத்துவான்.

இதோ இப்படியாக மாதங்கள் ஓட நிலாவிற்கு தற்பொழுது ஒன்பது மாதம் தன் பணியை முடித்துக் கொண்டு மனைவி பிள்ளையை பார்பதற்கு புறப்பட்டான் யுக்தயன்.

தன் மனைவியின் வயிறு தற்பொழுது பெரிதாக ஆகி இருக்கும் அல்லவா அதை தான் நேரில் பார்க்க போகிறோம். தன் மகவு அசைவதாக குறுஞ்செய்தியில் கூறி இருந்தாளே தற்பொழுது அதையும் உணர போகிறோம் என்று ஆவலாக புறப்பட்டான்.

புலனத்தில் எத்தனை செய்திகளை பகிர்ந்து கொண்டாலும் அவளது புகைபடத்தை மட்டும் அனுப்ப மாட்டாள்.

………….

நிலவின் வீட்டிற்கு வந்து சேரும்வரை அவன் ஆவல் அடங்க வில்லை . இதோ வீட்டிற்குள் நுழைந்ததும் ஆவல் ஒருபுறம் ஒதுங்கி கொண்டு அழுகையை வரவேற்றது . அவளது அறையில் கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து பாடல்கள் கேட்டு கொண்டிருந்தாள்.

திருமணம் ஆன புதிதில் அவள் இதுபோல் ஒருமுறை பாடல் கேட்ட போது அவளை திட்டியது நியாபகம் வந்தது .

ரசனையான புன்னகை ஒன்று தோன்றியது அவனிடத்தில் அவளை பார்த்து. தாய்மையின் பூரிப்பில் அவளது முகம் மின்னியது.  கண்களில் இருந்த வலி அவள் கண் மூடி அமர்ந்திருந்ததால் அவனுக்கு தெரியவில்லை.

அருகில் நெருங்கியவன் மேடிட்ட வயிற்றில் தன் கரம் பதித்தான். தந்தையின் வரவை அறிந்து கொண்டதோ என்னவோ சிசு மெதுவாக அசைந்தது வயிற்றுக்குள் . கரம் பதித்தும் திடுக்கிட்டு கண் விழித்தவள் கணவனை கண்டு ஆச்சரியம் உற்றாள். அதுவரை அவள் கண்களில் இருந்த வலியும் அவனை கண்ட மாத்திரத்தில் மறைந்துவிட்டது.

அவன் வருவதாக கூறவில்லை அவளிடம்.  நிலாவை இத்தனை மாதங்கள் கழித்து பார்த்த சந்தோஷத்தில் இதழில் முத்தமிட தோன்றியது. ஆனால் அதை செய்ய வில்லை அவன். அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தவன் குனிந்து தன் உயிருக்கு கணக்கின்றி முத்தங்களை வழங்கினான்.

அவனது அச்செயல் மனைவி அவளுக்கு கோபத்தை உண்டு பண்ணியது . தனக்கு மட்டும் நெற்றியில் ஒன்றே ஒன்று சிசுவிற்கு மட்டும் கணக்கின்றி என்று எண்ணி தன் சிசுவிடமே பொறாமை கொண்டாள். ஆனால் வெளிகாட்டிக்க விரும்பவில்லை அவள்.

ஒரு வாரம் கடந்திருக்க வெளிநாட்டில் உள்ள அவன் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. அவன் டாக்குமென்ட்ரியை ரிலீஸ் செய்வதற்கான சில விதி முறைகள் இருக்க அவன் உடனே புறப்பட வேண்டிய கட்டாயம் தனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று வேதனை உற்றான். 

மேலாளர்களிடம் தன் நிலைமையை எடுத்து கூறினான் . பிரயோஜனம் இல்லை. முன்பே ஒப்பந்தத்தில் நாங்கள் இட்ட அனைத்து கட்டளைக்களுக்கும் உடன் படுவதாக கையெழுத்து இட்டது மறந்து விட்டதா என்றனர். எப்படி கூறுவான் அப்பொழுது அவன் வாழ்வில் யாழ் என்ற அத்தியாயம் தொடங்கவில்லை என்பதை. 

அவன் முயற்சிகள் கைகொடுக்காததால் கனத்தமனதுடன் லண்டன் நோக்கி பயணத்தை தொடர்ந்தான். அவன் லண்டன் கால் பதித்த நிமிடம் இங்கே அவன் மகன் இந்த பூமியில் வந்து இறங்கி தன் பொற் பாதங்களை பதித்தான்.

தொடரும்….